அறிஞர் பீ.ஜைனுல் ஆபிதீன் பன்முக ஆளுமையும் தஃவாப் பணியும் தொடர்-3


எம்..ஹபீழ் ஸலபி
Description: https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjqKNlg5tJ__XOfR0DDhcYSDYHBM1bOP_DProZ6vvXWqQGw4fxHRHzPTVdM0U6I-_TzjM7utjvSgc4cdVTAk-B9AwI7H4RBJEV8jih5oLW9PHehPI6y9zNmAL0meDmlmVG8f07PlKKHVmo/s320/DSC09112.JPG
முந்திய தொடரை அவரது பொருளாதாரம் பற்றிய தகவலோடு நிறைவு செய்திருந்தோம்.அதன் தொடர்ச்சியாக அவரது பொருளாதாரம் பற்றிய இன்னும் சில செய்திகளை இதில்குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும் எனக் கருதுகின்றேன்ஏனெனில், இஸ்மாயில்ஸலபி என்பார் பீஜே மீது பொருளாதார அவதூறு கூறியிருந்தார்இதுவரை அவர் போன்றபொய்ப் பிரசாரகர்கள் நிரூபிக்க முன்வரவில்லை.
அதேபோல், சவூதி அரேபியாவில் பீ.ஜேவுடைய நூல்களுக்குத்  தடை விதிப்பதற்காக சிலகாழ்ப்புணர்வு கொண்டவர்கள் படாத பாடுப்டடார்கள்ஆயிரம் கொடுங் கரங்கள் ஒன்றுசேர்ந்தாலும் சூரியனின் செங்கதிர்களை மறைத்து விட முடியாதுஅதேபோல்சத்தியத்தையும் மறைக்க முடியாது என்பது இவர்களின் முயற்சிதோல்வியடைந்ததிலிருந்து தெரியவருகிறது.
  பீ.ஜேவுடைய நூல்களை வெளிட சவூதியில் எந்தத் தடையும் இல்லை.பல நூல்கள்பலமுறை பலவாயிரம் பிரதிகள் வெளியிடப்பட்டுள்ளன.அவற்றின் அட்டைப் படத்தோடுபின்னர் குறிப்பிடுவோம்.
Description: https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjVO_R48NPQyetxiOkrHXqmkmz9D8-snC-WuYOfg24KGlOupKnSU3Wg6PUyviE2S-MA_1vbXeiIKj6TfRpA9CcUFRVms0_MxuG3ogi3ih77i8Pl93guv-D8zBe_RjspDKFpDKJL1RMksNg/s200/VARUMUN+URAITTA+ISLAM+PJ+SAUDI.jpg
 அண்மையில் அவரது வருமுன் உரைத்த இஸ்லாம் என்ற நூல் மட்டும் 35000 பிரதிகள், ரியாதிலுள்ளரப்வா ஜாலியாத் மூலம் வெளியிடப்பட்டுள்ளதுஇதற்கானராயல்டியை வெளிடும் நிறுவனங்கள் வழங்கத் தயாராகஉள்ளன.ஆனால், பீஜே அதை வாங்கத் தயாராக இல்லைஎன்பதுதான் ஆச்சரியமான விடயம்.
  சில மாதங்களுக்கு முன்னர் ஓர் அரபி இருபது ஆயிரம் ரியால்தருவதாகக் கூறினார்.நான் அண்மையில் தமிழ் நாடு சென்றிருந்தபோது, பீஜேவிடம் அவரது அலுவலகத்தில் வைத்துக்கேட்டபோது, அப்பணத்தை வாங்க மறுத்துவிட்டார்கள்.
இந்த நூற்றாண்டில் பணத்திற்கு ஆசைப்படாத ஓர் அறிஞரை சந்தித்த மனமகிழ்ச்சிஅப்போது எனக்கு ஏற்பட்டது.வாடகை வீட்டில் வாழும் இவ்வளவு ஏழ்மை நிலையில்இருக்கும் போது கூட சுய மரியாதையுடன் அவர் வாழ்வதைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன்.அனைத்துச் செல்வத்தையும் விட தன்மானத்தையே அவர் மிகப் பெரிய செல்வமாகக்கருதுகின்றார் என்பதே இதற்குக் காரணம்.
