டெல்லியை அச்சுறுத்தும் காமகொடூரர்கள்!


இந்திய தலைநகரான டெல்லி காமகொடூரர்களின் புகலிடமாக மாறிப்போனது. பொதுமக்கள் இவர்களுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தியும்  இந்த காமகொடூரர்களை அடக்க அரசு இயந்திரங்கள் தவறிவிட்டன.
டெல்லியில் பெண்களுக்கு எதிராக பலாத்காரம் நாளொன்றுக்கு சராசரி 3 என்கிற விகிதத்தில் நடக்கிறது. 2013 ஜனவரி to மார்ச் 31 வரை மட்டும் 393 பாலியல்  பலாத்காரங்கள் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சம்பவங்கள்: 1) இம்மாதம் 14-ம் தேதி மேற்கு டெல்லி சுல்தான்புரியில் பேருந்துக்குள் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது தொடர்பாக ராஜேஷ் கபல் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
2) 17-ம் தேதி கிழக்கு டெல்லியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியை மூன்று பேர் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தனர். இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
3) ஏப்ரல் 17-ம் தேதி கிழக்கு டெல்லி ஜகத்புரி பகுதியில் 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக பள்ளி ஆசிரியர் பிரமோத் (32) கைது செய்யப்பட்டார்.
4) 18-ம் தேதி மேற்கு டெல்லி நஜஃப்கர் பகுதியில் இரண்டரை வயது பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக 25 வயது இளைஞர் கைது செய்யப்பட்டார்.
5) டெல்லி காந்தி நகர் ஏரியாவில் 4 நாட்களுக்கு முன்பு 5 வயது சிறுமி காணாமல் போனாள். இது தொடர்பாக அவளது பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் சிறுமியின் வீட்டை ஒட்டிய மற்றொரு வீட்டின் அறையில் இருந்து அழுகுரல் கேட்டது. 
பூட்டியிருந்த அந்த வீட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் சிறுமி கிடந்தாள். உடனடியாக அவளை எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்த்தனர். அவளது மர்ம உறுப்பில் காயம் பலமாக இருந்தது. மருத்துவ பரிசோதனையில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
மக்கள் போராட்டம்: இச்சம்பவங்களை கண்டித்து, டெல்லியின் முக்கிய இடங்களில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.  டெல்லி போலீஸ் தலைமையகத்தையும், சோனியா காந்தி வீட்டையும், மத்திய உள்துறை அமைச்சர் ஷிண்டேவின் வீட்டையும் அவர்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.  
மக்கள் போராட்டத்தை ஒடுக்கும் மதி கெட்டவர்கள்: போராட்டத்தின் எதிரொலியாக இந்தியா கேட் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொதுமக்கள் நடமாட்டத்துக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
இந்தியா கேட்டை இணைக்கும் முக்கிய சாலை சந்திப்புகளில், மற்றும் பல்வேறு இடங்களிலும் போலீஸாரும் துணை ராணுவப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். எய்ம்ஸ் மருத்துவமனை முன்பும் நூற்றுக்கணக்கான சமூக ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
காமகொடூரன் கைது: 15-ம் தேதி 5 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக மனோஜ்குமார் (22) என்பவனை வெள்ளிக்கிழமை அவனது செல்போன் நம்பரை வைத்து அவன் பீகாரில் ஒளிந்திருப்பதை போலீசார் கண்டுபிடித்து கைது செய்தனர். 
என்ன தண்டனை கொடுக்க போகிறார்கள்: டெல்லியில், கடந்தவருடம் 2012 ஜனவரி முதல் டிசம்பர் வரை 661 பாலியல் வன்கொடுமை புகார்கள் பதிவு செய்யப்பட்டன. இந்த கொடியவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கப்போகிறார்கள் என்பதே இப்பொழுது நம்முன் எழும் கேள்வி. 
மக்களை பாதுக்காக் நேரம் இல்லை: இந்திய அரசுக்கு வரி பணம் செலுத்தும் மக்களை பாதுக்காக் நேரம் இல்லை. ராஜபக்சே அரசின் ராணுவத்துக்கு ஆயுத பயிற்சி கொடுக்கவும், ஆப்கானிஸ்தானின் உள்நாட்டு போரில் தலையிடுவதற்கும் அதிகமாக நேரம் இருக்கிறது. எங்கே இருந்து நாடு உருப்பட போகிறது.
நன்றி - சிந்திக்கவும் 
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger