மனித நேயம் காப்போம்!

கடந்த வாரம் சென்னையில் நடந்த ஒரு நிகழ்வு மனித நேயம் குறித்து பேசுபவர்களை சிந்திக்கவைத்துள்ளது. மனிதநேயம் என்ற ஒன்று மிகவும் மோசமான நிலையை அடைந்து மழுங்கிவருவதையும், இந்நிலை தொடருமேயானால் மனித நேயம் என்றால் என்ன? அது கிலோ எவ்வளவு?அது எந்தக் கடையில் கிடைக்கும் என்று கேள்வி கேட்கக்கூடிய அளவிற்கு நிலைமை செல்லும்என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

நம்மை மனித நேயம் குறித்து அச்சப்பட வைத்த அந்தச் செய்தி இதோ :
அவசர கால ஆம்புலன்ஸ் "108  சேவைக்கு தகவல் கொடுத்தோருக்கு பாராட்டு!
சென்னைசாலை விபத்துகளில் சிக்கியோர் குறித்துஅவசர கால ஆம்புலன்ஸ், "108' சேவைக்குதகவல் கொடுத்தவர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
கடந்த மூன்று மாதத்தில்பல்வேறு சாலை விபத்துகளில் சிக்கியவாகன ஓட்டிகள்பயணிகள்,பொது இடங்களில்மின் விபத்து மற்றும் நெஞ்சு வலிவலிப்பு போன்ற உடல்நலக் குறைவுக்குஆளானோர் குறித்துஅவசர கால ஆம்புலன்ஸ், "108' சேவைக்கு தகவல் கொடுத்தவர்களைகவுரவிக்கும் நிகழ்ச்சிசென்னைதிருவல்லிக்கேணியிலுள்ள ஒரு தனியார் நிறுவன வளாகத்தில்,  14.03.13 வியாழன் அன்று  நடந்தது.
நிகழ்ச்சிக்குசென்னைதிருவள்ளூர்காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த, 14 பயனாளிகள் மற்றும்அவர்கள் விபத்தில் சிக்கியபோதுஆம்புலன்சிற்கு தகவல் கொடுத்த, 33பேர்அழைக்கப்பட்டனர்.சாலை விபத்துகளில் சிக்கியோர் குறித்து தகவல் அளித்தபிரபாகரன்அர்ஜுன் உள்ளிட்ட, 20பேருக்குபாராட்டு சான்றிதழ்நினைவுப் பரிசு ஆகியவை வழங்கப்பட்டது.  
இதுகுறித்துஅந்த தனியார் நிறுவனர்  கூறுகையில், "சாலை விபத்துகளில் சிக்குவோர் குறித்து,ஆம்புலன்சிற்கு தகவல் தந்தால்சட்டரீதியான சிக்கலுக்கு ஆளாவோம் என்ற எண்ணம்பொதுமக்கள்மத்தியில் பரவலாக உள்ளதுஇந்த எண்ணத்தை மாற்றும் நோக்கத்தில் இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது,''என்றார்.
அதாவது கடந்த மூன்று மாதங்களில் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்தவர்களின்பட்டியல்களை அந்த நிறுவனம் திரட்டியுள்ளதுஇத்தனை லட்சம் மக்கள் வசிக்கும் சென்னைமாநகரத்தில் உயிருக்குப் போராடக்கூடியவர்களுக்கு உதவும் நோக்கத்தில் 108 ஆம்புலன்ஸுக்குதகவல் கொடுத்தவர்கள் 3 மாதத்தில் வெறும் 33 நபர்கள் மட்டும்தான் என்றால் மனித நேயத்தின் கதிஎன்ன என்று நாம் அஞ்ச வேண்டியுள்ளது.
மனிதநேயம் என்ற அந்த மகத்தான பண்பு இப்போது உயிருக்குப் போராடி மிக சீரியஸானகண்டிஷனில் ஆம்புலன்ஸில் கொண்டு செல்லப்படுகின்றது என்பதுதான் இதன் மூலம் நமக்குத்தெரியவரும் உண்மையாகும்.
இந்த நிகழ்வை வைத்துமட்டும் இதை நாம் குறிப்பிடவில்லைஇதுபோன்ற பல நிகழ்வுகளை நாம்நமது கண்முன்னால் கண்ட அடிப்படையில்தான் இவற்றை நாம் கூறுகின்றோம்.
கடந்த ஜூன் மாதம் திருச்சியில் நடந்த செயற்குழுவை முடித்துவிட்டு மேலப்பாளையத்திற்குவிவாத ஒப்பந்தம் செய்வதற்காக நமது மாநில நிர்வாகிகள் சென்று கொண்டிருக்கின்றனர்அப்போதுஇரத்த வெள்ளத்தில் மிதந்தவராக ஒரு நபர் நமது வாகனத்தை இடைமறித்து உதவி கோருகின்றார்.நமது நிர்வாகிகள் அவருக்கு உதவி செய்கின்றனர்அவர்கள் வந்த மாருதி காரை பின்னால் வந்த லாரிஅடித்து தூக்கி எறிந்ததில் பலத்த காயமுற்ற அந்த சகோதரரும்அவரோடு வந்த மற்றொருசகோதரரும் மிக சீரியஸான நிலையில் இருக்க டிஎன்டிஜேவின் விருதுநகர் மாவட்ட ஆம்புலன்ஸ்மூலம் அவர்களது உயிர் காப்பாற்றப்பட்டது.
அவரிடம் நாம் விசாரித்த போதுதான் பின்வரும் செய்திகள் தெரியவந்தனலாரி அடித்துதூக்கிவீசப்பட்ட நான் இரத்த வெள்ளத்தில் மிதந்தவனாகஇங்கு 15 நிமிடத்திற்கும் மேலாக எங்களைக்கடந்து செல்லக்கூடிய அனைத்து வாகனங்களையும் நிறுத்தச் சொல்லி உதவி கேட்டுக் கெஞ்சிப்பார்த்துவிட்டேன்ஒருவர் கூட வாகனத்தை நிறுத்த மறுக்கின்றார்கள் என்று பரிதாபமாகக் கூறியஅவர்இத்தனைக்கும் தான் ஒரு வக்கீல் என்றும் கோவில்பட்டி அருகில் உள்ள சாத்தூர் தனது சொந்தஊர் என்றும் விபத்து நடந்தவுடன் 108 ஆம்புலன்ஸுக்குத் தான் தகவல் கொடுத்துவிட்ட நிலையிலும்,அவர்கள் வந்து சேருவதற்கு ஒன்றரை மணி நேரம் ஆகும் என்று தெரிவித்துவிட்டார்கள் என்றும்இரத்த வெள்ளத்தில் மிதந்தபடியே செய்திகளை தெரிவித்தார்.
ஒருவர் தான் விபத்துக்குள்ளாகி கிட்டத்தட்ட 25 நிமிடங்களாக அந்த வழியே சென்ற அனைத்துவாகன ஓட்டிகளிடமும் உதவி கோருகின்றார்அவருக்கு உதவ ஒருவர் கூட முன்வரவில்லைஎன்றால், 108 ஆம்புலன்ஸும் வரவில்லை என்றால்மனித நேயம் எங்கு வாழ்கின்றதுஎன்ற கேள்விஇயற்கையாகவே நம் உள்ளத்தில் எழுகின்றதாஇல்லையா?
இந்த நிலை தொடருவதால்தான் 3மாதங்களாக வலைவீசித் தேடியும் 33 மனிதர்களது பட்டியல் அந்தநிறுவனத்திற்கு கிடைத்துள்ளது.
அதனால்தான் நமது ஜமாஅத் சார்பாக நாம் செய்யும் நற்பணிகளை காணக்கூடிய பிறமதசகோதரர்கள் நம்மை ஏதோ வேற்றுக்கிரகவாசியைப் பார்ப்பதுபோல வெறித்து வெறித்துப் பார்க்கும்நிலையை நாம் காண்கின்றோம்.
கடந்த ஜூன் மாதம் ஜெமினி மேம்பாலத்திலிருந்து பஸ் கவிழ்ந்த விபத்தை நாம் அனைவரும்அறிவோம்அதில் அந்த வழியாகச் சென்ற டிஎன்டிஜே உறுப்பினர் ரியாஸ் அவர்கள் உடனடியாககளமிறங்கி 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்துபேருந்தில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தவர்களை காப்பாற்றினார்.
மறுநாள் அவரது மனிதநேயப் பணியை புகழ்ந்து அவரது புகைப்படத்துடன் செய்தி வெளியிடாதநாளேடுகளே இல்லை என்று சொல்லக்கூடிய அளவிற்கு செய்திகள் வெளிவந்தன.
மனிதநேயப் பணியை ஒருவர் செய்வது என்பது அரிதிலும் அரிதாகி வருகின்றதுஅதனால்தான்அத்தகைய பணிகளை செய்தவரைப் பார்த்து அதிசயப் பிறவியை பார்த்ததுபோல இந்த சமுதாயம்காண்கின்றது.
ஆனால் இந்த மனித நேயப்பணியை இஸ்லாம் மார்க்கம் ஒவ்வொரு இறைநம்பிக்கையாளர் மீதும்கடமையாக ஆக்கியுள்ளது.
இறைநம்பிக்கை என்பது 70க்கும் மேற்பட்ட கிளைகளுடன் அமைந்ததுஅதனது கடைசி கிளைஎன்பது பாதையில் தீங்கு தரக்கூடிய பொருட்களை அப்புறப்படுத்துவதாகும் என்று நபிகளார் வழிகாட்டித் தந்துள்ளார்கள்.
பூனைக்கு உணவளிக்காத ஒரு பெண்ணுக்கு அவள் செய்த அந்த செயலின் காரணமாக இறைவன்அந்தப் பெண்ணை நரகில் தள்ளுக்கின்றான் என்றும்தாகத்தில் தவித்த நாய்க்கு பரிவு காட்டி தண்ணீர்புகட்டிய ஒரு மனிதருக்கு அவரது செயலின் காரணமாக இறைவன் சுவனத்தை பரிசாகக் கொடுத்தான்என்றும் நபிகளார் சொல்லிக்காட்டுகின்றார்கள்.
பிறருக்கு தொல்லை தரும் விதத்திலான செயல்களை செய்பவன் உண்மையான முஸ்லிம் அல்லஎன்று நபிகளார் முஸ்லிமுக்கு இலக்கணம் வகுத்துள்ளார்கள்.
பிறருக்கு உதவி செய்வதை இஸ்லாம் மார்க்கத்தில் ஒரு கடமையாக ஆக்கியுள்ளது.
ஏழைகளுக்கும்வறியவர்களுக்கும்வழிப்போக்கர்களுக்கும்யாசிப்பவர்களுக்கும்துன்பத்தில்உழல்பவர்களுக்கும்பட்டினியால் வாடுபவர்களுக்கும் உதவுவதை இஸ்லாம் வலியுறுத்துகின்றது. (பார்க்க : கீழ் குறிப்பிடப்பட்டுள்ள திருமறை வசனம்)
இதை இஸ்லாம் மார்க்கக்கடமையாக வலியுறுத்தும் காரணத்தால்தான் முஸ்லிம்கள்இரத்ததானத்தில் முன்னிலை வகிக்கின்றனர்அதை மற்றவர்களுக்கு போதித்து பிரச்சாரம் செய்யும்இந்த ஜமாஅத் இறைப்பொருத்தத்தை நாடி அதைச் செய்வதால்தான் தொடர்ந்து இரத்ததானத்தில்முன்னிலை வகித்து வருகின்றது.
அதனால்தான் பிறரது துயர் துடைப்பதை இந்த ஜமாஅத் தனது தலையாய பணியாக செய்துதமிழகத்தில் தனி முத்திரை பதித்து வருகின்றது.
இதுபோன்ற மனித நேயப்பணிகளை அனைத்து சகோதரர்களும் இந்த ஜமாஅத்தோடு இணைந்துசெய்து மனித நேயம் வளர்க்க அன்பான அழைப்பு விடுக்கின்றோம்.
 உங்கள் முகங்களை கிழக்கு நோக்கியோமேற்கு நோக்கியோ திருப்புவது நன்மையன்று.மாறாக அல்லாஹ்இறுதி நாள்வானவர்கள்வேதம்மற்றும் நபிமார்களை நம்புவோரும்உறவினர்கள்அனாதைகள்ஏழைகள்நாடோடிகள்யாசிப்போருக்கும்மற்றும் அடிமைகளைவிடுதலை செய்வதற்கு (மனவிருப்பத்துடன் செல்வத்தை வழங்குவோரும்தொழுகையை நிலைநாட்டுவோரும்ஸகாத்தை வழங்குவோரும்வாக்களித்தால் தமது வாக்கைநிறைவேற்றுவோரும்வறுமைநோய்மற்றும் போர்க்களத்தில் சகித்துக் கொள்வோருமேநன்மை செய்பவர்கள்அவர்களே உண்மை கூறியவர்கள்அவர்களே (இறைவனை)அஞ்சுபவர்கள்(அல்குர்-ஆன் 2 : 177)
மக்கள் தமது மூட்டுகள் ஒவ்வொன்றுக்காகவும் சூரியன் உதிக்கின்ற ஒவ்வொரு நாளிலும்தருமம் செய்வது அவர்கள் மீது கடமையாகும்இருவருக் கிடையே நீதி செலுத்துவதும்தருமமாகும்ஒருவர் தன் வாகனத்தின் மீது ஏறி அமர (அவருக்குஉதவுவதும் தருமமாகும்;அல்லது அவரது பயணச் சுமைகளை அதில் ஏற்றி விடுவதும் தருமமாகும்நல்ல (இனிய)சொல்லும் ஒரு தருமமாகும்ஒருவர் தொழுகைக்குச் செல்ல எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும்தருமமாகும்தீங்கு தரும் பொருளைப் பாதையிலிருந்து அகற்றுவதும் ஒரு தருமமேயாகும் என்றுநபிகள் நாயகம் (ஸல்அவர்கள் கூறினார்கள் (ஆதாரம் : புகாரி  2989)
நன்றி - onlinepj 
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger