Latest Post
Showing posts with label விளையாட்டு. Show all posts
Showing posts with label விளையாட்டு. Show all posts
செய்திகள்,
விளையாட்டு,
விளையாட்டு செய்திகள்
கிரிக்கெட் உலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் ஐபிஎல் சூதாட்ட விசாரணை தொடர்பாக, இந்திய கிரிக்கெட் வாரிய தலைவரின் மருமகனை விசாரணைக்கு ஆஜராகுமாறு மும்பை போலிஸ் சம்மன் அனுப்பியுள்ளது.
இந்நேரம்
ஐபிஎல் சூதாட்டம் - பிசிசிஐ தலைவர் மருமகனுக்கு போலிஸ் சம்மன்
கிரிக்கெட் உலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் ஐபிஎல் சூதாட்ட விசாரணை தொடர்பாக, இந்திய கிரிக்கெட் வாரிய தலைவரின் மருமகனை விசாரணைக்கு ஆஜராகுமாறு மும்பை போலிஸ் சம்மன் அனுப்பியுள்ளது.
ஐபிஎல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை நிர்வாகியும், பிசிசிஐ தலைவர் சீனிவாசனின் மருமகனுமான குருநாத் மெய்யப்பனை, இன்று காலை மும்பை நகர காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு மும்பை போலிஸ் சம்மன் அனுப்பியுள்ளது. எனினும் குருநாத், முன்பே ஒப்புகொண்ட பணிகள் காரணமாக தன்னால் இன்று ஆஜராக முடியாது என்றும், திங்கழ்கிழை காலை ஆஜராக அனுமதிக்க வேண்டுமென்றும் கோரியுள்ளார். ஐபிஎல் சூதாட்ட விசாரணையில் கைது செய்யப்பட்ட நடிகர் வினுசிங்கின் நெருங்கிய நண்பரான குருநாத், பிரபல பட தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம் குடும்பத்தை சேர்ந்தவர். பிசிசிஐ-யின் தலைவர் சீனிவாசனின் மகளை காதலித்து திருமணம் செய்து கொண்ட குருநாத், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ஆரம்பம் முதலே நிர்வகித்து வருகிறார். மேலும் சென்னையில் நடக்கும் அனைத்து போட்டிகளுக்கும் பிரபலங்கலை பிரத்யோகமாக அழைத்து வருவதில் தன்னிச்சையான ஆர்வம் கொண்ட குருநாத் மீதான விசாரணை, அரசியல் மற்று கிரிக்கெட் உலகில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, தார்மீக அடிப்படையில் பிசிசிஐ தலைவர் சீனிவாசன் பதவி விலகவேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. ஏற்கனவே ஐபிஎல் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுவிட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இன்று மும்பை, ராஜஸ்தான் அணிகளுக்கிடையேயான ஆட்டத்தில் வெற்றி பெறுபவருடன் ஞாயிறன்று மோத இருக்கிறது. மேலும் விசாரணையின் ஒரு பகுதியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முந்தைய ஆட்டங்கள் அனைத்தும் மறு ஆய்வு செய்யப்பட இருப்பதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஐபிஎல் விளையாட்டு இறுதி போட்டியில் 5 வது முறையாக தகுதி பெற்றுள்ள ஒரே அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி என்பதும், இதுவரை இருமுறை சாம்பியன்ஸ் பட்டம் வென்ற ஒரே அணியும் சென்னை அணிதான் என்பதும் குறிபிடதக்கது.
இந்நேரம்
Labels:
செய்திகள்,
விளையாட்டு,
விளையாட்டு செய்திகள்
பிரபலமானவை
-
(1986 ல் அந்நஜாத் பத்திரிகையில் பீஜே ஆசிரியரக இருந்த போது ஜூலை இதழில் எழுதிய கட்டுரையை கிளியனூர் பைசல் என்ற சகோதரர் தட்...
-
குர்ஆன், ஹதீஸ் ஆகிய இரண்டை மட்டுமே பின்பற்ற வேண்டிய முஸ்லிம் சமுதாயம் மத்ஹபு எனும் மாயையில் வீழ்ந்து கிடக்கிறது. 'மத்ஹபுகளும் குர்ஆ...
-
மும்பை - பிற மொழிகளை அறியாத ஒரு பெண்ணிற்கு தமிழில் சாட்சியம் அளிக்க மும்பை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கூத்தாயி ஆதிமூலம் என்ற ...
-
பதில் : நியுமராலஜி என்ற கலையில் ஆங்கில எழுத்துக்களுக்கு எண்களைக் குறியீடாகப் பயன்படுத்துவர். அது போல் அரபு எழுத்துக்களுக்கும் சிலர்...
-
நான் ஆவியல்ல-ஏசு ஏசு மரணிக்கவில்லை ஆதாரம்: 12 ஆவியல்ல! மனிதர் தான்! தனது சீடர்களுக்கு ஏசு முறையாக முகமன் கூற...
-
கேள்வி : அல் குரான் (62:9) - " நம்பிக்கை கொண்டோரே ! வெள்ளிக் கிழமையில் தொழுகைக்காக அழைக்கப் பட்டால் அல்லாஹ்வை நினை...
-
அன்புள்ள கொள்கைச் சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும். எனக்கு கேன்ஸர் நோய் தாக்கியுள்ளது என்பதை நான் கொள்கைச் சகோதரர்களுக்கு தெரிவித்ததை ...
-
எகிப்து நாட்டின் சர்வாதிகாரியாக இருந்தவன் ஃபிர்அவ்ன் என்ற கொடுங்கோலன். தனக்கு வழங்கப்பட்ட ஆட்சி அதிகாரத்தால் ஆணவத்தின் உச்சத்தில் இருந்...
-
டவுன் சின்ட்ரோம் (மன நலிவு நோய்) நோயினை கருவிலேயே கண்டறிவதற்கான நவீன முறையொன்றை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். பிறக்கவுள்ள குழந்தையிடம்...
-
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) வல்ல இறைவன் தன்னுடைய திருமறையில் பல நபிமார்களின் வாழ்க்கை வரலாற்றை தெளிவு பட கூறியுள்ளான்.ஆனால் மார்க்கத்தை அத...

