Featured Post Today
print this page
Latest Post
Showing posts with label கற்பழிப்பு. Show all posts
Showing posts with label கற்பழிப்பு. Show all posts

மகளை பிறருக்கு பங்குபோட்ட தந்தைக்கு பத்தாண்டு சிறை


கேரள மாநிலம் கொச்சி பறவூர் பகுதியைச் சேர்ந்தவர் சுதீர், கூலித்தொழிலாளி. இவரது மனைவி லைலா. இந்த தம்பதிக்கு ஒரு மகள் உண்டு. கூலித்தொழிலில் போதிய வருமானம் கிடைக்காததால் சுதீரின் குடும்பம் வறுமையில் வாடியது. இந்த நிலையில் சுதீருக்கு ஒரு விபரீத எண்ணம் ஏற்பட்டது. சுலபமாக பணம் சம்பாதிக்க பெற்ற மகளையே விபசாரத்தில் ஈடுபடுத்த அவர் முடிவு செய்தார். 

இதற்காக அந்த பகுதியைச் சேர்ந்த ஓமணா என்ற புரோக்கரை அணுகி தனது திட்டத்தை வெளிப்படுத்தினார். விபசாரத்தில் கரை கண்ட புரோக்கர் ஓமணாவும், சுதீரிடம் பண ஆசை காட்டி அந்த திட்டத்தை உடனே செயல்படுத்த வழிமுறைகளை வகுத்து கொடுத்தார். இதைத்தொடர்ந்து 2011-ம் ஆண்டு பறவூரின் வெளிப்புறத்தில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் ஒரு வீட்டை இவர்கள் தேர்ந்தெடுத்தனர். 

இதன் பிறகு தனது மகளை ஏமாற்றி சுதீர் ஒரு ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு அந்த வீட்டிற்கு சென்றார். அங்கு புரோக்கர் ஓமணா வாடிக்கையாளர்களுடன் தயாராக இருந்தார். அன்று அந்த வீட்டில் அந்த இளம் பெண்ணின் கற்பை 7 வாலிபர்கள் சூறையாடினார்கள். விடிய விடிய இந்த கொடூரம் நடை பெற்றது. 

பெற்ற மகளையே விபசாரத்தில் ஈடுபடுத்திய சுதீர் அந்த 7 வாலிபர்களிடமிருந்து ரூ.18 ஆயிரம் பணம் பெற்றார். அதில், ரூ.500-ஐ ஓமணாவுக்கு கொடுத்தார். பிறகு தனது மகளை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு வீட்டுக்கு சென்று விட்டார். தனக்கு நேர்ந்த கொடூரம் பற்றி தாய் லைலாவிடம் கூறி மகள் அழுதாள். 

ஆனால் தாய் மவுனமாக இருந்து விட்டார். இதனால் அந்த பெண் கொச்சி பொலிஸில் தனக்கு நடந்த கொடுமைப் பற்றி புகார் கூறினார். பொலிஸார் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இந்த வழக்கு கொச்சி கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் தற்போது தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. 

பெற்ற மகளையே விபசாரத்தில் ஈடுபடுத்திய சுதீருக்கும் அதற்கு உடந்தையாக இருந்த புரோக்கர் ஓமணாவுக்கும், தலா 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.7வாலிபர்களுக்கும் தலா 7 ஆண்டு சிறைத்தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.
நன்றி - இலங்கை முஸ்லிம் 
0 comments

6 மாத குழந்தையை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி படுகொலை செய்த நபருக்கு மரணதண்டனை


6 மாத குழந்தையை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி படுகொலை செய்த நபரொருவருக்கு அமெரிக்க ஒஹியோ மாநிலத்தில் விஷ ஊசி ஏற்றி புதன்கிழமை மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
 
ஸ்டீவன் ஸ்மித் (46 வயது) என்ற மேற்படி நபருக்கு தென் ஒஹியோவிலுள்ள லுகாஸ்வில்லேயிலுள்ள சிறைச்சாலையில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
 
1998 ஆம் ஆண்டு செம்டெம்பர் மாதம் காதலியின் மகளான அடம்ன் கார்ட்டரை படுகொலை செய்த குற்றச்சாட்டில் 1999 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஸ்டீவன் ஸ்மித்துக்கு மரணதண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது.
 
