தமது இராச்சியத்தை இளைய தலைமுறையின் கையில் ஒப்படைப்பதற்கான காலம் வந்துள்ளதாக மன்னர் ஷேக் ஹமாத் பின் கலிஃபா அல் தானி தொலைக்காட்சியில் அறிவத்துள்ளார்.
பிரிட்டனில் கல்விகற்ற கட்டார் முடிக்குரிய இளவரசர் ஷேக் தமீம், அவரது 33-வது வயதில் மன்னராக முடிசூட்டப்படுகிறார்.
வளைகுடா அரபுநாடுகளில் இப்படியான அரியணை மாற்றம் நடப்பதில்லை என்று செய்தியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த நாடுகளில் மன்னர் ஒருவர் உயிரிழக்கும்வரை ஆட்சியில் இருப்பார்.
பிராந்தியத்தில் அரசியல் செல்வாக்கு
புதிதாக முடிசூட்டுகின்ற ஷேக் தமீம் அவரது தந்தையின் கொள்கைகளிலிருந்து விலகமாட்டார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
மன்னர் ஷேக் ஹமாத் பின் கலிஃபா அல் தானி கட்டாரை பிராந்தியத்தில் அரசியல் செல்வாக்குமிக்க நாடாக மாற்றியவர்.
அரபுலகில் தொடங்கிய வசந்தகால புரட்சிக்கு ஆதரவான போக்கைக் கொண்ட மன்னர், லிபிய மற்றும் சிரியா கிளர்ச்சிகளிலும் கிளர்ச்சியாளர்களின் பக்கமே நிற்கின்றார்.
எண்ணெய் வளம் மிக்க நாடான கட்டார் அண்மைய ஆண்டுகளில் மிகவும் செல்வந்த நாடாக வளர்ந்துள்ளது.
அல் ஜசீரா தொலைக்காட்சியை நிறுவியமை, புகழ்பெற்ற லண்டன் ஹரோட்ஸ் ஆடம்பர சந்தையை வாங்கியமை போன்ற நடவடிக்கைகள் அந்நாட்டின் செல்வ வளத்தை காட்டுகின்றன.
Source: Al Jazeera
Post a Comment