  இருபதாயிரம் ரியால்களை வாங்குவதற்கு பீஜே மறுத்துவிட்டார் என்ற செய்தியைக்கேட்ட அரபியும் ஆச்சரியப்பட்டார்அவரது அல்குர்ஆன் தமிழாக்கத்தை ஆங்கிலத்தில்வெளியிடுவதற்குக் கூட ஓர் அரபி முன்வந்தார்ஆனால், பீஜே அதையும்ஏற்றுக்கொள்ளவில்லை.
அவரது நூல்களை அரபு நாட்டு ஜாலியாத்தில் பணியாற்றுவோர் இலவசமாக வெளியிடஏற்பாடு செய்கின்றனர்.அங்கு பணியாற்றுவேரில் பலர் மதனிகள் என்றாலும் இவர்களால்நூல்கள் எழுதி வெளியிட முடிவதில்லைசிலர் அனுமதிபெற்றும் பலர் அனுமதிவாங்காமலும் அவரது நூல்களை பல்லாயிரம் பிரதிகளைவெளியிட்டுவிடுகின்றனர்.அதனால், ஜாலியாத்திலுள்ளளோர் பயன் அடைகிறார்களேதவிர, பீஜே எந்த ரோயல்டியையும் அடைவதில்லை.
  எந்தப் பிரதிபலனையும் எதிர்பாராமல் தனது நுல்களை வெளிட அனுமதித்த அறிஞர்பீஜே அவர்களுக்கு அல்லாஹ் அருள்பாலிப்பானாக.
  அவரது நூல்கள் பற்றி தனியாக ஆய்வு செய்யும் போது, அவரது நூல்களின்சிறப்புத்தன்மை பற்றி விரிவாக விளக்குவேன். இன்ஷா அல்லாஹ்;. 
 சவூதி அரேபியாவில் பீஜே நுழைவதற்கு எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை.அவர்வருவதற்கான வாய்ப்புகள் திறந்துதான் உள்ளன.ஒரு தடவை சவூதி அரசாங்கமே அவரைகவ்ரவ விருந்தினராக அழைத்ததுஅப்போது கும்பகோண இட ஒதுக்கீட்டுக் கோரிக்கைமாநாட்டால் அதை அவரால் ஏற்க முடியவில்லை.
 அதேவேளை, அவர் அரபு நாடுகளுக்கு வந்துதான் பிரசாரம் செய்ய வேண்டும் என்ற எந்தஅவசியமும் இல்லைஅவர் இங்கு வராமலேயே தொலைக்காட்சி, இணையம், குருந்தகடுகள்இநுல்கள், உணர்வு, ஏகத்துவம் என்பன மூலம் அவர் எப்பவோ இங்குநுழைந்துவிட்டார்.
  சவூதி அரேபியாவில் பீ.ஜேவுடைய நூல்களுக்குத்  தடை என்று அவதூறுபரப்புவோருக்கும் தடை விதிக்க முயற்சி செய்தோருக்கும் பீஜே அவர்கள் தனது இணையதளத்தில் தக்க பதிலை அளித்திருந்தார்கள்அதில் அவரது பொருளாதார விடயம் பற்றியசில குறிப்புகள் உள்ளதால் மேலதிக விளக்கத்திற்காக அதை இங்கு தருகின்றேன்.
'சவூதி அரேபியாவிலும் இன்னபிற  அரபு நாடுகளிலும்
பீ.ஜேவுடைய நூல்களுக்குத்  தடை
பீஜேயின்  திருக்குர்ஆன் தமிழாக்கத்துக்கு தடை!
சவூதி அரேபியாவில் பீ.ஜேநுழையத்  தடை!
சவூதி உலமாக்கள் விவாதத்துக்கு  அழைத்த போது பீ.ஜே பின் வாங்கி விட்டார்!
என்றெல்லாம் சில மதனிகளும் பணத்துக்காகவே தவ்ஹீதைச் சொல்லும் போலிஉலமாக்களும் மக்கள் மத்தியில் திட்டமிட்ட ஒரு பிரசாரத்தைச் செய்து வருகின்றனர்
இது குறித்து பல்வேறு சகோதரர்கள் விளக்கம் கேட்கும்போதுஇ தக்க விளக்கம் அளித்துவந்த போதும் அனைத்து  மக்களும் அறிந்து கொள்ளும் வகையில்பகிரங்கப்படுத்தவில்லைஇதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு தேய்ந்து போனரிகார்ட் போல் இதையே பயங்கரமான ஒரு செய்தியாகச் சொல்லிக் கொண்டு திரிகின்றதுஇந்தக் கும்பல்.