இந்நிலையில் அவரது சட்டத்தரணிகள் ஸ்டீவன் ஸ்மித் குடிபோதையில் பாலகியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகவும் அவருக்கு பாலகியை கொல்லும் எண்ணம் கிடையாது எனவும் வாதிட்டனர்..
 
எனினும் அவர்களது கூற்றை ஏற்க மறுத்த நீதிபதி அப்பாவியான 6 மாத பாலகியை தனது பாலியல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தி அவரை படுகொலை செய்துள்ளமை மன்னிக்க முடியாத குற்றமென தெரிவித்து மரணதண்டனையை நிறைவேற்ற உத்தரவிட்டிருந்தார்.
 
ஸ்டீவன் ஸ்மித்துக்கு மரணதண்டனை நிறைவேற்றப்படுவதை 3 அடி தூரத்திலிருந்து கண்ணாடிச் சுவருக்கு பின்புறமிருந்து அடம்னின் தாயாரான கேஷா பிறையி, பிறையின் தந்தையான பற்றிக் ஹிக்ஸ், ஸ்டீவன் ஸ்மித்தின் ஒரே மகளான பிறிட்னி (21 வயது) ஆகியோர் பார்த்துக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நன்றி - லங்கா 

0 comments

டெல்லியை அச்சுறுத்தும் காமகொடூரர்கள்!


இந்திய தலைநகரான டெல்லி காமகொடூரர்களின் புகலிடமாக மாறிப்போனது. பொதுமக்கள் இவர்களுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தியும்  இந்த காமகொடூரர்களை அடக்க அரசு இயந்திரங்கள் தவறிவிட்டன.
டெல்லியில் பெண்களுக்கு எதிராக பலாத்காரம் நாளொன்றுக்கு சராசரி 3 என்கிற விகிதத்தில் நடக்கிறது. 2013 ஜனவரி to மார்ச் 31 வரை மட்டும் 393 பாலியல்  பலாத்காரங்கள் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சம்பவங்கள்: 1) இம்மாதம் 14-ம் தேதி மேற்கு டெல்லி சுல்தான்புரியில் பேருந்துக்குள் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது தொடர்பாக ராஜேஷ் கபல் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
2) 17-ம் தேதி கிழக்கு டெல்லியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியை மூன்று பேர் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தனர். இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
3) ஏப்ரல் 17-ம் தேதி கிழக்கு டெல்லி ஜகத்புரி பகுதியில் 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக பள்ளி ஆசிரியர் பிரமோத் (32) கைது செய்யப்பட்டார்.
4) 18-ம் தேதி மேற்கு டெல்லி நஜஃப்கர் பகுதியில் இரண்டரை வயது பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக 25 வயது இளைஞர் கைது செய்யப்பட்டார்.
5) டெல்லி காந்தி நகர் ஏரியாவில் 4 நாட்களுக்கு முன்பு 5 வயது சிறுமி காணாமல் போனாள். இது தொடர்பாக அவளது பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் சிறுமியின் வீட்டை ஒட்டிய மற்றொரு வீட்டின் அறையில் இருந்து அழுகுரல் கேட்டது. 
பூட்டியிருந்த அந்த வீட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் சிறுமி கிடந்தாள். உடனடியாக அவளை எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்த்தனர். அவளது மர்ம உறுப்பில் காயம் பலமாக இருந்தது. மருத்துவ பரிசோதனையில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
மக்கள் போராட்டம்: இச்சம்பவங்களை கண்டித்து, டெல்லியின் முக்கிய இடங்களில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.  டெல்லி போலீஸ் தலைமையகத்தையும், சோனியா காந்தி வீட்டையும், மத்திய உள்துறை அமைச்சர் ஷிண்டேவின் வீட்டையும் அவர்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.  
மக்கள் போராட்டத்தை ஒடுக்கும் மதி கெட்டவர்கள்: போராட்டத்தின் எதிரொலியாக இந்தியா கேட் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொதுமக்கள் நடமாட்டத்துக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
இந்தியா கேட்டை இணைக்கும் முக்கிய சாலை சந்திப்புகளில், மற்றும் பல்வேறு இடங்களிலும் போலீஸாரும் துணை ராணுவப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். எய்ம்ஸ் மருத்துவமனை முன்பும் நூற்றுக்கணக்கான சமூக ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
காமகொடூரன் கைது: 15-ம் தேதி 5 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக மனோஜ்குமார் (22) என்பவனை வெள்ளிக்கிழமை அவனது செல்போன் நம்பரை வைத்து அவன் பீகாரில் ஒளிந்திருப்பதை போலீசார் கண்டுபிடித்து கைது செய்தனர். 
என்ன தண்டனை கொடுக்க போகிறார்கள்: டெல்லியில், கடந்தவருடம் 2012 ஜனவரி முதல் டிசம்பர் வரை 661 பாலியல் வன்கொடுமை புகார்கள் பதிவு செய்யப்பட்டன. இந்த கொடியவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கப்போகிறார்கள் என்பதே இப்பொழுது நம்முன் எழும் கேள்வி. 
மக்களை பாதுக்காக் நேரம் இல்லை: இந்திய அரசுக்கு வரி பணம் செலுத்தும் மக்களை பாதுக்காக் நேரம் இல்லை. ராஜபக்சே அரசின் ராணுவத்துக்கு ஆயுத பயிற்சி கொடுக்கவும், ஆப்கானிஸ்தானின் உள்நாட்டு போரில் தலையிடுவதற்கும் அதிகமாக நேரம் இருக்கிறது. எங்கே இருந்து நாடு உருப்பட போகிறது.
நன்றி - சிந்திக்கவும் 
0 comments

தலைநகரமா? காமக்கொடூரர்களின் கூடாரமா?


1)டெல்லியில் ஓடும் காரில் 35 வயது பெண்ணுக்கு மூன்று வாலிபர்கள் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். 

2). டெல்லியில்  16 வயதுச் சிறுமி அவரது அண்டை வீட்டுக்காரரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு காருக்குள் விடப்பட்டார். அந்த நபரை பின்னர் போலீசார் கைது செய்தனர். 
  
இவை இன்றைய செய்திதாள்களில் வந்த செய்திகள்.
 ------------------------------------------------------------------------------------------------------------டெல்லியில் 18 மணி நேரத்துக்கு ஒரு பாலியல் வன்புணர்ச்சி நடக்கிறது. கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 359 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகி உள்ளது. 
  
டெல்லியில் ஓடும் பஸ்ஸில் பெண் கற்பழிக்கப்பட்டு வீசப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியது. இதற்க்கு எதிரான போராட்டங்கள் நாடு முழுவதும் தீவிரமாக நடத்தப்பட்டதால் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. சட்டங்கள் கடுமையாக்கப்பட்டது பாதுகாப்புகள் இரட்டிப்பாக்கப்பட்டது.

இப்படிப்பட்ட நிலையில் டெல்லியில் பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை கடந்த 3 மாதங்களில்  இருமடங்காக உயர்ந்துள்ளது. இதனால் பெண்கள் பெரும் அதிர்ச்சியடைந்து உள்ளார்கள். தலைநகர் டெல்லியில் இந்த வருடம் ஜனவரி to  மார்ச் வரை 359 கற்பழிப்புவழக்குகளும், 794 மானபங்க வழக்குகளும் பதிவாகியுள்ளன. டெல்லி காமகொடூரர்களின் கூடாரமாக மாறிவிட்டதோ என்றே எண்ணத்தோன்றுகிறது. 

*பெண்களுக்கு பாதுகாப்பில்லாததால்  இந்தியாவிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்து போனது*

இந்தியாவின் தலைநகரே காம கொடூரர்களின் கூடாரமாகி போனதே! தங்கள் நாட்டு பெண்களை கூட பாதுகாக்க முடியாத ஒரு நாட்டை வல்லரசு என்று சொல்ல முடியாது.அந்தோ பரிதாபம்! இந்தியா ஒளிரும் நம்புங்கள்! 

நன்றி -சிந்திக்கவும் 

0 comments

"என் கணவரைத் தூக்கிலிடுங்கள்"


அஹமது நகர்: பாலியல் குற்றச் செயல்களை தொடர்ந்து செய்து வரும் ஒருவரை அக்கொடிய குற்றங்களுக்காகத் தூக்கிலிடும்படி அவரது மனைவியே கோரிக்கை விடுத்துள்ளார். பாலியல் குற்றம் ஒன்றுக்காக சிறைப்பட்டிருந்த அந்த நபர், சிறையிலிருந்து விடுதலை ஆகி வந்து  ஒரு சிறுமியை கடத்தி வன்புணர்ந்துகொன்றதாக மீண்டும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

கடந்த டிசம்பர் மாதம் 28 ஆம் தேதியன்று மஹாராஷ்டிரா மாநிலம் அஹமது நகர் மாவட்டத்தில் ஷிர்டி என்னும் நகரில் 9 வயதேயான சிறுமியை கடத்திச் சென்று வ்ன்புணர்ந்து கொலை செய்ததாக, சுனில் சுரேஷ் என்னும் பப்பு சால்வே(32) இரு நாள்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். பப்பு சால்வேயின் மனைவியான சரிகா சால்வே(28) "இந்தக் கொடூரக் குற்றத்தைச் செய்த இவரை உடனடியாகத் தூக்கிலிடுங்கள்" என்று கோரியுள்ளார்
இந்த வழக்குத் தொடர்பாக. 17ம் தேதி வரை காவல்துறை காவலில் பப்பு சால்வே வைக்கப்பட்டுள்ளார்.
"என் கணவர் என்று கூறுவதற்கே வெட்கப்படுகிறேன்; தேவைப்பட்டால் நீதிமன்றத்துக்கும் வந்து இந்த ஆளை அம்பலப்படுத்துவேன்" என்று ஆவேசமாகக் கூறினார் இரு பெண்குழந்தைகளின் தாயான சரிகா.
"என்னை இவர் அடித்து உதைப்பது வழக்கம்.  அடி உதைகளைத் தாங்காமல் ஒரு முறை தற்கொலைக்கு முயன்று நச்சுமருந்து குடித்தேன். ஆனால் மருத்துவமனையில் சேர்த்து  என்னைக் காப்பாற்றிவிட்டார்கள்" என்ற சரிகா "அப்போது கூட இந்த ஆள் மருத்துவமனைக்கு வந்து என்னைப் பார்க்கவில்லை" என்றார்
முன்னதாக, இதே போன்று சிறுமிகளை வன்புணர்ந்து கொன்ற   வழக்குகளில் சிக்கி இருமுறை சிறைத் தண்டனை பெற்றவர்தாம் இந்த பப்பு சால்வே என்பது குறிப்பிடத் தக்கது.

இதுபோன்ற பாலியல் குற்றச்சாட்டுக்கள் இன்றைய காலத்தில் அதிகம் மதிகம் பெருகி வருகின்றன ,இது போற்ற செயல்களில் இடுபடுவோர்களுக்கு தண்டனைகள் நமது நாட்டில் சரியாக இல்லாததால் குற்றச் செயல்கள் பெருகி வருகின்றன,இதை அனைத்தையும் ஒரே நொடியில் நிறுத்தி விட வேண்டுமானால் அதற்க்கு தீர்வு இஸ்லாம் கூறும் தண்டனைகளை நிறைவேறினால் ஒழிய குற்றங்களை குறைக்க முடியாது,,,,இந்தியாவின் வல்லரசாகும் கனவுகளும் நீண்டிக்கொன்டே செல்லத்தான் ஆகும் .......
நன்றி - இந்நேரம் 

0 comments

டெல்லி கற்பழிப்பு தீர்வு என்ன (வீடியோ)?




டெல்லி கற்பழிப்பு தீர்வு என்ன?

நன்றி - அதிரை tntj 
0 comments

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger