படித்த வேலையில்லா இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்‏

படித்த வேலையில்லா இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (UYEGPஅறிவிக்கப்பட்டுதற்பொழுது செயல்பாட்டில் உள்ளதுசென்னை மாவட்டத்திற்கு 2013-14ம் ஆண்டிற்கு 250 நபர்களுக்கு கடன் வழங்க(ரூபாய் 75 லட்சம் மானியம்இலக்காக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.


இத்திட்டத்தின்படிபுதிதாக தொடங்கும் உற்பத்தி சார்ந்த நிறுவனங்களுக்கு அதிக பட்சமாக ரூபாய் 5 லட்சம்வரையிலும்சேவை சார்ந்த நிறுவனங்களுக்கு அதிகபட்சமான ரூ.3 லட்சம் வரையிலும் வியாபாரம் சார்ந்ததொழில்களுக்கு ரூ.1 லட்சம் வரையிலும் திட்டத்தொகையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதுஇத்திட்டத்தின் மூலம்கடன் பெற விரும்புவோர் 18 வயது பூர்த்தி அடைந்துகுறைந்த அளவு 8ம் வகுப்பு தேர்ச்சி அடைந்து இருக்கவேண்டும்.
 
 சென்னை மாவட்டத்தில் 3 வருடங்கள் தொடர்ந்து  குடியிருந்திருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம்ரூ.1,50,000/- மிகாமல் இருக்க வேண்டும். இத்திட்டத்தின் மூலம் கடன் பெறும் பயனாளிகளில் திட்டத் தொகையில்(Project Cost) 15% மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் வங்கியில் இருந்து கடன் ஒப்புதல் பெற்றவிண்ணப்பதாரர்களுக்கு 7 நாட்கள் தொழில் முனைவோர் மேலாண்மைப் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. தொழில்தொடங்க ஆர்வமுள்ளவர்களுக்காக வட்டாட்சியர் தலைமையில் பெரம்பூர்-புரசைவாக்கம் வட்டாசியர்அலுவலகத்தில் ஜூன் 28ம் தேதியன்று காலை 11.00 அளவில் விழிப்புணர்வு முகாம் நடைபெறுகிறது.
 
 மேற்கூறிய விழிப்புணர்வு முகாமில் அந்தப் பகுதியிலுள்ள வங்கியாளர்கள், குறு, சிறு மற்றும் நடுத்தரநிறுவனங்களுக்கான சங்க மூத்த உறுப்பினர்கள், வங்கிகளின் மாவட்ட முதன்மை மேலாளர் மற்றும் மண்டலஇணை இயக்குநர், தொழில் வணிகத்துறை ஆகியோர் கலந்து கொண்டு தொழில் முனைவோர்களிடையேஇத்திட்டத்தைப் பற்றி விளக்கவுரை ஆற்றவுள்ளார்கள். தொழில் துவங்க ஆர்வமுள்ள இளைஞர்கள் விழிப்புணர்வுமுகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
 
 மேலும் மாற்றுத்திறனாளிகளும் கலந்து கொண்டு இத்திட்டத்தின் மூலமாக பயன் பெறலாம் மற்றும் அவர்கள்செலுத்த வேண்டிய விளிம்புத்தொகையை (Margin Money) அரசாங்கமே செலுத்தும் என்று மாவட்ட ஆட்சியர்சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger