Featured Post Today
print this page
Latest Post
Showing posts with label அடிப்படை கேள்விகள். Show all posts
Showing posts with label அடிப்படை கேள்விகள். Show all posts

வித்ரு குனூத்துக்கு ஆமீன் கூறலாமா?

இமாம் வித்ர் குனூத் ஓதும் போது ஆமீன் கூறலாமா? 

பதில் - வித்ர் தொழுகையில் குனூத் ஓதும் வழிமுறையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித் தந்துள்ளார்கள். 

ஹஸன் பின் அலி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : 

நான் வித்ருடைய குனூத்தில் ஓதுவதற்காக சில வார்த்தைகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எனக்குக் கற்றுத் தந்தார்கள். (அந்த வார்த்தைகளாவன) 

அல்லாஹூம் மஹ்தினீ ஃபீமன் ஹதய்த்த. வஆஃபினி ஃபீமன் ஆஃபய்த்த. வதவல்லனீ ஃபீமன் தவல்லய்த்த. வபாரிக்லீ ஃபீமா அஃதய்த்த. வகினீ ஷர்ர மாகலய்த்த. ஃபஇன்னக தக்லீ வலா யுக்லா அலைக்க. இன்னஹூ லாயதில்லு மன்வாலைத்த. தபாரக்க ரப்பனா வதஆலைத்த. 

நூல் : அஹ்மத் 1625 

வித்ர் குனூத்தை இமாம் உட்பட பின்பற்றித் தொழுபவர்கள் அனைவரும் சப்தமின்றி அமைதியாகவே ஓத வேண்டும். வித்ர் குனூத்தில் இமாம் சப்தமிட்டு ஓத மற்றவர்கள் ஆமீன் சொல்லும் வழிமுறையை நபியவர்கள் கற்றுத் தரவில்லை. 

இவ்வாறு செய்வதற்கு நபிமொழிகளில் எந்த ஆதாரமும் இல்லை. 

மேலும் விபரத்துக்கு கீழ்க்காணும் ஆக்கத்தையும் பார்க்கவும்

வித்ரில்குனூத் எப்போது ஓதவேண்டும்?

onlinepj.com
0 comments

வித்ரில்குனூத் எப்போது ஓதவேண்டும்?

ருகூவிற்கு பிறகு குனூத் ஓதுவது சரியா? அதுவும் கையை உயர்த்தி ஓதனுமா? விளக்கவும் 

பதில் : வித்ருத் தொழுகையில் ருகூவிற்கு முன்பு குனூத் ஓதுவதற்கும் ருகூவிற்குப் பிறகு குனூத் ஓதுவதற்கும் ஆதாரம் உள்ளது. 

 உபை பின் கஅப் (ரலி) அவர்கள் கூறினார்கள் :

 நபி (ஸல்) அவர்கள் ருகூவிற்கு முன்னால் குனூத் ஓதினார்கள். 
நூல் : நஸாயீ (1681) 

ஹசன் (ரலி) அவர்கள் கூறினார்கள் : 

நான் (ருகூவிலிருந்து) தலையை உயர்த்தி சஜ்தாவைத் தவிர வேறெதுவும் எஞ்சியிருக்காத போது அல்லாஹும்மஹதினீ என்ற குனூத்தை ஓதுமாறு நபி (ஸல்) அவர்கள் எனக்கு கற்றுத்தந்தார்கள்.
நூல் : ஹாகிம் (4800) 

ஆனால் குனூத் ஓதும் போது கைகளை உயர்த்துவதற்கு எந்த ஆதாரமும் இல்லை. எனவே கைகளை உயர்த்தக் கூடாது. 

மேலும் ஷாஃபி மத்ஹபைச் சார்ந்தவர்கள் வித்ரில் ஓதவேண்டிய குனூத்தை ஃபஜர் தொழுகையில் ஓதி வருகிறார்கள். இதற்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லை. இது நபி (ஸல்) அவர்கள் காட்டித்தாரத பித்அத் ஆகும். 

سنن ابن ماجه - (ج 1 / ص 393) 1241 حدثنا أبو بكر بن أبي شيبة . حدثنا عبد الله بن إدريس وحفص بن غياث ويزيد بن هارون عن أبي مالك الأشجعي سعد بن طارق قال - قلت لأبي يا أبت إنك قد صليت خلف رسول الله صلى الله عليه و سلم وأبي بكر وعمر وعثمان وعلي هاهنا بالكوفة نحوا من خمس سنين . فكانوا يقنتون في الفجر ؟ فقال أي بني محدث 

அபூமாலிக் அல்அஷ்ஜயீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள் : நான் எனது (தாரிக் பின் அஷ்யம் (ரலி) அவர்களிடம் என் தந்தையே நீங்கள் அல்லாஹ்வின் தூதர்கள் (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி), அலீ (ரலி) ஆகியோர்களுக்குப் பின்னால் தொழுதிருக்கிறீர்கள். இவர்கள் ஃபஜர் தொழுகையில் குனூத் ஓதினார்களா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் என்னருமை மகனே! இது புதிதாக உருவாக்கப்பட்டதாகும் (அவர்கள் இவ்வாறு ஓதவில்லை) என்று பதிலளித்தார்கள். நூல் : இப்னு மாஜா (1231)

onlinepj.com

0 comments

உளூவின்றி குர்ஆனைத் தொடலாமா ?

உளூ இல்லாதவர்களும் குளிப்பு கடமையானவர்களும் குர் ஆனைத் தொடலாமா ? என்பதில் அறிஞர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு உள்ளது. தொடலாம் என்பதே சரியான கருத்தாகும். தொடக் கூடாது என்ற கருத்து உடையவர்கள் எடுத்து வைக்கும் ஆதாரங்களை ஒவ்வொன்றாக அலசினால் இதைத் தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.

தூய்மையானவர்களைத் தவிர (மற்றவர்கள்) அதைத் தொடமாட்டார்கள்.

அல்குர்ஆன் (56 : 79)
குளிப்பு கடமையானவர்களும், உளூ இல்லாதவர்களும் திருக்குர்ஆனைத் தொடக் கூடாது. ஓதக் கூடாது என்பதற்கு வலுவான ஆதாரமாக இந்த வசனத்தை அவர்கள் எடுத்து வைக்கின்றனர். இந்த வசனத்தை மேலோட்டமாகப் பார்ப்பவர்கள் திருக்குர்ஆனை தூய்மையற்ற நிலையில் உள்ளவர்கள் தொடக் கூடாது. ஓதக் கூடாது என்று முடிவு செய்ய இடம் தருவது போல் தோன்றுகிறது..

ஆனால் இந்த வசனத்தின் முந்தைய வசனங்களையும் இது போன்று அமைந்த மற்ற வசனங்களையும் நபி (ஸல்) அவர்களுக்கு திருக்குர்ஆன் எவ்வாறு இறக்கப்பட்டது என்பதையும் விளங்கினால் இவர்களின் கருத்து முற்றிலும் தவறானது என்பதை விளங்கலாம்.

இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ள தூய்மையானவர்களைத் தவிர யாரும் அதைத் தொட மாட்டார்கள் என்பதில் தூய்மையானவர்கள் என்றால் யார் என்பதையும், இதைத் தொட மாட்டார்கள் என்பது எதைக் குறிக்கிறது என்பதையும் முதலில் பார்ப்போம்.

நபி (ஸல்) அவர்களுக்கு இறக்கியருளப்பட்ட திருக்குர்ஆன் எழுத்து வடிவில் அருளப்படவில்லை. ஒலி வடிவில் தான் அருளப்பட்டது. அதை நபி (ஸல்) அவர்கள் மனதில் பதிவு செய்து கொள்வார்கள் என்பதை முதலில் மனதில் கொள்ள வேண்டும்.

திருக்குர்ஆன் எழுத்து வடிவில் இறக்கப்படவில்லை எனும் போது தொடுதல் என்ற கேள்வியே எழாது. தொடும் விதத்தில் திருக்குர்ஆன் இறக்கப்பட்டிருந்தால் மட்டுமே இந்தக் குர்ஆனை தூய்மையானவர்களைத் தவிர யாரும் தொட மாட்டார்கள் என்று கூற முடியும்.

இந்த அடிப்படையில் 56 : 79 வசனத்தில் கூறப்பட்ட தொடுதல் என்பது நமது கையில் உள்ள குர்ஆனைக் குறிக்காது என்பதை விளங்கலாம். மேலும் இக்கருத்தை வலுவூட்டும் வகையில் இதன் முந்தைய வசனங்கள் அமைந்துள்ளன.

இது பாதுகாக்கப்பட்ட பதிவேட்டில் இருக்கும் மகத்துவமிக்க குர்ஆனாகும். தூய்மையானவர்களைத் தவிர (மற்றவர்கள்) அதைத் தொட மாட்டார்கள். அகிலத்தின் இறைவனிடமிருந்து (இது) அருளப்பட்டது.

அல்குர்ஆன் (56 : 77. 79)

56 : 79 வசனத்திற்கு முன்னுள்ள இரண்டு வசனங்களையும் படிக்கும் போது ஒரு பேருண்மை நமக்கு விளங்கும். இது பாதுகாக்கப்பட்ட பதிவேட்டில் இருக்கும் மகத்துவமிக்க குர்ஆன் என்று அல்லாஹ் கூறுகிறான். அடுத்த வசனத்தில் தூய்மையானவர்களைத் தவிர (மற்றவர்கள்) அதைத் தொட மாட்டார்கள் என்று கூறுகிறான்.

இப்போது அதை என்ற சொல் நம் கையில் இருக்கும் திருக்குர்ஆனைப் பற்றிப் பேசவில்லை. பாதுகாக்கப்பட்ட ஏட்டில் (லவ்ஹுல் மஹ்ஃபூலில்) உள்ள திருக்குர்ஆனைப் பற்றித் தான் பேசுகின்றது என்ற உண்மை தெளிவாகிறது.

இந்தக் கருத்தை மேலும் வலுவூட்டும் வண்ணம் திருக்குர்ஆனின் பின்வரும் வசனங்கள் அமைந்துள்ளன.

அவ்வாறில்லை! இது ஓர் அறிவுரை. விரும்பியவர் படிப்பினை பெற்றுக் கொள்வார். இது தூய்மைப்படுத்தப்பட்டு உயர்வாக்கப்பட்ட மதிப்புமிக்க ஏடுகளில் உள்ளது. மரியாதைக்குரிய நல்லோர்களான எழுத்தர்களின் கைகளில் உள்ளது.

அல்குர்ஆன் (80 : 11-16)

இவ்வசனமும் திருக்குர்ஆனின் மூலப்பிரதி எங்குள்ளது என்பதைப் பற்றி பேசுகின்றது. இவ்வசனங்களிலும் 56 : 79 வசனத்தில் கூறப்பட்டதைப் போன்றே கூறப்பட்டிருந்தாலும் 56 : 79 வசனத்தை விட கூடுதல் தெளிவுடனும் விளக்கத்துடனும் காணப்படுகின்றது.

தூய்மையானவர்கள் என்று 56 : 79 வசனத்தில் கூறப்பட்டவர்கள் யார்? என்பதை இவ்வசனம் தெளிவுபடுத்துகிறது. அவர்கள் வானவர்கள் தாம் என்று இவ்வசனத்திலிருந்து அறிந்துகொள்ள முடிகிறது.

குரைஷிக் குல இறை நிராகரிப்பாளர்கள் இந்தக் குர்ஆனை ஷைத்தான்கள் கொண்டு வருகின்றனர் என எண்ணிணார்கள். அவர்களுக்கு அல்லாஹ் பின்வருமாறு பதில் கூறினான்.

இதை ஷைத்தான்கள் இறக்கிடவில்லை. அது அவர்களுக்குத் தகுதியானதும் அல்ல. அதற்கு அவர்களால் இயலாது. அவர்கள் செவியேற்பதை விட்டும் தடுக்கப்பட்டவராவர்.

அல்குர்ஆன் (26 : 210 212)

இந்த வசனத்தில் சொல்லப்பட்டதைப் போன்று திருக்குர்ஆன் தூய்மையானவர்களான மலக்குமார்களின் கையிலே பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. ஷைத்தான்களால் இதைத் தொடமுடியாது என்ற பொருளில் தான் 56 : 79 வது வசனமும் அமைந்துள்ளது.

தொட மாட்டார்கள் என்பதற்கும் தொடக் கூடாது என்பதற்கும் உள்ள வேறுபாட்டை நாம் அறிவோம். தொடக் கூடாது என்றால் அது கட்டளையிடுகிறது என்பது பொருள். தொட மாட்டார்கள் என்றால் அது ஒரு செய்தியை நமக்கு எடுத்துக் கூறுகிறது என்று பொருள்.

மேற்கண்ட வசனத்தில் தொடக் கூடாது எனக் கூறப்படவில்லை. மாறாக தொட மாட்டார்கள் எனக் கூறப்படுகிறது. குளிப்பு கடமையானவர்களும், உளூ இல்லாதவர்களும் குர்ஆனைத் தொடக் கூடாது என்ற அர்த்தம் தான் இந்த வசனத்தின் பொருள் என்றால் தூய்மையானவர்களைத் தவிர வேறு யாரும் இக்குர்ஆனைத் தொடக் கூடாது என்று தொடுவதற்கு தடைபோடும் விதத்தில் அல்லாஹ் கூறியிருப்பான். ஆனால் மற்றவர்கள் இதைத் தொட மாட்டார்கள் என்று அல்லாஹ் கூறியிருப்பது பாதுகாக்கப்பட்ட ஏட்டில் உள்ள குர்ஆனை மலக்குமார்களைத் தவிர மற்றவர்களால் தொட முடியாது என்ற பொருளையே தருகிறது.

மேலுள்ள வசனங்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்துப் பார்க்கும் போது 56 : 79 வது வசனத்தில் சொல்லப்பட்ட தூய்மையானவர்கள் என்பது வானவர்கள் என்பதும்,

அதை என்று கூறப்பட்டுள்ளது வானத்தில் பாதுகாக்கப்பட்ட ஏட்டில் உள்ள குர்ஆன் என்பதும்

ஐயத்திற்கு இடமின்றி தெளிவாகின்றது. எனவே இந்த வசனத்தை வைத்துக் கொண்டு தூய்மையான நிலையில் தான் குர்ஆனைத் தொட வேண்டும் என்று வாதிட முடியாது.

தூய்மையில்லாதவர்கள் திருக்குர்ஆனைத் தொடக் கூடாது. ஓதக் கூடாது என்றக் கருத்தில் சில ஹதீஸ்கள் வருகின்றன. அவையனைத்தும் ஆதாரமற்றவையாகும்.

உமர் (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்னால் அவர்களின் சகோதரி அவர்களை நோக்கி, "நீங்கள் அசுத்தமாக இருக்கின்றீர்கள். தூய்மையானவர்களைத் தவிர இதை எவரும் தொடக் கூடாது'' என்று கூறினார்கள் என்ற செய்தி முஸ்னத் பஸ்ஸார் என்ற நூலில் 279 வது ஹதீஸாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெற்றுள்ள உஸாமத் பின் ஸைத் என்பார் பலவீனமானவர் என்று மஜ்மவுஸ் ஸவாயித் என்ற நூலில் ஹைஸமீ குறிப்பிடுகின்றார்.

இதே அறிவிப்பு பைஹகீயிலும் இடம் பெற்றுள்ளது. இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான காஸிம் பின் உஸ்மான் அல்பஸரீ என்பவர் பலவீனமானவர் ஆவார். இவரது ஹதீஸ் பின்பற்றக் கூடியதல்ல என்று இப்னு ஹஜர் அவர்கள் ஸிஸானுல் மீஸானில் குறிப்பிடுகின்றார்கள்.

ஒரு வாதத்திற்கு இந்தச் செய்தி ஆதாரப்பூர்வமானது என்று வைத்துக் கொண்டாலும் இதன் அடிப்படையில் தூய்மையற்றவர்கள் குர்ஆனைத் தொடக் கூடாது என்று வாதிட முடியாது. ஏனெனில் இந்தச் செய்தியில் நபி (ஸல்) அவர்கள் கூறியதாகவோ, அல்லது அவர்கள் இதை அங்கீகரித்ததாகவோ குறிப்பிடப்படவில்லை. உமர் (ரலி) அவர்களது சகோதரியின் சொந்தக் கருத்தாகவே இடம் பெற்றுள்ளது. எனவே இதை ஆதாரமாகக் கொள்ள முடியாது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரோமாபுரியின் அரசர் ஹெர்குலிஸுக்கு எழுதிய கடிதத்தில் பின்வருமாறு கூறப்பட்டிருந்தது:

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அல்லாஹ்வின் அடியாரும் அவனது தூதருமான முஹம்மது என்பார், ரோமாபுரிச் சக்கரவர்த்தி ஹெர்குலிஸுக்கு எழுதிக் கொள்வது: நேர்வழியைப் பின்பற்றுவோர் மீது சாந்தி நிலவட்டுமாக! நிற்க! இஸ்லாத்தைத் தழுவுமாறு உமக்கு நான் அழைப்பு விடுக்கின்றேன். நீர் இஸ்லாத்தை ஏற்பீராக! நீர் ஈடேற்றம் பெற்றிடுவீர்! அல்லாஹ் உமக்கு இரு மடங்கு சன்மானம் வழங்குவான். நீர் புறக்கணித்தால் (உமது) குடிமக்களின் பாவமும் உம்மைச் சாரும்.

"வேதமுடையோரே! நாம் அல்லாஹ்வைத் தவிர (யாரையும்) வணங்கக் கூடாது; அவனுக்கு இணையாக எதையும் கருதக் கூடாது; அல்லாஹ்வையன்றி நம்மில் ஒருவர் மற்றவரைக் கடவுள்களாக ஆக்கக் கூடாது என்ற எங்களுக்கும், உங்களுக்கும் பொதுவான கொள்கைக்கு வாருங்கள்!'' என்று கூறுவீராக! அவர்கள் புறக்கணித்தால் "நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்களே சாட்சிகளாக இருங்கள்!'' எனக் கூறி விடுங்கள்! (அல்குர்ஆன் 3:64)

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி),

நூல் : புகாரி 7, 2941

இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் முஸ்லிமல்லாத ஒரு மன்னருக்கு "பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்' மற்றும் 3:64 ஆகிய குர்ஆன் வசனங்களை எழுதி அனுப்பியுள்ளார்கள். தூய்மையற்றவர்கள் குர்ஆனைத் தொடக் கூடாது என்றிருந்தால் மாற்று மதத்தில் உள்ளவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு எழுதிக் கொடுத்திருக்க மாட்டார்கள்.

எனவே குர்ஆனை எந்த நிலையில் வேண்டுமானாலும் தொடலாம். ஓதலாம்.
more


__________________________________
Jazakallah : by onlinepj.com
0 comments

ஜூம்ஆ பாங்கிற்கு பிறகு மாற்று மதத்தவரை வைத்து வியாபாரம் செய்யலாமா?

கேள்வி : அல் குரான் (62:9) - "நம்பிக்கை கொண்டோரே! வெள்ளிக் கிழமையில் தொழுகைக்காகஅழைக்கப் பட்டால் அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள்! வியாபாரத்தை விட்டுவிடுங்கள்!நீங்கள் அறிந்தால் இதுவே உங்களுக்கு நல்லது."
மேலே குறிபிட்டுள்ள வசனத்தில் இருந்து தெளிவாக தெரிகிறது, ஜும்மா தொழுகைக்காக அழைக்கப்பட்டால் வியாபாரத்தை விட்டு செல்லுங்கள். அல்லாஹ் அந்த நேரத்தில் வியாபாரம் செய்வதைதடுத்துள்ளான். நான் வியாபாரம் செய்கிறேன். வெள்ளிக் கிழமைகளில் சீக்கிரமே பள்ளிக்கு செல்பவன் நான்.ஆனால் எனது கடையை அடைப்பது இல்லை. நான் வியாபாரத்தை விட்டு விட்டாலும் எனது மாற்றுமத தொழிலாளி(staff) கடையில் தான் இருப்பார். அப்போது வியாபாரமும் நடக்கும்(வியாபாரம்செய்வது எனது நிய்யத் இல்லை என்றாலும் கடை திறந்த இருப்பதால் வரும் வாடிக்கையாளர்களைவிரட்ட முடியாது). அவர் தொலைவில் இருந்து வருவதால் வீட்டுக்கு போகாமல் கடையிலேயேதான் காலை முதல் இரவு வரை இருப்பார். இந்த சூழ்நிலையில் நான் வியாபாரம் செய்யலாமா? என்ன தான் அவர் மாற்று மதத்துகாரராக இருந்தாலும் வியாபாரம் நடப்பது என்னுடையது. அதில் கிடைக்கும் லாபம் என்னை வந்து சேரும்.இப்படி நான் கடையை திறந்து வைத்திருப்பது கூடுமா? கூடாது என்றால் கடையை அடைத்து விட்டுஅவரை வேறு இடத்தில அந்த ஒரு மணிநேரம் இருக்க ஏற்பாடு செய்யலாம்,இன்ஷா அல்லா.கண்டிப்பாக விளக்கம் தேவை

பதில் :
يَا أَيُّهَا الَّذِينَ آَمَنُوا إِذَا نُودِيَ لِلصَّلَاةِ مِنْ يَوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا إِلَى ذِكْرِ اللَّهِ وَذَرُوا الْبَيْعَ ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ إِنْ كُنْتُمْ تَعْلَمُونَ [الجمعة/9]
நம்பிக்கை கொண்டோரே ! வெள்ளிக் கிழமையில் தொழுகைக்காக அழைக்கப்பட்டால் அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள்! வியாபாரத்தை விட்டு விடுங்கள்! நீங்கள் அறிந்தால் இதுவே உங்களுக்கு நல்லது. (அல்குர்ஆன் 62 : 9)
மேற்கண்ட இறைவசனத்தில் அல்லாஹ் இரண்டு கட்டளைகளைப் பிறப்பித்துள்ளான். வெள்ளிக் கிழமையில் ஜூம்ஆவிற்கு பாங்கு சொல்லப்படும் போது
1.         இறைவனை நினை கூர்வதற்கு விரைய வேண்டும்.
2.        . வியாபாரத்தை விட வேண்டும்.
ஒருவர் தன்னுடைய வியாபாரக் கடையில் மாற்று மதத்தவர்களையோ அல்லது ஜூம்ஆ கடமையாகதவர்களையோ நியமித்து விட்டு அவர் மட்டும் வியாபாரம் செய்யாமல் ஜூம்ஆவில் கலந்து கொள்வதால் அவர் வியாபாரத்தை தவிர்ந்தவராகக் கருதப்படமாட்டார். ஏனெனில்
“வெள்ளிக் கிழமையில் தொழுகைக்காக அழைக்கப்பட்டால் அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள்!“
என்பதோடு அல்லாஹ் நிறுத்தியிருந்தாலும் மேற்கண்ட இறைக்கட்டளையை நிறைவேற்றுவதற்கு அவர் வியாபாரத்தை விட்டுத்தான் ஆக வேண்டும்.
ஜும்ஆ கடமையானவர் மட்டும்தான் ஜூம்ஆவிற்கு பாங்கு சொல்லப்பட்ட பிறகு வியாபாரத்தை விடவேண்டும் என்று சொன்னால் ”பாங்கு சொல்லப்பட்டால் அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள் ” என்ற கட்டளை மட்டுமே போதுமானதாகும்.
ஆனால் அல்லாஹ் ”வியாபாரத்தை விட்டுவிடுங்கள்” என்று அதிகப்படியான கட்டளையைக் கூறுவதிலிருந்தே ஜூம்ஆவிற்கு பாங்கு சொல்லப்பட்டால் ஒருவர் தனக்கு சொந்தமான வியாபாரக் கடையை மூடிவிட வேண்டும். மாற்று மதத்தவர்களையோ அல்லது ஜூம்ஆ கடமையாகதவர்களையோ கொண்டு வியாபாரம் செய்வது ஹராம் என்பதையும் அதன் மூலம் வரும் வருவாயும் ஹராமாகும் என்பதையும் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.
நிர்பந்தம் என்று வரும்போது மார்க்கத்தில் சில விதிவிலக்குகள் உள்ளன. அது போல் ஜூம்ஆவிற்கு பாங்கு சொல்லப்பட்ட பிறகு வியாபாரம் செய்வது ஹராமாகும் என்றாலும் சில சூழ்நிலைகளில் ஒருவன் நிர்பந்தத்திற்குள்ளானால் அது அல்லாஹ்விடம் பாவமாகக் கருதப்படாது.

நன்றி - அப்துந்நாஸிர்
0 comments

சாட்ஸ் அணிந்து உளூ செய்யலாமா

எனது நண்பன் சாட்ஸ் அணிந்து கொண்டு உளூ செய்வதும் அப்படியே சாப்பிடுவதும் சரிதான் என்கிறான் (சாட்ஸ் அணிந்து சாப்பிடும் போது முழங்கால் தெரிகிறது) இப்படி செய்வது சரியா?  ஆடை அணிவதன் முறையை விளக்கவும். 

ஆண்கள் சாட்ஸ் அணிந்து கொண்டு உளூ செய்வதோ சாப்பிடுவதோ தவறல்ல. இவற்றைச் செய்யும் போது முழங்கால் மறைக்கப்பட வேண்டும் என நபிகளார் கட்டளையிடவில்லை. 

இவை தவிர இதர நேரங்களிலும் கூட ஆண்களுக்கு முழங்கால் மறைக்கப்பட வேண்டியதல்ல. நபிகளாரின் முன்னிலையில் அபூபக்ர் (ரலி) அவர்களின் முழங்கால் தெரிந்த போது நபிகளார் அதைக் கண்டிக்கவில்லை. 

3661 அபுத் தர்தா (ரலி) அவர்கள் கூறியதாவது: 

நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் அமர்ந்திருந்தேன். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் தமது முழங்கால் வெளியே தெரியுமளவிற்கு ஆடையின் ஒரு பக்கத்தை (தூக்கிப்) பிடித்த படி (எங்களை நோக்கி) வந்தார்கள். உடனே, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "உங்கள் தோழர் வழக்காட வந்து விட்டார்'' என்று சொன்னார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் (நபிகள் நாயகம் -ஸல்- அவர்களுக்கு) சலாம் கூறிவிட்டு, "அல்லாஹ்வின் தூதரே! எனக்கும் கத்தாபின் மகனா(ர் உம)ருக்கும் இடையே சிறிது வாக்குவாதம் ஏற்பட்டது. நான் (கோபமாக) அவரை நோக்கி விரைந்தேன். பிறகு (என் செய்கைக்காக) நான் வருந்தி அவரிடம் என்னை மன்னிக்கும்படி கேட்டேன். அவர் என்னை மன்னிக்க மறுத்து விட்டார். ஆகவே உங்களிடம் வந்தேன்'' என்று சொன்னார்கள். உடனே, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "அபூபக்ரே! அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக!'' என்று மும்முறை கூறினார்கள். பிறகு உமர் (ரலி) அவர்கள் (அபூபக்ர் (ரலி) அவர்களை மன்னிக்க மறுத்து விட்டதற்காக) மனம் வருந்தி அபூபக்ர் (ரலி) அவர்களின் வீட்டிற்குச் சென்று, "அங்கே அபூபக்ர் (ரலி) அவர்கள் இருக்கிறார்களா?'' என்று கேட்க வீட்டார், "இல்லை'' என்று பதிலளித்தார்கள். ஆகவே, அவர்கள் நபிகள் நாயகம்  (ஸல்) அவர்களிடம் சென்றார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய முகம், (கோபத்தால்) நிறம் மாறலாயிற்று. எனவே, அபூபக்ர் (ரலி) அவர்கள் பயந்துபோய் தம் முழங்கால்களின் மீது மண்டியிட்டு அமர்ந்து, "அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் தான் (வாக்கு வாதத்தை தொடங்கியதால் உமரை விட) அதிகம் அநீதியிழைத்தவனாகி விட்டேன்.'' என்று இருமுறை கூறினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "(மக்களே!) அல்லாஹ் என்னை உங்கüடம் அனுப்பினான். "பொய் சொல்கிறீர்' என்று நீங்கள் கூறினீர்கள். அபூபக்ர் அவர்களோ, "நீங்கள் உண்மையே சொன்னீர்கள்' என்று கூறினார்; மேலும் (இறைமார்க்கத்தை நிலை நிறுத்தும் பணியில்) தன்னையும் தன் செல்வத்தையும் அர்ப்பணித்து என்னிடம் பரிவுடன் நடந்து கொண்டார். அத்தகைய என் தோழரை எனக்காக நீங்கள் (மன்னித்து) விட்டு விடுவீர்களா?'' என்று இருமுறை சொன்னார்கள். அதன் பிறகு அபூபக்ர் (ரலி) அவர்கள் மன வேதனைக்குள்ளாக்கப்படவில்லை. 

நபியவர்களும் முழங்கால்கள் தெரிய நபித்தோழர்கள் முன்னிலையில் அமர்ந்திருக்கிறார்கள் பார்க்க புகாரி 3695 

ஆண்கள் ஆடை அணிவதன் முறையை விரிவாக அறிய இந்த இணைப்பில் உள்ளதை வாசிக்கவும். http://onlinepj.com/aayvukal/aangal_thodayai_maraika_venduma/


 www.onlinepj.com
0 comments

ரஹ், அலை, ஸல், ரலி - என்றால் என்ன?

முன் சென்றவர்களின் பெயருக்குப் பின்னால் ஸல், அலை, ரலி, ரஹ் என்றெல்லாம் முஸ்லிம்களாகிய நீங்கள் குறிப்பிடுவதன் கருத்து என்ன என்று முஸ்லிமல்லாத நண்பர் கேட்கிறார். எப்படி விளக்கம் கூறுவது?


பதில்: 

ஸல் என்பது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்பதன் சுருக்கமாகும்.
எழுத்தில் ஸல் என்று கூறப்பட்டாலும் வாசிக்கும்போது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்று வாசிக்க வேண்டும். 'அவர் மீது அல்லாஹ் சிறப்பருள் புரியட்டும். சாந்தியை வழங்கட்டும்'என்பது இதன் பொருள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றிக் கூறப்படும் போது அவர்களுக்காக இறையருள் வேண்டி பிரார்த்தனை செய்ய வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இது பற்றி வயுறுத்தியுள்ளனர். எனவே, முஹம்மது நபியவர்களைப் பற்றிக் கூறும் போது, 'அவர்களுக்கு அல்லாஹ் அருள் புரியட்டும்' என்பதையும் சேர்த்துக் கூறுகிறோம்.

ஒவ்வொரு சமுதாயமும் தங்களுக்கு வழிகாட்ட அனுப்பப்பட்ட நபிமார்களைக் கடவுளர்களாக ஆக்கி விட்ட நிலையில் முஸ்லிம்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கடவுளாக ஆக்காமல் இந்த அடைமொழி தடுத்து வருகிறது.

நபிகள் நாயகத்தைப் பற்றிப் பேசும் போதெல்லாம் அவர்களுக்கு நாம் பிரார்த்தனை செய்கிறோமே தவிர அவர்களிடம் பிரார்த்தனை செய்ய மாட்டோம் என்ற தெளிவை முஸ்லிம் சமுதாயத்துக்கு இது உருவாக்கியுள்ளது.

அலை என்பது அலைஹிஸ்ஸலாம்' அல்லது அலை ஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம்' என்பதன் சுருக்கமாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) தவிர மற்ற நபிமார்களைப் பற்றிக் கூறும் போது இவ்வாறு பயன்படுத்தி வருவது வழக்கமாகவுள்ளது. 'அவர் மீது இறைவனின் சிறப்பருளும் சாந்தியும் ஏற்படட்டுமாக' என்பது இதன் பொருள். அதாவது ஸல்லஸ்லாஹு அலைஹி வஸல்லம்' என்பதற்கு என்ன பொருளோ அது தான் அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம்' என்பதற்கும் பொருளாகும்.

'நபிகள் நாயகம் (அலை)' 'மூஸா (ஸல்)' என்று பயன்படுத்தினால் அதில் எந்தத் தவறும் இல்லை. பழங்கால நூல்களில் இப்படியும் பலர் பயன்படுத்தியுள்ளனர்.

ஆனாலும் ஸல்' என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் அலை' என்பதை மற்ற நபிமார்களுக்கும் பயன்படுத்துவதை வழக்கமாக ஆக்கி விட்டனர்.

அலை என்பதை நபிமார்கள் அல்லாதவர்களுக்கும் பயன்படுத்தினால் அதில் மார்க்க அடிப்படையில் தவறு இல்லை. அவர்கள் மீது சாந்தியும் அருளும் ஏற்படட்டும் என்பது இதன் பொருள். இது யாருக்கு வேண்டுமானாலும் செய்யத் தக்க துஆ தான்

ரலி என்பது ரலியல்லாஹு அன்ஹு' என்பதன் சுருக்கமாகும். அவரை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக என்பது இதன் பொருள்.

இதை எந்த இறை நம்பிக்கையாளருக்கும் பயன்படுத்தலாம். எல்லோருக்கும் இறைவனின் பொருத்தம் தேவையானது தான்.

ஆனாலும், இதை நபித்தோழர்களுக்கு மட்டுமே பயன்படுத்துவது வழக்கமாகி விட்டது. நபித்தோழர் அல்லாத மற்றவர்களுக்கும் ரலி' என்பதைப் பயன்படுத்துவது மார்க்கச் சட்டப்படி குற்றமல்ல.

உங்களைக் கூட தஸ்னீம் (ரலி)' எனக் கூறலாம். ஆனாலும் ரலி' என்பது அதன் அர்த்தத்தைக் கடந்து நபித்தோழர்களின் அடையாளமாகவே இன்று ஆகிவிட்டது. மற்றவர்களுக்கு ரலி' என்று பயன்படுத்தினால் அவர்கள் நபித்தோழர்களாக இருப்பார்களோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தி விடும்.

இதைக் கவனத்தில் கொண்டு மற்றவர்களுக்கு இதைப் பயன்படுத்தாமல் தவிர்க்கலாம்.

ரஹ்' என்பது ரஹ்மத்துல்லாஹி அலைஹி' என்பதன் சுருக்கம். அல்லாஹ் அவருக்கு அருள்புரிவானாக' என்பது இதன் பொருள்.

எல்லா நம்பிக்கையாளர்களுக்கும் இதைப் பயன்படுத்தலாம். ஏனெனில் அனைவருக்குமே அல்லாஹ்வின் அருள் தேவை தான். ஆனால், இறந்தவர்களுக்கு மட்டுமே இது பயன்படுத்தப்படுகிறது. அதுவும் பிரபலமானவர்களுக்கே பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனக்கோ, உங்களுக்கோ இதைப் பயன்படுத்தினால் நாம் எந்தக் காலத்திலோ வாழ்ந்து மடிந்தவர்கள் என்று மக்கள் நினைப்பார்கள். இதை எவருக்கும் பயன்படுத்தலாம். மார்க்க ரீதியாக இதற்குத் தடை இல்லை.

onlinepj 
0 comments

மஃமூம் இமாமாக ஆகலாமா?

ஒருவர் தாமதமாக  ஜமாஅத்தில் வந்து சேருகின்றார். இமாம் ஸலாம் கொடுத்ததும் தமக்குத் தவறிய ரக்அத்துகளை எழுந்து தொழுகின்றார். அதற்குப் பிறகு வரும் ஒருவர் தவறிய ரக்அத்துகளைத் தொழும் இவரை இமாமாகப் பின்பற்றித் தொழுவது கூடுமா? ஒரே தொழுகையில் ஒருவர் பின்பற்றித் தொழுபவராகவும், இமாமாகவும் ஆக முடியுமா? 

பதில் - ஒருவர் இமாமைப் பின்பற்றித் தொழுகின்ற வரைதான் அவர் பின்பற்றித் தொழுபவராக கருதப்படுவார். இமாம் ஸலாம் கொடுத்துவிட்டால் தவறிய ரக்அத்துகளை எழுந்து தொழுபவர் தனியாகத் தொழுபவராகத்தான் கருதப்படுவார். 

தனியாகத் தொழுபவரை இமாமாக ஆக்கிக் கொள்வதில் மார்க்கத்தில் எந்தத் தடையும் இல்லை. இதற்கு நபிவழியில் ஆதாரங்கள் உள்ளன. 

தனியாகத் தொழுது கொண்டிருந்த நபி (ஸல்) அவர்களுடன் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் இணைந்து ஜமாஅத்தாகத் தொழுதுள்ளார்கள்.

 حَدَّثَنَا أَحْمَدُ قَالَ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ قَالَ حَدَّثَنَا عَمْرٌو عَنْ عَبْدِ رَبِّهِ بْنِ سَعِيدٍ عَنْ مَخْرَمَةَ بْنِ سُلَيْمَانَ عَنْ كُرَيْبٍ مَوْلَى ابْنِ عَبَّاسٍ عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ نِمْتُ عِنْدَ مَيْمُونَةَ وَالنَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عِنْدَهَا تِلْكَ اللَّيْلَةَ فَتَوَضَّأَ ثُمَّ قَامَ يُصَلِّي فَقُمْتُ عَلَى يَسَارِهِ فَأَخَذَنِي فَجَعَلَنِي عَنْ يَمِينِهِ فَصَلَّى ثَلَاثَ عَشْرَةَ رَكْعَةً ثُمَّ نَامَ حَتَّى نَفَخَ وَكَانَ إِذَا نَامَ نَفَخَ ثُمَّ أَتَاهُ الْمُؤَذِّنُ فَخَرَجَ فَصَلَّى وَلَمْ يَتَوَضَّأْ 

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நான் என் சிறிய தாயார் மைமூனா (ரலி) அவர்களின் வீட்டில் ஓர் இரவில் தங்கினேன். (அன்றிரவு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பள்ளிவாசலில்) இஷாத் தொழுகை தொழுதுவிட்டு (வீட்டிற்கு) வந்து நான்கு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு உறங்கினார்கள். பின்னர் எழுந்து (இரவுத் தொழுகைக்காக) நின்றார்கள். நான் சென்று (அவர்களுடன்) அவர்களுக்கு இடப்பக்கத்தில் நின்று கொண்டேன். அவர்கள் (தொழுது கொண்டிருந்த) என்னை (இழுத்து) தமது வலப் பக்கத்தில் நிறுத்திவிட்டு ஐந்து ரக்அத்கள் தொழுதார்கள். பின்னர் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு அவர்களது (மிதமான) குறட்டைச் சப்தத்தை' அல்லது லேசான குறட்டைச் சப்தத்தை' நான் கேட்குமளவிற்கு (ஆழ்ந்து) உறங்கினார்கள். பின்னர் (சுப்ஹுத்) தொழுகைக்கு புறப்பட்டுச் சென்றார்கள் 
நூல் : புகாரி (697) 

தனியாகத் தொழுது கொண்டிருந்த நபி (ஸல்) அவர்களுடன் ஸஹாபாக்கள் ஒவ்வொருவராக இணைந்து ஒரு கூட்டமாகவே தொழுதுள்ளார்கள். 

حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ حَدَّثَنَا أَبُو النَّضْرِ هَاشِمُ بْنُ الْقَاسِمِ حَدَّثَنَا سُلَيْمَانُ عَنْ ثَابِتٍ عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي فِي رَمَضَانَ فَجِئْتُ فَقُمْتُ إِلَى جَنْبِهِ وَجَاءَ رَجُلٌ آخَرُ فَقَامَ أَيْضًا حَتَّى كُنَّا رَهْطًا ….. 

அனஸ் ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தில் தொழுவார்கள். (ஒரு நாள்) நான் சென்று அவர்களுக்கு விலாப் பக்கத்தில் நின்றுகொண்டேன். இன்னொரு மனிதர் வந்து அவரும் நின்றுகொண்டார். இறுதியில் நாங்கள் ஒரு கூட்டமாகவே ஆகிவிட்டோம்........... (நீண்ட ஹதீசின் சுருக்கம்) 

நூல் : முஸ்லிம் (2014)

 தாமதமாக வருபவர்கள் தனியாகத் தொழும் ஒருவரை இமாமாகப் பின்பற்றித் தொழுவதற்கு மார்க்கத்தில் எவ்விதத் தடையும் இல்லை என்பதை மேற்கண்ட ஹதீஸ்களிலிருந்து தெளிவாக அறிந்து கொள்ளலாம். 

எனவே முந்தைய ஜமாஅத்துடன் இணைந்து தொழுது எஞ்சிய ரக்அத்துகளை எழுந்து தனியாகத் தொழும் ஒருவரை இமாமாகப் பின்பற்றித் தொழுவதற்கு மார்க்த்தில் தடை கிடையாது . 

மேலும் சில குறிப்பிட்ட நிலைகளில் இமாமாக நின்று தொழுபவர் மஃமூமாக ஆவதும், மஃமூமாக நின்று தொழுபவர் இமாமாக ஆவதும் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதே. 

இதனைப் பின்வரும் ஹதீஸிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

 حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ قَالَ أَخْبَرَنَا مَالِكٌ عَنْ أَبِي حَازِمِ بْنِ دِينَارٍ عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيِّ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَهَبَ إِلَى بَنِي عَمْرِو بْنِ عَوْفٍ لِيُصْلِحَ بَيْنَهُمْ فَحَانَتْ الصَّلَاةُ فَجَاءَ الْمُؤَذِّنُ إِلَى أَبِي بَكْرٍ فَقَالَ أَتُصَلِّي لِلنَّاسِ فَأُقِيمَ قَالَ نَعَمْ فَصَلَّى أَبُو بَكْرٍ فَجَاءَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالنَّاسُ فِي الصَّلَاةِ فَتَخَلَّصَ حَتَّى وَقَفَ فِي الصَّفِّ فَصَفَّقَ النَّاسُ وَكَانَ أَبُو بَكْرٍ لَا يَلْتَفِتُ فِي صَلَاتِهِ فَلَمَّا أَكْثَرَ النَّاسُ التَّصْفِيقَ الْتَفَتَ فَرَأَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَشَارَ إِلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ امْكُثْ مَكَانَكَ فَرَفَعَ أَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ يَدَيْهِ فَحَمِدَ اللَّهَ عَلَى مَا أَمَرَهُ بِهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ ذَلِكَ ثُمَّ اسْتَأْخَرَ أَبُو بَكْرٍ حَتَّى اسْتَوَى فِي الصَّفِّ وَتَقَدَّمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَصَلَّى فَلَمَّا انْصَرَفَ قَالَ يَا أَبَا بَكْرٍ مَا مَنَعَكَ أَنْ تَثْبُتَ إِذْ أَمَرْتُكَ فَقَالَ أَبُو بَكْرٍ مَا كَانَ لِابْنِ أَبِي قُحَافَةَ أَنْ يُصَلِّيَ بَيْنَ يَدَيْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا لِي رَأَيْتُكُمْ أَكْثَرْتُمْ التَّصْفِيقَ مَنْ رَابَهُ شَيْءٌ فِي صَلَاتِهِ فَلْيُسَبِّحْ فَإِنَّهُ إِذَا سَبَّحَ الْتُفِتَ إِلَيْهِ وَإِنَّمَا التَّصْفِيقُ لِلنِّسَاءِ 

சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் ;  (குபாவில் இருந்த பனூஅம்ர் குலத்தாரிடையே தகராறு நிகழ்ந்துவிட்டதாகச் செய்தி வந்ததை யொட்டி) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பனூஅம்ர் பின் அவ்ஃப் குலத்தாரை நோக்கி அவர்களிடையே சமாதானம் ஏற்படுத்துவதற்காகச் சென்றார்கள். அப்போது (அஸ்ர்) தொழுகையின் நேரம் வந்துவிட்டது. (நபி (ஸல்)  அவர்கள் வரத் தாமதமாகவே) தொழுகை அறிவிப்பாளர் (பிலால் (ரலி) அவர்கள்) அபூபக்ர் (ரலி) அவர்களை நோக்கி வந்து, நீங்கள் மக்களுக்குத் (தலைமை தாங்கித்) தொழுகை நடத்துகிறீர்களா, நான் இகாமத் சொல்கிறேன்? என்று கூறினார்கள் ஆம் (அவ்வாறே செய்வோம் என்று கூறிவிட்டு அபூபக்ர் (ரலி) அவர்கள் (மக்களுக்குத் தலைமை தாங்கி) தொழுகை நடத்த ஆரம்பித்தார்கள். மக்கள் தொழுது கொண்டிருக்கும் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து (தொழுகை வரிசைகளை) விலக்கிக் கொண்டு (முதல்) வரிசையில் வந்து நின்றார்கள். இதைக் கண்ட மக்கள் (அபூபக்ர் அவர்களுக்கு நபி (ஸல்) வந்து விட்டதைத் தெரிவிக்க) கைத்தட்டினார்கள். (பொதுவாக) அபூபக்ர் (ரலி) அவர்கள் தொழுது கொண்டிருக்கும் போது திரும்பிப் பார்க்க  மாட்டார்கள். மக்கள் கை தட்டுவது அதிகரித்த போது திரும்பிப் பார்த்தார்கள். (அங்கே முதல் வரிசையில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் கண்டார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களை நோக்கி அங்கேயே இருங்கள்' என்று சைகை செய்தார்கள். உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள் அவ்வாறு தம்மை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பணித்தற்காக (இறைவனுக்கு நன்றி செலுத்தும் முகமாக) தமது கைகளை உயர்த்தி இறைவனைப் புகழ்ந்தார்கள். பிறகு அபூபக்ர் (ரலி) அவர்கள் (திரும்பாமல் அப்படியே முதல்) வரிசையில் சேர்ந்து கொண்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முன்னே சென்று (நின்று) தொழுகை நடத்தினார்கள். தொழுது முடித்ததும். அபூபக்ரே! நான் உங்களை நான் (அங்கேயே நின்று தொழுவிக்குமாறு) பணித்தும் நீங்கள் ஏன் அங்கேயே நிற்கவில்லை? என்று கேட்டார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு முன்னால் தொழுவிப்பதற்கு அபூ குஹாஃபாவின் மகனுக்குத் தகுதியில்லை என்று பதிலளித்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்களைப் பார்த்து), உங்களை ஏன் அதிகமாகக் கைதட்டக் கண்டேன்? ஒருவருக்கு அவரது தொழுகையில் ஏதேனும் ஐயம் (ஆட்சேபம்) ஏற்பட்டுவிட்டால் அவர் (அதை உணர்த்தும் முகமாக) இறைவனை (சுப்ஹானல்லாஹ்'- அல்லாஹ் தூயவன் எனக் கூறி)த் துதிக்கட்டும். ஏனெனில் அவர் இறைவனைத் துதிக்கும் போது அவரளவில் கவனம் செலுத்தப்படும். கைத்தட்டும் முறை பெண்களுக்குரியதாகும் என்று கூறினார்கள். 

நூல் : புகாரி (684) 

இமாமாக நின்ற அபூபக்கர் (ரலி) அவர்கள் நபியவர்கள் வந்ததும் மஃமூமாக நின்று தொழுதுள்ளார்கள். 

ஒரே தொழுகைக்குள் இமாமாக நின்றவர் மஃமூமாக (பின்பற்றித் தொழுபவராக) ஆக முடியும் என்பதை மேற்கண்ட ஹதீஸிலிருந்து நாம் அறிந்து கொள்கிறோம். 

எனவே ஒரு இமாமைத் பின்பற்றித் தொழுதவர் அந்த இமாம் ஸலாம் கொடுத்த பிறகு தனியாகத் தொழும் நேரத்தில் மற்றவர்களுக்கு இமாமாக நின்று தொழுவிப்பதில் எவ்விதத் தவறும் கிடையாது. 

மேலும் முதல் ஜமாஅத் முடிந்தவுடன் தாமதமாக வருபவர்கள் தனியாக ஜமாஅத்தாகத் தொழுது கொள்வதும் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதே. 

மேலும் பார்க்க http://onlinepj.com/kelvi_pathil/thozukai_kelvi/imamin_muthukai_thotuthal/
www.onlinepj.com
0 comments

இடர்கால குனூத் ஓதலாமா?


சமூகத்திற்கு எதாவது பிரச்சினை ஏற்பாடும் போது தொழுகையில் குனூத் ஓதலாமா?
சமூகத்திற்கு ஆதரவாகவே எதிராகவே பிரார;த்திக்க நாடினால் குனூத் ஓதுவது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட காரியம் தான். அல்லாஹ்வின் தூதர் அவர்கள் இதற்கு வழிகாட்டி உள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தொழுகையில்) எவருக்கேனும் எதிராகவோ, ஆதரவாகவோ பிரார்த்திக்க விரும்பினால் ருகூவுக்குப் பிறகு ”குனூத்’ (எனும் சிறப்பு துஆ) ஓதுவார்கள்.
(ஆதாரம்: புகாரி 4560)
அது மட்டுமல்லாமல் குர;ஆனை மனனம் செய்த சுமார் 70 நபர்களை இணைவைப்பாளர்களால் கொள்ளப்பட்ட காரணத்தால் அல்லாஹ்வின் தூதர் (ஸல) அவர்கள் ஒரு மாத காலம் சம்பந்தப்பட்ட கூட்டத்திற்கு எதிராக அல்லாஹ்வின் தூதர் குனூத் ஓதினார்கள்
நபி (ஸல்) அவர்கள் திருக்குர்ஆன் அறிஞர்கள் என்றழைக்கப்பட்டுவந்த சுமார் எழுபது பேரை இணைவைப்பவர்களில் ஒரு கூட்டத்தாரிடம் அனுப்பிவைத்தார்கள். இவர்கள் அந்த இணை வைப்பவர்களைவிட மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே இருந்தனர். அவர்களுக்கும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கும் இடையே (பரஸ்பரப் பாதுகாப்பு) ஒப்பந்தம் ஏற்பட்டிருந்தது. (இவ்வாறிருக்க அவர்கள் எழுபது பேரையும் அந்த இணைவைப்பாளர்கள் கொன்றுவிட்டனர்.) எனவேதான் அவர்களுக்கெதிராகப் பிரார்த்தித்தபடி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குனூத் (இடர்காலப் பிரார்த்தனை) ஓதினார்கள்.
(ஆதாரம்: புகாரி 1002)
எனவே நாமும் நமக்கு தேவைப்படும் போது அவ்வாறு குனூத் ஓதலாம்.
இனவாத சூழலில் நமது நாட்டில் தொழுகையில் ஓதப்பட்ட குனூத் சரியானது தானா?
தற்போது குனூத் ஓதவேண்டும் என்று கருதினால் தாராளமாக ஓதமுடியும் ஆனால் தற்போது ஓதப்படுவது அல்லாஹும்ம அஹ்தினி பீமன் ஹதைத் என்று ஆரம்பிக்கப்டும் துஆ ஆகும். இது வித்ர்தொழுகையில் ஓதுவதற்கு கற்றுத் தந்த துஆவாகும். இதற்கும் தற்போதைய பிரச்சினைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எது பிரச்சினையோ அதைத்தான் கேட்கவேண்டும். அல்லாஹ்வின் தூதர்அவர்கள் அல்லாஹும்ம அஹ்தினி என்ற துஆவை ஓதவில்லை என்பதை விளங்கிக் கொள்ளவேண்டும்.
குனூத் என்றாலே அல்லாஹும்ம அஹ்தினி என்று ஆகிவிட்டது. குனூத் என்ற வார்த்தைக்கு துஆ கேட்டல் என்று தான் பொருளே தவிர அல்லாஹும்ம அஹ்தினி ஓதுவது என்று பொருள் அல்ல.
அல்லாஹும்ம அஹ்தினி ஓதும் தொழுகையில் நாம் கலந்து கொள்ளலாமா?
அல்லாஹ}ம்ம அஹ்தினி ஓதுவது என்பது தவறான ஒரு காரியம் என்பதால் அந்த தொழுகையில் நாம் கலந்து கொள்ளக் கூடாது. அவர்கள் அந்த துஆ கேட்கும் போது நாமும் ஒரு பித்ஆத்தான செயல் செய்யவேண்டிய ஒரு நிலை ஏற்படுகிறது. சிலர் கைகளைத் தூக்காமல் இருக்கலாம் என்று கருதுகிறார்கள். ஆனால் அதுவும் கூடாது ஏன் என்றால் கைகளை தூக்குவது என்பதே பித்ஆத்தாகும். கைகளைத் தூக்காமல் தான் இந்த துஆவை கேட்க வேண்டும். எனவே கைகளை தூக்காமல் இருந்தாலும் இப்படி தவரான ஒரு துஆ ஓதும் போது அமைதியாக கைகளை விட்டுவிட்டு இருப்பதற்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லை.
இடர்கால குனூத் ஓதும் போது ஆமீன் சொல்லலாமா?
இடர்கால குனூத் ஒதும் போது தாராளமாக ஆமின் சொல்லமுடியும் அல்லாஹும்ம அஹ்தினி என்ற குனூத்திற்கு அல்ல. காரணம் அல்லாஹ்வின் தூதரவர்கள் இவ்வாறு குனூத் ஓதும் போது பின்னால் உள்ளவர்கள் ஆமீன் கூறியுள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் லுஹர், அஸர், மக்ரிப், சுப்ஹ் ஆகிய அனைத்து தொழுகைக்குப் பிறகும் தொடர்ந்து ஒரு மாத காலம் குனூத் ஓதினார்கள். இரண்டாவது ரக்அத்தில் ஸமியல்லாஹுலிமன் ஹமிதா என்று அவர்கள் சொல்லும் போது பனூ சுலைம் கிளையினரைச் சார்ந்த ரிஃல், தக்வான் உஸைய்யா ஆகிய கிளையினருக்கு எதிராகப் பிரார்த்தனை செய்வார்கள். அவர்களுக்குப் பின்னால் உள்ளவர்கள் ஆமீன் சொல்வார்கள்.
(ஆதாரம்: அபூதாவூத் 1231,அஹ்மத் 2610)
இந்த குனூத்தை 3:128 வது வசனம் தடை செய்து விட்டதா?
மக்கள் மத்தியில் இவ்வாரான ஒரு கருத்தும் பரவாலாக இருக்கிறது. காரணம் அந்த கருத்தில் ஒரு செய்தி புகாரியில் இருக்கிறது..
நபி (ஸல்) அவர்கள் ஃபஜ்ருத் தொழுகையில் கடைசி ரக்அத்தின் போது தமது தலையை ருகூஉவிலிருந்து உயர்த்தி, ”அல்லாஹும்ம ரப்பனா வலக்கல் ஹம்து” (இறைவா! எங்கள் அதிபதியே! உனக்கே புகழனைத்தும்) என்று சொல்லிவிட்டுப் பிறகு, ”இறைவா! இன்னாரையும் இன்னாரையும் உன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள். உடனே கண்ணியமும் மகத்துவமும் பொருந்திய அல்லாஹ், ”அவர்களை அல்லாஹ் மன்னிக்கும் வரை, அல்லது அவர்கள் அக்கிரமக்காரர்களாக இருப்பதால் அவனே அவர்களை வேதனை செய்யும்வரை (அவர்களுக்குத் தண்டனை வழங்குமாறு கூற, நபியே!) உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை” எனும் (3: 128ஆவது) வசனத்தை இறக்கினான்.
(ஆதாரம்: புகாரி 7346)
இப்படி ஒரு செய்தி இருந்தாலும் 3:128வது வசனம் உஹத் யுத்தத்தின் போது; அருளப்பட்டது என்று முஸ்லிம் 1791 இல் பதிவு செய்யப்பட்டிருக்கும் செய்தி தான் ஏற்புடையதாக இருக்கிறது. மேலும் குனூத் பற்றி தான் இவ்வசனம் அருளப்பட்டது என்று ஹாப் எனும் ஸுஹ்ரி வழியாகவே அறிவிக்கப்படுகிறது. அவர் நபித்தோழரிடம் கேட்டு அறிவிப்பது போல் புகாரியின் வாசக அமைப்பு இருந்தாலும், முஸ்லிமில் இடம் பெற்றுள்ள இதே ஹதீஸின் வாசக அமைப்பு ஸுஹ்ரி அவர்கள் நபித்தோழர்கள் வழியாக இல்லாமல் சுயமாக அறிவிக்கின்றார் என்று தெளிவுபடுத்துகின்றது. ’’நபி(ஸல்)அவர்கள் மேற்கண்ட கொலையாளிகளைச் சபித்து குனூத் ஓதினார;கள்.மேற்கண்ட வசனம் அருளப்பட்டவுடன் குனூத்தை விட்டு விட்டார;கள் என்று நமக்குத் தகவல் கிடைத்துள்ளது என்று ஸுஹ்ரி கூறியதாக முஸ்லிம் 1082வது ஹதீஸ் கூறுகின்றது. இவ்வசனம் குனூத் குறித்து தான் அருளப்பட்டது என்பது குறித்து நபித்தோழர்கள் வழியான சான்று ஏதும் ஸுஹ்ரியிடம் இல்லை என்பதை இதிலிருந்து அறியலாம்.
இதனால் தான் ஸுஹ்ரியின் கூற்றுடன் ஹதீஸ் கலந்து விட்டது என்று ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் தமது பத்ஹுல் பாரியில் கூறுகின்றார;. எனவே குனூத் ஓதினார்கள் என்ற செய்தி தான் ஏற்புடையதாக உள்ளது அதை 3:128வது வசனம் தடை செய்த ஏற்புடையதாக இல்லை.
தற்காலத்தில் ஏற்பட்டிருக்கும் பிரச்சினைக்கு குனூத் தான் தீர்வா?
தற்காலத்தில் அனைத்து பிரச்சினைகளுக்கும் நோன்பு பிடிக்கச் சொல்வதும் குனூத் ஓதச் சொல்வதுமே வேலையாக சிலர் வைத்து இருக்கிறார்கள். அல்லாஹ்வின் தூதர் அவர்கள் பிரச்சினைகள் ஏற்படும் போது குனூத்தை மட்டும் ஓதிவிட்டு சும்மா இருக்கவில்லை. நபி (ஸல்) அவர்களின் காலத்தில் ஏராளமான யுத்தங்கள் நடைபெற்றது ஆனால் அல்லாஹ்வின் தூதர் குனூத் ஓதிவிட்டு மாத்திரம் இருக்கவில்லை மாற்றமாக பிரச்சினையை தீர்பதற்கு ஏற்பாடு செய்தார்கள். அந்த ஏற்பாட்டையும் செய்ய வேண்டும் துஆவும் கேட்கவேண்டும் அது தான் இஸ்லாம் காட்டும் வழி பள்ளிவாசல் உடைக்கப்படுமேயானல் குனூத் ஓதுவார்கள் அதை தடுப்பதற்குறிய ஏற்பாட்டை செய்யமாட்டார்கள். தங்களுடைய இயக்கத்திற்கு அல்லது வியாபரத்திற்கு பிரச்சினை வரும் போது அதை தீர்ப்பதற்கு ஏற்பாடு செய்கிறார்கள். இது தவறான வழியாகும். நாம் பிரச்சினையை தீர்க்க வழி செய்யவும் வேண்டும் துஆ கேட்கவும் வேண்டும்.

நன்றி - sltj 
0 comments

வேறுநாட்டுக்குச் செல்லும் போது பிறைவித்தியாசம் ஏற்பட்டால்?

சவுதியிலிருந்து ரமலான் மாதம் பாதியில் ஊருக்கு வருபவர் ஊரில் 30 வது நோன்பு அன்று அவருக்கு 31 வது நோன்பு. அவர் அன்று நோன்பை வைக்கலாமா அல்லது ரமலான் நோன்பு 30 மட்டும் தான் வைக்க முடியும் என்று கருத்து இருந்தால் அவர் கடைசி நோன்பைப் பிடிக்காமல் இருக்கலாமா? 

தலைப்பிறையைக் காண்பதில் ஒரு நாள் வித்தியாசம் ஏற்பட்டு சவுதியில் ரமலானை அடைந்து அதன் பிறகு மாத இடையில் ஊருக்கு வந்தவருக்கு இந்தப் பிரச்சனை ஏற்படுகிறது. 

பொதுவாக தொழுகை நோன்பு போன்ற அனைத்து காரியங்களையும் நாம் எந்த ஊரில் இருக்கிறோமோ அந்த ஊரின் நேரக்கணக்கின் அடிப்படையில் தான் அமைக்க வேண்டும். ஒரு ஊரில் இருந்து கொண்டு வேறொரு ஊரின் அல்லது நாட்டின் நேரக்கணக்கைப் பின்பற்ற முடியாது. 

இந்தியாவில் இருந்து கொண்டு சவதி நேரத்துக்கு தொழ முடியாது என்பது போன்று அங்குள்ள நேரக்கணக்கின் அடிப்படையில் இந்தியாவில் நோன்பு நோற்கவோ துறக்கவோ முடியாது. 

எனவே எந்த ஊரில் இருக்கிறோமோ அந்த ஊரின் நேரக் கணக்கின் அடிப்படையில் நம்முடைய தொழுகை நோன்பு போன்ற காரியங்களை அமைத்துக் கொள்ள வேண்டும். 

இதனடிப்படையில் சவுதியிலிருந்து இந்தியா வந்து சோ்ந்த பிறகு இந்தியாவின் நேரக்கணக்கைப் பின்பற்றி அவர் நோன்பு நோற்க வேண்டும். 

அவ்வாறு நடந்து கொள்ளும் போது முப்பத்து ஒன்றாவது நோன்பு வைக்க வேண்டிய நிலை வந்தால் என்ன செய்வது? 

மாதத்தைப் பற்றி இஸ்லாம் கூறும் போதனையை அறிந்து கொண்டால் இந்தப் பிரச்சனைக்கு தீர்வைக் காணலாம். 

ஒரு மாதம் என்பது இருபத்து ஒன்பது நாட்களாகவும் இருக்கும். முப்பது நாட்களாகவும் இருக்கும். முப்பத்து ஒரு நாட்கள் கிடையாது என்று இஸ்லாம் சொல்கிறது. 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : 

மாதம் என்பது இருபத்து ஒன்பது நாட்களாகவும் இருக்கும். முப்பது நாட்களாகவும் இருக்கும். பிறையை நீங்கள் கண்டால் நோன்பு வையுங்கள். அதைப் பார்த்தே நோன்பை விடுங்கள். உங்களுக்கு மேகமூட்டம் குறுக்கிட்டால் எண்ணிக்கையை முழுமைப்படுத்துங்கள். 
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : நஸாயீ (2109) 

ஒரு மாதத்திற்கு அதிக பட்சம் முப்பது நாட்கள் தான். முப்பத்து ஒரு நாட்கள் என்பது கிடையாது என்பதை இந்த நபிமொழியிலிருந்து அறிந்து கொள்ளலாம். 

உங்களில் யார் ரமலான் மாதத்தை அடைவாரோ அவர் நோன்பு நோற்கட்டும் என்ற வசனத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட நபர் சவுதியிலேயே ரமலான் மாதத்தை அடைந்து விட்டதால் அங்கு முதல் நோன்பு வைத்திருக்கிறார். இது சரியான வழிமுறையாகும். 

அதன் பிறகு பாதியில் அல்லது இறுதியில் ஊருக்கு திரும்பி வந்த போது ஊரில் உள்ளவர்களுக்கு முப்பதாவது நோன்பாகவும் இவருக்கு முப்பத்து ஒன்றாகவும் இருந்தால் அந்த நோன்பை அவர் நோற்கக் கூடாது. ஏனெனில் மாதம் என்பது அதிக பட்சம் முப்பது நாட்கள் தான் என்ற நபிமொழி இருப்பதால் அத்துடன் அவருக்கு ரமலான் மாதம் முடிந்து விட்டது. 

எனவே இவர் தனக்கு மாதம் பூர்த்தியான பிறகு நோன்பு நோற்காமல் காத்திருந்து ஊர் மக்கள் பெருநாள் கொண்டாடும் போது இவரும் சேர்ந்து பெருநாள் கொண்டாடுவார்.
நன்றி - onlinepj 
0 comments

தற்கொலை செய்தவருக்கு ஜனாஸா தொழுகை உண்டா? அவருக்காக பாவ மன்னிப்பு தேடலாமா

எனது தகப்பனார் தற்கொலை செய்தல் நிரந்தர நரகத்திற்குரியது என தெரியாமல் தற்கொலை செய்து கொண்டார். தெரியாமல் செய்த தற்கொலைக்கு நரகம் உண்டா? அவருக்கு அல்லாஹ்விடம் மன்னிப்பு உண்டா? அவருக்கு பாவமன்னிப்பு கேட்கலாமா?

பதில் :
ஒரு இறை நம்பிக்கையாளர் தற்கொலை செய்தால் அவருக்கு நிரந்தர நரகமா?
தெரியாமல் செய்த தற்கொலைக்கு மன்னிப்பு உண்டா?
நாம் அவருக்காக பாவமன்னிப்பு கேட்கலாமா?
ஆகிய மூன்று கேள்விகளைக் கேட்டுள்ளீர்கள்.
இவை ஒவ்வொன்றையும் நாம் விரிவாக அறிந்து கொள்ள வேண்டும்.
முதலாவதாக, தற்கொலை செய்து கொண்டவருக்கு பவமன்னிப்பு கேட்கலாமா? என்ற கேள்வியை எடுத்துக் கொள்வோம்.
நம்பிக்கை கொண்டவரை வேண்டுமென்று கொலை செய்பவனது கூலி நரகமே! அதில் அவன் நிரந்தரமாக இருப்பான். அவன் மீது அல்லாஹ் கோபம் கொண்டான். அவனைச் சபித்தான். அவனுக்குக் கடுமையான வேதனையைத் தயாரித்துள்ளான்
அல்குர்-ஆன் 4 : 93.
ஒரு உயிரை வரம்பு மீறி கொலை செய்வது எப்படி குற்றமோ, அதைப் போல ஒருவர் தனது உயிரை தானே மாய்த்துக் கொள்வதும் கொலை செய்வதில் அடங்கும். முஃமினான உயிரை வேண்டுமென்றே கொலை செய்பவருக்கு கூலி நரகம். அதில் அவர் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார் என்று அல்லாஹ் கூறுகிறான். எனவே தற்கொலை செய்தவருக்கு நிரந்தர நரகம் என்று இந்தத் திருக்குர்ஆன் வசனத்தின் வாயிலாக விளங்கிக் கொள்ளலாம். மேலும், இதே எச்சரிக்கையை நபி (ஸல்) அவர்களும்  சொல்லிக் காட்டுகின்றார்கள்.

5778 حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الْوَهَّابِ حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ سُلَيْمَانَ قَالَ سَمِعْتُ ذَكْوَانَ يُحَدِّثُ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ تَرَدَّى مِنْ جَبَلٍ فَقَتَلَ نَفْسَهُ فَهُوَ فِي نَارِ جَهَنَّمَ يَتَرَدَّى فِيهِ خَالِدًا مُخَلَّدًا فِيهَا أَبَدًا وَمَنْ تَحَسَّى سُمًّا فَقَتَلَ نَفْسَهُ فَسُمُّهُ فِي يَدِهِ يَتَحَسَّاهُ فِي نَارِ جَهَنَّمَ خَالِدًا مُخَلَّدًا فِيهَا أَبَدًا وَمَنْ قَتَلَ نَفْسَهُ بِحَدِيدَةٍ فَحَدِيدَتُهُ فِي يَدِهِ يَجَأُ بِهَا فِي بَطْنِهِ فِي نَارِ جَهَنَّمَ خَالِدًا مُخَلَّدًا فِيهَا أَبَدًا رواه البخاري
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
யார் மலையின் மீதிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்கிறாரோ அவர் நரக நெருப்பில் (தள்ளப்பட்டு மேலிருந்து கீழே) என்றைக்கும் நிரந்தரமாக குதித்துக் கொண்டேயிருப்பார். யார் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்கிறாரோ அவர் தமது விஷத்தைக் கையில் வைத்திருந்தபடி நரக நெருப்பில் என்றென்றும் நிரந்தரமாக குடித்துக் கொண்டேயிருப்பார். யார் ஒரு கூரிய ஆயுதத்தால் தற்கொலை செய்து கொள்கிறாரோ அவருடைய கூராயுதத்தை அவர் தமது கையில் வைத்துக் கொண்டு நரக நெருப்பில் தமது வயிற்றில் தாமே என்றென்றும் நிரந்தரமாக அதனால் குத்திக் கொண்டேயிருப்பார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல்: புகாரி (5778)
மேற்கண்ட செய்தியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தற்கொலை செய்தவரைப் பற்றி கூறும் போது,
خَالِدًا مُخَلَّدًا فِيهَا أَبَدًا
என்ற வாசகத்தை பயன் படுத்துகின்றார்கள். ”காலிதன்” என்றாலும் நிரந்தரமாக இருப்பார் என்றே அர்த்தம், ”முகல்லதன்” என்றாலும் அதே பொருளைத் தான் குறிக்கும். ”அபதா” என்ற வாசகமும் அதே பொருளைத் தான் குறிக்கும்.  ”காலிதன், முகல்லதன், அபதா” என்ற இந்தச் சொற்கள், தற்கொலை செய்து கொண்டவர் “என்றென்றும், என்றைக்குமே, நிரந்தரமாக அதில் இருப்பார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதன் மூலம் “நிரந்தரமாக நரகில் கிடப்பார்” என்பதை நபி (ஸல்) அவர்கள் மிகவும் அழுத்தமாகப் பதிய வைக்கின்றார்கள்.
ஒருவர் என்றைக்குமே நிரந்தரமாக நரகத்தில் இருப்பார் என்று அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் கூறுகிறார்கள் என்றால் அவருக்கு மன்னிப்பு வழங்கப்படாது என்பது தான் அதன் பொருள்.
ஒருவருக்கு மன்னிப்பு வழங்கப்பட மாட்டாது என்று இறைவன் கூறிய பிறகு அவருக்கு பாவமன்னிப்பு கோரக்கூடிய “ஜனாஸா தொழுகையை அவருக்கு தொழ வைக்க முடியாது, அவருக்கு தொழவைக்கக் கூடாது” என்பதனால் தான் நபி (ஸல்) அவர்களும் தற்கொலை செய்து கொண்டவருக்கு “ஜனாஸா தொழுகை” தொழ வைக்கவில்லை.
தற்கொலை செய்தவர்களுக்கு ஜனாஸா தொழ வைக்க நபி (ஸல்) அவர்கள் மறுத்துள்ளார்கள். தற்கொலை செய்து கொண்டவர்களுக்கு பாவமன்னிப்பு கோரக் கூடாது என்பது தான் இதற்குக் காரணம்.
 1624حَدَّثَنَا عَوْنُ بْنُ سَلَّامٍ الْكُوفِيُّ أَخْبَرَنَا زُهَيْرٌ عَنْ سِمَاكٍ عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ قَالَ أُتِيَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِرَجُلٍ قَتَلَ نَفْسَهُ بِمَشَاقِصَ فَلَمْ يُصَلِّ عَلَيْهِ رواه مسلم
ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறினார்கள் :
அகலமான அம்பால் தற்கொலை செய்து கொண்ட ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்ட போது, அவருக்காக நபி (ஸல்) அவர்கள் தொழ வைக்கவில்லை.
முஸ்லிம் (1779)
மேலும், நிரந்தர நரகத்தை அல்லாஹ் கூலியாக வழங்குவான் என்று அறிந்த நிலையில் ஒருவர் துணிந்து தற்கொலை செய்வாரேயானால் அவர் நம்பிக்கையாளராக இருக்க முடியாது என்று நபி (ஸல்) அவர்கள் கீழ்க்கண்ட செய்தியின் வாயிலாகத் தெளிவுபடுத்துகின்றார்கள். 
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நாங்கள் கைபர் போரில் கலந்து கொண்டோம். அப்போரின் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்முடன் இருந்தவர்களில், தம்மை முஸ்லிம் என்று சொல்லிக் கொண்ட ஒருவரைப் பற்றி இவர் நரகவாசிகளில் ஒருவர் என்று கூறினார்கள். போரிடும் நேரம் வந்த போது அந்த மனிதர் மிகக் கடுமையாகப் போரிட்டார். அப்போது அவருக்கு நிறைய காயங்கள் ஏற்பட்டு அவரை உட்கார வைத்து விட்டன. அப்போது நபித்தோழர்களில் ஒருவர் வந்து அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் எவரைக் குறித்து அவர் நரகவாசி' என்று சொன்னீர்களோ அவர் இறை வழியில் கடுமையாகப் போரிட்டு அதிகமான காயங்கள் அடைந்துள்ளார் என்று கூறினார். அப்போதும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவர் நரகவாசிகளில் ஒருவர் தாம் என்றே கூறினார்கள். அப்போது முஸ்லிம்களில் சிலர் நபி (ஸல்) அவர்களின் இச்சொல் குறித்து சந்தேகப்படும் அளவுக்குப் போய் விட்டார்கள். நிலைமை இவ்வாறு இருக்கும் போது, அந்த மனிதர் காயத்தின் வேதனையை உணரலானார். உடனே அவர் தமது கையை அம்புக் கூட்டுக்குள் நுழைத்து அதிலிருந்து ஓர் அம்பை உருவி அதன் மூலம் தற்கொலை செய்து கொண்டார். உடனே முஸ்லிம்களில் சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் விரைந்து வந்து அல்லாஹ்வின் தூதரே! தங்களின் அறிவிப்பை அல்லாஹ் உண்மையாக்கி விட்டான். இன்ன மனிதர் தற்கொலை செய்து தம்மை மாய்த்துக் கொண்டார் (அதனால் அவர் நரகவாசிகளில் ஒருவராகி விட்டார்) என்று கூறினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிலாலே! எழுந்து சென்று இறை நம்பிக்கையாளர் தவிர வேறெவரும் சொர்க்கத்தில் நுழைய முடியாது. மேலும், அல்லாஹ் இந்த மார்க்கத்திற்குப் பாவியான மனிதனின் மூலமாகவும் வலுவூட்டுகின்றான்' என்று (மக்களிடையே) அறிவிப்புச் செய்யுங்கள் என்று கூறினார்கள்.
நூல் புஹாரி 6606
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
இறை நம்பிக்கையாளர் தவிர வேறெவரும் சொர்க்கத்தில் நுழைய முடியாது” என்றும், இவர் நரகவாசி என்றும்  அறிவித்ததன்  மூலம் “தற்கொலை செய்து கொண்டவர் இறை நம்பிக்கையாளரே அல்ல என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்துகிறார்கள்.
”நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தான் தொழ வைக்கவில்லை; நாம் தொழவைத்தால் தவறில்லை” என்று சிலர் இதற்கு விளக்கம் அளித்துள்ளனர். அவர்கள் கீழ்க்கண்ட செய்தியை ஆதாரமாகக் காட்டுகின்றனர்.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
கடன் உள்ள நிலையில் இறந்து விட்ட ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்படுவார். அப்போது "தம் மீதுள்ள கடனை அடைக்க ஏதேனும் அவர் ஏற்பாடு செய்துள்ளாரா?'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்பார்கள். அவர் அத்தகைய ஏற்பாடுகளைச் செய்து விட்டுச் சென்றிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டால், அவருக்கு (ஜனாஸாத் தொழுகை) தொழுவிப்பார்கள். அவ்வாறில்லை எனில், (முஸ்லிம்களிடம்) "உங்கள் தோழருக்கு நீங்களே தொழுதுகொள்ளுங்கள்'' என்று கூறி விடுவார்கள். பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் பல வெற்றிகளை அளித்(து மதீனா அரசில் நிதி குவிந்)த போது, "இறை நம்பிக்கையாளர்களுக்கு, அவர்களின் உயிர்களை விட நானே நெருக்கமான (உரிமையுடைய)வன் ஆவேன். ஆகவே, யார் தம் மீது கடன் இருக்கும் நிலையில் (அதை அடைப்பதற்காக ஒன்றையும் விட்டுச் செல்லாமல்) இறந்து விடுகிறாரோ, அந்தக் கடனை அடைப்பது எனது பொறுப்பாகும். யார் இறக்கும் போது செல்வத்தை விட்டுச் சென்றுள்ளாரோ, அது அவருடைய வாரிசுகளுக்கு உரியதாகும்'' என்று கூறுவார்கள். 
(ஆதாரம் : முஸ்லிம் 3309)
கடனாளியாக மரணித்த ஒருவருக்கு எப்படி நபி (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தாமல், "உங்கள் தோழருக்கு நீங்களே தொழுது கொள்ளுங்கள்'' என்று சொன்னார்களோ அதைப் போல, தற்கொலை செய்து கொண்டவருக்கும் நபியவர்கள் தொழுகை நடத்த மறுத்தார்களே தவிர, நாம் தொழவைப்பதற்கு நபியவர்கள் தடை போடவில்லை என்பது தான் அவர்களின் வாதம். ஆனால் இந்த வாதம் பல வகையில் தவறான வாதமாகும்.

நபிதான் முன் மாதிரி:

அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி, அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறது     
அல்குர்ஆன் 33: 21
நாம் ஒரு வணக்க வழிபாட்டைச் செய்வதாக இருந்தால் அதற்கு அல்லாஹ்வுடைய தூதர் தான் அழகிய முன்மாதிரி.
என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். 
ஆதாரம் : புகாரி : 6608
கடன் வைத்த நிலையில் மரணித்த ஒருவருக்கு, "உங்கள் தோழருக்கு நீங்களே தொழுது கொள்ளுங்கள்'' கூறி பிறர் தொழுகை நடத்திய முன்மாதிரியைப் போல, தற்கொலை செய்தவருக்கும், "உங்கள் தோழருக்கு நீங்களே தொழுது கொள்ளுங்கள்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிக் காட்டிய முன்மாதிரி இருக்க வேண்டும். அவ்வாறு நபிகள் நாயகம் (ஸல்) கூறியிருக்காவிட்டால், அவர்கள் தொழ வைக்க மறுத்தவருக்கு, நாம் தொழுகை நடத்துவது என்பது அதிகப்பிரசங்கித் தனமாக ஆகிவிடும்.
“என்னை பொறுத்த வரை நான் தொழுகை நடத்த மாட்டேன்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக ஒரு செய்தி “நஸாயீ” என்ற கிரந்தத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
أخبرنا إسحق بن منصور قال أنبأنا أبو الوليد قال حدثنا أبو خيثمة زهير قال حدثنا سماك عن ابن سمرة أن رجلا قتل نفسه بمشاقص فقال رسول الله صلى الله عليه وسلم أما أنا فلا أصلي عليه
என்னைப் பொருத்தவரை தொழுவிக்க மாட்டேன் என்ற சொல்லமைப்பு மற்றவர்களுக்கு இல்லை என்ற கருத்தைத் தரும் என்று சிலர் இதை ஆதாரமாகக் கொண்டு வாதிடுகின்றனர்.
பொதுவாக மனிதர்களின் பேச்சுக்களுக்கு இவர்கள் கூறுவது போன்ற பொருள் உண்டு என்பது உண்மை தான். ஆனால் அல்லாஹ்வின் தூதர் அவர்கள் வணக்க வழிபாடுகள் குறித்து இவ்வாறு கூறும் போது இப்படி பொருள் கொள்ள முடியாது.  அல்லாஹ்வின் தூதரைப் பொருத்து ஒன்றைச் செய்யக் கூடாது என்றால் மற்றவர்களும் செய்யக் கூடாது என்று தான் பொருள்.
என்னைப் பொருத்தவரை நான் பொய் சொல்ல மாட்டேன் என்று அல்லாஹ்வின் தூதர் கூறினால் அவர்களை முன்மதிரியாகக் கொண்ட அனைவரும் பொய் சொல்லக் கூடாது என்று தான் புரிந்து கொள்ள வேண்டும்.
இதே வாசக அமைப்போடு, மற்றொரு செய்தியினை நபிகளார் கூறிக்காட்டியுள்ளார்கள்.
முஸ்லிம்களின் அனைத்துக் காரியங்களுக்கும் முன்மாதிரியாகத் திகழ்ந்த நபிகள் நாயகம் ஸல் அவர்கள் தொழுகைக்கு குறிப்பாக முன்மாதிரியாக உள்ளனர்.
என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறு நீங்களும் தொழுங்கள் என்பது அவர்களின் கட்டளை.
இதில் இருந்து விதிவிலக்கு அளிப்பது என்றால் உங்கள் தோழருக்கு நீங்கள் தொழுவித்துக் கொள்ளுங்கள் என்று கூறியது போல் தெளிவாக அறிவித்திருப்பார்கள்.
மேலும் போரில் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட ஹதீஸை முன்னர் குறிப்பிட்டுள்ளோம். நரகவாசி என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் முன் அறிவிப்புச் செய்த போது அவர் தற்கொலை செய்து கொண்டதைப் பார்த்து அவர் நரகவாசி என்று நபித்தோழர்கள் புரிந்து கொண்டார்கள் என்பது தெரிகிறது. அதாவது தற்கொலை செய்தவர் நரகவாசி என்பது நபித்தோழர்கள் அனைவரும் அறிந்து வைத்திருந்த ஒரு சட்டமாக இருந்தது என்பதை இதில் இருந்து அறியலாம். அப்படி இருக்கும் போது நபித்தோழர்கள் தற்கொலை செய்தவருக்கு ஜனாஸா தொழுகை தொழ வைத்திருப்பார்கள் என்று கூற முடியாது.
மேலும் நிரந்தர நரகம் என்று தீர்ப்பளிக்கப்பட்டவருக்கு ஜனாஸா தொழுகை தொழாமல் இருந்திருப்பார்கள் என்பது பொருத்தமாக உள்ளது. எனவே மேற்கண்ட ஆதாரங்களின் அடிப்படையில் “இறந்தவருக்கு ஜனாஸா தொழுகை நடத்துவது தடை செய்யப்பட்ட காரியங்களில் ஒன்று என்பதை தெள்ளத் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்
தற்கொலை செய்து கொண்டு மரணித்தவருக்கு ஜனாஸா தொழுகை நடத்துவது மார்க்க அடிப்படையில் தடுக்கப்பட்ட ஒரு காரியம் என்பதனை மேற்கண்ட குர்ஆன் மற்றும் நபிமொழிகளின் ஆதாரங்கள் அடிப்படையில் அறிந்து கொண்டோம்.
தற்கொலை செய்தவருக்கு நிரந்தர நரகம் என்று கடுமையாக வலியுறுத்தப்பட்டைருப்பதும், நபிகள் நாயகம் ஸல் அவர்கள் ஜனாஸா தொழுவிக்க மறுத்திருப்பதும் அவருக்காக நாம்இறைவனிடத்தில் பாவமன்னிப்பு கோரக் கூடாது என்பதை உள்ளடக்கியுள்ளது. ஒருவர் இறைவனால் மன்னிக்கப்படுவார் என்றால் அவர் நிரந்தரமாக நரகில் கிடக்க மாட்டார். நிரந்தரமாக நரகில் கிடப்பார் என்று அவருக்கு மன்னிப்பு இல்லை என்பது தான் அதன் கருத்தாகும்.
அல்லாஹ் யாருக்கு மன்னிப்பு இல்லை என்று தீர்மானம் செய்து விட்டானோ அவருக்காக மன்னிப்புக் கேட்பது அல்லாஹ்வுக்கு எதிரான நடவடிக்கையாகி விடும்.

நிரந்தர நரகத்திற்குரிய பாவங்கள்:

திருமறையில் இறைவன் சில குறிப்பிட்ட பாவங்களுக்கு நிரந்தர நரகம் என்று கூறியுள்ளான். அந்தப் பாவங்களைச் செய்த நிலையில் மரணித்தவருக்காக நாம் பாவமன்னிப்பு கோரக் கூடாது என்பதனையும் நாம் கூடுதலாக இந்த இடத்தில் விளங்கிக் கொள்ள வேண்டும்.
நிரந்தர நரகத்திற்குரிய பாவங்களாக குர்ஆன் குறிப்பிடுபவை:
என்றென்றும் நரகில் கிடப்போர் பட்டியல்:
இறைனை நம்ப மறுத்தவர்கள் - 2:39, 2:161,162, 2:217, 2:257, 3:116, 4:169, 9:68, 33:65, 39:72, 40:76, 41:28, 59:16, 64:10, 98:6
ஒரு நன்மையும் செய்யாது தீமைகளை மட்டுமே செய்தவர்கள் - 2:81, 10:27, 16:29, 43:74
ஏக இறைவனை ஏற்று பிறகு மறுத்தவர்கள் - 3:88
அல்லாஹ்வுக்கும், தூதருக்கும் மாறு செய்து அவனது வரம்புகள் அனைத்தையும் மீறியவர்கள் -4:14, 5:80, 72:23
சத்தியம் செய்வதைக் கேடயமாக்கி அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுத்தோர் - 58:16
இறை வசனங்களை நம்ப மறுத்துப் புறக்கணித்தவர்கள் - 7:36, 20:100, 23:103
இறைவனுக்கு இணை கற்பித்தவர்கள் - 6:128, 9:17, 25:68, 40:76, 98:6
அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் எதிராகப் போரிடுவோர் - 9:63
இரட்டை வேடம் போடும் நயவஞ்சகர்கள் - 9:68
மறுமையை நம்பாதவர்கள் - 10:52, 13:5, 22:14
வட்டி வாங்கியவர்கள் - 2:275
கொலை செய்தவர்கள் - 4:9
மேற்கண்ட பட்டியலை நாம் ஆய்வு செய்தால் ஏக இறைவனை நம்ப மறுத்த இறை நிராகரிப்பாளர்கள் மற்றும் இறைவனுக்கு இணை கற்பித்த இணை வைப்பாளர்களைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால், வட்டி வாங்கியோர் மற்றும் முஃமினான உயிரை வேண்டுமென்றே கொலை செய்தவர் ஆகிய இருசாரார் முஸ்லிம்களாக தங்களைச் சொல்லிக் கொண்டாலும் அவர்கள் இறை நம்பிக்கையாளர் அல்ல. அவருக்கு நிரந்தர நரகம் என்று கூறப்படுவதை அறியலாம்.

நிரந்தர நரகம் என்பதன் பொருள் என்ன?

யாருக்கு மன்னிப்பு வழங்கப்படமாட்டாது என்று இறைவன் தனது முடிவை அறிவித்துவிட்டானோ அவருக்கு நீ மன்னிப்பு வழங்கு என்று நாம் இறைவனை நிர்பந்தப்படுத்துவது என்பது அதிகப்பிரசங்கித்தனமாக ஆகிவிடும். எனவே இந்த பாவத்திலிருந்து நாம் விலகிக் கொள்ள வேண்டும்.
அல்லாஹ்வுடைய தண்டணைகளில் ஒன்றைக் குறைக்குமாறு இறைவன் முடிவெடுத்த ஒருவருடைய விஷயத்தில் அவருக்காகப் பரிந்து பேசுவதை நபி (ஸல்) அவர்கள் வனமையாகக் கண்டித்துள்ளார்கள். இதற்கு முன்பிருந்த சமுதாயங்கள் அழிக்கப்பட்டதற்கு ஒரு காரணமாக இதையும் நபி (ஸல்) அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளார்கள்
(மக்கா வெற்றியின் போது) மக்ஸூமீ குலத்துப் பெண் ஒருத்தி (ஃபாத்திமா பின்த் அல் அஸ்வத்) திருட்டுக் குற்றம் செய்திருந்தார். அவர் விஷயமாக குறைஷிகள் மிகவும் கவலைக்குள்ளாயினர். அவர் விஷயமாக அல்லாஹ்வின் தூதரிடம் யார் பேசுவார்கள்? என்று தமக்குள் பேசிக் கொண்டனர். அவர்களில் சிலர், அல்லாஹ்வின் தூதருடைய செல்லப் பிள்ளையான உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்களைத் தவிர இதற்கு யாருக்குத் துணிவு வரும்? என்று கூறினர். (உஸாமா (ரலி) அவர்களிடம் பரிந்துரை செய்யும்படி அவர்கள் கேட்டுக் கொள்ள, அவ்வாறே) உஸாமா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் (அவர் விஷயமாகப்) பேசினார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அல்லாஹ்வின் தண்டனைகளில் ஒரு தண்டனையின் விஷயத்திலா (அதைத் தளர்த்தும்படி என்னிடம்) நீ பரிந்துரை செய்கிறாய் என்று (கோபத்துடன்) கேட்டுவிட்டு,பிறகு எழுந்து நின்று உரை நிகழ்த்தினார்கள். பிறகு (அவ்வுரையில்), உங்களுக்கு முன்னிருந்தவர்கள், அழிக்கப்பட்டதெல்லாம் அவர்களில் உயர் குலத்தவன் திருடிவிட்டால் அவர்கள் அவனை (தண்டிக்காமல்) விட்டு வந்தார்கள்; அவர்களில் பலவீனமான (பிரிவைச் சேர்ந்த)வன் திருடி விட்டால் அவனுக்கு தண்டனையளித்து வந்தார்கள் என்பதால் தான். அல்லாஹ்வின் மீதாணையாக! முஹம்மதின் மகள் ஃபாத்திமா திருடி விட்டிருந்தாலும் அவரது கையையும் நான் துண்டித்திருப்பேன் என்று சொன்னார்கள்
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி
ஆதாரம் : புகாரி: 3475
அல்லாஹ்வின் தண்டனைகளில் ஒரு தண்டனையின் விஷயத்திலா (அதைத் தளர்த்தும்படி என்னிடம்) நீ பரிந்துரை செய்கிறாய் என்று நபிகள் நாயகம் அவர்கள் கேட்டதிலிருந்து, உலகவிஷயத்தில் தரப்படும் தண்டணைகளில் தளர்த்துமாறு கோருவதே கூடாது என்றால் மறுமையில் குற்றவாளிகளுக்காக நாம் கேட்பது என்பது மிகவும் கண்டிக்கத்தக்க ஒரு விஷயம் என்பதையும் கூடுதலாக நாம் அறியலாம்.
தற்கொலை செய்தால் நிரந்தர நரகம் என்பதை விளங்காமல் தற்கொலை செய்தவருக்கு பாவமன்னிப்பு கோரலாமா? என்ற கேள்வியை அடுத்ததாக எழுப்பியுள்ளீர்கள்.
எங்களுக்கு இதைப் பற்றி முன்பே தெரிவிக்கப்பட்டிருந்தால் நாங்கள் நல்லவர்களாக இருந்திருப்போம் என்ற வாதத்தைத் தான் குற்றவாளிகள் மறுமையில் வைப்பார்கள் என்று இறைவன் சுட்டிக் காட்டுகின்றான். எனவே தான் நாம் வேதங்களையும், தூதர்களையும் அனுப்பி வைத்ததாக இறைவன் கூறுகின்றான்.
எனவே அல்லாஹ்வுடைய வழிகாட்டுதலையும், தூதருடைய வழிகாட்டுதல்களையும் அரிந்து கொள்வது ஒவ்வொருவர் மீது கடமையாக உள்ளது.
மறுமையில், நரகவாசிகளை வேதனை செய்யும் போது அவர்களை நோக்கி பின்வருமாறு கேட்கப்படும்,
கோபத்தால் அது (நரகம்) வெடித்து விட முற்படும். ஒவ்வொரு கூட்டத்தினரும் அதில் போடப்படும் போதெல்லாம் ''எச்சரிக்கை செய்பவர் உங்களிடம் வரவில்லையா?'' என்று அதன் காவலர்கள் அவர்களைக் கேட்பார்கள்.
அல்குர்ஆன் 67:8
மேற்கண்ட கேள்விக்கு நரகவாசிகள் என்ன பதில் சொல்லுவார்கள் என்பதையும் வல்ல இறைவன் அதைத் தொடர்ந்து சொல்லிக் காட்டுகின்றான்.

நாங்கள் செவிமடுத்திருந்தாலோ, விளங்கியிருந்தாலோ நரகவாசிகளில் ஆகியிருக்க மாட்டோம் எனவும் கூறுவார்கள்.
அல்குர்ஆன் 67: 10
நாங்கள் தூதர்கள் கூறுவதைச் செவிமடுத்திருந்தாலோ, அல்லது விளங்கியிருந்தாலோ இதிலிருந்து தப்பித்திருப்போம் என்பது தான் அவர்களுடைய பதிலாக இருக்கும். அந்த இடத்தில் எனக்குத் தெரியாது, நான் தெரியாமல் செய்து விட்டேன் என்ற எந்த சாக்குப் போக்கையும் இறைவன் ஏற்றுக் கொள்ள மாட்டான்.
அத்தோடு மட்டுமல்லாமல், விதியை நம்புவது என்பது ஈமானின் அம்சங்களில் ஒன்றாக இருக்கும் நிலையில், விதியை மறுத்தவராக இந்த தற்கொலை முடிவை ஒருவர் எடுப்பதும் இறைவனுடைய தீர்ப்பை மறுக்கக் கூடிய, இறைவனுக்கு எதிராக போர்க்கொடி தூக்கக்கூடிய ஒரு நிலையாகும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
தற்கொலை செய்து கொண்டவர் “முஃமின்களுடைய பட்டியலில் வர மாட்டார்” என்பதை இந்த கேள்விக்குரிய ஆரம்பத்திலேயே சுட்டிக் காட்டியுள்ளோம்.
தற்கொலை செய்தவருக்கு ஜனாஸா தொழுகை நடத்தப்படாவிட்டால் தான் தற்கொலை செய்ய மாட்டார்கள் என்பதை மக்களுக்கு எச்சரிப்பதற்காக நபிகள் நாயகம் ஸல் அவர்கள் தொழுவிக்காமல் இருந்திருப்பார்கள் என்று சிலர் காரணம் கூறி தற்கொலை செய்தவருக்கு ஜனாஸா தொழுகை நடத்தலாம் எனக் கூறுகின்றனர்.
அது வெறும் ஊகம் தான். உண்மை என்று வைத்துக் கொண்டாலும் நாம் ஜனாஸா தொழுகை நடத்தாமல் இருந்தால் தான் நபிகள் நாயகத்தின் நோக்கம் நிறைவேறும். தற்கொலை செய்தவருக்கு ஜனாஸா தொழுகை நடத்தலாம் என்று முடிவு செய்தால் தற்கொலை செய்ய அஞ்சும் நிலை ஏற்படாது. எனவே இவர்கள் கூறும் நோக்கத்துக்காக நபிகள் நாயகம் ஸல் அவர்கள் ஜனாஸா தொழுகையை தவிர்த்திருந்தாலும் அதே காரணத்துக்காக நாமும் அவ்வாறு நடந்து கொள்வதே முறையாகும்.
தற்கொலை செய்தவருக்கு பாவமன்னிப்பு தேடலாம் என்பதற்கு கீழ்க்காணும் ஹதீசை சிலர் ஆதாரமாகக் காட்டுகின்றனர்.
167 حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ جَمِيعًا عَنْ سُلَيْمَانَ قَالَ أَبُو بَكْرٍ حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ عَنْ حَجَّاجٍ الصَّوَّافِ عَنْ أَبِي الزُّبَيْرِ عَنْ جَابِرٍ أَنَّ الطُّفَيْلَ بْنَ عَمْرٍو الدَّوْسِيَّ أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ هَلْ لَكَ فِي حِصْنٍ حَصِينٍ وَمَنْعَةٍ قَالَ حِصْنٌ كَانَ لِدَوْسٍ فِي الْجَاهِلِيَّةِ فَأَبَى ذَلِكَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِلَّذِي ذَخَرَ اللَّهُ لِلْأَنْصَارِ فَلَمَّا هَاجَرَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى الْمَدِينَةِ هَاجَرَ إِلَيْهِ الطُّفَيْلُ بْنُ عَمْرٍو وَهَاجَرَ مَعَهُ رَجُلٌ مِنْ قَوْمِهِ فَاجْتَوَوْا الْمَدِينَةَ فَمَرِضَ فَجَزِعَ فَأَخَذَ مَشَاقِصَ لَهُ فَقَطَعَ بِهَا بَرَاجِمَهُ فَشَخَبَتْ يَدَاهُ حَتَّى مَاتَ فَرَآهُ الطُّفَيْلُ بْنُ عَمْرٍو فِي مَنَامِهِ فَرَآهُ وَهَيْئَتُهُ حَسَنَةٌ وَرَآهُ مُغَطِّيًا يَدَيْهِ فَقَالَ لَهُ مَا صَنَعَ بِكَ رَبُّكَ فَقَالَ غَفَرَ لِي بِهِجْرَتِي إِلَى نَبِيِّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ مَا لِي أَرَاكَ مُغَطِّيًا يَدَيْكَ قَالَ قِيلَ لِي لَنْ نُصْلِحَ مِنْكَ مَا أَفْسَدْتَ فَقَصَّهَا الطُّفَيْلُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اللَّهُمَّ وَلِيَدَيْهِ فَاغْفِرْ رواه مسلم
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்கள் :
அறியாமைக் காலத்தில் தவ்ஸ் குலத்தாருக்குக் கோட்டை ஒன்றிருந்தது. தவ்ஸ் குலத்தைச் சேர்ந்த துஃபைல் பின் அம்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! (தாங்கள் ஹிஜ்ரத் செய்யும் போது எதிரிகளிடமிருந்து உங்களைத்) தற்காத்துக் கொள்ள உறுதியான கோட்டை கொத்தளம் தங்களுக்கு வேண்டுமா? (அத்தகைய கோட்டை தவ்ஸ் குலத்தாரின் வசிப்பிடத்தில் உள்ளது)'' என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் அதற்கு இணங்கவில்லை. (அந்த வாய்ப்பை மதீனாவாசிகளான) அன்சாரிகளுக்கென அல்லாஹ் வழங்கியிருந்ததே அதற்குக் காரணமாகும். நபி (ஸல்) அவர்கள் நாடு துறந்து மதீனாவுக்கு (ஹிஜ்ரத்) சென்ற போது நபி (ஸல்) அவர்களிடம் துஃபைல் பின் அம்ர் (ரலி) அவர்களும் நாடு துறந்து (ஹிஜ்ரத்) சென்றார்கள். துஃபைல் (ரலி) அவர்களுடன் அவர்களுடைய சமூகத்தைச் சேர்ந்த ஒரு மனிதரும் நாடு துறந்து சென்றார். (அவர்கள் மதீனாவிற்குச் சென்ற போது) மதீனாவின் தட்ப வெப்ப நிலை அவர்களுக்கு ஒத்துக் கொள்ளவில்லை. அந்த மனிதர் நோய்வாய்ப்பட்டு விட்டார். (நோயின் வேதனை பொறுக்க முடியாமல்) பதறிப் போன அந்த மனிதர் தம்முடைய பெரிய அம்புகளை எடுத்துத் தமது கை நாடியை அறுத்துக் கொண்டார். கைகளிலிருந்து இரத்தம் கொட்டியது. இறுதியில் அவர் இறந்து விட்டார். அவரைத் துஃபைல் பின் அம்ர் (ரலி) அவர்கள் கனவில் கண்டார்கள்.  அவர் நல்ல நிலையில் தான் இருந்தார். ஆனால், அவருடைய இரு கைகளும் போர்த்தி மூடப்பட்டு இருப்பதைக் கண்டார்கள். அவரிடம், "உம்மிடம் உம்முடைய இறைவன் எவ்வாறு நடந்து கொண்டான்?'' என்று கேட்டார்கள். அதற்கு அந்த மனிதர், "நான் நபி (ஸல்) அவர்களிடம் நாடு துறந்து (ஹிஜ்ரத்) வந்ததால் அல்லாஹ் எனக்கு மன்னிப்பு அளித்தான்'' என்று பதிலளித்தார். துஃபைல் (ரலி) அவர்கள், "ஏன் உம்மிரு கைகளும் போர்த்தி மூடப்பட்டிருக்கின்றன?'' என்று கேட்டார்கள். "நீ வீணாக்கிய உனது கையை நாம் சீராக்க மாட்டோம்'' என்று (இறைவனின் தரப்பிலிருந்து) என்னிடம் கூறப்பட்டது'' என்று அவர் சொன்னார்.
துஃபைல் (ரலி) அவர்கள் இக்கனவு பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் எடுத்துரைத்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இறைவா! அவருடைய இரு கைகளுக்கும் மன்னிப்பு அளிப்பாயாக!'' என்று பிரார்த்தித்தார்கள்.
முஸ்லிம் (184)
இந்த ஹதீஸை நாம் முன்னர் எடுத்துக் காட்டிய ஆதாரங்களுக்கு முரண்படாத வகையில் தான் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த ஹதீஸில் நோய்வாய்ப்பட்ட அந்த மனிதர் தற்கொலை செய்து கொள்ளவில்லை. வேதனை பொறுக்க முடியாமல் அவர் தனது கையைத் தான் வெட்டிக் கொண்டார். அதனால் பொதுவாக ஒருவர் சாக மாட்டார். ஆனால் அவரே எதிர்பார்க்காத வகையில் அவர் இறந்து விட்டார். இதனால் தான் அவருக்கு நிரந்தர நரகத்தை அல்லாஹ் கொடுக்காமல் கையை வெட்டிக் கொண்டதற்காகவே  "நீ வீணாக்கிய உனது கையை நாம் சீராக்க மாட்டோம்'' என்று பதிலளிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
வேதனை பொறுக்க முடியாமல் ஒருவர் தன் தலையை சுவற்றில் முட்டுகிறார். இதனால் இவர் இற்ந்து விட்டால் இது தற்கொலையில் சேராது. ஏனெனில் தற்கொலை செய்வதற்குத் தகுந்த காரியத்தை அவர் செய்யவில்லை, தற்கொலை செய்வதும் அவரது எண்ணம் இல்லை. இது போல் தான் அந்த நபித்தோழர் நடந்திருக்க வேண்டும். கை மட்டும் சீராக்கப்படவில்லை என்ற செய்தியிலிருந்து இதை அறியலாம்.
தன்னை வேதனைப் படுத்திக் கொள்ளும் வகையில் உயிரை மாய்க்காத ஒரு காரியத்தை ஒருவர் செய்து அதனால் அவர் மரணித்து விட்டால் அது தற்கொலையாகாது என்பது தால் இதில் இருந்து தெரிய வரும் உண்மையாகும்.
நன்றி - onlinepj 
0 comments

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger