முஸ்லிம்களை கருவருப்பதில் ஊடகங்களும் கைகோர்க்கும் அவலம்:

சரணடைய வந்த தீவிரவாதியினது கையில் வெடி குண்டுகளையும், துப்பாக்கிகளையும் கொடுத்துசெட்டப் செய்து மறுபடியும் அவனை தீவிரவாதியாக்கி டெல்லி காவல்துறை நடத்தியஅயோக்கியத்தனத்தை உணர்வலைகள் பகுதியில் படித்திருப்பீர்கள்.

முஸ்லிம்களை தீவிரவாதிகளாகச் சித்தரித்து ஏதேனும் சிறு செய்தி கிடைத்துவிட்டால் போதும்,ஊடகங்கள் அதை தீபாவளி கொண்டாடுவதுபோல திருநாளாக கொண்டாடுகின்றனர்இதுபோன்றசெய்திகள் வெளியானால்அது இவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றதுபுளகாங்கிதம்அடைந்தவர்களாக அந்தச் செய்திகளை பரப்புகின்றார்கள்.
அது உண்மையா அல்லது இட்டுக்கட்டப்பட்ட செய்தியா என்றெல்லாம் ஆய்வு செய்யாமல்முஸ்லிம்களை தீவிரவாதிகளாகச் சித்தரிப்பதிலேயே கவனம் செலுத்தி தங்களது காவி புத்தியைவெளிக்காட்டுகின்றனர்.
 காதலர் தினத்தில் நடந்த அநியாயம் :
கடந்த காதலர் தினத்தன்று மும்பையில் வெடிகுண்டு வெடிக்கவுள்ளதாக மிரட்டல்கள்விடப்பட்டபோதும் இதேபோலத்தான் இவர்கள் இல்லாதபொல்லாத செய்திகளை இட்டுக்கட்டிஎழுதினார்கள்.
காதலர் தினத்தன்று மும்பையில் தீவிரவாதத் தாக்குதல் நடத்தவுள்ளதாக செய்திகள்வந்ததையடுத்து அந்தச் செய்தியை இந்த ஊடகங்கள் வெளியிட்ட லட்சணத்தை பாருங்கள்:
மும்பை : மும்பையின் முக்கிய இடங்களில் காதலர் தினத்தன்று பயங்கரவாத தாக்குதல்நடத்தப்படும் என மும்பை போலீஸ் கட்டுபாட்டு அறைக்கு மர்ம அழைப்புக்கள் வந்துள்ளன. 6பயங்கரவாத அமைப்புக்களைச் சேர்ந்தோர் இந்த தாக்குதலை நடத்த உள்ளதாக எச்சரிக்கைவிடுத்துள்ளனர்காதலர்கள் அதிகம் கூடி காதலர் தினத்தை கொண்டாடும் ஜூஹூ சவுபத்தி அல்லதுபந்த்ரா பந்த்ஸ்டண்ட் அல்லது இரு இடங்களிலும் தாக்குதல் நடத்தப்படலாம் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
 போலீஸ் கமிஷ்னர் தகவல்:
மர்ம அழைப்புக்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளதால் மும்பை போலீஸ் கமிஷ்னர் சத்யபால் சிங்,அனைத்து போலீஸ் உயர் அதிகாரிகளையும் தொடர்பு கொண்டு மும்பை மற்றும் அதனைச் சுற்றிஉள்ள புறநகர் பகுதிகளில் உள்ள ஹோட்டல்கள்லாட்ஜ்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் சோதனைநடத்துமாறும்மக்கள் அதிகம் கூடும் விமானநிலையம்ரயில்வே நிலையம்சுற்றுலா தலங்கள்உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் பயங்கரவாதியும் மும்பை தாக்குதல் குற்றவாளியுமான அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்டுகுறுகிய காலத்திலேயே பார்லிமென்ட் தாக்குதல் குற்றவாளி அப்சல்குருவும் தூக்கிலிடப்பட்டதற்குஎதிர்ப்பு தெரிவித்து பயங்கரவாதிகள் இந்த பதில் தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் போலீஸ்கமிஷனர் தெரிவித்துள்ளார்.
 காதலர் தினத்திற்கு எதிர்ப்பு :
அஜ்மல் கசாப் மற்றும் அப்சல்குரு தூக்கிலிடப்பட்டதை  அடுத்து பயங்கரவாத அச்சுறுத்தல்கள்வரக்கூடும் என்பதால் நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.காதலர் தின கொண்டாட்டத்திற்கு சிவ சேனா கட்சியினரே அதிகளவில் எதிர்ப்பு தெரிவித்து தாக்குதல்நடத்துவர் என போலீசார் எதிர்பார்த்து இருந்த வேளையில் பயங்கவாதிகள் விடுத்துள்ளஅச்சுறுத்தலால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுமுக்கிய இடங்களில் கூடுதல் போலீஸ் படையினர்குவிக்கப்பட்டுள்ளனர்.
 குற்றவாளிகள் கண்டுபிடிப்பு :
போலீஸ் கண்காணிப்பு அறைக்கு மர்ம போன் மூலம் மிரட்டல் விடுத்தவர் யார் என்பது குறித்துஅந்த குறிப்பிட்ட தொலைபேசி அழைப்பை கண்காணிக்கும் பணியில் புலனாய்வு பிரிவினர் ஈடுபட்டுவருகின்றனர்தொடர்ந்து சிலமுறை வந்த தொலைபேசி அழைப்பை வைத்து போன் செய்தவன்உத்திர பிரதேச மாநிலம் மகு பகுதியைச் சேர்ந்த ராஜூ என போலீசார் கண்டுபிடித்துள்ளதாகதகவல்கள் வெளியாகி உள்ளனஇதே போன்று மேலும் 2 பேர் மும்பையில் காதலர் தினத்தன்று 6பயங்கரவாத அமைப்புக்களின் தாக்குதல் நடைபெறும் என தெரிவித்துள்ளனர்இத்தகவலைபயங்கரவாத தடுப்புப் படைக்கும்பந்த்ரா போலீசிற்கும்ஜூஹூ போலீசிற்கும் மும்பை போலீசார்அனுப்பி உள்ளனர்.
மேற்கண்ட செய்தியை ஒன்றுக்கு பலமுறை வாசித்துப்பாருங்கள்அஜ்மல் கசாப்பிற்கும்அப்சல்குருவிற்கும்காதலர் தினத்திற்கும் என்ன சம்பந்தம்?
 காதலர் தினத்திற்கும் தீவிரவாதிகளுக்கும் என்ன சம்பந்தம்?
பொதுவாக காதலர் தினத்தன்று தீவிரவாதச் செயல்களை அரங்கேற்றுவது சங்பரிவாரத்தீவிரவாதிகள்தான் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்அப்படியிருக்கையில் இதுபோன்றமிரட்டல்கள் விடப்பட்டால் அது சங்பரிவாரத் தீவிரவாதிகளின் கைவரிசையாகத்தான் இருக்கும்என்பதில் எள்ளளவு கூட யாருக்கும் சந்தேகம் வராது எனும்போது அப்சல் குரு ஆதரவாளர்கள்தான்இந்த மிரட்டல் விடுத்துள்ளார்கள் என்று இவர்களுக்கு சொல்ல எப்படி மனம் வருகின்றது?
அதுமட்டுமல்லாமல்மிரட்டல் விடுத்த தீவிரவாதியையும் கைது செய்ததாக அவர்களே செய்திவெளியிடுகின்றார்கள்அவனது பெயர் ராஜு என்றும் அவர்களே சொல்கின்றார்கள்அப்படியானால்இவன் நிச்சயம் சங்பரிவாரத் தீவிரவாதியாகத்தானே இருக்க வேண்டும்அந்தக் கோணத்தில் இந்தவிசாரணையை நடத்தினார்களாஇல்லையேஇப்படித்தான் இவர்கள் முஸ்லிம்களை திட்டம்தீட்டிகருவறுக்கும் வேலையை செய்து வருகின்றார்கள்.
அதுபோல கடந்த சில மாதங்களுக்கு முன்பாக சென்னை வண்ணாரப்பேட்டையில் பசுலுல்லாஹ்என்பவரது வீட்டில் கேஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு விபத்து நிகழ்ந்ததுஅந்த விபத்தில் 4வயதுகுழந்தை உட்பட பலர் பலத்த காயமுற்றதுடன்இருவர் உயிரிழந்தனர்அந்த சிலிண்டர்விபத்தைக்கூட இந்த அயோக்கிய ஊடகங்கள் எவ்வாறு எழுதின தெரியுமா?
 வண்ணாரப்பேட்டையில் விபத்து :
சிலிண்டர் வெடித்ததாவெடி குண்டு வெடித்ததாஎன்று போலீசார் ஆய்வு!
என்று விஷமத்தனமாக செய்தி பரப்புகின்றார்கள் என்றால் இவர்களின் மதத்துவேஷத்தைஎன்னவென்பது?
முஸ்லிமுடைய வீட்டில் சிலிண்டர் வெடித்து விபத்து நேர்ந்து உயிரிழப்பு ஏற்பட்டால் கூட அதுஇவர்களுக்கு வெடி குண்டுகளாக காட்சி தருகின்றதென்றால் இந்த ஊடகங்களின் குருட்டுப்பார்வைக்குமுதலில் நாம் வைத்தியம் பார்த்தாக வேண்டும்அதுபோல முஸ்லிம்களின் மீது இவர்களதுதுவேஷப்பார்வை மாற வேண்டும்இல்லாவிட்டால் நாட்டின் முக்கிய தூண்களில் ஒன்றானஊடகத்துறை எனும் தூண் இடிந்து நாடு சவக்குழிக்குள் சென்று விடும் என்பதை மட்டும்இப்போதைக்கு சொல்லிவைக்கின்றோம்.
நன்றி - onlinepj 
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger