இஸ்ரேல் என்ற மனநோயாளியின் தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து பாலஸ்தீனம் என்ற நாட்டின் கால்வாசிப் பகுதிதான் இன்று முஸ்லிம்களின் வசம் இருக்கின்றது. ஆக்கிரமிக்க வந்தவன் நாட்டை பிடித்து தான் ஒரு நாடு என்று அறிவித்திருக்கின்றான். ஆனால் புனித பூமியின் சொந்தக்காரர்களோ சொந்த பூமியில் அகதி வாழ்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
உண்மையில் அங்கு நடப்பது என்னவென்பது பெரும்பாலும் சரியான தகவலாக வெளியுலகுக்கு தெரியவருவதில்லை. தெரியவரும் செய்திகள் கூட பரிபூரணமானதா இல்லை.
வரலாற்றின் பின்னனி.
பாலஸ்தீனம் என்று இன்று நாம் அழைக்கும் பகுதி தங்களுக்கு சொந்தமானது என்று யூதர்கள் உரிமை பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் வரலாற்றைப் புரட்டிப் படிக்கும் போது பாலஸ்தீனம் பல தலைமுறையைக் கடந்து வந்திருந்தாலும் நபிமார்களின் பூமி, இஸ்லாம் வளர்ந்த இடம் என்ற அடிப்படையில் முஸ்லிம்களுக்கு சொந்தமான இடமாக இருக்கிறது.
பாலஸ்தீன வரலாற்றை பின்னோக்கி சென்று ஆய்வு செய்தால் அதன் முதல் குடிமக்களாக ‘ஸாபியீன்கள்” என்ற குழுவினர்தான் அங்கு முதலாவது குடியினராக வாழ்ததாக வரலாறு சொல்கின்றது. அவர்களுக்குப் பின் ‘யபூசிய்யூன்கள்” வாழ்கின்றார்கள். யபூசிய்யூன்களைத் தொடர்ந்து எகிப்திய ஆட்சியாளர்கள் பாலஸ்தீனத்தை கைப்பற்றி ஆட்சி செய்கின்றார்கள். இதன் பின்னர் தான் ‘பாலஸ்தீனிய்யூன்கள்” என்றொரு கூட்டத்தினர் அங்கு வசிக்க ஆரம்பிக்கின்றார்கள் இவர்களின் பெயர் மூலம் தான் பாலஸ்தீனம் என்ற நாடு அழைக்கப்படுகின்றது.
பாலஸ்தீனிய்யூன்களுக்கு பின் பனூ இஸ்ரவேலர்களும் அவர்களைத் தொடர்ந்து பாபிலோனியர்கள் (ஈராக்கியர்கள்), இவர்களைத் தொடர்ந்து கிரேக்கர்கள் பாலஸ்தீனத்தை ஆட்சி செய்தார்கள். இவர்களுக்கு பின் உரோமர்கள் பாலஸ்தீன ஆட்சியை கைப்பற்றுகின்றார்கள். இவர்களின் ஆட்சி கி.மு 63ல் ஆரம்பித்தது. இந்த ஆட்சி உமர் (ரலி) அவர்கள் பாலஸ்தீனத்தை கைப்பற்றும் வரை தொடர்ந்தது.
சுமார் 3000ம் படை வீரர்களை கொண்டு பாலஸ்தீனத்தை கைப்பற்றிய உமர் (ரலி) அவர்களுக்குப் பின் சுமார் 1000 வருடங்கள் முஸ்லிம்களின் ஆட்சி (1917 வரை) பாலஸ்தீனில் நிலைபெற்றிருந்தது. இந்த ஆயிரம் வருட முஸ்லிம்களின் ஆட்சியில் ஒரு யூதனுக்குக் கூட இஸ்லாமியர்கள் அநியாயம் செய்தார்கள் என்ற தகவல் வரலாற்றில் கிடையாது. இதன் பின் 1ம் உலக மகா யுத்தத்தின் பின் கமால் அப்துந் நாசரின் இஸ்ரேல் ஆதரவுப் போக்கினால் பாலஸ்தீனத்தின் பெரும் பகுதி யூதர்களுக்கு செல்கின்றது. இப்படியாக பல ஆட்சி மாற்றங்களுக்குற்பட்டு வந்த பாலஸ்தீனம் இறுதியாக தனது பெரும்பகுதியை இஸ்ரேல் வசம் இழந்து நின்கின்றது.
இஸ்ஸத்தீன் அல் கஸ்ஸாம் அவர்களின் புரட்சி.
இந்த காலப் பகுதியில் தான் ‘இஸ்ஸத்தீன் அல் கஸ்ஸாம்” அவர்கள் பாலஸ்தீன மண்னை யூதர்களிடம் இருந்து மீட்டெடுப்பதற்காக புரட்சிப் படையொன்றை ஆரம்பித்து போராட்டங்களையும் முன்னெடுத்தார். இந்தக் காலப்பகுதியில் தான் யூதர்கள் தங்கள் திட்டப்படி மீதமுள்ள பாலஸ்தீனத்திற்குள்ளும் இஸ்ரேலியர்களை நுழைப்பதற்கு பாலஸ்தீனில் இடம் வாங்கும் படலம் ஆரம்பிக்கின்றது. முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் யூதர்கள் பெருமளவு பணம் செலவு செய்து இடங்களை வாங்கியதின் மூலம் முஸ்லிம் குடியிருப்புகளுக்குள் தங்கள் மக்களை அதிகளவில் நுழைத்தார்கள்.
யூதர்களின் இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்த நேரமே முஸ்லிம் போராட்டக் குழுக்கள் இது தொடர்பான எச்சரிக்கைகளை விடுத்தன ஆனால் அவற்றை யாரும் பெருமளவில் செவிமடுக்காததின் விளைவு இஸ்லாமியர்களுக்குள் யூதர்கள் சாதாரணமாக கலந்துவிட்டார்கள்.
இந்த நடவடிக்கைகளின் வெற்றி காரணமாக 1948 ல் முஸ்லிம் நாடுகளின் பலத்த எதிர்பையும் மீறி இஸ்ரேல் ஒரு தனி நாடாக அறிவிக்கப்பட்டது. இஸ்ரேலை தனி நாடாக அங்கீகரிப்பதற்கு அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகள் பக்க துணையாக இருந்தன.
1948 வரை போராட்டக் குழுக்களாக இயங்கிய இஸ்ரேல் தனி நாடாக அறிவிக்கப்பட்டவுடன் தனது போராட்டக் குழுக்களை ஒன்றிணைத்து ஒரு இராணுவத்தை ஏற்படுத்தியது. இராணுவ பலம் மூலமாக பாலஸ்தீனர்கள் மீது தனது மிலேச்சத் தனமாக தாக்குதல்களை தொடர்ந்தும் முன்னெடுத்தது.
ஹமாஸ் உருவாக்கம்.
1967 காலப்பகுதியில் பாலஸ்தீனத்தின் பெரும்பகுதி இஸ்ரேல் வசமானது. இஸ்ரேலின் தொடர் ஆக்கிரமிப்பை தடுப்பதற்காக அஹ்மத் யாசீன் அவர்கள் ஹமாஸ் என்ற போராட்டக் குழுவை ஆரம்பித்தார்.(தற்போதைய பாலஸ்தீனத்தின் ஆட்சி ஹமாசின் வசம் தான் இருக்கின்றது).
ஹமாஸ் மூலமாக பலவிதமான போராட்டங்களை முன்னெடுத்த அஹமத் யாசீன் அவர்கள் ஹமாஸை பாலஸ்தீனத்தின் ஒரு அரசியல் கட்சியாகவும், இராணுவ மயப்படுத்தப்பட்ட சிறப்பான ஒரு போராட்ட படையணியாகவும் தயார் படுத்தினார். ஹமாஸ் தவிர பத்தாஹ் என்ற அரசியல் கட்சியும், இன்னும் பல போராட்டக் குழுக்களும் பாலஸ்தீனத்திற்குள் இஸ்ரேலுக்கு எதிராக இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
ஆனால் ஐ.நா சபை உள்ளிட்ட மேற்கு ஆதரவாளர்களின் கருத்துப்படி சொந்த நாட்டுக்காக போராடும் இவர்கள் தீவிரவாதிகளாகவும். முஸ்லிம்களின் நிலத்தை அபகரித்த யூதர்கள் உலக பாதுகாவல்களாகவும் பார்க்கப்படுகின்றார்கள்.
மஸ்ஜிதுல் அக்ஸாவுக்கு எதிரான போர்.
பாலஸ்தீன் மீதான யூதர்களின் தொடர் தாக்குதல்களின் ஒரு அங்கம் தான் மஸ்ஜிதுல் அக்ஸாவை உடைக்க வேண்டும் என்பதும் அக்ஸா அமைந்திருக்கும் இடத்தில் ‘ஹைக்கல் சுலைமான்” என்ற பெயரில் ஒரு சிலையை நிறுவ வேண்டும் என்பதுமாகும்.
முஸ்லிம்களின் புனித பூமியில் அமைந்திருக்கும் புனிதத் தளமான அக்ஸாவை அழிப்பதற்கு இவர்களால் ஆன அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றார்கள். ஆனால் அல்லாஹ்வினால் பரக்கத் செய்யப்பட்ட பகுதியாக திருமறைக் குர்ஆன் அக்ஸா அமைந்துள்ள பகுதியைப் பற்றி பேசும் போது தெளிவாக அறிவிக்கின்றது.
மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து, சுற்றுப் புறத்தை பாக்கியம் மிக்கதாக நாம் ஆக்கிய மஸ்ஜிதுல் அக்ஸா வரை தனது சான்றுகளை காட்டுவதற்காக ஓர் இரவில் தனது அடியாரை (முஹம்மதை) அழைத்துச் சென்றவன் தூயவன். (அல் குர்ஆன் 17:01)
மஸ்ஜிதுல் அக்ஸாவுக்குள்ள சிறப்புகளில் ஒன்று உலக வரலாற்றில் இரண்டாவதாக கட்டப்பட்ட பள்ளியாக இது இருப்பதாகும். (புகாரி :3366)
புனிதப் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்ட பள்ளிகளைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடும் போது மஸ்ஜிதுல் ஹராம், மஸ்ஜிதுன் நபவி, மஸ்ஜிதுல் அக்ஸா என்று பாலஸ்தீன மண்ணில் அமைந்திருக்கும் அக்ஸாவையும் சேர்த்தே குறிப்பிட்டார்கள். (புகாரி : 1189)
பொதுவாகவே முஸ்லிம்கள் வாழும் நாடுகளில் எல்லாம் முஸ்லிம்களுக்கு எதிராக பலவிதமான செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டே வருகின்றது. அந்த நாடுகளில் வாழும் முஸ்லிம்களுக்காகவும் நாம் அல்லாஹ்விடம் இரு கரம் ஏந்திப் பிரார்த்திக்க வேண்டும். ஆனால் பாலஸ்தீன மக்களைப் பொருத்த வரை அவர்களுக்காக நாம் குரல் கொடுப்பதற்கு என்பது ஒன்று முஸ்லிம் சகோதரர்கள் என்பதற்காக மற்றொன்று பாலஸ்தீனம் இஸ்லாமிய மார்க்கத்துடன் ஒன்றிய ஒரு பகுதியாகும். ஆதலால் மற்ற பகுதிகளை விட பாலஸ்தீனத்திற்காக முஸ்லிம்கள் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.
தற்போது நடந்தது என்ன?
யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை இதற்கு முன்பும் பல தடவைகள் இஸ்ரேல் மீறியதைப் போல இம்முறையும் ஒப்பந்தத்தை மீறி தாக்குதலை ஆரம்பித்தது. இதற்கு பதிலடியாக பாலஸ்தீன போராட்டக் குழுக்களும் தங்கள் தாக்குதல்களை முன்னெடுத்தார்கள். இதில் ஹமாஸ் நடத்திய போராட்டம் பல தரப்பினராலும் வெகுவாகக் கவணிக்கப்பட்டு பேசப்பட்டது.
ஹமாஸின் இராணுவத் தளபதி அஹமத் ஜபாரி பயணம் செய்த காரின் மீது இஸ்ரேலிய இராணுவம் தாக்குதல் நடத்தியதில் ஜபாரி ஸ்தளத்திலேயே கொல்லப்பட்டார். ஜபாரியின் படுகொலையைத் தொடர்ந்து ஆரம்பித்த இரண்டு பக்க தாக்குதல்கள் சுமார் எட்டு நாட்கள் நீடித்தது. 36 மஸ்ஜிதுகள், 25 பாடசாலைகள், ஒரு வைத்தியசாலை, 2 விளையாட்டு அரங்குகள், 2 பாலங்கள், 100 வீடுகள் உட்பட கோடிக்கணக்கான சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. பாலஸ்தீன அரசாங்கத்தின் கட்டிடங்கள் பலதும் உடைத்து நொருக்கப்பட்டுள்ளதுடன், ஹமாஸின் தலைமையகமும் தாக்குதலுக்கு உள்ளானது. அனைத்தையும் தாண்டி ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என 200 க்கு மேற்பட்ட அப்பாவிகளது உயிர்கள் அரக்கத்தனமாய் காவுகொள்ளப்பட்டுள்ளதோடு, 1500 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுக்கு உள்ளாகி உயிருக்கு ஊசலாடிக் கொண்டிருக்கின்றனர். இவை யாவும் உத்தியோக பூர்வ அறிக்கைகள் மாத்திரமே! உத்தியோகபூர்வமற்ற அறிக்கைகளின் பிரகாரம் ஏற்பட்டுள்ள உயிர்ச்சேதங்களும், சொத்துக்களுக்கான சேதங்களும் இதனைவிட பன்மடங்கு அதிகமாகும்.
1948 வரைக்கும் உலக வரை படத்தில் இல்லாத இஸ்ரேல் என்ற நாடு, 1948 க்குப்பின்னர் உலகின் ஜனநாயகவாதிகள் நாம் தாம் என்று மார்தட்டிக் கொள்ளும் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் கூட்டினைவால் கருத்தரித்து, தப்பான வழியில் பெற்றெடுக்கப்பட்ட ஒரு விபச்சாரக் குழந்தை என்பதை வரலாற்று ஆய்வாளர்களால் மறுதலிக்க முடியாது.
முஸ்லிம்களுக்கு உரித்தான பாலஸ்தீன மண்ணில் பலவந்தமாய் இஸ்ரேல் என்ற நாட்டை உருவாக்கியது மட்டுமன்றி, எஞ்சியுள்ள காஸா நிலப்பரப்பையும் கபளீகரம் செய்து, முழுமையான இனச்சுத்திகரிப்பொன்றை அரங்கேற்றுவதோடு, மத்திய கிழக்கின் விரிந்த நிலப்பரப்பில் யூதர்களின் கனவு இராச்சியமான ‘அகன்ற இஸ்ரேலை’ நிறுவுவதற்கான முயற்சிகளில் ஒன்றே அண்மைய தாக்குதலும் ஆகும்.
ஹமாஸின் தலைவர்களை குறி வைத்து தாக்குதல் நடத்துவது என்பது இஸ்ரேலின் வழமையான ஒரு பணியாகவே இருக்கிறது. இதற்கு முன்பும் பல முறை ஹமாஸின் தளபதிகள் கொல்லப்பட்டார்கள்.
1996ல் பாலஸ்தீன போராளி யஹ்யா அய்யாஷ் கொலை செய்யப்பட்டார். அதற்குப் பின் சில நாட்கள் சிறு சிறு தாக்குதல்களுடன் நடை பெற்ற பாலஸ்தீன போராட்டம் 2002 ஜுலை ஸலாஹ் ஷஹாதா என்ற ஹமாஸின் இராணுவ தளபதியின் மரணத்தில் இருந்து போராட்டம் மீண்டும் சூடுபிடித்தது.
இஸ்ரேலிய இரானுவம் பாலஸ்தீனத்திற்குள் அத்துமீறுவதும், படுகொலைகளை நடத்துவதும், அதற்கு பதிலடியாக ஹமாஸ் தாக்குதல் நடத்துவதும் தொடர்;ந்த நடந்து கொண்டிருந்தது. இஸ்ரேலின் படுகொலைகளின் அடுத்த கட்டமாக ஹமாஸின் தலைவரும் நிறுவனருமான ஷேக் அஹ்மத் யாசின் 2004 மார்ச் மாதம் பஜ்ர் தொழுகை முடித்து வெளியில் வரும் போது ராக்கட் தாக்குதல் மூலம் கொலை செய்யப்பட்டார்.
சிறு வயதில் இருந்து பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டிருந்த ஷேக் அஹ்மத் யாசின் உடல் ஊனமுற்றவராக இருந்தாலும் மனதளவில் பலம் பெற்றவராகவே காணப்பட்டார். தன மனபலத்தினாலும், உள உறுதியினாலும் ஹமாஸை ஒரு வெற்றிப் பாதைக்கு இட்டுச் சென்றார். ஷேக் அஹ்மத் யாசின் கொலை செய்யப்பட்ட பின் ஹமாஸின் புதிய தலைவராக அப்துல் அஸீஸ் ரன்திஸி தெரிவு செய்யப்பட்டார்.
அப்துல் அஸீஸ் ரன்திஸி தலைவராக தெரிவு செய்யப்பட்டு ஒரு மாதத்திற்குள் 2004 ஏப்ரல் மாதம் இஸ்ரேலின் ராக்கட் தாக்குதலில் அவரும் கொல்லப்பட்டார்.
2009 ஜனவரி மாதம் ஹமாஸின் தலைவர்களில் ஒருவரான நிஸார் ரய்யான் கொலை செய்யப்பட்டார். அதே மாதம் உள்துறை அமைச்சராக இருந்த ரியாம் படுகொலை செய்யப்பட்டார். இதற்குப் பின் தளபதிகள் மீதான தாக்குதல்கள் ஓரளவுக்கு நிறுத்தப்பட்டு பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டன. இறுதியாக இராணுவத் தளபதி அஹ்மத் ஜபாரி 2012 நவம்பர் மாதம் படுகொலை செய்யப்பட்டார்.
இறுதியாக எகிப்தின் உதவியுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டது. இம்முறையும் நிரந்தர போர் நிறுத்தம் அமலுக்கு வரவில்லை. மாறாக தற்காலிகமாக போர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. சொந்த பூமியை இழந்து சொந்த நாட்டிலேயே அகதிகளாக துன்பப்படும் நமது பாலஸ்தீன உறவுகளுக்காக நமது இரு கரம் ஏந்தி பிரார்த்திப்போமாக என்று அனைத்து மக்களிடமும் வேண்டிக் கொள்கின்றோம்.
நன்றி - rasminmisc.com
Post a Comment