இது குறித்து விரிவாக எழுதும் அவசியத்தை  ஏற்படுத்தி விட்டனர்.
அரபு  நாடுகள் தான் அத்தாரிட்டியா?
  இவர்கள் கூறுவது போல் எனது நூல்களை  அரபு நாடுகளில் தடை செய்து விட்டதாகவேவைத்துக் கொள்வோம்அரபு நாடுகளில் நுழைவதற்கு எனக்குத் தடை போட்டுவிட்டதாகவே வைத்துக் கொள்வோம்இதன் காரணமாக  எனது கருத்துக்கள் தவறுஎன்பது நிரூபணமாகி விடுமா?
  அவர்கள் தான் மார்க்கத்தின் அத்தாரிட்டியாநான் சொல்லும் கருத்துக்கள் குர்ஆன்ஹதீஸுக்கு முரண்பட்டு இருப்பதாகவோஇ  தவறானதாகவோ உள்ளது என்று தக்கஆதாரத்துடன் நிரூபித்தால் தான் எனது கருத்துக்கள் தவறு என்று ஆகும் என்ற அடிப்படைஅறிவு கூட இவர்களுக்கு இல்லைநமது கருத்துக்களை எதிர் கொள்ள அவர்களிடம் சரக்குஇல்லாததால் இதுவே இவர்களுக்கு பெரிய ஆதாரமாகத் தெறிகிறது.
  சத்தியத்தைச்  சரியாக எடுத்துச் சொல்லும் யாராக இருந்தாலும் இது  போன்றஅடக்குமுறைகளை எதிர்  கொள்ளத் தயாராகவே இருக்க வேண்டும் என்பதை நன்றாகத்தெரிந்து கொண்டு தான் நாங்கள்  களத்தில் இறங்கி இருக்கிறோம்.
  இவர்கள் ஆசைப்படுவது போல், சவூதி  என்ன  ஒட்டுமொத்தமாக உலகமே திரண்டு தடைபோட்டாலும் நமது பயணம் நின்று விடாதுஇக்கொள்கையை நம்பியவர்களின் மனஉறுதியை எந்த வகையிலும் இது குலைக்காது என்பதைத் திட்டவட்டமாக நான்அறிவித்துக் கொள்கிறேன்.
கூலிக்கு தவ்ஹீத் பேசும் இந்தக் கும்பல் இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
  இது எப்போது  என்னைப் பாதிக்கும்சவூதியிலோஇ மற்ற அரபு நாடுகளிலோ நான்ஊதியம் பெற்றுஇ அதற்காகவே தவ்ஹீதைச் சொன்னால் அந்த நாடுகளின் கோபப்பார்வை என்னைப் பாதிக்கும்.
  எந்த  ஒரு கால கட்டத்திலும் நான் எந்த அரபு நாட்டு அரசிடமிருந்தோஇ அல்லதுநிறுவனங்களிடமிருந்தோ பணமோ,  பொருளோ,  அன்பளிப்போ பெற்றதில்லைசிலநேரங்களில் அரபு நாடுகளில் பணி புரிவோர் இலவசமாக வழங்கப்படும் கிதாப்களைவாங்கி அனுப்பும் போதுஇ பெற்றுக் கொண்டதைத் தவிர வேறு எதனையும் நான் பெற்றுக்கொண்டதில்லை.
  ஜாக்  அமைப்பில் பணியாற்றிய அந்த சமயத்தில் மதனிகள் அல்லாத கஷ்டப்படும்உலமாக்களின்  சிரமத்தைக் கருத்தில் கொண்டு கமாலுத்தீன் மதனீ அவர்கள்  மதனிகளாகஇல்லாத சில தாயிகளுக்கு  சிறிய அளவிலான உதவித் தொகை கிடைக்க ஏற்பாடுசெய்தார்ஆனால் எந்த நிறுவனத்திடமிருந்தும்  நான் எதையும் பெற விரும்பவில்லைஎன்று மறுத்து விட்டேன்எந்தக் கால கட்டத்திலும் இதில் நான் சபலப்பட்டதே இல்லை.அப்படி இருக்கும் போது இவர்கள் ஆசைப்படுவது போன்ற தடைகள் வந்தால் அதுஎன்னை எள் முனையளவும் பாதிக்கப் போவது இல்லை.
  என்னுடைய  நூல்கள் பலவற்றை சவூதியில்  வெளியிட ஜாலியாத் மூலம் அனுமதிகேட்ட போதுஇ நான் அனுமதியளித்துள்ளேன்.
 சில மதனிகள்  நூல்கள் எழுதி அதை இலவசமாக  வெளியிடப் போகிறோம் என்று  கூறிஉதவி அளிக்கும் நிறுவனத்துக்கு தவறான தகவல் தந்து லட்சங்களைக்  கறப்பார்கள்ஒருநூல் வெளியிட்டு பெரிய சொத்து வாங்கியவரை நான் அறிவேன்.
  எனது  நூல்களை வெளியிட அனுமதி கேட்கும் போது, அதற்கான ராயல்டி  இவ்வளவுவேண்டும் என்றால்  அதைத் தருவதில் சவுதி  நிறுவனங்களுக்கு எந்தத் தயக்கமும்இருக்காதுஅப்படி இருந்தும் எவ்வித பிரதிபலனும்  எதிர்பாராமல் இலவசமாக் வெளியிட அனுமதித்தேன்இந்த அனுமதிக்காக  மற்றவர்கள் அடைகின்ற ஆதாயமும் எனக்குஇல்லைஇலவசமாக அவர்கள் வெளியிடும் போது அந்த நூலின் விற்பனை பெரிதும்பாதிக்கப்படும்ஏற்கனவே நான் அச்சிட்டு வைத்திருந்த நூல்கள் தேங்கும் என்றவகையிலும் எனக்கு இழப்பு ஏற்படும்.
 செய்திகள் மக்களைச் சென்றடைந்தால்  சரி என்று தான் நினைத்தேனே தவிர, சவூதி அரபுநாட்டுப் பணத்துக்குப் பல்லிளிக்கவில்லை.
 அவ்வாறு பல நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. (இது பின்னர் விளக்கப்பட்டுள்ளது)
  செய்திகள் மக்களைச் சென்றடைவதற்கு  நமது சிரமம் ஒரு தடையாக இருக்கக் கூடாதுஎன்பதால் தான் நான் அனுமதியளித்தேன்.
 இதை சுயதம்பட்டம் அடிப்பதற்காக குறிப்பிடவில்லைஅரபு நாடுகள் தடை வித்தித்தால்அதனால் எனக்கு எந்த நட்டமும் இல்லை என்பதற்காகவும்,  சவூதி அரசு மூலம்வெளியிடப்படும் எனது இலவச நூல்களை காண்பவர்கள் பீஜேக்கு இதன் மூலம்பெருந்தொகை கிடைத்திருக்கும் என்று யாரும் சொல்லி விடக் கூடாது என்பதற்காகவும்இதைக் குறிப்பிடுகிறேன்.
தடை பூச்சாண்டி ஏன்?
  இந்தத்  தடை பூச்சாண்டி ஏன் என்றால்  அதற்கும் காரணம் உண்டுஅரபு நாடுகள் சென்றதமிழ்  கூறும்  முஸ்லிம் சகோதரர்கள் அங்கே சென்றதும் அல்லாஹ்வின்  அருளால்தவ்ஹீத்வாதியாக மாறி வருகிறார்கள்தங்களால் இயன்ற தஃவா பணிகளையும் சுயநலநோக்கமின்றி செய்து வருகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.

  சவூதியில் உள்ள ஜாலியாத்கள் எனும்  தஃவா சென்டர்களில் முக்கிய  மொழிகளுக்குஅம்மொழி மேசும் பிரசாரகர்களை நியமித்திருக்கிறார்கள்அது போல் தமிழ் மொழி பேசும்முஸ்லிமகள் மத்தியிலும் முஸ்லிமல்லாத மக்களிடமும் தூய இஸ்லாத்தைச்சொல்கிறோம் என்ற பெயரில் சம்பளம் வாங்கும் இவர்களில் பலர் அந்தப் பணியைச்செய்வதில்லைஇவர்களின் உப்புக்குச் சப்பாக நடத்தப்படும் பிரசாரக் கூட்டங்களுக்கும் மக்கள் செல்வதில்லைநம்மைக் காட்டிப் பணம் கறக்கிரார்கள் என்று மக்கள் நம்புவதால்இவர்கள் நடத்தும் சன்மார்க்க(?) விளக்கக் கூட்டத்தை மக்கள் அங்கீகரிப்பதில்லை.
 அதே சமயம்  தவ்ஹீத் சகோதரர்கள் தமிழ்  மொழியில் மட்டும் மார்க்கத்தை  அறிந்த சிலர்மூலம் நடத்தும் பிரசார நிகழ்ச்சிகளில் பெருமளவு பங்கெடுப்பார்கள்படியளக்கும்எஜமானர்களுக்கு இது தெரிந்தால் இவர்கள் தூங்கி வழிவது தெரிந்து விடும்.
  இதைத் தடுக்க வேண்டுமானால் என்ன செய்யலாம்சன்மார்க்கக் கூட்டத்தில் தவ்ஹீத்ஜமாஅத் உலமாக்களை குறிப்பாக என்னை வசைபாடுவதுஎன் மீது வெறுப்பைவிதைத்தால் தவ்ஹீத் ஜமாஅத் நிகழ்ச்சிக்கு மக்கள் போக மாட்டர்கள் என்று தங்கள்பிரசாரப் பாணியை அமைத்துக் கொண்டார்கள்பாவம்இவர்கள் மார்க்கம் பேசாமல் தனிநபர் தாக்குதல் நடத்தியது இன்னும் அவர்களைத் தனிமைப்படுத்தி விட்டது.
அடுத்து என்ன செய்யலாம்?
 சவூதியில் சட்டதிட்டங்கள் கடுமையானவைஅங்கே கூட்டமாக கூடி பேசினாலேபிரச்சனையாகிவிடும்பீஜேக்கு தடை என்று மக்களிடம் பரப்பினால், ஆகாதடைசெய்யப்பட்டவர்களின் அமைப்பில் செயல்பட்டால் நமக்குப் பிரச்சனை வருமோ என்றுதவ்ஹீத் சகோதரர்களுக்குப் பயம் வருமாம்இதன் காரணமாக தங்கள் செயல்பாடுகளைமுடக்கி விடுவார்கள்களத்தில் நிற்பவர்கள் காணாமல் போய் விடுவார்கள்,  பயந்து போய்முடங்கி விடுவார்கள்இப்படி கணக்குப் போட்டதன் விளைவு தான் இந்தப் பிரச்சாரம்.
 இந்தச்  சகோதரர்களை முடக்கிப் போட்டால் தான் முன்பு போல் இவர்கள்  வாயில்வந்ததையெல்லாம் உளற  முடியும்அவர்களை அச்சுறுத்தி பணிய வைக்கவே  இந்த தரம்கெட்ட பொய்ப் பிரச்சாரம்.
 ஆனால்இ அல்லாஹ்வின் நாட்டமோ  வேறு விதமாக இருந்ததுயார் இப்படிபரப்பினார்களோ அவர்களின் கூடாரம் காலியானதுஇந்த இழி செயல் செய்த சில போலிஉலமாக்கள் பாலியல் உள்ளிட்ட பல குற்றச் சாட்டுக்காக கைது செய்யப்பட்டு நாடுகடத்தப்பட்டனர்ஆட் குறைப்பு என்ற பெயரில் சிலர் தூக்கி அடிக்கப்பட்டார்கள்.பாக்கவிகளும் அஷ்ரபிகளும் சிறைக் கம்பிக்குப் பின்னால் நின்றார்கள்.
  இவர்களின் மதனி செல்வாக்கோ,  அரபு மொழிப் புலைமையோ,  ஜாலியாத் பதவியோஇவர்களைக் காப்பாற்ற முடியவில்லைதவ்ஹீத் தாயியாக களத்தில் நின்ற தாயிகளுக்குஅல்லாஹ்வின் உதவி கிடைத்தது.
  உணர்வு  ஏட்டில் எழுதப்படும் கட்டுரைகளைப் பற்றி போட்டுக் கொடுத்துஇ குறிப்பிட்டசில பக்கங்களுக்கு  கறுப்புச் சாயம் பூசியதையும்,  சில பக்கங்களைக் கிழித்து விட்டுவிற்பனை செய்ய வைத்ததையும் தவிர வேறு ஒன்றும் இவர்களால் செய்யமுடியவில்லைஅது கூட மார்க்க அடிப்படையில் செய்த இடையூறு அல்ல.உதாரணத்துக்குச் சொல்ல வேண்டுமானால், சவூதி பிரமுகருக்கு ரோஜா மாலை தூவுவதுபோன்ற படம் இடம் பெற்று, அது விமர்சிக்கப்பட்டிருந்ததுதமிழ் மொழியில் உள்ளதைஇவர்கள் தான் தணிக்கைக்குச் சொல்லும் நிலையில் இருந்ததால் இதைக் கிழிக்கச்செய்தனர்இது ஒர் உதாரணமே.
மூன்றாவது திட்டம்
  சவூதியில் எனக்கோ,  எனது நூலுக்கோ எந்தத் தடையும் இல்லை என்பது அவர்களுக்கேதெரியும்ஆனால், சவூதி அரசின் கவனத்துக்கு பீஜேயைப் பற்றி கொண்டு சென்றால்நிச்சயம் தடை செய்து விடுவார்கள் என்பதால் அதற்கான புகாரையும் தயார் செய்துசவூதியின் தலைமை முஃப்திக்கு அனுப்பினார்கள்.
 சவூதியின் தலைமை முஃப்தியும் மூத்த  உலமாக்கள் அமைப்பின் தலைவருமான  அப்துல் அஸீஸ் பின் அப்துல்லாஹ்  அவர்களுக்கு எழுதப்பட்ட நான்கு பக்கக் கடிதம் இது  தான்.
Description: https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjjOZ2klI0KxGYecxotMUDXBTF3KqBf7io0u48wkXLl9fcATFhgIBj46lKXno8vgU0GXAgUl5GVE5MxXOnxlg0RAJiiQWc5iSSYVe0_92cqSk3rUlV1AYxWRcOIy7E-YME3d3wmDLXyUrk/s320/PJ+1.jpg
Description: https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhFNwLV7_3gtwx6mFHwLYy19OjqHWI8WvN4WUe1TwhGlWh8mJ_9Nt0WWIrapN0cyCScauqiaiPpBGDQfTZCWq-9YAqzdgSflDIQY-cwi5vBkDNIqrF9vcDjvGwnWdWWFZ2uIXWCJWh8AkA/s320/PJ+2.jpg
Description: https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj9WoqL_zu-ehoVafqTkGxrX8SORgsP3CRXQpAb-ZHduVCAQriUh7e6QJF4mncUWqREx5EoCEj9gJ_XgKbWiez-StpnrI4zMLSIeE07I87kna28D0m30cNsRTg75E8-QHhIHtj2kbL03QY/s320/PJ+3.jpg
Description: https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiEQxTeN6JWRapuNKjcPvRBbTufWARu4xbY-nzaLRXXpxMoExjYgq5-FS0R0TcdB1C1Y-u3NfJ3Ud1bBmsEluSB_4v3j8cCr942QIL6SO_VBmrweYIGFgO2UjBdgESSeQxW1ZJRwtInTvM/s200/PJ4.jpg

   1. தம்மாம் ஜாலியாத்தில் பொழுதைப் போக்கும் முகம்மது ஜக்கி முகம்மது(இலங்கைவாசி)
   2. தம்மாம் ஜாலியாத்தில் இதே போல் பொழுதைப் போக்கி சம்பளம் வாங்கும் முபாரக்மஸ்வூத் லெப்பை எனும் முபாரக் மதின  (இலங்கைவாசி)
   3. இதே வேலை பார்க்கும் முகம்மது நூஹ்
 ஆகிய இம்மூவரும் கையெழுத்திட்டு அந்தக் கடிதத்தை எழுதினார்கள்.
இவர்களது கடிதம் என்ன விளைவை ஏற்படுத்தியது?
 வரலாறு இன்னும் வளரும்
நன்றி -  அதிர்வுகள் 

      
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger