அமெரிக்க அரசின் உளவு வேலைகளை அம்பலப்படுத்தியதாக அமெரிக்க தேசிய உளவு நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் எட்வர்ட் ஸ்னோடென் குற்றஞ்சாட்டப்பட்டார்.
சீன அரசை உளவு பார்த்தது போன்ற சட்டவிரோத, பயங்கரவாத நடவடிக்கைகள் அம்பலமானதால் ஆத்திரமடைந்துள்ள அமெரிக்க அரசு ஸ்னோடெனை தனது பிடிக்குள் கொண்டு வர முயன்று வருகிறது.
அமெரிக்க என்.எஸ்.ஏ. உளவு அமைப்பின் முன்னாள் பணியாளரான ஸ்னோடென், ஹாங்காங்கில் இருந்து ரஷியாவுக்கு பயணம் மேற்கொண்டதாக தகவல் வெளியானதையடுத்து, அந்த ஆளை தங்களிடம் ஒப்படைத்து விடுமாறு அமெரிக்க அரசு ரஷ்யாவிடம் வேண்டுகோள் விடுத்தது.
தன்னாட்டின் அரசு உடமைகளைத் திருடியதாகவும் அரசை உளவு பார்த்ததாகவும் பல குற்றச்சாட்டுகளின் பேரில் ஸ்னோடென் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ள நிலையில், மாஸ்கோ வந்துள்ள ஸ்னோடென்னை மீண்டும் அமெரிக்காவுக்குத் திருப்பி அனுப்பும் படி கோரப்பட்டது.
ஆனால் ஸ்னோடென்னை ஒப்படைக்க முடியாது என்று ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோ பதிலளித்துள்ளார். "அமெரிக்காவின் சட்டத்தை ரஷ்யா மீறிவிட்டது என்பது போல குற்றம் சுமத்த முயன்றால் அதற்கு ஒன்றும் செய்ய இயலாது. ஸ்னோடென் பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது" என்றும் அமைச்சர் கூறியுள்ளார்
தற்போதைய தகவல்படி ஸ்னோடென் ஈக்வடார் நாட்டில் அடைக்கலம் பெற விக்கிலீக்ஸ் ஜூலியன் அசாஞ்சே உதவி புரிவதாகத் தெரிகிறது. முன்னதாக, ரஷ்யாவிலிருந்து க்யூபா செல்வதாகக் கூறப்பட்ட ஸ்னோடென் பின்னர் ஈக்வடார் நாட்டில் தஞ்சமடைகிறார்.
Post a Comment