ஆமினா ஸாலியின் கடிதம் ஜோடிக்கப்பட்டதல்ல! ஆனால்…


அஸாத் ஸாலி கடந்த வாரம் கைது செய்யப்பட்டு சுமார் ஒரு வாரங்களுக்குப் பின் விடுதலை செய்யப்பட்டார்.

ஸாலி கைது செய்யப்பட்டு போலிசாரின் விசாரனைக்கு உட்படுத்தப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் அவரின் மனைவி மற்றும் மகள் உள்ளிட்ட குடும்பத்தினர் கங்காராம விகாரையில் சென்று கோதி பூஜையில் ஈடுபட்டார்கள். இதனை “அஷ்ரபுக்கு முர்த்தத் பட்டம் கொடுத்தவர்கள் அஸாத் ஸாலியின் குடும்பத்திற்கு என்ன பத்வா கொடுப்பார்கள்?” என்ற தலைப்பிட்டு இஸ்லாமிய மார்க்கத்தின் தூய கொள்கைக்கு எதிராக அவர்கள் நடந்து கொண்ட முறையை நாம் விளக்கியிருந்தோம்.
அதன் பின்னர் கடந்த 09.05.2013 அஸாத் ஸாலியின் மகள் ஆமினா “நாங்கள் காபிர்கள் ஆகிவிட்டோமா?” என்ற தலைப்பில் ஒரு விளக்கத்தை (?)  வெளியிட்டிருந்தார். அவருடைய விளக்கத்தில் தான் செய்த குற்றத்தின் விபரீதத்தை உணராதவராக அல்லது உணர்ந்தும் ஏற்றுக் கொள்ளாதவரைப் போல் கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.
ஆமினா ஸாலியின் குறித்த விளக்கத்திற்கு பதிலாக ஷஹாதா சொல்லிவிட்டு, தவ்பாவும் கேளுங்கள் என்ற தலைப்பில் ஓர் பதில் கடிதத்தை வெளியிட்டிருந்தோம்.
அதன் பின்…..
இந்த சம்பவங்கள் நடந்த பின்னர் இணையதளங்களில் பரப்பப்பட்ட ஒரு செய்தி என்னிடத்தில் கேள்வியாக மின்னஞ்சல் வழியாக வைக்கப்பட்டது. அதாவது ஆமினா அஸாத் ஸாலி எழுதியதாக குறித்த இணையதளத்தில் வெளியிடப்பட்ட செய்தி பொய்யானது, அதனை அவர் எழுதவில்லை. குறித்த இணையதள நிர்வாகம் ஜோடனை செய்து செய்தி வெளியிட்டுள்ளது. அப்படியிருக்கையில் அதற்கு நீங்கள் பதிலளித்தது சரிதானா? ஆமினா ஸாலி எழுதியதற்கு பதிலளித்தால் பிரச்சினையில்லை. யாரோ எழுதியதற்கு ஆமினா தான் எழுதினார்கள் என்று நினைத்துக் கொண்டு நீங்கள் பதில் எழுதியது ஏன்? என்ற கேள்விகள் என் முன் வைக்கப்பட்டன.
மட்டுமன்றி கல்கிஸ்ஸையை சேர்ந்த ஒரு சகோதரர் இது தொடர்பாக எனக்கு சில மின்னஞ்சல்களையும் எழுதியிருந்தார். அமீனா ஸாலியின் கடிதம் தொடர்பில் இவர் எழுதியவைகள் தான் பெரும்பாலும் மற்ற இணையதளங்கள் மற்றும் சமூக வலை தளங்களிலும் பரப்பப்பட்டன.
இருப்பினும்…..
இது தொடர்பில் நான் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக சில ஊடகவியலாளர்களை தொடர்பு கொண்டு விசாரித்த போது குறித்த கடிதத்தை ஆமினா தான் எழுதினார் என்று அவர்கள் உறுதிப்படுத்தினார்கள்.
இதே நேரம் கடந்த சனிக்கிழமை 11.05.2013 அன்று எனக்கு வந்த ஒரு தொலை பேசி அழைப்பில் அஸாத் ஸாலியின் சகோதரர்களின் ஒருவரான சபின் ஸாலி என்பவர் பேசினார். அமீனா ஸாலி கங்காராம விகாரைக்கு போன செய்தி தொடர்பாக பேசியவரிடம் நான் சில செய்திகளை தெளிவாக எடுத்துக் கூறினேன்.
அதாவது உங்கள் சகோதரர் அஸாத் ஸாலியை அரசாங்கக் கைதில் இருந்து காப்பதற்கு முன்பாக அவரின் குடும்பத்தை நரகத்தை விட்டும் காத்துக் கொள்ளுங்கள். இவ்வளவு காலம் கொழும்பு, தெவடகஹ தர்காவில் சென்று இணை வைக்கும் காரியத்தில் ஈடுபட்டவர்கள் இப்போது தெளிவாக கங்காராம விகாரைக்கே சென்று விட்டார். இது குப்ரை உண்டாக்கி அவர்களை இஸ்லாத்தை விட்டு வெளியேற்றி காஃபிராக்கும் செயல் என்பதை அவர்களுக்கு தெளிவு படுத்துங்கள். குர்ஆன், சுன்னாவின் பக்கம் மீண்டு வரச் சொல்லுங்கள் எ்ன்ற தகவல்களை பதிவு செய்தேன்.
மார்க்க ரீதியாக சொல்ல வேண்டியவைகளையெல்லாம் நான் சொன்ன பின்னர், ஆமினா அஸாத் ஸாலி எழுதிய குறித்த கடிதத்தின் உண்மைத் தன்மையை விசாரித்த போது, அவர் அதனை தெளிவாகவே உறுதிப்படுத்தினார்.
“நாங்கள் காபிர்கள் ஆகிவிட்டோமா?” என்ற தலைப்பில் குறித்த இணையதளத்தில் வெளிவந்த ஆக்கம் ஆமினா அஸாத் ஸாலிக்கு உரியதுதான். என்ற அவரிடம் அவருக்கு தமிழ் எழுதத் தெரியாது என்று அறிந்தேன் அப்படியானால் யார் இதனை எழுதினார்கள் என்று கேட்ட நேரத்தில்  சுடர் ஒளி அல்லது தினக்குரலினால் முஸ்லிம்களை இலக்கு வைத்து புதிய பத்திரிக்கை ஒன்றை வெளியிடப் போகின்றார்கள். அந்த பத்திரிக்கைக்கு இது தொடர்பில் விளக்கம் ஒன்றை ஆமினா வழங்கினார். அப்போது தான் குறித்த விளக்கம்  எழுத்து வடிவமாக்கப்பட்டது. என்றார்.
ஆக… “ஷஹாதா சொல்லி விட்டு, தவ்பாவும் செய்யுங்கள்” என்ற தலைப்பில் நான் எழுதிய பதில் கடிதம் ஆமினா அஸாத் ஸாலி எழுதிய பதிலுக்குறிய பதில் தான் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
ஆனால்…….
சற்று நேரத்திற்கு முன்னர் குறித்த இணையதளத்தில் இது தொடர்பில் அஸாத் ஸாலியின் குடும்பத்தினர் அனுப்பியுள்ள ஒரு விளக்கக் கடிதத்தை பார்த்தேன் அதிலும் இதற்கு முன் வெளிவந்த விளக்கம் எனக்குறியதுதான் என்பதை தெளிவாக ஒத்துக் கொள்ளும் அமீனா ஸாலி, தான் காஃபிராகி விட்டதாக பேஸ்புக் போன்ற சமூக வலை தளங்களில் செய்திகள் பரப்பப்படுவதாக ஆதங்கப்ப்டும் அதே நேரம், தான் செய்த குப்ரான காரியத்திற்கு ஷஹாதா சொல்லி தூய இஸ்லாத்தின் பக்கம் மீண்டுவிட்டதாக  எந்தவொரு வார்த்தையும் அதில் குறிப்பிடவில்லை என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
நன்றி - ரஸ்மின் மிஸ்க் 
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger