Featured Post Today
print this page
Latest Post
Showing posts with label வரலாறு. Show all posts
Showing posts with label வரலாறு. Show all posts

யார் இவர்?

யார்
1484 ஆண்டுகளுக்கு முன் அரேபிய நாட்டின் மக்கா நகரில் முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அல்லாஹ்வின் கருணை அவர்கள் மீது உண்டாகட்டும்) பிறந்தார்கள்.

அவர்கள் தமது 25ஆம் வயதில் வணிகராகவும், நாற்பதாம் வயதில் ஊரிலேயே பெரிய செல்வந்தராகவும் ஆனார்கள். இந்த வயதில் தான் தமக்கு இறைவனிடமிருந்து செய்தி வருவதாக அவர்கள் வாதிட்டனர். 

எனவே இதன் மூலம் செல்வம் திரட்டும் நோக்கம் ஏதும் அவர்களுக்கு இருந்திருக்க இயலாது என்பதை அறியலாம். இருக்கின்ற செல்வத்தைப் பெருக்கிக் கொள்வது நோக்கமாக இருந்ததா என்றால் அதுவுமில்லை. 

ஏனெனில் அவர்கள் சொந்த ஊரை விட்டும், தமது சொத்துக்கள் அனைத்தையும் விட்டும் ஓட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். தாம் இறைத் தூதர் என்று கூறுவதையும் தமது பிரச்சாரத்தையும் கைவிடுவதாக இருந்தால் ஊரை விட்டு விரட்டப்படுவதிலிருந்து அவர்கள் தப்பித்திருக்க முடியும். 

அந்தச் சமுதாயம் இதைத் தான் அவர்களிடம் வேண்டியது. ஆனாலும் அனைத்தையும் துறந்து விட்டு வெறுங்கையுடன் ஊரை விட்டு வெளியேறினார்கள். 

பல்லாண்டுகள் பாடுபட்டு திரட்டிய செல்வங்கள் அனைத்தையும் தமது கொள்கைக்காக இழக்கத் துணிந்தவருக்கு பொருளாதாரத்தைப் பெருக்கிக் கொள்வது நோக்கமாக இருந்திருக்க முடியாது என்பதை அறியலாம். 

பொருளாதாரத்தைத் திரட்டுவதற்காக இறைவனின் பெயரால் கற்பனை செய்த ஒருவர், இருக்கின்ற பொருளாதாரத்தை இழப்பதற்கு முன்வர மாட்டார். 

ஊரை விட்டு விரட்டப்பட்டு மதீனா நகரில் ஓர் ஆட்சியை நிறுவிய பிறகு அவர்கள் நினைத்திருந்தால் பொருளாதாரத்தை விரும்பிய அளவுக்குத் திரட்டியிருக்க முடியும். ஏனெனில் அவர்களின் ஆட்சி அவ்வளவு செழிப்பாக இருந்தது. இந்த நிலையிலும் அவர்கள் தமக்காகச் செல்வம் திரட்டவில்லை. அரண்மனையில் வசிக்கவில்லை. கடைசிவரை குடிசையிலே வாழ்ந்து குடிசையிலேயே மரணித்தார்கள். அவர்களும், அவர்களின் குடும்பத்தினரும் அன்றாடம் வயிறார சாப்பிட்டதில்லை. ஒரு மாதம் அளவுக்கு வீட்டில் அடுப்பு மூட்டாமல் பேரீச்சம் பழங்களையும், தண்ணீரையும் மட்டுமே உணவாக உட்கொண்டு வாழ்ந்தார்கள். 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரண்டு சிறிய போர்வைகளையே மேலாடையாகவும், கீழாடையாகவும் அணிந்தனர். விஷேச நாட்களில் அணிந்து கொள்வதற்காக தைக்கப் பட்ட ஆடைகள் ஒன்றிரண்டு மட்டுமே அவர்களிடம் இருந்தன. வாழ்நாள் முழுவதும் அவர்கள் வீட்டில் விளக்கு இருந்ததே இல்லை. இருட்டிலே தான் அவர் கள் இரவுப் பொழுதைக் கழித்திருக்கிறார்கள். தமது கவச ஆடையை அடைமானம் வைத்து மீட்காமலே மரணித்தார்கள். ஒரு நிலப்பரப்பு, குதிரை, சில ஆடுகள் ஆகியவை தாம் அவர்கள் விட்டுச் சென்றவை. அதுவும் தமது மரணத்திற்குப் பின் அரசுக்குச் சேர வேண்டும்; தமது குடும்பத்தினர் வாரிசாகக் கூடாது என்று பிரகடனம் செய்தார்கள். 

நபிகள் நாயகத்தின் இந்தத் தூய வரலாற்றை அறிகின்ற எவரும் பொருள் திரட்டுவதற்காக இறைவன் பெயரால் நபிகள் நாயகம் கற்பனை செய்தார்கள் என்று நினைக்க மாட்டார்கள். 

மக்களிடம் புகழ், மரியாதை அடைவதற்காக இப்படிக் கடவுள் பெயரைப் பயன்படுத்தியிருப்பார்களோ என்று நினைத்தால் அதுவும் தவறாகும். 

புகழுக்காக ஆசைப்படும் ஒருவர் தமது மரியாதைக்கும், கௌரவத்துக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் சொற்களைக் கடவுள் பெயரால் கற்பனை செய்ய மாட்டார். 

கடவுள் முன்னால் நிறுத்தப்படும் போது வெற்றி பெறுவேனா என்பது எனக்குத் தெரியாது.’’ 

‘‘என்னிடம் கடவுளின் பொக்கிஷங்கள் இல்லை; மறைவானது எனக்கு தெரியாது’’

‘‘தப்புச் செய்தால் நானும் கடவுளிடம் தப்பிக்க முடியாது’’

‘‘நானும் உங்களைப் போன்ற மனிதனே’’

என்றெல்லாம் மனிதர்களிடம் தெளிவாகத் தெரிவிக்குமாறு திருக்குர்ஆன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கட்டளையிடுகிறது. 

‘‘நீர் எனக்கு அஞ்சாமல் மனிதருக்கு ஏன் அஞ்சுகிறீர்?’’ என்று நபிகள் நாயகத்தை இறைவன் கண்டிக்கும் வசனங்களும் குர்ஆனில் உள்ளன. 

கண் தெரியாத ஒருவரை நபிகள் நாயகம் கடிந்து கொண்ட போது - அது கண் தெரியாதவருக்குத் தெரியாத நிலையிலும் - அதை இறைவன் கண்டித்த வசனங்களும் குர்ஆனில் உள்ளன. 

நம்மைப் போன்ற சாதாரண மனிதர்கள் கூட மக்கள் மத்தியில் நமது மரியாதை குறைவதை ஜீரணிக்க மாட்டோம். நபிகள் நாயகம் அவர்களோ தம்மைக் கண்டித்து தமது மதிப்பைக் குலைக்கும் சொற்கள் பலவற்றை இறை வார்த்தை என்று அறிவித்தார்கள். 

தம்மைக் கடவுள் என்று நபிகள் நாயகம் அறிவித்தாலும் அதை ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு அவர்கள் மீது மக்களில் சிலர் அன்பு வைத்திருந்தனர். அப்படியிருந்தும் நபியவர்கள் தம்மை, மற்றவர்களைப் போன்ற மனிதராகவே பிரகடனம் செய்தார்கள். 

இந்த விவரங்கள் யாவும் இறைச்செய்தி என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறிமுகம் செய்த திருக்குர்ஆனிலே காணப்படுகின்றன. 

தம்மைக் கண்டிக்கின்ற தமது மரியாதைக்குப் பங்கம் ஏற்படுத்துகின்ற செய்திகளை தமக்கு எதிராகவே ஒருவர் எவ்வாறு கற்பனை செய்வார் என்று சிந்தித்தால் திருக்குர்ஆன் நபிகள் நாயகத்தின் கற்பனையாக இருக்கவே முடியாது என்பதை அறிந்து கொள்ள முடியும். 

அவர்களுக்குப் பல்லக்கு இருக்கவில்லை! 

அவர்களுக்கு வாயிற்காப்போன் இருக்கவில்லை! 

காலில் விழுவதை அவர்கள் அனுமதிக்கவில்லை! 

‘‘இயேசுவை மற்றவர்கள் புகழ்வது போல் என்னை வரம்பு மீறிப் புகழாதீர்கள்’’ என்று எச்சரித்தார்கள்! 

மிகச் சாதாரண ஒரு மனிதன் எதிர்பார்க்கும் புகழைக் கூட அவர்கள் விரும்பவில்லை. மக்களிடம் பெற்றதுமில்லை. 

உலகின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் இவர் தீர்வு வழங்கியுள்ளார். அதனால் தான் பேரறிஞர் ஜார்ஜ் பெர்னாட்ஷா கூறினார்: 

‘‘முஹம்மது நபி இந்த உலகின் அதிபராக பொறுப்பேற்றால் இன்றைய பிரச்சனைகள் அனைத்தையும் விரைவாகவும் சிறப்பாகவும் தீர்த்துவிடுவார். 

வெளியீடு: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) 30, அரண்மனைக்காரன் தெரு, மண்ணடி, சென்னை - 600001.
0 comments

கர்பலா யுத்தத்தின் கண்ணீர் வரலாறு – 02 (Video)றஸ்மின்(misc)


நபியவர்களின் பேரப்பிள்ளைகளில் ஒருவரான ஹுஸைன் (ரலி) அவர்கள் கொலை செய்யப்பட்ட “கர்பலா” வரலாற்றின் இரண்டாம் பாகம். ஹுஸைன் (ரலி) அவர்களின் இறுதிக் கட்டத்தில் யுத்தம் செய்யாமல் சமாதான நிலைக்கு வர விரும்பினாலும், எதிரிப்படையினர் அதை விரும்பாமையினால் ஹுஸைன் (ரலி) அவர்கள் எதிரிப் படையினரால் கொலை செய்யப்படுகின்றார்கள். முழுமையான வரலாற்றை அறிய வீடியோவை பார்வையிடவும்.

rasminmisc 
0 comments

கர்பலா யுத்தத்தின் கண்ணீர் வரலாறு – 01 (Video) றஸ்மின் (misc)


நபியவர்களின் பேரப்பிள்ளை ஹுஸைன் (ரலி) அவர்கள் படுகொலை செய்யப்பட்ட கர்பலா யுத்தத்தின் கண்ணீர் வரலாறு. ஹுஸைன் (ரலி) யைப் போற்றி முஆவியா (ரலி) அவர்களை தூற்றும் ஷீயாக்களில் உண்மை முகம் வெளிப்பட்ட உண்மை வரலாறு. பாகம் – 01 

0 comments

இராமர் பாலம் இராமேஸ்வரத்தில் இல்லை!


சிறீராமனுடைய சரித்திரத்தை நாரத முனிவர் வால்மீகிக்குச் சொல்லி அதை அவர் காவியமாக எழுதினார் என்பதுதான் நாம் அறிந்தது. வால்மீகி எழுதிய இராமாயணம் மிகப் பெரிய புகழ் பெற்ற பிறகே பிற மொழிகளில் கம்பர் முதற்கொண்ட பலரால் இராமாயணம் எழுதப் பெற்றது.

இராமர் பாலம் பற்றிய எந்த உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டுமானாலும் வான்மீகத்தில் இருப்பதை ஆதாரமாகக் கொள் வதுதான் நியாயம். கம்பரோ, எழுத் தச்சனோ, துளசிதாசரோ யாராயினும் இவர்கள் எழுதியவை வான்மீகத்தை அடியொற்றி மாற்றியும், மிகைப் படுத்தியும் எழுதப்பட்டவைதான் என்பதிலும் யாருக்கும் சந்தேகம் இல்லை. இந்த காவியங்களிலெல்லாம் ஏராளமான இடைச்செருகல்கள் உண்டு என்பதையும் யாரும் மறுப்பதற்கில்லை.

மதரீதியாக இராமர் பாலத்தின்மீது நம்பிக்கை வைத்து அது இன்றளவும் இருக்கிறது என்று ஒருவர் நம்பினால் அவரது நம்பிக்கை யார் எழுதிய இராமாயணத்தை அடிப்படையாக வைத்து அமைய வேண்டும்?

இராமாயணத்தை எழுதிய ஒவ்வொருவரும் ஒருவருக்கொருவர் பல அம்சங்களில் மாறுபட்டு இருப்பதையும், இவர்களது காவி யங்களில் ஏராளமான கற்பனைகள் இருப்பதையும், இவற்றில் பல இடைச்செருகல்கள் இருப்பதையும் ஒப்புக் கொள்ளும்போது, இராமர் பாலத்தை புனிதம் என்று நம்பு கிறவர்கள் யார் எழுதியதை ஆதார மாகக் காட்டுவார்கள்?

உதாரணமாக, இராமர் தான் கட்டிய பாலத்தைத் தானே உடைத் தார் என்ற செய்தி கம்பராமா யணத்தில் வருகிறது. இதை மிகைப்பாடல் என்றும், இடைச் செருகல் என்றும் ஆகவே இது உண்மையல்லவென்றும் சிலர் (துக்ளக் சோ) சொல்கிறார்கள்.

இதே அளவுகோலைப் பயன் படுத்தினால் இராமர், இராமேஸ் வரத்தில் சிவனை வழி பட்டார் என்பதும் கம்பராமாயணத்தில் மட்டுமே. அதுவும் மிகைப்பாடல் பகுதியில், இடைச்செருகலாகத்தான் வருகிறது.

இதை நம்பி இன்றுள்ள இராமேஸ்வரம் கோவிலை ஆரம்பத் தில் ஸ்தாபித்தவர் இராமனே என்றும் நம்புகிறவர்களின் நம்பிக்கை என்னாவது? இப்படி இராமன் இரா மேஸ்வரத்தில் சிவனை வழிபட்டார் என்பது வான்மீகத்தில் இல்லவே இல்லை.

முதல் நூலில் இல்லாத ஒன்று தழுவல் நூலில் இருக்குமானால் நாம் முதல் நூலைத்தானே ஆதார மாக ஏற்க முடியும். மேலும், வான் மீகத்தில் இராமேஸ்வரம் என்ற ஊரின் பெயர் எங்குமே பயன்படுத் தப்படவில்லை. அதுபோல தனுஷ் கோடி என்ற ஊரின் பெயரும் வான்மீகத்தில் இல்லை.
மாறாக அனுமன் லங்காவுக்குச் சென்றபோதும், இராமன் லங்காவை பார்வை இட்டபோதும் மகேந்திர கிரி மலையில் ஏறி நின்று பார்த் தார்கள் என்று வான்மீகத்திலும், கம்பரிலும் ஒரே மாதிரி வருகிறது.

இந்த மகேந்திரமலை இராமேஸ் வரத்திலோ, தனுஷ்கோடியிலோ இல்லை. ஒரு சிறிய மணல் பொத் தையை மகேந்திரமலை என்று இராமேஸ்வரத்தில் வழிகாட்டிகள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் அனுமனும், இராமனும் ஏறி நின்ற மகேந்திர மலை இன்றும், உண் மையிலேயே இந்திய வரைப்படத்தில் ஒரி சாவை ஒட்டிய ஆந் திர மாநிலத்தின் கடற்கரையில் தான் உள்ளது. இந்த மலை யில் நின்று பார்த்தால் கடலும், கடற்கரையில் உள்ள லங்காவும் (சிறிய தீவு) அவர் களுக்குத் தெரிந்தது.

லங்கா என்ற சமஸ் கிருத வார்த்தைக்கு சிறிய தீவு என்று அர்த்தம். வான்மீகத் திலும், கம்பரிலும் சொல்லப்படுகின்ற கிட்கிந்தை, தண்டகாரண்யம், விந்திய மலை, கோதாவரி நதி, நர்மதை நதி, விந்தியத்தின் மலைக்குகைகள் அனைத்துமே இன்றும் இந்திய வரைபடத்தில் ஆந்திராவின் வடக்கு எல்லையிலும், ஒரிசா சட்டீஸ்கர் மற்றும் மத்தியப்பிரதேசம், உத்திர பிரதேசம் மாநிலங்களிலும் உள்ளன.

வான்மீகத்திலும் கம்பரிலும் வரும் பஞ்சவடியும், அயோத்தியும் சித்திரக்கூடமும் கூட இன்றைய உத்திரபிரதேச மாநிலத்திலேயே உள்ளன. அயோத்தியில் புறப்பட்டு காட்டில் கால்நடையாக வனவாசம் வந்த இராமன் முதலியோர் முதல் 10 ஆண்டுகள் சித்திரக்கூடத்தில் முனிவர்களின் விருந்தினர்களாகவே தங்கியிருந்தார்கள் என்கிறது வான்மீகம்.

சீதையை இராவணன் கடத்திய தாகச் சொல்லப்படும் பஞ்சவடி ஆஸ்ரமம் கோதாவரி ஆற்றின் ஒரு கிளையின் அருகில் இருந்தது என்று இரண்டு இராமாயணங்களும் சொல்கின்றன.

இந்த பஞ்சவடியும், கோதாவரியும், கிட்கிந்தையும் சட்டீஸ்கர் மற்றும் ஆந்திராவின் வடக்கு எல்லையில் இன்றும் உள்ளன. இராவணனின் தங்கை சூர்ப்பனகை தண்டகாரண் யப் பகுதியில் வசித்தாள் என்கிறது வான்மீகம்.

ஆகாயத்தில் பறக்கும் குதிரை, தேர், புஷ்பக விமானம், பேசும் குரங்கு, பேசும் கழுகு, பேசும் கரடி, பறந்து செல்லும் அரக்கர்கள் போன்ற இயற்கைக்கு புறம்பான கற்பனைகளை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் இராவணனது லங்கா இன்றுள்ள ஒரிசா கடற்பகுதியில் உள்ளது என்பது புரியும்.
எப்படி?

கிட்கிந்தையில் இருந்து படைகளுடன் மகேந்திரமலையை கால்நடையாக சென்றடைய இராமன் எடுத்துக் கொண்ட காலம் வெறும் நான்கே நாட்கள் ஆறுகள், மலைகள், ஏரிகள், அடர்ந்த காடுகளையெல் லாம் சுற்றியோ, நடுவில் சென்றோ வீரர்கள் இந்த தூரத்தைக் கடந் தார்கள் என்று வான்மீகத்தில் வருகிறது.

கிட்கிந்தையில் இருந்து காட்டு வழியாக நான்கு நாட்களுக்குள் ஒரு சேனை கடந்து செல்லும் தூரத்தில் இருப்பது தான் ஒரிசாவில் உள்ள மகேந்திரமலையும் கடற்கரையும்.

மாறாக கிட்கிந்தையில் இருந்து குறுக்காக நடந்தாலும் 1500 கிலோ மீட்டர் தூரம் உள்ள இராமேஸ் வரத்தை இராமனின் சேனை வந்தடைய நான்கு நாளல்ல. ஆறு மாதங்கள் ஆனாலும் முடியாது.

பாலம் கட்ட 5 நாட்களும், போர் செய்து இராவணனைக் கொல்ல 8 நாட்களும் எடுத்துக் கொண்ட இராமன் சித்திரை மாதம் சுக்ல ஷஷ்டியன்று வனவாசம் முடிந்து திரும்பி நந்திகிராமம் வந்துவிடுகிறார்.

கிட்கிந்தை மகேந்திரகிரி -4 நாட்கள்
பாலம் கட்ட -5 நாட்கள்
போர் -8 நாட்கள்

பங்குனி மாதம் உத்தரத்தில் கிட்கிந்தையிலிருந்து புறப்பட்ட இராமன் சித்திரை மாதம் கிருஷ்ண சதுர்த்தியுடன் கூடிய அமாவாசையில் இராவண வதம் முடிந்து மீண்டும் நந்திகிராமம் வந்து சேர எடுத்துக் கொண்டது இவ்வளவு குறுகிய நாட்கள் மட்டுமே. (ஸ்ரீ மத்வால்மீகி இராமாயணம் ஸாரம். ஸ்ரீ ராம கிருஷ்ணமடம் மைலாப்பூர் வெளி யீடு).

இதனால், இராமன் இராமேஸ் வரம் வரவே இல்லை என்பதும், இராமன் கட்டிய மிதவைப் பாலம் ஒரிசாவில் உள்ள மகேந்திரமலையின் பக்கமுள்ள கடலிலேயே கட்டப் பட்டது என்பதும். அன்றிருந்த சிறிய லங்கா (தீவு) இன்று கடலில் மூழ்கி இருக்கலாம் என்பதும் தான் உண்மையாக இருக்க முடியும்.

இராமபிரான் புருஷோத்தமனாக வாழ்ந்து மக்களுக்கு வழிகாட்டிய மனிதன் என்கிறார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஸ்தாபகரான பரமபூஜ்ய டாக்டர் கேசவ பலிகாரம் ஹெட் கேவார்.

மக்களை மடையர்களாக்கி தீண் டாமைக் கொடுமைக்கு உள்ளாக்கு வதற்கு காரணமாக இருந்தவர்கள் கள்ள பண்டிதர்களான உயர் ஜாதி பூஜாரிகள் என்றும், சடங்காசாரங்கள் போன்றவற்றினால் பாமர இந்துக்களை ஏமாற்றியவர்கள் என்றும், இன்றும் பொய்யான கட்டுக் கதைகளைச் சொல்லி அறியாதவர்களை ஏமாற்றி வேதாந்தத்திற்கு தப்பான பொருள் சொல்லி விடுகிறார்கள் என்றும், இன்றுள்ள பூஜை முறைகளினால் இந்துக்களை ஆண்மையற்றவர் களாகவும், பிச்சை எடுக்கும் புத்தியுடையவர்களாகவும், ஆக்கி விட்டார்கள் என்றும் உயர்ஜாதி பூஜாரிகளை சாடுகிறார். சுவாமி சின்மயானந்தர் அவர்கள்.

இந்த சின்மயானந்தர் சுவாமி. ஆர்.எஸ்.எஸ். கிளை ஸ்தாபனங் களில் ஒன்றான விஸ்வஹிந்து பரிஷத்தின் ஸ்தாபனத் தலைவர் களில் ஒருவர் என்பதை மறந்து விடக் கூடாது. ஆர்.எஸ்.எஸ்.ன் பெரும் தலைவர்களில் ஒருவரும் கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரத்தின் ஸ்தாபகருமான ஏக்னாத் ரானடேயும் கூட இரா மனை அற்புதங்கள் செய்யாத மக் களுக்கு வழிகாட்டியாக வாழ்ந்த மாபெரும் மனிதர் என்றுதான் சொல்கிறார்:

ஆனால், இன்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பு என்று சொல்லிக் கொள் கிறவர்கள் அதன் ஸ்தாபகத் தலை வரின் கொள்கையையே சத்த மில்லாமல் சாப்பிட்டு விட்டு இராமனை கற்பனை கதாபாத்திரம் ஆக்குவதிலேயே குறியாக இருக் கிறார்கள்.

ராமன் கட்டிய பாலம் மரங் களையும் கற்களையும் போட்டு, காட்டுச் செடிகளால் பிணைத்து கட்டப்பட்ட மிதவைப் பாலம் என்பது வான்மீகத்தில் விளக்கப் பட்டுள்ளது.

மிதவைப்பாலம் அசையாமல் இருக்க கற்கள் கீழே கட்டி தொங்க விடப்பட்டிருக்கலாம். அந்த கடற்கரையில் உள்ள ஒருவரிடம் கேட்டறிந்து (இதை சமுத்திர ராஜன் என்கிறார்கள்) அலை அதிகம் இல்லாத இடத்தில் இராமன் பாலம் அமைத்தான் என்றும் வான்மீகத்தில் வருகிறது.

மரத்தினாலும், கொடிகளினாலும் ஒரிசா கடற்கரையின் அருகில் உள்ள லங்காவுக்கு செல்ல அமைக்கப்பட்ட மிதவைப் பாலம் எத்தனை நாட் களுக்கு இருந்திருக்க முடியும் என்று எண்ணிப் பார்க்க வேண்டும். வான்மீகத்தின்படி தமிழகத்திற்கு வராத இராமன், இராமேஸ்வரத்தில் 100 யோஜனை (200 மைல்) நீளத்தில் 20 மைல் அகலத்தில், பாலம் கட்டினார் என்று நம்பச் சொல்வது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல.

இயற்கையில் நடக்காத, கற் பனையான கதைகளைச் சொல்லி பாமர இந்துக்களை கடவுள் நம்பிக்கை என்ற பெயரால் பல ஆயிரம் ஆண்டுகள் ஏமாற்றி சுகபோகமாக வாழ்ந்த உயர்ஜாதி பூஜாரிகளின் சரித்திரத்தை நன்கு அறிந்தவர்களுக்கு, இன்று. இந்து மதத்தின் பாதுகாவலர்கள் என்று சொல்லிக் கொள்கிறவர்கள் செய்து வரும் ஏமாற்று வேலைகள் புரிந்து வரும்.

புருஷோத்தமன் ஸ்ரீராமனை வழிகாட்டியாக மதித்து, வீரனாக வாழ்ந்து அதர்மத்தையும், அறியாமை யையும் எதிர்த்து போராடும் நம்பிக்கையில் உள்ள என் போன் றவர்களின் மனம் புண்படும்படி, ராமனை வெறும் கற்பனைக் கதாநாயகனாக ஆக்க முயலும் ஜாதி பூஜாரிகளின் முயற்சி முறியடிக்கப்பட வேண்டும்.

ஒருவரது மத நம்பிக்கை இன்னொருவரது அறிவுபூர்வமான நம்பிக்கைக்கோ அல்லது நாட்டின் முன்னேற்றத்திற்கோ இடையூறு செய்யாத வரையிலும் யாரும் பெரி தாகக் கவலைப்பட போவதில்லை.

ஆனால் உண்மைக்குப் புறம்பான வெறும் கற்பனைகளை நம்பச் சொல்லி பாமர இந்துக்களைப் பகடைக்காய்களாக பயன்படுத்தும் இவர்கள் இந்து மதத்திற்கும், ஸ்ரீராமனுக்கும் தீராத களங்கத்தையே உண்டு பண்ணுகிறார்கள் என்பது தான் உண்மை.

——————- கேப்டன் எஸ்.பி. குட்டி பி.இ.-நூல்: “அறிவுக்கு எட்டிய கடவுள்”

நன்றி - ilankaimuslim 
0 comments

நெருப்புக் குண்டத்தில் எறியப்பட்டபோது

(1986ல் அந்நஜாத் பத்திரிகையில் பீஜே ஆசிரியரக இருந்த போது ஜூலை இதழில் எழுதியகட்டுரையை கிளியனூர் பைசல் என்ற சகோதரர் தட்டச்சு செய்து அனுப்பியுள்ளார். அதை இங்கேவெளியிடுகிறோம்.)

இப்ராஹீம் (அலை) அவர்களின் இறையச்சமும், தியாகமும் , வீரமும் நிறைந்த வரலாற்றை நாம்அறிவோம்! நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன் சென்ற நபிமார்களில் இப்ராஹீம் (அலை)அவர்களுக்கு முதலிடம் உண்டு என்பதையும், நாம் தெரிந்திருக்கிறோம்! மிகபெரும் கொடுங்கோல்மன்னனுக்கு முன்னிலையில் கொஞ்சமும் அஞ்சாமல் சத்தியத்தை – ஒரிறைக் கொள்கையைதுணிவுடன் எடுத்துச் சொன்னார்கள்.
அதற்காக எண்ணற்ற கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டார்கள்! அந்தக் கொடுமைகளுக்கெல்லாம்சிகரமாக மிகப்பெரும் நெருப்புக் குண்டத்தை வளர்த்து அதில் இப்ராஹீம் (அலை) அவர்கள் தூக்கிஎறியப்பட்டார்கள்! அல்லாஹ் தன் பேராற்றலால், அந்த மாபெரும் நெருப்பைக் குளிரச்செய்துஅவர்களைக் காப்பாற்றினான் . இந்த அற்புத வரலாற்றை திருக்குர்ஆன் மிகவும் அழகாக நமக்குஎடுத்துரைக்கின்றது.
இந்த உண்மை வரலாற்றுடன் பொய்யான கதை ஒன்றையும் சிலர் கலந்து விட்டுருக்கின்றனர். அந்தக்கற்பனைக் கதை மக்கள் மன்றங்களில் அடிக்கடி சொல்லப்பட்டும் வருகின்றது.
குர்ஆனும், நபி வழியும் போதிக்கின்ற தத்துவத்திற்கு அந்தக் கதை முரண்படுவதாலும்,அந்தக்கதையை வைத்து சிலர் தவறான வழியை நேர்வழிபோல் காட்ட முயற்சிப்பதாலும் அதனைத்தெளிவுபடுத்த வேண்டிய அவசியம் எற்படுகின்றது. முதலில் அந்தத் தவறான கதை என்னவென்றுபார்ப்போம்! பிறகு அது எப்படித் தவறாக உள்ளது என்பதை விளக்குவோம்!
இதுதான் கதை:
இப்ராஹீம் (அலை) நெருப்புக் குண்டத்தில் எறியப்படுவதற்கு சிறிது முன்பு ஜிப்ரீல் (அலை) அவர்கள்வந்து இப்ராஹீம் (அலை) அவர்களுடன் பின் வருமாறு உரையாடினார்களாம்!

ஜிப்ரீல் (அலை) :- இப்ராஹீமே ! இந்த இக்கட்டான நேரத்தில் உமக்கு எதுவும் தேவையா ?
இப்ராஹீம் (அலை) :- உம்மிடம் எனக்கு எ ந்த்த் தேவையும் கிடையாது!
ஜிப்ரீல் (அலை) :- என்னிடம் உமக்குத் தேவை எதுவும் இல்லையானால் உம்மைப் படைத்தஇறைவனிடம் இந்தத் துன்பத்திலிருந்து விடுவிக்கும்படிக் கேளும்!
இப்ராஹீம் (அலை):- இறைவனிடம் நான் என் துன்பத்திலிருந்து விடு விக்கும்படி கேட்கவேண்டியதில்லை. நான் மிகப்பெரும் ஆபத்தில் சிக்கிக் கொண்டிருப்பது அந்த இறைவனுக்குத்தெரியாதா என்ன? நான் எதற்காக அவனிடம் கேட்க வேண்டும்?
இப்படி ஒரு உரையாடல் நடந்ததாகத் தான் சிலர் கற்பனை செய்துள்ளனர் .
இதனை அல்லாஹ் தன் திருக்குர் ஆனில் சொல்லவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும்சொல்லவில்லை. சிலர் தங்களின் சொந்தக் கற்பனையால் உருவாக்கியது தான் இந்த கதை.
பிரார்த்தனையின் நோக்கம்:
அல்லாஹ் எல்லாவற்றையும் அறிந்தவன் என்பதில் ஜயமில்லை. "அல்லாஹ்வுக்கு எல்லாம்தெரியும்" என்பதற்காக நாம் நமது தேவைகளை அல்லாஹ்விடம் கேட்காமலிருக்க அனுமதி உண்டா?மிகச் சிறந்த நபியாகிய இப்ராஹீம் (அலை) அவர்கள் இப்படிச் சொல்லி இருப்பார்களா? என்றுஆராயும் போது நிச்சயம் அப்படி சொல்லி இருக்க முடியாது என்ற முடிவுக்குத்தான் வரமுடியும்.
ஏனெனில், இப்ராஹீம் (அலை) அவர்கள், பல்வேறு சந்தர்ப்ப ங்களில் தங்கள் தேவைகளைஅல்லாஹ்விடம் முறையிட்டிருக்கிறார்கள் என்று பிரார்த்தனையை  அவர்கள் விடவில்லை.
"பிரார்த்தனை என்பது நம்முடைய அடிமைத்தனத்தையும், அல்லாஹ்வின் மகத்துவத்தையும் ஒரேநேரத்தில் வெளிப்படுத்தும் மிகப்பெரும் வணக்கம்" என்பதை இப்ராஹீம் (அலை) நன்றாகாவேதெரிந்திருந்தார்கள். அவர்கள் , அல்லாஹ்விடம் கேட்ட பல துஆக்களை அல்லாஹ் திருக்குர்ஆனில்குறிப்பிடுகிறான். அவற்றில் சிலவற்றைக் கீழே காண்போம்.
அந்த ஆலயத்தின் அடித்தளத்தை இப்ராஹீமும், இஸ்மாயீலும் உயர்த்திய போது 'எங்கள் இறைவா!எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக! நீயே செவியுறுபவன்; அறிந்தவன்' (என்றனர்.)
'எங்கள் இறைவா! எங்களை உனக்குக் கட்டுப்பட்டோராகவும், எங்கள் வழித் தோன்றல்களை உனக்குக்கட்டுப்பட்டு நடக்கும் சமுதாயமாகவும் ஆக்குவாயாக! எங்கள் வழிபாட்டு முறைகளை எங்களுக்குக்காட்டித் தருவாயாக! எங்களை மன்னிப்பாயாக! நீ மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்' (என்றனர்.)
எங்கள் இறைவா! அவர்களிலிருந்து அவர்களுக்காக ஒரு தூதரை அனுப்புவாயாக! அவர், உனதுவசனங்களை அவர்களுக்குக் கூறுவார். அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும்  கற்றுக்கொடுப்பார். அவர்களைத் தூய்மைப்படுத்துவார். நீயே மிகைத்தவன்; ஞானமிக்கவன்' (என்றனர்.)
 அல்குர் ஆன் 2 :127 -129
இறைவா! இவ்வூரைப் பாதுகாப்பு மையமாக  ஆக்குவாயாக! இவ்வூராரில் அல்லாஹ்வையும், இறுதிநாளையும் நம்பியோருக்குக் கனிகளை வழங்குவாயாக!' என்று இப்ராஹீம் கூறிய போது, '(என்னை)மறுப்போருக்கும் சிறிது காலம் வசதிகள் அளிப்பேன்; பின்னர் அவர்களை நரக வேதனையில்தள்ளுவேன்; சேருமிடத்தில் அது மிகவும் கெட்டது' என்று அவன் கூறினான்.
அல்குர் ஆன் 2 :126
என் இறைவா! எனக்கு அதிகாரத்தை அளிப்பாயாக! என்னை நல்லோருடன் சேர்ப்பாயாக!பின்வரும்மக்களிடம் எனக்கு நற்பெயரை ஏற்படுத்துவாயாக!இன்பமான சொர்க்கத்தின் வாரிசுகளில் என்னையும்ஆக்குவாயாக!என் தந்தையை மன்னிப்பாயாக! அவர் வழி தவறியவராக இருக்கிறார். (மக்கள்)மீண்டும் உயிர்ப்பிக்கப்படும் நாளில்1 என்னை இழிவுபடுத்தி விடாதே!
அல்குர் ஆன் 26 : 83 -87
இறைவனே! எனக்கு நன்மகனைத் தந்தருள்வாயாக!
அல்குர் ஆன் 37 : 100
எங்கள் இறைவா ! (உன்னை) மறுப்பவர்களுக்கு எ ங்களை சோதனைப் பொருளாக ஆக்கி விடாதே!எங்கள் இறைவா! எ ங்களுக்கு மன்னிப்பும் வழ ங்ககுவாயாக!
 அல்குர் ஆன் 60 :5
எங்கள் இறைவா! எனது சந்ததிகளை உனது புனித ஆலயத்திற்கருகில், விவசாயத்துக்குத் தகுதி இல்லாத பள்ளத்தாக்கில், அவர்கள் தொழுகையை நிறைவேற்றுவதற்காக குடியமர்த்தி விட்டேன். எனவே எங்கள் இறைவா! மனிதர்களில் சிலரது உள்ளங்களை இவர்களை நோக்கி விருப்பம் கொள்ள வைப்பாயாக! இவர்கள் நன்றி செலுத்திட இவர்களுக்குக் கனிகளை உணவாக வழங்குவாயாக!
 அல்குர் ஆன் 14 :37
மேலே கூறப்பட்ட அனைத்தும் இப்ராஹீம் (அலை) அவர்களின் பிரார்த்தைனைகள். அல்லாஹ்வுக்குஎல்லாம் தெரியும் என்று அவர்கள் மேற்கூறிய ச ந்தர்ப்பங்களில் பிரார்த்தனை செய்யாமல்இருக்கவில்லை. மாறாக தன்னுடைய இயலாமையை, பலவீனத்தை வெளிப்படுத்திக் காட்டுவதற்காகதன்னுடைய பல தேவைகளை அல்லாஹ்விடம் கேட்டிருக்கிறார்கள். தன்னுடைய தேவைகளைஅல்லாஹ்விடம் கேட்டு விட்டு பின்வருமாறு அவர்கள் கூறவும் செய்கிறார்கள்.
எங்கள் இறைவா! நாங்கள் மறைப்பவற்றையும், வெளிப்படுத்துபவற்றையும் நீ அறிவாய். பூமியிலோ, வானத்திலோ அல்லாஹ்வுக்கு எதுவுமே மறையாது.
அல்குர் ஆன் 14: 38
இறைவனுக்குத் தன்னுடைய தேவைகள் தெரியும் என்பதை ஒப்புக் கொள்ளும் அதே நேரத்தில் துஆகேட்க அவர்கள் மறுக்கவில்லை என்பது தெளிவாகின்றது.
அப்படிப்பட்ட இப்ராஹீம் (அலை) அவர்கள் மிகப்பெரும் இக்கட்டில் மாட்டிக் கொண்ட நேரத்தில் எப்படிதுஆச் செய்ய மறுத்திருப்பார்கள்? அதுவும் மிகப்பெரும் மலக்கு ஒருவர் நினைவூட்டிய பின்னர் எப்படிமறுத்திருப்பார்கள்? இதிலிருந்தே அ ந்த உரையாடல் கற்பனையானது என்பதை தெரிய முடியும்.
இப்ராஹீம் (அலை) அவர்கள் மட்டுமல்ல, இன்னும் பல நபிமார்கள் தங்களுக்கு கஷ்டங்கள்ஏற்பட்டபோது "இறைவனுக்குத் தெரியும்" என்று அவர்கள் அல்லாஹ்விடம் முறையிடாமல்இருந்ததில்லை. தங்களுக்கு ஏற்பட்ட தேவைகளை அல்லாஹ்விடம் கேட்காமல் இரு ந்ததிலை.
ஆதம் (அலை) அவர்கள் தவறு செய்தபின், அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்ததை குர்ஆன் 7 :22வசனத்திலும்,
அய்யூப் (அலை) அவர்களுக்கு எற்பட்ட துன்பத்தை அவர்கள் அல்லாஹ்விடம் முறையிட்டதை 21 :83 வசனத்திலும்,
யூனுஸ் (அலை) தாம் செய்த தவறுக்கு மன்னிப்புக் கோரியதை 21 :87 வசனத்திலும்,
ஈஸா (அலை) தன்னுடைய தேவையை அல்லாஹ்விடம் கேட்டதை 5:114 வசனத்திலும்,
ஜக்கரியா (அலை) தனக்கு ஒரு வாரிசு வேண்டும் என்று துஆ செய்ததை 3:38 வசனத்திலும்,
நூஹ் (அலை) தம் சமுதாயத்திற்கு எதிராக துஆ செய்ததை 21:76 வசனத்திலும்,
யஃகூப் (அலை) தன் மகனைப் பிரிந்த வேதனையை அல்லாஹ்விடம் முறையிட்டதாக 12:86வசனத்திலும்,
மிகப்பெரும் ஆட்சி தனக்கு வேண்டும் என்று சுலைமான் (அலை) அவர்கள் துஆ செய்ததாக 38:35வசனத்திலும்,
லூத் (அலை) அவர்கள் தன் சமுதாயத்தினரின் தீய செயல்களிலிருந்து தன்னையும் தன்குடும்பத்தையும் காக்கும்படி துஆ செய்ததை 26:169 வசனத்திலும்
 ஷுஐபு (அலை) அவர்கள் தன் சமுதாயத்திற்கு எதிராகச் செய்த பிரார்த்தனையை 7:89 வசனத்திலும்,
மூஸா (அலை) தனக்கு விரிவான ஞானத்தையும், இன்னும் பல தேவைகளையும் கேட்ட தாக 20:25-32 வசனங்களிலும்
அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான்.
மேற்கூறிய நபிமார்களில் எவரும் " தங்கள் தேவைகள் இறைவனுக்குத் தெரியும்" என்பதைஉணராதவர்களில்லை கேட்பதை அல்லாஹ் விரும்புகிறான் என்பதற்காக அவர்கள் அல்லாஹ்விடம்கேட்டுள்ளார்கள், இந்த வசனங்கள் மூலம் அந்த உரையாடல் கற்பனையானது தான். அல்லாஹ்விடம்துஆ செய்வதைவிட உயர் ந்த நிலை எதுவுமில்லை என்பதைத் தெரியாலாம்.
ஷரீஅத், தரீகத், ஹகீகத், மஃரிபத் என்று மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் கூட்டத்தினர் இந்தக்கற்பனை நிகழ்ச்சியை ஆதாரமாக வைத்து. அல்லாஹ்விடம் கேட்காமலிருப்பது தான் உயர்ந்த நிலை!அல்லாஹ்விடம் துஆ செய்வது அல்லாஹ்வையே சந்தேகிப்பது ஆகும் என்று மக்களை வழிகெடுக்கத்துவங்கி விட்டனர். நபிமார்கள் அடைய முடியாத உயர்ந்த நிலை இருப்பதாகக் கருதுவது எவ்வளவுபெரும் பாவம் என்று அவர்களுக்குப் புரியவில்லை.
அல்லாஹ் தன் திருக்குர்ஆனில் பல இடங்களில் துஆ செய்யும்படி, தேவைகளைக் கேட்கும்படி,மன்னிப்புக் கேட்கும் படி . நமக்கு ஆணையிடுகிறான். ஒரு இடத்தில் கூட என்னிடம்கேட்காமலிருங்கள் என்று சொல்லவில்லை என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.
என்னை அழையுங்கள்! உங்களுக்குப் பதிலளிக்கிறேன்; எனது வணக்கத்தை விட்டும் பெருமையடிப்போர் நரகத்தில் இழிந்தோராக நுழைவார்கள்'' என்று உங்கள் இறைவன் கூறுகிறான்.
அல்குர் ஆன் 40:60
 "எனது இறைவன் நீதியைக் கட்டளையிட்டுள்ளான்'' எனக் கூறுவீராக! ஒவ்வொரு தொழுமிடத்திலும் உங்களின் கவனங்களை ஒருமுகப்படுத்திக் கொள்ளுங்கள்! வணக்கத்தை அவனுக்கே உளத்தூய்மையுடன் செய்து, அவனிடமே பிரார்த்தியுங்கள்! உங்களை அவன் முதலில் படைத்தவாறே மீள்வீர்கள்!
அல்குர் ஆன் 7:29
உங்கள் இறைவனைப் பணிவுடனும், இரகசியமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள்! வரம்பு மீறியோரை அவன் நேசிக்க மாட்டான்.
அல்குர் ஆன் 7:55
இந்த வசனங்கள் எல்லாம் பிரார்த்தனை செய்ய வேண்டியதன் அவசியத்தை நமக்கு உணர்த்துகின்றன.
தமது இறைவனின் திருமுகத்தை நாடி காலையிலும், மாலையிலும் தமது இறைவனைப் பிரார்த்திக்கும் மக்களுடன் உம்மைக் கட்டுப்படுத்திக் கொள்வீராக! இவ்வுலக வாழ்க்கையின் கவர்ச்சியை நாடி அவர்களை விட்டும் உமது கண்களைத் திருப்பி விடாதீர்! நம்மை நினைப்பதை விட்டும் எவனது சிந்தனையை நாம் மறக்கடிக்கச் செய்து விட்டோமோ, அவனுக்குக் கட்டுப்படாதீர்! அவன் தனது மனோ இச்சையைப் பின்பற்றுகிறான். அவனது காரியம் வரம்பு மீறுவதாக உள்ளது.
அல்குர் ஆன் 18:28
தமது இறைவனின் திருப்தியை நாடி காலையிலும், மாலையிலும் அவனிடம் பிரார்த்திப்போரை நீர் விரட்டாதீர்! அவர்களைப் பற்றிய விசாரணையில் உமக்கு எந்தப் பொறுப்பும் இல்லை. உம்மைப் பற்றிய விசாரணையில் அவர்களுக்கு எந்தப் பொறுப்பும் இல்லை. எனவே அவர்களை நீர் விரட்டினால் அநீதி இழைத்தவராவீர்!
அல்குர் ஆன் 6:52
மேற்கூறிய வசனங்கள் துஆ செய்வதை அல்லாஹ் விரும்புகிறான், வரவேற்கிறான், தன் நபியையும்அத்தகைய மக்களுடன் சேர்ந்திருக்கும் படி கட்டளையிடுகிறான் என்பதை தெளிவுபடுத்துகின்றது.தாங்கள் அதிக ஞானம் பெற்றுவிட்டதாக கருதிக்கொண்டு அல்லாஹ்விடம் துஆ செய்யாமலிருக்கஎவருக்கும் அனுமதி இல்லை என்பதை நாம் புரி ந்து கொண்டோம்.
அதனால் தான் நபி (ஸல்) அவர்கள் செருப்பின் வார் அறுந்து விட்டாலும் அல்லாஹ்விடம்கேளுங்கள்! என்றனர்.(நூல் : திர்மிதீ)
":துஆ என்பதே ஒரு வணக்கமாகும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு," இ ந்த இடத்தில் நீ ங்கள்விரும்பினால் பின் வரும் குர்ஆன் வசனத்தையும் சேர்த்துக் கொள்ளு ங்கள்" என்று கூறினார்கள்.
'உங்கள் இறைவன் கூறுகிறான் ;- என்னையே அழையுங்கள் ! நான் உ ங்களுக்காக (உங்கள்அழைப்பை) அங்கீகரிக்கிறேன். எவர்கள் எனது வணக்கத்தை விட்டும் (புறக்கணித்து) பெருமைஅடிக்கின்றார்களோ அவர்கள் நரகில் இழிந்தவர்களாக நுழைவர்" (அல் குர் ஆன் 40:60) என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)
நூல்   : அபூ தாவூது, நஸயீ, திர்மிதீ, இப்னு மாஜா
மேற்கண்ட நபிமொழி துஆ ஒரு வணக்கம் என்பதையும், அந்த வணக்கத்தைப் புறக்கணிப்பவர்கள்நரகில் இழிந்த நிலையில் நுழைவார்கள் என்பதையும் நமக்குப் பறை சாற்றுகின்றது.
இந்த எச்சிரிக்கைக்கு முரணாக மிகச்சிறந்த நபி ஒருவர் இருந்திருக்க முடியுமா? நரகில் சேர்க்கக் கூடியஇ ந்த வார்த்தையை ஒரு நபி சொல்லி இருக்க முடியுமா?  என்பதயும் எண்ணிப்பாரு ங்கள்!
மேலும் இப்ராஹீம் (அலை) அவர்கள் தான் நெருப்புக் குண்டத்தில் எறியப்பட்ட வேளையில், " யாஅல்லாஹ் ! வணங்கப்படத் தகுதியானவன் நீ ஒருவனே ; இந்த பூமியில் உன்னை வணங்கக்கூடியவன் (இன்றைய நீலையில்) நான் ஒருவனே! (எனவே என்னைக் காப்பாற்றுவாயாக) என்றுபிரார்த்திதார்கள் என நபி (ஸல்) கூறினார்கள்.
(அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)
,ஆதாரம் : முஸ்னத் அபூ யஃலா)
இப்ராஹீம் (அலை) நெருப்பில் எறியப்பட்டபோது,' எனக்கு அல்லாஹ்வே போதுமானவன்: அவனேஎன்னுடைய மிகச்சிறந்த பொறுப்பாளனாகவும் இருக்கிறான்" எனக் கூறினார்கள் .
(அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ், ஆதாரம் : புகாரி)
மேற்கூறிய இரு ஹதீஸ்களும் இப்ராஹீம் (அலை) துஆ செய்துள்ளதை மிகத் தெளிவாகவேதெரிவிக்கின்றன.
எனவே இப்ராஹீம் (அலை) துஆ செய்ய மறுத்தார்கள் என்பது முற்றிலும் ஆதாரமற்ற , குர்ஆன்போதனைக்கு முரண்பட்ட கற்பனை தான் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.
அந்தக் கதை இஸ்லாத்திற்கு முற்றிலும் அப்பாற்பட்டது என்பதைப் பின்வரும் நபிமொழிதெளிவாகவே சொல்லிவிடுகின்றது. எவன் அல்லாஹ்விடம் தன் தேவைகளைக் கேட்கவில்லையோ,அவன் மீது அல்லாஹ் கோபப்படுகிறான் என்பது நபிகள் நாயகம் (ஸல்) , அவர்கள் கூறியபொன்மொழியாகும் .
இதனை இமாம் ஹாகிம் அவர்கள் அறிவித்துள்ளார்கள். ஹதீஸ்கலை வல்லுனர்கள் இதுஆதாரபூர்வமானது என்று கூறியுள்ளனர்.
இந்த நபி மொழியிலிருந்து இப்ராஹீம் (அலை) அவர்கள் தன்னுடைய தேவையை கேட்க மறுத்திருக்கமாட்டார்கள் என்பது தெளிவு! அல்லாஹ்வுக்கு கோபத்தை ஏற்படுத்தக் கூடிய ஒரு காரியத்தைமிகப்பெரும் நபி எப்படி செய்திருப்பார்கள்?
துஆ கேட்காமலிருப்பதற்கு இஸ்லாத்தின் அனுமதி கிடையாது. அத்தகையவர்களை அல்லாஹ்கோபிக்கிறான் எனும்போது அது மிகப் பெரும் பாவம் என்பதும் தெளிவு. அதனால் நபி (ஸல்)அவர்கள் நமக்கு எண்ணற்ற துஆக்களைக் கற்றுத் தந்துள்ளனர்.
இது போன்ற கதைகளும், அது போதிக்கின்ற தவறான வழிகாட்டுதல்களும் தவிர்க்கப்பட்டாகவேண்டும்...
அல்லாஹ் உண்மை மார்க்கத்தை அறிந்து அதன்படி செயல்பட அருள் புரிவானாக....
  thanks to - onlinepj
0 comments

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger