நெருப்புக் குண்டத்தில் எறியப்பட்டபோது

(1986ல் அந்நஜாத் பத்திரிகையில் பீஜே ஆசிரியரக இருந்த போது ஜூலை இதழில் எழுதியகட்டுரையை கிளியனூர் பைசல் என்ற சகோதரர் தட்டச்சு செய்து அனுப்பியுள்ளார்அதை இங்கேவெளியிடுகிறோம்.)

இப்ராஹீம் (அலைஅவர்களின் இறையச்சமும்தியாகமும் , வீரமும் நிறைந்த வரலாற்றை நாம்அறிவோம்நபிகள் நாயகம் (ஸல்அவர்களுக்கு முன் சென்ற நபிமார்களில் இப்ராஹீம் (அலை)அவர்களுக்கு முதலிடம் உண்டு என்பதையும்நாம் தெரிந்திருக்கிறோம்மிகபெரும் கொடுங்கோல்மன்னனுக்கு முன்னிலையில் கொஞ்சமும் அஞ்சாமல் சத்தியத்தை – ஒரிறைக் கொள்கையைதுணிவுடன் எடுத்துச் சொன்னார்கள்.
அதற்காக எண்ணற்ற கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டார்கள்ந்தக் கொடுமைகளுக்கெல்லாம்சிகரமாக மிகப்பெரும் நெருப்புக் குண்டத்தை வளர்த்து அதில் இப்ராஹீம் (அலைஅவர்கள் தூக்கிஎறியப்பட்டார்கள்அல்லாஹ் தன் பேராற்றலால்அந்த மாபெரும் நெருப்பைக் குளிரச்செய்துஅவர்களைக் காப்பாற்றினான் . இந்த அற்புத வரலாற்றை திருக்குர்ஆன் மிகவும் அழகாக நமக்குஎடுத்துரைக்கின்றது.
இந்த உண்மை வரலாற்றுடன் பொய்யான கதை ஒன்றையும் சிலர் கலந்து விட்டுருக்கின்றனர்அந்தக்கற்பனைக் கதை மக்கள் மன்றங்களில் அடிக்கடி சொல்லப்பட்டும் வருகின்றது.
குர்ஆனும்நபி வழியும் போதிக்கின்ற தத்துவத்திற்கு அந்தக் கதை முரண்படுவதாலும்,அந்தக்கதையை வைத்து சிலர் தவறான வழியை நேர்வழிபோல் காட்ட முயற்சிப்பதாலும் அதனைத்தெளிவுபடுத்த வேண்டிய அவசியம் எற்படுகின்றதுமுதலில் அந்தத் தவறான கதை என்னவென்றுபார்ப்போம்பிறகு அது எப்படித் தவறாக உள்ளது என்பதை விளக்குவோம்!
இதுதான் கதை:
இப்ராஹீம் (அலைநெருப்புக் குண்டத்தில் எறியப்படுவதற்கு சிறிது முன்பு ஜிப்ரீல் (அலைஅவர்கள்வந்து இப்ராஹீம் (அலைஅவர்களுடன் பின் வருமாறு உரையாடினார்களாம்!

ஜிப்ரீல் (அலை) :- இப்ராஹீமே ! இந்த இக்கட்டான நேரத்தில் உமக்கு எதுவும் தேவையா ?
இப்ராஹீம் (அலை) :- உம்மிடம் எனக்கு  ந்த்த் தேவையும் கிடையாது!
ஜிப்ரீல் (அலை) :- என்னிடம் உமக்குத் தேவை எதுவும் இல்லையானால் உம்மைப் படைத்தஇறைவனிடம் இந்தத் துன்பத்திலிருந்து விடுவிக்கும்படிக் கேளும்!
இப்ராஹீம் (அலை):- இறைவனிடம் நான் என் துன்பத்திலிருந்து விடு விக்கும்படி கேட்கவேண்டியதில்லைநான் மிகப்பெரும் ஆபத்தில் சிக்கிக் கொண்டிருப்பது அந்த இறைவனுக்குத்தெரியாதா என்னநான் எதற்காக அவனிடம் கேட்க வேண்டும்?
இப்படி ஒரு உரையாடல் நடந்ததாகத் தான் சிலர் கற்பனை செய்துள்ளனர் .
