இடர்கால குனூத் ஓதலாமா?


சமூகத்திற்கு எதாவது பிரச்சினை ஏற்பாடும் போது தொழுகையில் குனூத் ஓதலாமா?
சமூகத்திற்கு ஆதரவாகவே எதிராகவே பிரார;த்திக்க நாடினால் குனூத் ஓதுவது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட காரியம் தான். அல்லாஹ்வின் தூதர் அவர்கள் இதற்கு வழிகாட்டி உள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தொழுகையில்) எவருக்கேனும் எதிராகவோ, ஆதரவாகவோ பிரார்த்திக்க விரும்பினால் ருகூவுக்குப் பிறகு ”குனூத்’ (எனும் சிறப்பு துஆ) ஓதுவார்கள்.
(ஆதாரம்: புகாரி 4560)
அது மட்டுமல்லாமல் குர;ஆனை மனனம் செய்த சுமார் 70 நபர்களை இணைவைப்பாளர்களால் கொள்ளப்பட்ட காரணத்தால் அல்லாஹ்வின் தூதர் (ஸல) அவர்கள் ஒரு மாத காலம் சம்பந்தப்பட்ட கூட்டத்திற்கு எதிராக அல்லாஹ்வின் தூதர் குனூத் ஓதினார்கள்
நபி (ஸல்) அவர்கள் திருக்குர்ஆன் அறிஞர்கள் என்றழைக்கப்பட்டுவந்த சுமார் எழுபது பேரை இணைவைப்பவர்களில் ஒரு கூட்டத்தாரிடம் அனுப்பிவைத்தார்கள். இவர்கள் அந்த இணை வைப்பவர்களைவிட மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே இருந்தனர். அவர்களுக்கும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கும் இடையே (பரஸ்பரப் பாதுகாப்பு) ஒப்பந்தம் ஏற்பட்டிருந்தது. (இவ்வாறிருக்க அவர்கள் எழுபது பேரையும் அந்த இணைவைப்பாளர்கள் கொன்றுவிட்டனர்.) எனவேதான் அவர்களுக்கெதிராகப் பிரார்த்தித்தபடி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குனூத் (இடர்காலப் பிரார்த்தனை) ஓதினார்கள்.
(ஆதாரம்: புகாரி 1002)
எனவே நாமும் நமக்கு தேவைப்படும் போது அவ்வாறு குனூத் ஓதலாம்.
இனவாத சூழலில் நமது நாட்டில் தொழுகையில் ஓதப்பட்ட குனூத் சரியானது தானா?
தற்போது குனூத் ஓதவேண்டும் என்று கருதினால் தாராளமாக ஓதமுடியும் ஆனால் தற்போது ஓதப்படுவது அல்லாஹும்ம அஹ்தினி பீமன் ஹதைத் என்று ஆரம்பிக்கப்டும் துஆ ஆகும். இது வித்ர்தொழுகையில் ஓதுவதற்கு கற்றுத் தந்த துஆவாகும். இதற்கும் தற்போதைய பிரச்சினைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எது பிரச்சினையோ அதைத்தான் கேட்கவேண்டும். அல்லாஹ்வின் தூதர்அவர்கள் அல்லாஹும்ம அஹ்தினி என்ற துஆவை ஓதவில்லை என்பதை விளங்கிக் கொள்ளவேண்டும்.
குனூத் என்றாலே அல்லாஹும்ம அஹ்தினி என்று ஆகிவிட்டது. குனூத் என்ற வார்த்தைக்கு துஆ கேட்டல் என்று தான் பொருளே தவிர அல்லாஹும்ம அஹ்தினி ஓதுவது என்று பொருள் அல்ல.
அல்லாஹும்ம அஹ்தினி ஓதும் தொழுகையில் நாம் கலந்து கொள்ளலாமா?
அல்லாஹ}ம்ம அஹ்தினி ஓதுவது என்பது தவறான ஒரு காரியம் என்பதால் அந்த தொழுகையில் நாம் கலந்து கொள்ளக் கூடாது. அவர்கள் அந்த துஆ கேட்கும் போது நாமும் ஒரு பித்ஆத்தான செயல் செய்யவேண்டிய ஒரு நிலை ஏற்படுகிறது. சிலர் கைகளைத் தூக்காமல் இருக்கலாம் என்று கருதுகிறார்கள். ஆனால் அதுவும் கூடாது ஏன் என்றால் கைகளை தூக்குவது என்பதே பித்ஆத்தாகும். கைகளைத் தூக்காமல் தான் இந்த துஆவை கேட்க வேண்டும். எனவே கைகளை தூக்காமல் இருந்தாலும் இப்படி தவரான ஒரு துஆ ஓதும் போது அமைதியாக கைகளை விட்டுவிட்டு இருப்பதற்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லை.
இடர்கால குனூத் ஓதும் போது ஆமீன் சொல்லலாமா?
இடர்கால குனூத் ஒதும் போது தாராளமாக ஆமின் சொல்லமுடியும் அல்லாஹும்ம அஹ்தினி என்ற குனூத்திற்கு அல்ல. காரணம் அல்லாஹ்வின் தூதரவர்கள் இவ்வாறு குனூத் ஓதும் போது பின்னால் உள்ளவர்கள் ஆமீன் கூறியுள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் லுஹர், அஸர், மக்ரிப், சுப்ஹ் ஆகிய அனைத்து தொழுகைக்குப் பிறகும் தொடர்ந்து ஒரு மாத காலம் குனூத் ஓதினார்கள். இரண்டாவது ரக்அத்தில் ஸமியல்லாஹுலிமன் ஹமிதா என்று அவர்கள் சொல்லும் போது பனூ சுலைம் கிளையினரைச் சார்ந்த ரிஃல், தக்வான் உஸைய்யா ஆகிய கிளையினருக்கு எதிராகப் பிரார்த்தனை செய்வார்கள். அவர்களுக்குப் பின்னால் உள்ளவர்கள் ஆமீன் சொல்வார்கள்.
(ஆதாரம்: அபூதாவூத் 1231,அஹ்மத் 2610)
இந்த குனூத்தை 3:128 வது வசனம் தடை செய்து விட்டதா?
மக்கள் மத்தியில் இவ்வாரான ஒரு கருத்தும் பரவாலாக இருக்கிறது. காரணம் அந்த கருத்தில் ஒரு செய்தி புகாரியில் இருக்கிறது..
நபி (ஸல்) அவர்கள் ஃபஜ்ருத் தொழுகையில் கடைசி ரக்அத்தின் போது தமது தலையை ருகூஉவிலிருந்து உயர்த்தி, ”அல்லாஹும்ம ரப்பனா வலக்கல் ஹம்து” (இறைவா! எங்கள் அதிபதியே! உனக்கே புகழனைத்தும்) என்று சொல்லிவிட்டுப் பிறகு, ”இறைவா! இன்னாரையும் இன்னாரையும் உன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள். உடனே கண்ணியமும் மகத்துவமும் பொருந்திய அல்லாஹ், ”அவர்களை அல்லாஹ் மன்னிக்கும் வரை, அல்லது அவர்கள் அக்கிரமக்காரர்களாக இருப்பதால் அவனே அவர்களை வேதனை செய்யும்வரை (அவர்களுக்குத் தண்டனை வழங்குமாறு கூற, நபியே!) உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை” எனும் (3: 128ஆவது) வசனத்தை இறக்கினான்.
(ஆதாரம்: புகாரி 7346)
இப்படி ஒரு செய்தி இருந்தாலும் 3:128வது வசனம் உஹத் யுத்தத்தின் போது; அருளப்பட்டது என்று முஸ்லிம் 1791 இல் பதிவு செய்யப்பட்டிருக்கும் செய்தி தான் ஏற்புடையதாக இருக்கிறது. மேலும் குனூத் பற்றி தான் இவ்வசனம் அருளப்பட்டது என்று ஹாப் எனும் ஸுஹ்ரி வழியாகவே அறிவிக்கப்படுகிறது. அவர் நபித்தோழரிடம் கேட்டு அறிவிப்பது போல் புகாரியின் வாசக அமைப்பு இருந்தாலும், முஸ்லிமில் இடம் பெற்றுள்ள இதே ஹதீஸின் வாசக அமைப்பு ஸுஹ்ரி அவர்கள் நபித்தோழர்கள் வழியாக இல்லாமல் சுயமாக அறிவிக்கின்றார் என்று தெளிவுபடுத்துகின்றது. ’’நபி(ஸல்)அவர்கள் மேற்கண்ட கொலையாளிகளைச் சபித்து குனூத் ஓதினார;கள்.மேற்கண்ட வசனம் அருளப்பட்டவுடன் குனூத்தை விட்டு விட்டார;கள் என்று நமக்குத் தகவல் கிடைத்துள்ளது என்று ஸுஹ்ரி கூறியதாக முஸ்லிம் 1082வது ஹதீஸ் கூறுகின்றது. இவ்வசனம் குனூத் குறித்து தான் அருளப்பட்டது என்பது குறித்து நபித்தோழர்கள் வழியான சான்று ஏதும் ஸுஹ்ரியிடம் இல்லை என்பதை இதிலிருந்து அறியலாம்.
இதனால் தான் ஸுஹ்ரியின் கூற்றுடன் ஹதீஸ் கலந்து விட்டது என்று ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் தமது பத்ஹுல் பாரியில் கூறுகின்றார;. எனவே குனூத் ஓதினார்கள் என்ற செய்தி தான் ஏற்புடையதாக உள்ளது அதை 3:128வது வசனம் தடை செய்த ஏற்புடையதாக இல்லை.
தற்காலத்தில் ஏற்பட்டிருக்கும் பிரச்சினைக்கு குனூத் தான் தீர்வா?
தற்காலத்தில் அனைத்து பிரச்சினைகளுக்கும் நோன்பு பிடிக்கச் சொல்வதும் குனூத் ஓதச் சொல்வதுமே வேலையாக சிலர் வைத்து இருக்கிறார்கள். அல்லாஹ்வின் தூதர் அவர்கள் பிரச்சினைகள் ஏற்படும் போது குனூத்தை மட்டும் ஓதிவிட்டு சும்மா இருக்கவில்லை. நபி (ஸல்) அவர்களின் காலத்தில் ஏராளமான யுத்தங்கள் நடைபெற்றது ஆனால் அல்லாஹ்வின் தூதர் குனூத் ஓதிவிட்டு மாத்திரம் இருக்கவில்லை மாற்றமாக பிரச்சினையை தீர்பதற்கு ஏற்பாடு செய்தார்கள். அந்த ஏற்பாட்டையும் செய்ய வேண்டும் துஆவும் கேட்கவேண்டும் அது தான் இஸ்லாம் காட்டும் வழி பள்ளிவாசல் உடைக்கப்படுமேயானல் குனூத் ஓதுவார்கள் அதை தடுப்பதற்குறிய ஏற்பாட்டை செய்யமாட்டார்கள். தங்களுடைய இயக்கத்திற்கு அல்லது வியாபரத்திற்கு பிரச்சினை வரும் போது அதை தீர்ப்பதற்கு ஏற்பாடு செய்கிறார்கள். இது தவறான வழியாகும். நாம் பிரச்சினையை தீர்க்க வழி செய்யவும் வேண்டும் துஆ கேட்கவும் வேண்டும்.

நன்றி - sltj 
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger