இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவர் மீதும் உண்டாகட்டுமாக!
பாலியல் தொழிலை இலங்கையில் சட்டபூர்வமாக்குவது நல்ல விடயமாகும் என சமூக அபிவிருத்திக்கான நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரியும் எழுத்தாளருமான ஏறாவூரைச் சேர்ந்த ஸர்மிளா செய்யித் பி.பி.சி.தமிழோசைக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இஸ்லாம் வன்மையாக கண்டிக்கும் விபச்சாரத்தை தொழிலாக இலங்கையில் அங்கீகரிக்குமாறு முஸ்லிம் எழுத்தாளர் என்று தன்னைக் கூறிக்கொள்ளும் ஷர்மிலா செய்யத் தெரிவித்துள்ள கருத்தை ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் வன்மையாக கண்டிக்கின்றது.
திருமணம் என்ற பந்தத்தின் மூலம் மாத்திரம் தான் ஒருவன் தனது உடலியல் தேவையை தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் உலக மாந்தர்களுக்கு கட்டளையிட்டுள்ளது. அனைவரும் ஒழுக்கமாகவும்> உயரிய நற்சிந்தனையுடனும் வாழ்வதற்கு இதுதான் வழியாகவும் இருக்கிறது.
விபச்சாரம் உலகம் முழுவதும் ஒழுக்கம் கெட்டவர்களையும், வெட்கம் அற்ற ஒரு சமூகத்தையும் தான் தோற்றுவித்துக் கொண்டிருக்கிறது. இப்படியான சூழலில் ஷர்மிலா போன்றவர்கள் ஊடகங்களில் தங்கள் பெயர் பேசப்பட வேண்டும் என்பதற்காக இது போன்ற அசிங்கமான கருத்துக்களை பேசுவதையும், எழுதுவதையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் கேட்டுக் கொள்வதுடன் உண்மையான இஸ்லாமிய குடும்பப் பெண் இது போன்ற கருத்துக்களை பேசுவதையோ, பரப்புவதையோ நினைத்துக் கூட பார்க்க மாட்டாள் என்பதே உண்மையாகும்.
நன்றி - sltjweb.com
Post a Comment