பெண்கள் முகத்தை மறைக்க ஆதாரம் இல்லை என்று நாம் தொடர்ந்து பேசியும் எழுதியும்வருகிறோம். இது குறித்து வாய் திறக்காமல் இருந்த சலபிக்கும்பல் இப்போது இது பற்றி மறுப்புபிரசுரம் ஒன்றை வெளியிட்டு சென்னையில் வினியோகம் செய்து வருகின்றனர். இவர்களின் மறுப்பைசகோதர்ர் அப்துன்னாஸர் அவர்கள் ஆய்வு செய்து மறுப்பு கட்டுரை எழுதி அனுப்பியுள்ளார். அதைபரிசீலித்து இங்கே வெளியிடுகிறோம்.
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
பெண்கள் முகத்தை மறைப்பது அவசியமா?
பெண்கள் தங்கள் முகங்களையும் முன் கைகளையும் தவிர மற்ற பாகங்களை அன்னிய ஆடவரிடமிருந்து மறைத்துக் கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடுகின்றது. இஸ்லாமிய வழக்கில் இது 'ஹிஜாப்' என்றும் நம் நாட்டில் பர்தா, புர்கா, துப்பட்டி என்றும் குறிப்பிடப்படுகின்றது.
பெண்கள் தங்களுடைய முகத்தையும் கட்டாயம் மறைத்தாக வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் பெண்கள் தங்களுடைய முகத்தைக் கட்டாயம் மறைத்தாக வேண்டும் என்பதற்கு நபிவழியில் எந்தச் சான்றுகளும் இல்லை. மாறாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய காலத்தில் ஹிஜாப் அணியும் போது பெண்கள் தங்களுடைய முகங்களை மறைக்கவில்லை என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன.
நபியவர்கள் காலத்தில் இஸ்லாமியப் பெண்கள் முகத்தை மறைக்காத வண்ணமே “ஹிஜாப்“ அணிந்துள்ளார்கள் என்பதற்கு நாம் எடுத்து வைக்கும் சான்றுகளை முறையாக ஆய்வு செய்யாமல் சில அரைகுறைகள் நம்மை விமர்சித்து பிரசுரம் வெளியிட்டுள்ளனர். அரபு மொழியில் கரைகண்டவர்களாக தங்களை மெச்சிக் கொள்ளும் இந்த அரைவேக்காடுகள் ஹதீஸ் விரிவுரை நூல்களைக் கூட தப்பும் தவறுமாக விளங்கியே தங்களது ஆய்வை அமைத்துள்ளனர்.
அனைத்து ஹதீஸ்களையும் முறையாக ஆய்வு செய்யாமல் அவசரக் குடுக்கைகளாக மாறி நம்மை விமர்சித்துள்ளனர். அதுபோன்று நாம் எடுத்து வைக்காத ஆதாரங்களையும், வாதங்களையும் நாம் கூறுவதாக நம்முடைய பெயரில் இட்டுக் கட்டியும் கூறியுள்ளனர். இதனை இக்கட்டுரையின் இறுதியில் நாம் தெளிவுபடுத்தியுள்ளோம்.
நபியவர்கள் காலத்தில் இஸ்லாமியப் பெண்கள் முகத்தை மறைக்கவில்லை என்பதற்கு நாம் எடுத்து வைக்கும் ஆதாரங்களையும் அதை எப்படியெல்லாம் அரைவேக்காடுத் தனமாக மறுத்துள்ளனர் என்பதையும் நாம் தெளிவாகக் காண்போம்.
பெண்கள் முகத்திரை அணிவது கட்டாயமில்லை
ஆதாரம் : 1
('விடைபெறும்' ஹஜ்ஜின்போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என் சகோதரர்) ஃபள்ல் பின்அப்பாஸைத் தமக்குப் பின்னால் வாகனத்தில் அமர்த்திக் கொண்டார்கள். ஃபள்ல் மிகவும்அழகானவராயிருந்தார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்களுக்கு மார்க்க விளக்கம்அளீப்பதற்காகத் தமது வாகனத்தை நிறுத்தியிருந்தார்கள். (அப்போது) 'கஸ்அம்' குலத்தைச் சேர்ந்தஅழகான பெண்ணொருத்தி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் மார்க்க விளக்கம் கேட்டுவந்தார். அப்போது ஃபள்ல் அப்பெண்ணைக் கூர்ந்து நோக்கலானார். அந்தப் பெண்ணின் அழகுஅவருக்கு ஆச்சரியத்தை ஊட்டியது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திரும்பிப் பார்த்த போது ஃபள்ல்அப்பெண்ணைக் கூர்ந்து பார்ப்பதைக் கண்டார்கள். உடனே ஃபள்லின் முகவாயைத் தமது கரத்தால்பிடித்து அப்பெண்ணைப் பார்க்க விடாமல் அவரது முகத்தைத் திருப்பி விட்டார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : புகாரி (6228)
இதே நிகழ்ச்சி புகாரியில் 6228வது ஹதீஸிலும் கூறப்பட்டுள்ளது. அந்த ஹதீஸில், 'அப்பெண் அழகுநிறைந்தவராக இருந்தார்' என்றும், 'அவரது அழகு ஃபழ்ல் அவர்களைக் கவர்ந்தது' என்றும்கூறப்பட்டுள்ளது.
திர்மிதீ 811வது ஹதீஸில் 'அப்பெண் இளம் பருவத்துப் பெண்ணாக இருந்தார்' என்றுகூறப்பட்டுள்ளது.
நபியவர்கள் காலத்தில் இஸ்லாமியப் பெண்கள் முகத்தை மறைக்கவில்லை என்பதற்கு தெளிவானசான்றாகத் திகழும் இந்த ஹதீஸை மறுக்கப் புகுந்த அரை குறை ஆய்வாளர்கள் அரைவேக்காட்டுத்தனமாக பின்வரும் கேள்வியைக் கேட்கின்றனர். மேற்கண்ட ஹதீஸில் “முகத்தைப் பார்த்தல் பற்றியஎந்த வாசகமும் இடம் பெறவில்லை” என்று கூறுகின்றனர்.
விளக்கம் :
.இந்த நிகழ்ச்சியில், 'அழகிய தோற்றம் உடைய இளம் பெண் நபிகள் நாயகத்தின் முன்னே வந்தார்'என்று கூறப்பட்டுள்ளது. ஒருவரைப் பற்றி அழகிய பெண் என்றும், இளம் பெண் என்றும் கூறுவதாகஇருந்தால் முகம் தெரிந்தால் தான் கூற முடியும்.
மேலும் 'ஃபழ்ல் அப்பெண்ணைப் பார்த்தார். அப்பெண்ணின் அழகில் அவர் ஈர்க்கப்பட்டார்' என்றும்கூறப்பட்டுள்ளது. முகத்தை அப்பெண் மறைத்திருந்தால் ஃபழ்ல் திரும்பிப் பார்த்திருக்க மாட்டார்.அப்பெண்ணின் அழகு அவரைக் கவர்ந்தது என்றும் கூற முடியாது.
மேலும் அப்பெண் முஸ்லிம் பெண் என்பதும் இதில் தெரிகின்றது.
பெண்கள் தமது முகத்தை மறைப்பது அவசியம் என்றால் இப்பெண்ணுக்கு நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் எச்சரிக்கை செய்திருப்பார்கள். 'நீ எப்படி முகத்தைக் காட்டலாம்?' என்று கேட்டிருப்பார்கள்.
அறிவுடைய மக்களுக்கு இந்த விளக்கமே போதும் . ஆனால் நாங்களும் ஆய்வு செய்கிறோம் எனப்புகுந்த அரைவேக்காடுகள் முழுமையாக ஹதீஸ்களை ஆய்வு செய்யாமல் மேற்கண்ட செய்தியில்முகத்தைப் பார்த்தார்கள் என்று வந்துள்ளதா? என்று புல்லரிக்கும் கேள்வியைக் கேட்டு தங்களின் புலமையை (?) வெளிப்படுத்தியுள்ளனர்.
“ஃபள்ல்” அவர்கள் அப்பெண்ணின் முகத்தைத்தான் பார்த்தார்கள் என்று மிகத்தெளிவாகவேஹதீஸ்களில் வந்துள்ளது.
مسند أحمد بن حنبل-ن - (ج 1 / ص 211)
1805 - حدثنا عبد الله حدثني أبى ثنا حسين بن محمد ثنا جرير عن أيوب عن الحكم بن عتيبة عن بن عباس عن أخيه الفضل قال : كنت رديف رسول الله صلى الله عليه و سلم من جمع إلى منى فبينا هو يسير إذ عرض له أعرابي مردفا ابنة له جميلة وكان يسايره قال فكنت أنظر إليها فنظر إلى النبي صلى الله عليه و سلم فقلب وجهي عن وجهها ثم أعدت النظر فقلب وجهي عن وجهها حتى فعل ذلك ثلاثا وأنا لا أنتهي فلم يزل يلبى حتى رمى جمرة العقبة
تعليق شعيب الأرنؤوط : صحيح رجاله ثقات رجال الشيخين
ஃபள்ல் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : நான் முஸ்தலிபாவிலிருந்து மினாவிற்குச்செல்லும் போது நபியவர்களின் வாகனத்தின் பின்னால் இருந்தேன். நபியவர்கள் சென்றுகொண்டிருக்கும்போது ஒரு கிராமவாசி தன்னுடைய அழகான மகளை தன்னுடைய வாகனத்தில்பின்னால் அமர்த்தியவராக நபியவர்களுக்கு முன்னால் வந்தார். அவர் நபியவர்களுடன் சேர்ந்துசென்றார். நான் அப்பெண்ணை பார்ப்பவனாக இருந்தேன். நபியவர்கள் என்னைப் பார்த்தார்கள்.என்னுடைய முகத்தை அவளுடைய முகத்தை விட்டும் திருப்பினார்கள். பிறகு நான் மீண்டும்பார்வையைச் செலுத்தினேன். நபியவர்கள் அவளுடைய முகத்தை விட்டும் என்னுடை முகத்தைதிருப்பினார்கள். நான் (அதை விட்டும்) விலகிக் கொள்ளாதவனாக இருந்த நிலையில் இவ்வாறுமூன்று தடவை செய்தார்கள். அவர்கள் ஜம்ரதுல் அகபாவில் கல்லெறியும் வரை தல்பியா கூறிக்கொண்டே இருந்தார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : அஹ்மத் (1805)
மேற்கண்ட ஹதீஸ்களைக் கவனமாகப் பார்க்கும் எவரும், பெண்கள் தமது முகத்தை மறைப்பதுஅவசியம் இல்லை என்ற முடிவுக்கு வரும் படி தெளிவாக அமைந்துள்ளன.
மேலும் ஃபள்ல் (ரலி) அவர்கள் பார்த்தது அப்பெண்ணின் முகத்தை மட்டும்தான். அப்பெண்ணின் முகஅழகுதான் அவரை ஈர்த்து என்பதும் தெளிவாகிறது. இதிலிருந்து இந்த அரைகுறை ஆய்வாளர் இந்தஹதீஸிற்கு மறுப்பு என்ற பெயரில் எழுதுவதற்கு கூசும் வகையில் எடுத்து வைத்த முட்டாள்தனமானவாதங்கள் அனைத்தும் பொய்யாகி விட்டது என்பதையும் அனைவரும் அறிந்து கொள்ளலாம்.
ஆதாரம் 2
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டேன்.அப்போது அவர்கள் உரை நிகழ்த்துவதற்கு முன்பே தொழுகை நடத்தினார்கள். பாங்கோ இகாமத்தோஇல்லை. பிறகு பிலால் (ரலி) அவர்கள் மீது சாய்ந்து கொண்டு இறையச்சத்தைக் கடைப்பிடிக்குமாறும்இறைவனுக்கும் இறைத்தூதருக்கும் கட்டுப்படுமாறும் வலியுறுத்தி மக்களுக்கு அறிவுரையும்நினைவூட்டலும் வழங்கினார்கள். பிறகு அங்கிருந்து புறப்பட்டு பெண்கள் பகுதிக்குச் சென்றுஅவர்களுக்கும் நினைவூட்டி அறிவுரை பகர்ந்தார்கள். மேலும் பெண்களை நோக்கி தர்மம் செய்யுங்கள்நீங்கள் அதிகம் பேர் நரகத்தின் விறகு ஆவீர்கள் என்று கூறினார்கள். அப்போது பெண்கள் நடுவிலிருந்துகன்னங்கள் கருத்த ஒரு பெண்மனி எழுந்து ஏன் அல்லாஹ்வின் தூதரே என்று கேட்டார்கள். அதற்குஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நீங்கள் அதிகமாக குறை கூறுகின்றீர்கள். நன்றி மறந்துகணவனை நிராகரிக்கின்றீர்கள் என்று கூறினார்கள். அப்போது அப்பெண்கள் தம் காதனிகள்மோதிரங்கள் உள்ளிட்ட அணிகலன்கனை பிலால் (ரலி) அவர்களின் ஆடையில் போட்டார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்லிம் (1607)
கன்னங்கள் கருத்த பெண்மனி என்று ஜாபிர் (ரலி) அவர்கள் குறிப்பிடுவதாக இருந்தால்அப்பெண்ணின் முகம் திறந்திருந்தாலே இது சாத்தியம்.
பெண்கள் முகத்தை மறைப்பது கட்டாயமாக இருந்திருந்தால் நபி (ஸல்) அவர்களுக்குமுன்னிலையில் நபித்தோழியர்கள் முகத்தைத் திறந்திருக்க மாட்டார்கள். நபி (ஸல்) அவர்களும்இதைக் கண்டிக்காமல் இருக்க மாட்டார்கள். பெண்கள் முகத்தை மறைக்க வேண்டியதில்லைஎன்பதாலே இதை நபி (ஸல்) அவர்கள் கண்டிக்கவில்லை.
மேற்கண்ட செய்தியில் “ஸஃப்ஆவுல் ஹத்தைன்” என்ற வார்த்தைகளுக்கு “கன்னங்கள் கருத்தபெண்” என்பது பொருளாகும். ஆனால் இந்த அரைகுறை ஆய்வாளரோ இந்த வார்த்தைக்கு “ சமூகஅந்தஸ்தில் அடித்தட்டைச் சார்ந்த பெண் ” என்பதுதான் பொருள் என்று கூறுகின்றார்.
இந்த வார்த்தைக்கு இப்படி ஒரு பொருள் இருப்பதாக இவர் அரபி அகராதி நூற்களையோ அல்லதுஹதீஸ் விரிவுரை நூற்களையோ ஆதாரம் காட்டி நிரூபிக்க முடியுமா என்று அறைகூவல் விடுகிறோம்.
நாம் இவ்வாறு கூறுவதற்கு காரணம் இந்த வார்த்தைக்கு அப்படி ஒரு பொருள் கிடையாதுஎன்பதினால்தான். சல்லடை ஊசியைப் பார்த்து கேட்டதாம் உனக்கு பின்னால் ஒரு ஓட்டை உள்ளதுஎன்று. அது போன்றுதான் இந்த அரைகுறை ஆய்வாளர் விரிவுரை நூற்களை முறையாகப் படித்துப்பொருள் விளங்காமல் தப்பும் தவறுமாகப் படித்துவிட்டு நம்மைப் பார்த்து சரியாகப் படிக்க வேண்டும்என்றும் , அவசரகதியில் எழுதிவிட்டார்கள் என்றெல்லாம் புலம்புவது வேடிக்கையானதே.
நஸாயி, இப்னு அபீஷைபா ஆகிய அறிவிப்புக்களில் “மின் ஸஃபலத்தின் னிஸாயி ஸஃப்ஆவுல் ஹத்தைன்” என்ற சொற்றொடர் இடம் பெற்றுள்ளது. கன்னங்கள் கருப்பான அடித்தட்டு நிலையில் உள்ள பெண் என்று இடம் பெற்றுள்ளது. இதைத் தான் மேற்படி ஆய்வாளர் ஒன்று கிடக்க ஒன்று விளங்கிக் கொண்டார் போலும். இந்த சொற்றொடரில் இரண்டு தன்மைகள் சொல்லப்பட்டுள்ளன. அப்பெண்ணின் கன்னம் கருப்பாகவும் இருந்தது. அவர் அடித்தட்டு நிலையில் உள்ளவராகவும் இருந்தார் என இரண்டு தன்மைகள் இதில் சொல்லப்பட்டுள்ளன. இதில் இருந்து கன்னங்கள் கருப்பானவர் என்பதற்கு இவர் சொல்லக் கூடிய அர்த்தம் இருந்தால் அடித்தட்டு நிலையில் உள்ளவர் என்ற இன்னொரு சொல் தேவை இல்லை. அவருக்கு எதிரான இந்த வாசகத்தை ஏறுக்கு மாறாக விளங்கிக் கொண்டு இப்படி உளறிக் கொட்டி விட்டார்.
ஆய்வில் அவசரம் காட்டுவது நாமல்ல. இவர்கள்தான் என்பது இப்போது மிகத் தெளிவாகிவிட்டது.
ஆதாரம் : 3
3991حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا لَيْثٌ عَنْ يَحْيَى عَنْ نَافِعٍ أَنَّ ابْنَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا ذُكِرَ لَهُ أَنَّ سَعِيدَ بْنَ زَيْدِ بْنِ عَمْرِو بْنِ نُفَيْلٍ وَكَانَ بَدْرِيًّا مَرِضَ فِي يَوْمِ جُمُعَةٍ فَرَكِبَ إِلَيْهِ بَعْدَ أَنْ تَعَالَى النَّهَارُ وَاقْتَرَبَتْ الْجُمُعَةُ وَتَرَكَ الْجُمُعَةَ وَقَالَ اللَّيْثُ حَدَّثَنِي يُونُسُ عَنْ ابْنِ شِهَابٍ قَالَ حَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ أَنَّ أَبَاهُ كَتَبَ إِلَى عُمَرَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الْأَرْقَمِ الزُّهْرِيِّ يَأْمُرُهُ أَنْ يَدْخُلَ عَلَى سُبَيْعَةَ بِنْتِ الْحَارِثِ الْأَسْلَمِيَّةِ فَيَسْأَلَهَا عَنْ حَدِيثِهَا وَعَنْ مَا قَالَ لَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ اسْتَفْتَتْهُ فَكَتَبَ عُمَرُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْأَرْقَمِ إِلَى عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ يُخْبِرُهُ أَنَّ سُبَيْعَةَ بِنْتَ الْحَارِثِ أَخْبَرَتْهُ أَنَّهَا كَانَتْ تَحْتَ سَعْدِ بْنِ خَوْلَةَ وَهُوَ مِنْ بَنِي عَامِرِ بْنِ لُؤَيٍّ وَكَانَ مِمَّنْ شَهِدَ بَدْرًا فَتُوُفِّيَ عَنْهَا فِي حَجَّةِ الْوَدَاعِ وَهِيَ حَامِلٌ فَلَمْ تَنْشَبْ أَنْ وَضَعَتْ حَمْلَهَا بَعْدَ وَفَاتِهِ فَلَمَّا تَعَلَّتْ مِنْ نِفَاسِهَا تَجَمَّلَتْ لِلْخُطَّابِ فَدَخَلَ عَلَيْهَا أَبُو السَّنَابِلِ بْنُ بَعْكَكٍ رَجُلٌ مِنْ بَنِي عَبْدِ الدَّارِ فَقَالَ لَهَا مَا لِي أَرَاكِ تَجَمَّلْتِ لِلْخُطَّابِ تُرَجِّينَ النِّكَاحَ فَإِنَّكِ وَاللَّهِ مَا أَنْتِ بِنَاكِحٍ حَتَّى تَمُرَّ عَلَيْكِ أَرْبَعَةُ أَشْهُرٍ وَعَشْرٌ قَالَتْ سُبَيْعَةُ فَلَمَّا قَالَ لِي ذَلِكَ جَمَعْتُ عَلَيَّ ثِيَابِي حِينَ أَمْسَيْتُ وَأَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَأَلْتُهُ عَنْ ذَلِكَ فَأَفْتَانِي بِأَنِّي قَدْ حَلَلْتُ حِينَ وَضَعْتُ حَمْلِي وَأَمَرَنِي بِالتَّزَوُّجِ إِنْ بَدَا لِي رواه البخاري
சுபைஆ பின்த் அல்ஹாரிஸ் அவர்கள் 'பனூ ஆமிர் பின் லுஅய்' குலத்தைச் சேர்ந்த சஅத் பின் கவ்லா(ரலி) அவர்களுக்கு வாழ்க்கைப்பட்டிருந்தார். சஅத் (ரலி) அவர்கள் பத்ருப் போரில் கலந்துகொண்டவராவார். 'விடைபெறும் ஹஜ்ஜின் போது சஅத் (ரலி) அவர்கள் இறந்து விட்டார்கள்.அப்போது 'சுபைஆ' கர்ப்பமுற்றிருந்தார். சஅத் அவர்கள் இறந்து நீண்ட நாட்கள் ஆகியிருக்கவில்லை; (அதற்குள்) சுபைஆ பிரசவித்து விட்டார். (பிரசவத்திற்குப் பின் ஏற்படும்) உதிரப்போக்கிலிருந்துசுபைஆ அவர்கள் சுத்தமான போது, பெண் பேச வருபவர்களுக்காகத் தன்னை அலங்கரித்துக்கொண்டார். அப்போது, பனூ அப்தித் தார் குலத்தில் ஒருவரான 'அபுஸ் ஸனாபில் பின் பஅக்கக்' (ரலி)அவர்கள் சுபைஆ அவர்களிடம் வந்து, ''திருமணம் புரியும் ஆசையில் பெண் பேச வருபவர்களுக்காகஉங்களை நீங்கள் அலங்கரித்திருப்பதை நான் காண்கின்றேன். அல்லாஹ்வின் மீதாணையாக! (கணவன் இறந்த ஒரு பெண் அவனது இறப்புக்குப் பின் இருக்க வேண்டிய 'இத்தா' காலமாகிய) நான்குமாதம் பத்து நாட்கள் முடியும் வரையில் நீங்கள் (மறு)மணம் புரிந்து கொள்ள முடியாது'' என்றுகூறினார்கள். சுபைஆ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: இதை அபுஸ்ஸனாபில் என்னிடம்சொன்னதையடுத்து நான் மாலை நேரத்தில் எனது உடையை உடுத்திக் கொண்டு அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது நபி (ஸல்) அவர்களிடத்தில் இது பற்றிக் கேட்டேன்.அதற்கு, 'நீ பிரசவித்து விட்ட போதே (மணம் புரிந்து கொள்ள) அனுமதிக்கப்பட்டவளாக ஆகிவிட்டாய்.நீ விரும்பினால் (மறு)மணம் செய்துகொள்' என்று நபி (ஸல்) அவர்கள் மார்க்கத் தீர்ப்புவழங்கினார்கள்.
நூல் : புகாரி 3991
இந்தச் செய்தியில் சுபைஆ (ரலி) அவர்கள் அலங்காரம் செய்திருந்தார் என்று பொதுவாகக்கூறப்பட்டுள்ளது. அவர்கள் எந்த அலங்காரம் செய்திருந்தார்கள் என்பதை அஹ்மதில் இடம்பெற்றுள்ளஅறிவிப்புகள் தெளிவுபடுத்துகின்றன.
26166 26167 ஆகிய எண்களில் அஹ்மதில் பதிவாகியுள்ள அறிவிப்புகளில் சுபைஆ (ரலி) அவர்கள்கண்ணுக்கு சுர்மா இட்டிருந்ததாகவும் கையில் மருதாணி பூசியிருந்ததாகவும் இதை அந்நியரானஅபுஸ்ஸனாபில் பார்த்துவிட்டு நபியவர்களிடம் கூறியதாகவும் சொல்லப்பட்டுள்ளது. சுபைஆ (ரலி)அவர்கள் செய்ததை நபியவர்கள் கண்டிக்கவில்லை.
எனவே பெண் தனது முகத்தையும் தனது முன் கையையும் வெளிப்படுத்திக் கொள்ள இந்தச் செய்திதெளிவான ஆதாரமாக அமைந்துள்ளது.
இவ்வாறு நாம் வாதத்தை எடுத்து வைத்திருந்தோம்.
ஆனால் இந்தச் செய்தியை முறையாகப் படிக்காத இந்த அரைகுறை ஆய்வாளர் ”அபுஸ்ஸனாபில்”அவர்களை அந்நியரே இல்லை என்று வாதிக்கின்றார்.
அபுஸ்ஸனாபில் அந்நியரே இல்லை என்றால் அவர் எப்படி ”சுபைஆ (ரலி)” அவர்களை பெண்கேட்டுச்சென்றிருப்பார். அந்நியராக இருப்பவர்தானே ஒரு பெண்ணைத் திருமணம் செய்ய முடியும். திருமணம்முடித்த பின்னர்தான் அவர் கணவராக ஆவார். திருமணத்திற்கு முன் அவர் ஒரு அந்நிய ஆண்தான்.
இதைக் கூட இந்த ஆய்வாளர் விளங்காமல் வாதிக்கின்றார்.
அந்நியராக இருந்த ”அபுஸ்ஸனாபில் ” அவர்கள் ”சுபைஆ (ரலி)” அவர்கள் தன்னைப் பெண்கேட்டுவருபவர்களுக்காக அலங்காரம் செய்திருப்பதைக் காண்கிறார். அப்பெண் இத்தாகாலம் முடிவதற்குமுன்பாகவே மறுதிருமணம் செய்வதற்கு தயாராவதைக் கண்டிக்கின்றார். பின்னர் அப்பெண்நபியவர்களிடம் தீர்ப்பு கேட்டு வந்தவுடன் இவர் அப்பெண்ணை மணமுடிக்க நாடி பெண்கேட்டுசென்றார் என்று விளங்கிக் கொண்டால் இதில் எவ்வித முரண்பாடும் இல்லை.
எனவே நபியவர்கள் காலத்தில் பெண்கள் முகத்திரை அணியவில்லை என்பதற்கு நாம் எடுத்துவைத்து எந்த ஆதாரத்திற்கும் அவர்கள் எழுதியிருக்கும் மறுப்பு முறையாக இல்லை என்பதை நாம்தெளிவாக விளங்கிக் கொண்டோம். சத்தியத்தை அறிபவர்களுக்கு இதுவே போதுமானசான்றுகளாகும்.
ஆதாரம் : 4
சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு பெண்மணி அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! என்னைத் தங்களுக்கு அன்பளிப்பாக வழங்கிடவந்துள்ளேன் என்று சொன்னார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரை நோக்கிப் பார்வையைஉயர்த்தி நேராகப் பார்த்துவிட்டு பார்வையைத் தாழ்த்திக் கொண்டார்கள். பிறகு, தமது தலையைத்தொங்கவிட்டுக் கொண்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தம் விஷயத்தில் எந்தமுடிவையும் செய்யவில்லை என்பதைக் கண்ட அந்தப் பெண் (அந்த இடத்திலேயே) அமர்ந்துகொண்டார். அப்போது நபித்தோழர்களில் ஒருவர் எழுந்து, அல்லாஹ்வின் தூதரே! தங்களுக்கு அவர்தேவையில்லையென்றால், அவரை எனக்கு மணமுடித்து வைய்யுங்கள்! என்று சொன்னார்.... (நீண்டஹதீஸின் சுருக்கம்)
நூல் : புகாரி (5030)
இந்தச் சம்பவத்தில் அப்பெண் நபியவர்களின் சபைக்கு வரும் போது முகத்திரை அணியாமல்தான் வந்துள்ளார் என்பது தெளிவாகத் தெரிகிறது. அதன் காரணமாகத்தான் நபியவர்கள் அப்பெண்ணைப் பார்க்கிறார்கள்.
அதுமட்டுமல்ல சபையிலிருந்த அனைத்து நபித்தோழர்களும் பார்க்கிறார்கள். ஒரு நபித்தோழர் எழுந்து அப்பெண்ணை தனக்கு மணமுடித்து வைக்குமாறு நபியவர்களிடம் கோரிக்கை வைக்கிறார். அப்பெண்ணின் முகம் அந்த நபித்தோழருக்கு கவர்ந்த காரணத்தினால்தான் அவர் நபியவர்களிடம் கோரிக்கை வைக்கிறார். ஏனெனில் திருமணம் செய்பவர்கள் மணமுடிக்கும் பெண்ணின் முகத்தைப் பார்க்க வேண்டும் என நபியவர்கள் கூறியுள்ளார்கள்.
முகத்திரை அணிவது கட்டாயம் என்றிருந்தால் ஒரு பெண் அனைத்து ஸஹாபாக்களோடு நபியவர்கள் இருந்த சபைக்கு முகத்திரை அணியாமல் வந்திருப்பாரா? நபியவர்கள்தான் அதை அனுமதித்திருப்பார்களா? எனவே இந்தச் செய்தியும் பெண்கள் முகத்தை வெளிப்படுத்துவது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட ஒன்றுதான் என்பதற்கு தெளிவான சான்றாகத் திகழ்கிறது.
ஆதாரம் : 5
مسند أحمد بن حنبل-ن - (ج 3 / ص 330)
14577 - حدثنا عبد الله حدثني أبي ثنا عبد الصمد حدثني حرب يعني بن أبي العالية عن أبي الزبير عن جابر بن عبد الله الأنصاري : أن رسول الله صلى الله عليه و سلم رأى امرأة فأعجبته فأتى زينب وهي تمعس منية فقضى منها حاجته وقال إن المرأة تقبل في صورة شيطان وتدبر في صورة شيطان فإذا رأى أحدكم امرأة فأعجبته فليأت أهله فإن ذاك يرد مما في نفسه
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்கள் (ஒரு முறை) ஒரு பெண்ணைப் பார்த்தார்கள். அப் பெண்(ணின் அழகு) அவர்களைக் கவர்ந்தது. (இது போன்ற சமயத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதைக் காட்டுவதற்காக) உடனே அவர்கள் தம் துணைவியார் ஸைனப் (ரலி) அவர்களிடம் சென்றார்கள். அப்போது அவர் தமக்குரிய ஒரு தோலைப் பதனிட்டுக் கொண்டிருந்தார். அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது தேவையை நிறைவேற்றிவிட்டுப் பிறகு தம் தோழர்களிடம் புறப்பட்டு வந்து, "ஒரு பெண் (நடந்து வந்தால்) ஷைத்தான் (தூண்டிவிடும்) கோலத்திலேயே முன்னோக்கி வருகிறாள்;ஷைத்தான் (தூண்டிவிடும்) கோலத்திலேயே திரும்பிச் செல்கிறாள். எனவே, உங்களில் ஒருவரது பார்வை ஒரு பெண்ணின் மீது விழுந்து அவள் (அழகு) அவரைக் கவர்ந்து விட்டால் உடனே அவர் தம் துணைவியிடம் செல்லட்டும். ஏனெனில், அது, அவரது மனத்தில் தோன்றும் (கெட்ட) எண்ணத்தை அகற்றிவிடும்'' என்று கூறினார்கள்.
நூல்கள் : அஹ்மத் (14577) முஸ்லிம் ( 2718, 2719)
நபியவர்கள் காலத்தில் பெண்கள் முகத்திரை அணிந்திருந்தால் நபியவர்களின் பார்வை அந்நியப்பெண் மீது விழுந்திருக்காது. அப்பெண்ணின் அழகு அவர்களை கவர்ந்திருக்கவும் செய்யாது.இதிலிருந்தே நபியவர்கள் காலத்தில் பெண்கள் முகத்தை மறைக்கவில்லை என்பது தெளிவாகிறது.
"ஒரு பெண் (நடந்து வந்தால்) ஷைத்தான் (தூண்டிவிடும்) கோலத்திலேயே முன்னோக்கி வருகிறாள்; ஷைத்தான் (தூண்டிவிடும்) கோலத்திலேயே திரும்பிச் செல்கிறாள்“ என்றெல்லாம் கூறிய நபியவர்கள் அதிலிருந்து ஆண்களைக் காப்பதற்காக ஆண்களுக்கு வழிமுறையைக் கற்றுக் கொடுக்கிறார்களே தவிர பெண்கள் முகத்திரை அணிய வேண்டும் என்று கட்டளையிடவில்லை.
பெண்களின் முகத்தை ஆண்கள் பார்த்தால் தவறான எண்ணம் ஏற்படும் என்பதினால் முகத்திரைஅணிய வேண்டும் என்று வாதிப்பதும் தவறு என்பதை மேற்கண்ட செய்தியைப் படிப்பவர்கள்விளங்கிக் கொள்ளலாம். ஒரு பெண்ணின் அழகு நபியவர்களைக் கவர்ந்துள்ளது. ஆனாலும்நபியவர்கள் பெண்களை முகத்திரை அணிய வற்புறுத்தவில்லை. மேலும் அந்நியப் பெண்ணின் அழகுகவர்ந்தால் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை அனைத்து ஆண்களுக்கும் நபியவர்கள் கற்றுக்கொடுத்துள்ளார்கள்.
ஆதாரம் : 6
578 - حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ قَالَ أَخْبَرَنَا اللَّيْثُ عَنْ عُقَيْلٍ عَنْ ابْنِ شِهَابٍ قَالَ أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ أَنَّ عَائِشَةَ أَخْبَرَتْهُ قَالَتْ كُنَّ نِسَاءُ الْمُؤْمِنَاتِ يَشْهَدْنَ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاةَ الْفَجْرِ مُتَلَفِّعَاتٍ بِمُرُوطِهِنَّ ثُمَّ يَنْقَلِبْنَ إِلَى بُيُوتِهِنَّ حِينَ يَقْضِينَ الصَّلَاةَ لَا يَعْرِفُهُنَّ أَحَدٌ مِنْ الْغَلَسِ
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நம்பிக்கையுள்ள (மூமினான) பெண்கள் தங்களது கம்பளிஆடைகளால் போர்த்திக் கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களுடன் ஃபஜ்ர் தொழுகையில்பங்கெடுப்பவர் களாக இருந்தனர். தொழுகையை முடித்துக் கொண்டு தமது இல்லங்களுக்கு திரும்பிச்செல்வார்கள் .இருட்டின் காரணமாக அவர்களை யாரும் (ஆணா பெண்ணா என்று) அறிந்துகொள்ளமுடியாது. (நூல் : புகாரி 578)
பெண்கள் முகத்திரை அணிந்திருந்தால் அந்த முகத்திரையே அவர்கள் யார் என்று அறிவதற்குதடையாக இருந்திருக்கும்.
ஆனால் இருளின் காரணமாகத்தான் அப்பெண்கள் யார் என்பதை அறிந்து கொள்ள முடியாது எனஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிப்பதிலிருந்தே தொழுகைக்கு வந்த பெண்கள் முகத்திரைஅணிந்திருக்கவில்லை என்பதைத் தெளிவாக விளங்கிக் கொள்ளமுடியும்.
பெருநாள் தொழுகையில் கலந்து கொண்ட கன்னங்கள் கருத்த பெண்மணி நபியவர்களிடம் கேள்விகேட்டார் என்று நாம் முன்னர் பார்த்த செய்தியிலிருந்தும் தொழுகையில் கலந்து கொண்ட பெண்கள்முகத்திரை அணியவில்லை என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.
ஆதாரம் : 7
صحيح البخاري ت - (ج 3 / ص 513)
1466 - حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ حَدَّثَنَا أَبِي حَدَّثَنَا الْأَعْمَشُ قَالَ حَدَّثَنِي شَقِيقٌ عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ عَنْ زَيْنَبَ امْرَأَةِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ فَذَكَرْتُهُ لِإِبْرَاهِيمَ ح فَحَدَّثَنِي إِبْرَاهِيمُ عَنْ أَبِي عُبَيْدَةَ عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ عَنْ زَيْنَبَ امْرَأَةِ عَبْدِ اللَّهِ بِمِثْلِهِ سَوَاءً قَالَتْ كُنْتُ فِي الْمَسْجِدِ فَرَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ تَصَدَّقْنَ وَلَوْ مِنْ حُلِيِّكُنَّ وَكَانَتْ زَيْنَبُ تُنْفِقُ عَلَى عَبْدِ اللَّهِ وَأَيْتَامٍ فِي حَجْرِهَا قَالَ فَقَالَتْ لِعَبْدِ اللَّهِ سَلْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيَجْزِي عَنِّي أَنْ أُنْفِقَ عَلَيْكَ وَعَلَى أَيْتَامٍ فِي حَجْرِي مِنْ الصَّدَقَةِ فَقَالَ سَلِي أَنْتِ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَانْطَلَقْتُ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَوَجَدْتُ امْرَأَةً مِنْ الْأَنْصَارِ عَلَى الْبَابِ حَاجَتُهَا مِثْلُ حَاجَتِي فَمَرَّ عَلَيْنَا بِلَالٌ فَقُلْنَا سَلْ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيَجْزِي عَنِّي أَنْ أُنْفِقَ عَلَى زَوْجِي وَأَيْتَامٍ لِي فِي حَجْرِي وَقُلْنَا لَا تُخْبِرْ بِنَا فَدَخَلَ فَسَأَلَهُ فَقَالَ مَنْ هُمَا قَالَ زَيْنَبُ قَالَ أَيُّ الزَّيَانِبِ قَالَ امْرَأَةُ عَبْدِ اللَّهِ قَالَ نَعَمْ لَهَا أَجْرَانِ أَجْرُ الْقَرَابَةِ وَأَجْرُ الصَّدَقَةِ .
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களின் மனைவி ஸைனப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் பள்ளிவாசலில் இருந்த போது நபி(ஸல்) அவாகள், பெண்களே! உங்களின்ஆபரணங்களிலிருந்தேனும் தர்மம் செய்யுங்கள் எனக் கூறினார்கள். நான் என் (கணவர்) அப்துல்லாஹ்(ரலி) அவர்களுக்கும் மற்றும் என் அரவணைப்பில் உள்ள அநாதைகளுக்கும் செலவழிப்பவளாகஇருந்தேன். எனவே என் கணவரிடம், நான் உங்களுக்காகவும் எனது அரவணைப்பில் வளரும்அநாதைகளுக்காகவும் எனது பொருளைச் செலவழிப்பது ஸதகாவாகுமா என நபி(ஸல்) அவர்களிடம்கேட்டு வாருங்கள் எனக் கூறினேன். அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரிடம் நீயேகேள்' எனக் கூறிவிட்டார். எனவே நான் நபி(ஸல்) அவர்களிடம் சென்றேன். அவர்கள் வீட்டுவாயிலில்ஓர் அன்ஸாரிப் பெண் இருந்தார். அவரது நோக்கமும் எனது நோக்கமாகவே இருந்தது. அப்போதுஎங்களிடையே பிலால்(ரலி) வந்தார். அவரிடம் நான் எனது கணவருக்கும் எனது பராமரிப்பில் உள்ளஅநாதைகளுக்கும் நான் செலவழிப்பது தர்மமாகுமா? என நபி(ஸல்) அவர்களிடம் கேளுங்கள்; நாங்கள்யார் என்பதைத் தெரிவிக்க வேண்டாம் எனக் கூறினோம். உடனே அவர் நபி (ஸல்) அவர்களிடம்சென்று கேட்ட போது நபி (ஸல்) அவர்கள், அவ்விருவரும் யார்? எனக் கேட்டதற்கு அவர் ஸைனப்'எனக் கூறினார். நபி (ஸல்) அவர்கள் எந்த ஸைனப்? எனக் கேட்டதும் பிலால்(ரலி), அப்துல்லாஹ்வின்மனைவி' எனக் கூறினார். உடனே நபி(ஸல்) ஆம்! ஸைனபுக்கு இரு நன்மைகளுண்டு. ஒன்றுநெருங்கிய உறவினரை அரவணைத்ததற்குரியது; மற்றொன்று தர்மத்திற்குரியது எனக் கூறினார்கள்.
நூல் : புகாரி (1466)
நபி (ஸல்) அவர்களிடம் மார்க்கத் தீர்ப்பு கேட்டு வந்த இரண்டு பெண்களும் “ நபியவர்களிடம் நாங்கள்யார் என்பதை தெரிவிக்க வேண்டாம்” எனக் பிலால் (ரலி) அவர்களிடம் கோரிக்கை வைக்கின்றனர்.
அந்த இருபெண்களும் முகத்திரை அணிந்திருந்தால் தாங்கள் யார் என்பதை பிலால் அவர்களிடமேதெரிவிக்காமல் மறைத்திருக்கலாம்.
ஆனால் அவர்கள் முகத்தை வெளிப்படுத்தியவர்களாக வந்திருந்த காரணத்தினால்தான் பிலால்அவர்கள் அவர்கள் யார் என்பதைத் தெரிந்து கொள்கிறார்கள்.
பிலால் அவர்களை அறிந்து கொண்ட காரணத்தினால்தான் அவ்விரு பெண்களும் வீட்டிற்குள் இருந்தநபியவர்களிடம் தங்களைப் பற்றி அறிவித்து விட வேண்டாம் என கோரிக்கை வைக்கிறார்கள்.
இந்தச் சம்பவமும் நபியவர்கள் காலத்தில் பெண்கள் முகத்தை மறைக்காமல் தான் இருந்துள்ளார்கள்என்பதற்குச் சான்றாகத் திகழ்கிறது.
ஆதாரம் : 8
صحيح مسلم - (ج 6 / ص 181)
5770 - حَدَّثَنِى قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ ح وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِى شَيْبَةَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ كِلاَهُمَا عَنْ يُونُسَ ح وَحَدَّثَنِى زُهَيْرُ بْنُ حَرْبٍ حَدَّثَنَا هُشَيْمٌ أَخْبَرَنَا يُونُسُ عَنْ عَمْرِو بْنِ سَعِيدٍ عَنْ أَبِى زُرْعَةَ عَنْ جَرِيرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ سَأَلْتُ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- عَنْ نَظَرِ الْفُجَاءَةِ فَأَمَرَنِى أَنْ أَصْرِفَ بَصَرِى.
ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் எதேச்சையாக (அந்நியப் பெண்மீது) பார்வை விழுவதைப் பற்றிக் கேட்டேன்.அப்போது எனது பார்வையை (உடனடியாகத்) திருப்பிக்கொள்ள வேண்டுமென அவர்கள் எனக்குக் கட்டளையிட்டார்கள்.
நூல் : முஸ்லிம் (4363)
ஆதாரம் : 9
صحيح البخاري ت - (ج 6 / ص 270)
2465 - حَدَّثَنَا مُعَاذُ بْنُ فَضَالَةَ حَدَّثَنَا أَبُو عُمَرَ حَفْصُ بْنُ مَيْسَرَةَ عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِيَّاكُمْ وَالْجُلُوسَ عَلَى الطُّرُقَاتِ فَقَالُوا مَا لَنَا بُدٌّ إِنَّمَا هِيَ مَجَالِسُنَا نَتَحَدَّثُ فِيهَا قَالَ فَإِذَا أَبَيْتُمْ إِلَّا الْمَجَالِسَ فَأَعْطُوا الطَّرِيقَ حَقَّهَا قَالُوا وَمَا حَقُّ الطَّرِيقِ قَالَ غَضُّ الْبَصَرِ وَكَفُّ الْأَذَى وَرَدُّ السَّلَامِ وَأَمْرٌ بِالْمَعْرُوفِ وَنَهْيٌ عَنْ الْمُنْكَرِ
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நீங்கள் சாலைகளில் அமர்வதைத் தவிருங்கள் என்றுநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், எங்களுக்கு அங்கு அமர்வதைத் தவிர வேறு வழியில்லை.அவைதாம், நாங்கள் பேசிக் கொள்கின்ற எங்கள் சபைகள் என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள்,அப்படியென்றால் நீங்கள் அந்தச் சபைகளுக்கு வ(ந்து அம)ரும் போது, பாதைக்கு அதன் உரிமையைக்கொடுத்து விடுங்கள் என்று கூறினார்கள். மக்கள், பாதையின் உரிமை என்ன? என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், (அந்நியப் பெண்களைப் பார்க்காமல்) பார்வையைத் தாழ்த்திக் கொள்வதும்(பாதையில் செல்வோருக்குச் சொல்லாலோ செயலாலோ) துன்பம் தராமலிருப்பதும், சலாமுக்குபதிலுரைப்பதும், நன்மை புரியும்படி கட்டளையிடுவதும், தீமையிலிருந்து தடுப்பதும் (அதன்உரிமைகள்) ஆகும் என்று பதிலளித்தார்கள்.
நூல் : புகாரி (2465)
ஆதாரம் : 10
صحيح البخاري ت - (ج 4 / ص 582)
1905 - حَدَّثَنَا عَبْدَانُ عَنْ أَبِي حَمْزَةَ عَنْ الْأَعْمَشِ عَنْ إِبْرَاهِيمَ عَنْ عَلْقَمَةَ قَالَ بَيْنَا أَنَا أَمْشِي مَعَ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ فَقَالَ كُنَّا مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ مَنْ اسْتَطَاعَ الْبَاءَةَ فَلْيَتَزَوَّجْ فَإِنَّهُ أَغَضُّ لِلْبَصَرِوَأَحْصَنُ لِلْفَرْجِ وَمَنْ لَمْ يَسْتَطِعْ فَعَلَيْهِ بِالصَّوْمِ فَإِنَّهُ لَهُ وِجَاءٌ
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் யார் தாம்பத்தியத்திற்குச் சக்திபெற்றிருக்கிறாரோ அவர் திருமணம் செய்யட்டும்; ஏனெனில் திருமணம் (அந்நியப் பெண்களைப்பார்ப்பதை விட்டும்) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். யார் அதற்குச் சக்திபெறவில்லையோ அவர் நோன்பு நோற்கட்டும். அது அவரது இச்சையைக் கட்டுப்படுத்தும்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
நூல் : புகாரி (1905)
மேற்கண்ட செய்திகள் அனைத்தும் அந்நியப் பெண்களைப் பார்ப்பதை விட்டும் பார்வையைக்கட்டுப்படு்த்த வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றன.
அந்நியப் பெண்ணைப் பார்ப்பது என்பதின் கருத்து அவளுடைய முகத்தைப் பார்ப்பதுதான் என்பதற்குநாம் முன்னால் பல சான்றுகளைக் பார்த்தோம்.
பெண்கள் முகத்திரை அணிவதை மார்க்கம் கட்டாயமாக்கியிருந்தால் இந்த அளவிற்கு ஆண்களுக்குஉபதேசம் செய்ய வேண்டிய அவசியமில்லை.
பெண்கள் முகத்தைத் திறப்பதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ள காரணத்தினால்தான் அந்நியப்பெண்களை விட்டும் பார்வைகளை திருப்ப வேண்டும் என நபியவர்கள் ஆண்களுக்கு உபதேசம்செய்கிறார்கள். இந்தச் செய்திகளும் நபியவர்கள் காலத்தில் பெண்கள் முகத்திரைஅணிந்திருக்கவில்லை என்பதை நமக்கும் மறைமுகமாக தெளிவாக விளக்குகிறது.
முகத்தை மறைப்பதில் தவறில்லை
பெண்கள் முகத்தை மறைப்பது கட்டாயம் இல்லை என்றே நாம் கூறுகின்றோம். அதே நேரத்தில் ஒருபெண் தனது சுயவிருப்பத்தின் அடிப்படையில் தனது முகத்தை மறைத்துக் கொண்டால் அது மார்க்கஅடிப்படையில் தவறல்ல.
நபி (ஸல்) அவர்களின் காலத்தில் சில பெண்கள் தங்கள் முகங்களை மறைத்துக் கொள்ளும்வழக்கமும் இருந்துள்ளது. அதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்யவில்லை.
இஹ்ராம் அணிந்த பெண் முகத்திரையை அணியக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
நூல் : புகாரி (1838)
முகத்திரை அணியும் வழக்கம் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் இருந்ததால் இஹ்ராமின் போதுமாத்திரம் அதை அணியக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே இஹ்ராம்அணியாத மற்ற பெண்கள் முகத்திரை அணிவதற்குத் தடை இல்லை என்பதை இதிலிருந்து விளங்கிக்கொள்ளலாம்.
பெண்கள் முகத்தை மறைப்பது கட்டாயமில்லை என்பதும் இந்த ஹதீஸிலிருந்து விளங்குகிறது.ஏனென்றால் பெண்களின் முகம் மறைக்கப்பட வேண்டிய பகுதியாக இருந்தால் ஹஜ்ஜின் போது அதைவெளிப்படுத்த வேண்டும் என்று நபியவர்கள் உத்தரவிட மாட்டார்கள்.
பெண்கள் முகத்தை மறைப்பது மார்க்க அடிப்படையில் தவறில்லை என்றாலும் முகத்தைமறைப்பதால் தற்காலத்தில் ஏற்படும் தீமைகளையும் நமது கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஆண்களாயினும், பெண்களாயினும் அவர்களில் இறைவனை அஞ்சி ஒழுக்கமாக வாழ்பவர்கள் மிகக்குறைவே! பெரும்பாலோர் ஒழுக்கத்துடன் நடந்து கொள்ள முக்கியக் காரணம் தமக்குத் தெரிந்தமனிதர்களிடம் தம் மதிப்புப் பாதிக்கப்படும் என்பது தான். இந்த அச்சத்தினாலேயே ஒழுக்கத்தைக்கடைப்பிடிக்கிறார்கள். உள்ளூரில் ஒழுக்கமாக நடப்பவர்கள் வெளியூர்களில் ஒழுக்கம் தவறிவிடுவதற்கு இது தான் காரணம்.
ஒரு பெண் முகத்தையும் முழுமையாக மறைத்து விட்டால் அவள் யாரென்று அடையாளம் கண்டுகொள்வது கடினம். தன்னை யாருமே கண்டு கொள்ள மாட்டார்கள் எனும் போது அவள் ஒழுக்கம்தவறுவதற்கான துணிவைப் பெற்று விடுகின்றாள். எந்த ஆணுடன் அவள் தனித்துச் சென்றாலும்அவள் யாரென்று தெரியாததால் அவனுடைய மனைவியாக இருப்பாள் என்று உலகம் எண்ணிக்கொள்ளும். மற்றவர்கள் பார்த்து ரசிப்பார்கள் என்பதற்காக முகத்தையும் மறைத்துக் கொள்ளக்கட்டளையிட்டால் தவறு செய்யத் தூண்டுவதற்கு வழி செய்து கொடுக்கப்பட்டதாகவே ஆகும்.
பெண்கள் தாம் என்று இல்லை. ஆண்கள் கூட முகமூடி அணிந்து எவரும் கண்டு கொள்ளாதவகையில் ஆடை அணிய அனுமதிக்கப்பட்டால் அவனது சுய ரூபமும் அப்போது வெளிப்படும்.இறையச்சம் இல்லாவிட்டாலும் சமூகத்தைப் பற்றிய அச்சமாவது ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கத்தூண்ட வேண்டும்.
தவறு செய்ய நினைப்பவர்கள் இந்த முகத்திரையைக் கேடயமாகப் பயன்படுத்திக் கொண்டுதுணிச்சலாகச் செயல்படுகிறார்கள். எனவே தான் முகத்தை மறைக்குமாறு இஸ்லாம்கட்டளையிடவில்லை.
மார்க்கத்தில் முகத்தை மறைக்காமல் இருப்பதற்கு அனுமதி உள்ளது போல் முகத்தை மறைத்துக்கொள்ளவும் அனுமதி உள்ளது. அனுமதிக்கப்பட்ட காரியங்களின் மூலம் கேடுகள் ஏற்படுமானால்அந்தக் கேடுகளின் காரணமாக அதைத் தவிர்ப்பதும் மார்க்கத்தின் ஒரு அம்சமாகும். அதிகக்கொழுப்புள்ள உணவுகள் அனுமதிக்கப்பட்டவை என்றாலும் உடலுக்கு அது நல்லதல்ல என்றால் அதைநாம் தவிர்ப்பதே நல்லதாகும். பெண்கள் முகத்தை மறைப்பதால் ஏற்படும் கேடுகள் நமக்கு பளிச்சென்று தெரிகின்றன.
முகத்தை மறைத்துக் கொள்வதைக் கேடயமாகப் பயன்படுத்தி கூடாத செயலில் பெண்கள் ஈடுபடுதல்
கேடுகெட்ட பெண்கள் போலீஸாரிடம் இருந்து தப்பிக்க முகம் மறைப்பதைக் கேடயமாகப்பயன்படுத்திக் கொள்வது
ஆண்கள் கூட பெண்களைப் போல் முகத்தை மூடிக் கொண்டு தீய கரியங்களில் ஈடுபடுவது
ஆண்கள் கூட பெண்களைப் போல் முகத்தை மூடிக் கொண்டு தீய கரியங்களில் ஈடுபடுவது
இப்படி பலவாறான கேடுகள் ஏற்படும் போது எதைல் கேடு இல்லையோ அதைத் தான் நாம் தேர்வுசெய்ய வேண்டும்.
முகம் மறைக்காமல் இருப்பதால் ஏற்படும் கேடுகளை விட மறைப்பதால் ஏற்படும் கேடுகள் மிகஅதிகமாகும்.
முகத்தை மறைத்து ஆக வேண்டும் என்று மார்க்கத்தில் கட்டளை இருந்தால் அப்போது விளைவுகளைநாம் கவனிக்கக் கூடாது. இரண்டும் அனுமதிக்கப்பட்ட காரிய்ங்களில் மட்டும் எதில் கேடுகள் உள்ளதோஅதைத் தவிர்க்கத் தான் வேண்டும். இந்த அடிப்படையில் தான் பெண்கள் முகம் மறைப்பதைத்தவிர்க்க வேண்டும் என்று நாம் கூறுகிறோம்.
முடிவுரை
குர்ஆன் மற்றும் நபிவழியின் அடிப்படையில் நபியவர்கள் காலத்தில் இஸ்லாமியப் பெண்கள்பெரும்பாலும் முகத்தை மறைத்துக் கொள்ளவில்லை என்பதற்கான சான்றுகளைக் கண்டோம்.ஆனால் நமக்கு மறுப்பு என்ற பெயரில் கட்டுரை வெளியிட்ட அரைகுறை ஆய்வாளர் தன்னுடையகுறைமதியினாலும் , கெட்ட சிந்தனையினாலும் பெண்களைப் பார்த்து ரசிப்பதற்காவும்,ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டம் சேர்ப்பதற்காவும் இவ்வாறு கூறுவதாக விமர்சனம் செய்துள்ளார்.
இவருடைய இந்த விமர்சனம் நபி (ஸல்) அவர்களையும் நோக்கியதே என்பதை இந்த அரைகுறைஆய்வாளர் சிந்தித்துப் பார்க்கவில்லை.
ஏனெனில் நபியவர்கள் காலத்திலும் பெண்கள் முகத்திரை அணியவில்லை என்பதற்கு ஏராளமானசான்றுகளைக் கண்டோம். மேலும் நபியவர்கள் காலத்திலும் நபித்தோழியர்கள் போர்க்களத்திற்கும்.பள்ளிவாசல்களில் தொழுகைக்காகவும் கூட்டம் கூட்டமாகச் சென்றுள்ளனர்.
இது போன்று இவர்கள் பெண்களை முகத்திரை அணியச் சொல்லி வற்புறுத்துவதற்கும் ஆபாசமானகாரணங்களை சித்தரிக்கலாம். ஆனால் அது போன்ற தரங்கெட்ட நிலைக்கு தவ்ஹீத் ஜமாஅத் ஒருபோதும் செல்லாது.
அல்லாஹ் வழிகேடர்களின் வழிகேட்டிலிருந்து நம்மைக் காப்பாற்றி சத்தியக் கொள்கையில் நம்அனைவரையும் மரணிக்கச் செய்வானாக.
மேலும் பார்க்க
13.11.2012. 11:08
நன்றி - onlinepj.com
Post a Comment