இதனை அல்லாஹ் தன் திருக்குர் ஆனில் சொல்லவில்லைநபிகள் நாயகம் (ஸல்அவர்களும்சொல்லவில்லைசிலர் தங்களின் சொந்தக் கற்பனையால் உருவாக்கியது தான் இந்த கதை.
பிரார்த்தனையின் நோக்கம்:
அல்லாஹ் எல்லாவற்றையும் அறிந்தவன் என்பதில் ஜயமில்லை. "அல்லாஹ்வுக்கு எல்லாம்தெரியும்என்பதற்காக நாம் நமது தேவைகளை அல்லாஹ்விடம் கேட்காமலிருக்க அனுமதி உண்டா?மிகச் சிறந்த நபியாகிய இப்ராஹீம் (அலைஅவர்கள் இப்படிச் சொல்லி இருப்பார்களாஎன்றுஆராயும் போது நிச்யம் அப்படி சொல்லி இருக்க முடியாது என்ற முடிவுக்குத்தான் வரமுடியும்.
ஏனெனில்இப்ராஹீம் (அலைஅவர்கள்பல்வேறு சந்தர்ப்ப ங்களில் தங்கள் தேவைகளைஅல்லாஹ்விடம் முறையிட்டிருக்கிறார்கள் என்று பிரார்த்தனையை  அவர்கள் விடவில்லை.
"பிரார்த்தனை என்பது நம்முடைய அடிமைத்தனத்தையும்அல்லாஹ்வின் மகத்துவத்தையும் ஒரேநேரத்தில் வெளிப்படுத்தும் மிகப்பெரும் வணக்கம்என்பதை இப்ராஹீம் (அலைநன்றாகாவேதெரிந்திருந்தார்கள்அவர்கள் , அல்லாஹ்விடம் கேட்ட பல துஆக்களை அல்லாஹ் திருக்குர்ஆனில்குறிப்பிடுகிறான்அவற்றில் சிலவற்றைக் கீழே காண்போம்.
அந்த ஆலயத்தின் அடித்தளத்தை இப்ராஹீமும்இஸ்மாயீலும் உயர்த்திய போது 'எங்கள் இறைவா!எங்களிடமிருந்து (இப்பணியைஏற்றுக் கொள்வாயாகநீயே செவியுறுபவன்அறிந்தவன்' (என்றனர்.)
'எங்கள் இறைவாஎங்களை உனக்குக் கட்டுப்பட்டோராகவும்எங்கள் வழித் தோன்றல்களை உனக்குக்கட்டுப்பட்டு நடக்கும் சமுதாயமாகவும் ஆக்குவாயாகஎங்கள் வழிபாட்டு முறைகளை எங்களுக்குக்காட்டித் தருவாயாகஎங்களை மன்னிப்பாயாகநீ மன்னிப்பை ஏற்பவன்நிகரற்ற அன்புடையோன்' (என்றனர்.)
எங்கள் இறைவாஅவர்களிலிருந்து அவர்களுக்காக ஒரு தூதரை அனுப்புவாயாகஅவர்உனதுவசனங்களை அவர்களுக்குக் கூறுவார்அவர்களுக்கு வேதத்தையும்ஞானத்தையும்  கற்றுக்கொடுப்பார்அவர்களைத் தூய்மைப்படுத்துவார்நீயே மிகைத்தவன்ஞானமிக்கவன்' (என்றனர்.)
 அல்குர் ஆன் 2 :127 -129
இறைவாஇவ்வூரைப் பாதுகாப்பு மையமாக  ஆக்குவாயாகஇவ்வூராரில் அல்லாஹ்வையும்இறுதிநாளையும் நம்பியோருக்குக் கனிகளை வழங்குவாயாக!' என்று இப்ராஹீம் கூறிய போது, '(என்னை)மறுப்போருக்கும் சிறிது காலம் வசதிகள் அளிப்பேன்பின்னர் அவர்களை நரக வேதனையில்தள்ளுவேன்சேருமிடத்தில் அது மிகவும் கெட்டதுஎன்று அவன் கூறினான்.
அல்குர் ஆன் 2 :126
என் இறைவாஎனக்கு அதிகாரத்தை அளிப்பாயாகஎன்னை நல்லோருடன் சேர்ப்பாயாக!பின்வரும்மக்களிடம் எனக்கு நற்பெயரை ஏற்படுத்துவாயாக!இன்பமான சொர்க்கத்தின் வாரிசுகளில் என்னையும்ஆக்குவாயாக!என் தந்தையை மன்னிப்பாயாகஅவர் வழி தவறியவராக இருக்கிறார். (மக்கள்)மீண்டும் உயிர்ப்பிக்கப்படும் நாளில்என்னை இழிவுபடுத்தி விடாதே!
அல்குர் ஆன் 26 : 83 -87
இறைவனேஎனக்கு நன்மகனைத் தந்தருள்வாயாக!
அல்குர் ஆன் 37 : 100
எங்கள் இறைவா ! (உன்னைமறுப்பவர்களுக்கு  ங்களை சோதனைப் பொருளாக ஆக்கி விடாதே!எங்கள் இறைவா ங்களுக்கு மன்னிப்பும் வழ ங்ககுவாயாக!
 அல்குர் ஆன் 60 :5
எங்கள் இறைவா! எனது சந்ததிகளை உனது புனித ஆலயத்திற்கருகில், விவசாயத்துக்குத் தகுதி இல்லாத பள்ளத்தாக்கில்அவர்கள் தொழுகையை நிறைவேற்றுவதற்காக குடியமர்த்தி விட்டேன். எனவே எங்கள் இறைவா! மனிதர்களில் சிலரது உள்ளங்களை இவர்களை நோக்கி விருப்பம் கொள்ள வைப்பாயாக! இவர்கள் நன்றி செலுத்திட இவர்களுக்குக் கனிகளை உணவாக வழங்குவாயாக!
 அல்குர் ஆன் 14 :37
மேலே கூறப்பட்ட அனைத்தும் இப்ராஹீம் (அலைஅவர்களின் பிரார்த்தைனைகள்அல்லாஹ்வுக்குஎல்லாம் தெரியும் என்று அவர்கள் மேற்கூறிய  ந்தர்ப்பங்களில் பிரார்த்தனை செய்யாமல்இருக்கவில்லைமாறாக தன்னுடைய இயலாமையைபலவீனத்தை வெளிப்படுத்திக் காட்டுவதற்காகதன்னுடைய பல தேவைகளை அல்லாஹ்விடம் கேட்டிருக்கிறார்கள்தன்னுடைய தேவைகளைஅல்லாஹ்விடம் கேட்டு விட்டு பின்வருமாறு அவர்கள் கூறவும் செய்கிறார்கள்.
எங்கள் இறைவா! நாங்கள் மறைப்பவற்றையும்வெளிப்படுத்துபவற்றையும் நீ அறிவாய். பூமியிலோவானத்திலோ அல்லாஹ்வுக்கு எதுவுமே மறையாது.
அல்குர் ஆன் 14: 38
இறைவனுக்குத் தன்னுடைய தேவைகள் தெரியும் என்பதை ஒப்புக் கொள்ளும் அதே நேரத்தில் துஆகேட்க அவர்கள் மறுக்கவில்லை என்பது தெளிவாகின்றது.
அப்படிப்பட்ட இப்ராஹீம் (அலைஅவர்கள் மிகப்பெரும் இக்கட்டில் மாட்டிக் கொண்ட நேரத்தில் எப்படிதுஆச் செய்ய மறுத்திருப்பார்கள்அதுவும் மிகப்பெரும் மலக்கு ஒருவர் நினைவூட்டிய பின்னர் எப்படிமறுத்திருப்பார்கள்இதிலிருந்தே  ந்த உரையாடல் கற்பனையானது என்பதை தெரிய முடியும்.
இப்ராஹீம் (அலைஅவர்கள் மட்டுமல்லஇன்னும் பல நபிமார்கள் தங்களுக்கு கஷ்டங்கள்ஏற்பட்டபோது "இறைவனுக்குத் தெரியும்என்று அவர்கள் அல்லாஹ்விடம் முறையிடாமல்இருந்ததில்லைதங்களுக்கு ஏற்பட்ட தேவைகளை அல்லாஹ்விடம் கேட்காமல் இரு ந்ததிலை.
ஆதம் (அலைஅவர்கள் தவறு செய்தபின்அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்ததை குர்ஆன் 7 :22வசனத்திலும்,
அய்யூப் (அலைஅவர்களுக்கு எற்பட்ட துன்பத்தை அவர்கள் அல்லாஹ்விடம் முறையிட்டதை 21 :83 வசனத்திலும்,
யூனுஸ் (அலைதாம் செய்த தவறுக்கு மன்னிப்புக் கோரியதை 21 :87 வசனத்திலும்,
ஈஸா (அலைதன்னுடைய தேவையை அல்லாஹ்விடம் கேட்டதை 5:114 வசனத்திலும்,
ஜக்கரியா (அலைதனக்கு ஒரு வாரிசு வேண்டும் என்று துஆ செய்தை 3:38 வசனத்திலும்,
நூஹ் (அலைதம் சமுதாயத்திற்கு எதிராக துஆ செய்ததை 21:76 வசனத்திலும்,
யஃகூப் (அலைதன் மகனைப் பிரிந்த வேதனையை அல்லாஹ்விடம் முறையிட்டதாக 12:86வசனத்திலும்,
மிகப்பெரும் ஆட்சி தனக்கு வேண்டும் என்று சுலைமான் (அலைஅவர்கள் துஆ செய்ததாக 38:35வசனத்திலும்,
லூத் (அலைஅவர்கள் தன் சமுதாயத்தினரின் தீய செயல்களிலிருந்து தன்னையும் தன்குடும்பத்தையும் காக்கும்படி துஆ செய்ததை 26:169 வசனத்திலும்
 ஷுஐபு (அலைஅவர்கள் தன் சமுதாயத்திற்கு எதிராகச் செய்த பிரார்த்தனையை 7:89 வசனத்திலும்,
மூஸா (அலைதனக்கு விரிவான ஞானத்தையும்இன்னும் பல தேவைகளையும் கேட்ட தாக 20:25-32 வசனங்களிலும்
அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான்.
மேற்கூறிய நபிமார்களில் எவரும் " தங்கள் தேவைகள் இறைவனுக்குத் தெரியும்என்பதைஉணராதவர்களில்லை கேட்பதை அல்லாஹ் விரும்புகிறான் என்பதற்காக அவர்கள் அல்லாஹ்விடம்கேட்டுள்ளார்கள்இந்த வசனங்கள் மூலம் அந்த உரையாடல் கற்பனையானது தான்அல்லாஹ்விடம்துஆ செய்வதைவிட உயர் ந்த நிலை எதுவுமில்லை என்பதைத் தெரியாலாம்.
ஷரீஅத்தரீகத்ஹகீகத்மஃரிபத் என்று மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் கூட்டத்தினர் இந்தக்கற்பனை நிகழ்ச்சியை ஆதாரமாக வைத்துஅல்லாஹ்விடம் கேட்காமலிருப்பது தான் உயர்ந்த நிலை!அல்லாஹ்விடம் துஆ செய்வது அல்லாஹ்வையே சந்தேகிப்பது ஆகும் என்று மக்களை வழிகெடுக்கத்துவங்கி விட்டனர்நபிமார்கள் அடைய முடியாத உயர்ந்த நிலை இருப்பதாகக் கருதுவது எவ்வளவுபெரும் பாவம் என்று அவர்களுக்குப் புரியவில்லை.
அல்லாஹ் தன் திருக்குர்ஆனில் பல இடங்களில் துஆ செய்யும்படிதேவைகளைக் கேட்கும்படி,மன்னிப்புக் கேட்கும் படி . நமக்கு ஆணையிடுகிறான்ஒரு இடத்தில் கூட என்னிடம்கேட்காமலிருங்கள் என்று சொல்லவில்லை என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.
என்னை அழையுங்கள்! உங்களுக்குப் பதிலளிக்கிறேன்எனது வணக்கத்தை விட்டும் பெருமையடிப்போர் நரகத்தில் இழிந்தோராக நுழைவார்கள்'' என்று உங்கள் இறைவன் கூறுகிறான்.
அல்குர் ஆன் 40:60
 "எனது இறைவன் நீதியைக் கட்டளையிட்டுள்ளான்'' எனக் கூறுவீராக! ஒவ்வொரு தொழுமிடத்திலும் உங்களின் கவனங்களை ஒருமுகப்படுத்திக் கொள்ளுங்கள்! வணக்கத்தை அவனுக்கே உளத்தூய்மையுடன் செய்துஅவனிடமே பிரார்த்தியுங்கள்! உங்களை அவன் முதலில் படைத்தவாறே மீள்வீர்கள்!
அல்குர் ஆன் 7:29
உங்கள் இறைவனைப் பணிவுடனும்இரகசியமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள்! வரம்பு மீறியோரை அவன் நேசிக்க மாட்டான்.
அல்குர் ஆன் 7:55
இந்த வசனங்கள் எல்லாம் பிரார்த்தனை செய்ய வேண்டியதன் அவசியத்தை நமக்கு உணர்த்துகின்றன.
தமது இறைவனின் திருமுகத்தை நாடி காலையிலும்மாலையிலும் தமது இறைவனைப் பிரார்த்திக்கும் மக்களுடன் உம்மைக் கட்டுப்படுத்திக் கொள்வீராக! இவ்வுலக வாழ்க்கையின் கவர்ச்சியை நாடி அவர்களை விட்டும் உமது கண்களைத் திருப்பி விடாதீர்! நம்மை நினைப்பதை விட்டும் எவனது சிந்தனையை நாம் மறக்கடிக்கச் செய்து விட்டோமோஅவனுக்குக் கட்டுப்படாதீர்! அவன் தனது மனோ இச்சையைப் பின்பற்றுகிறான். அவனது காரியம் வரம்பு மீறுவதாக உள்ளது.
அல்குர் ஆன் 18:28
தமது இறைவனின் திருப்தியை நாடி காலையிலும்மாலையிலும் அவனிடம் பிரார்த்திப்போரை நீர் விரட்டாதீர்! அவர்களைப் பற்றிய விசாரணையில் உமக்கு எந்தப் பொறுப்பும் இல்லை. உம்மைப் பற்றிய விசாரணையில் அவர்களுக்கு எந்தப் பொறுப்பும் இல்லை. எனவே அவர்களை நீர் விரட்டினால் அநீதி இழைத்தவராவீர்!
அல்குர் ஆன் 6:52
மேற்கூறிய வசனங்கள் துஆ செய்வதை அல்லாஹ் விரும்புகிறான்வரவேற்கிறான்தன் நபியையும்அத்தகைய மக்களுடன் சேர்ந்திருக்கும் படி கட்டளையிடுகிறான் என்பதை தெளிவுபடுத்துகின்றது.தாங்கள் அதிக ஞானம் பெற்றுவிட்டதாக கருதிக்கொண்டு அல்லாஹ்விடம் துஆ செய்யாமலிருக்கஎவருக்கும் அனுமதி இல்லை என்பதை நாம் புரி ந்து கொண்டோம்.
அதனால் தான் நபி (ஸல்அவர்கள் செருப்பின் வார் அறுந்து விட்டாலும் அல்லாஹ்விடம்கேளுங்கள்என்றனர்.(நூல் : திர்மிதீ)
":துஆ என்பதே ஒரு வணக்கமாகும்என்று நபி (ஸல்அவர்கள் கூறிவிட்டு,"  ந்த இடத்தில் நீ ங்கள்விரும்பினால் பின் வரும் குர்ஆன் வசனத்தையும் சேர்த்துக் கொள்ளு ங்கள்என்று கூறினார்கள்.
'உங்கள் இறைவன் கூறுகிறான் ;- என்னையே அழையுங்கள் ! நான்  ங்களுக்காக (உங்கள்அழைப்பைஅங்கீகரிக்கிறேன்எவர்கள் எனது வணக்கத்தை விட்டும் (புறக்கணித்துபெருமைஅடிக்கின்றார்களோ அவர்கள் நரகில் இழிந்தவர்களாக நுழைவர்" (அல் குர் ஆன் 40:60) என்று நபி(ஸல்அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)
நூல்   : அபூ தாவூதுநஸயீதிர்மிதீஇப்னு மாஜா
மேற்கண்ட நபிமொழி துஆ ஒரு வணக்கம் என்பதையும்அந்த வணக்கத்தைப் புறக்கணிப்பவர்கள்நரகில் இழிந்த நிலையில் நுழைவார்கள் என்பதையும் நமக்குப் பறை சாற்றுகின்றது.
இந்த எச்சிரிக்கைக்கு முரணாக மிகச்சிறந்த நபி ஒருவர் இருந்திருக்க முடியுமாநரகில் சேர்க்கக் கூடிய ந்த வார்த்தையை ஒரு நபி சொல்லி இருக்க முடியுமா?  என்பதயும் எண்ணிப்பாரு ங்கள்!
மேலும் இப்ராஹீம் (அலைஅவர்கள் தான் நெருப்புக் குண்டத்தில் எறியப்பட்ட வேளையில், " யாஅல்லாஹ் ! வணங்கப்படத் தகுதியானவன் நீ ஒருவனே ; இந்த பூமியில் உன்னை வணங்கக்கூடியவன் (இன்றைய நீலையில்நான் ஒருவனே! (எனவே என்னைக் காப்பாற்றுவாயாகஎன்றுபிரார்த்திதார்கள் என நபி (ஸல்கூறினார்கள்.
(அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)
,ஆதாரம் : முஸ்னத் அபூ யஃலா)
இப்ராஹீம் (அலைநெருப்பில் எறியப்பட்டபோது,' எனக்கு அல்லாஹ்வே போதுமானவன்அவனேஎன்னுடைய மிகச்சிறந்த பொறுப்பாளனாகவும் இருக்கிறான்எனக் கூறினார்கள் .
(அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்ஆதாரம் : புகாரி)
மேற்கூறிய இரு ஹதீஸ்களும் இப்ராஹீம் (அலைதுஆ செய்துள்ளதை மிகத் தெளிவாகவேதெரிவிக்கின்றன.
எனவே இப்ராஹீம் (அலைதுஆ செய்ய மறுத்தார்கள் என்பது முற்றிலும் ஆதாரமற்ற , குர்ஆன்போதனைக்கு முரண்பட்ட கற்பனை தான் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.
அந்தக் கதை இஸ்லாத்திற்கு முற்றிலும் அப்பாற்பட்டது என்பதைப் பின்வரும் நபிமொழிதெளிவாகவே சொல்லிவிடுகின்றதுஎவன் அல்லாஹ்விடம் தன் தேவைகளைக் கேட்கவில்லையோ,அவன் மீது அல்லாஹ் கோபப்படுகிறான் என்பது நபிகள் நாயகம் (ஸல்) , அவர்கள் கூறியபொன்மொழியாகும் .
இதனை இமாம் ஹாகிம் அவர்கள் அறிவித்துள்ளார்கள்ஹதீஸ்கலை வல்லுனர்கள் இதுஆதாரபூர்வமானது என்று கூறியுள்ளனர்.
இந்த நபி மொழியிலிருந்து இப்ராஹீம் (அலைஅவர்கள் தன்னுடைய தேவையை கேட்க மறுத்திருக்கமாட்டார்கள் என்பது தெளிவுஅல்லாஹ்வுக்கு கோபத்தை ஏற்படுத்தக் கூடிய ஒரு காரியத்தைமிகப்பெரும் நபி எப்படி செய்திருப்பார்கள்?
துஆ கேட்காமலிருப்பதற்கு இஸ்லாத்தின் அனுமதி கிடையாதுஅத்தகையவர்களை அல்லாஹ்கோபிக்கிறான் எனும்போது அது மிகப் பெரும் பாவம் என்பதும் தெளிவுஅதனால் நபி (ஸல்)அவர்கள் நமக்கு எண்ணற்ற துஆக்களைக் கற்றுத் தந்துள்ளனர்.
இது போன்ற கதைகளும்அது போதிக்கின்ற தவறான வழிகாட்டுதல்களும் தவிர்க்கப்பட்டாகவேண்டும்...
அல்லாஹ் உண்மை மார்க்கத்தை அறிந்து அதன்படி செயல்பட அருள் புரிவானாக....
  thanks to - onlinepj
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger