இயேசு இறை மகனா ? - தொடர் 6


இயேசு மனுஷ குமாரன்:
"இறை மகன்" என்பதை கடவுளின் புதல்வன் என்று தவறான பொருளில் புரிந்து கொண்ட கிறித்தவர்கள், இயேசு தம்மை "மனிதன்" என்றும் "மனுஷ குமாரன்" என்றும் கூறியதாகப் பைபிள் பல இடங்களில் கூறுவதை என்ன செய்யப் போகிறார்கள்? இதோ இயேசு மனுஷ குமாரன் தான் என்று பைபிள் அடித்துச் சொல்வதைப் பாருங்கள்!

அதற்கு இயேசு, "நரிகளுக்கு குழிகளும், ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு; மனுஷ குமாரனுக்கோ தலை சாய்க்க இடமில்லை'' என்றார்." - மத்தேயு (8:20)
பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷ குமாரனுக்கு அதிகாரம் உண்டென்பதை நீங்கள் அறிய வேண்டும் என்று சொல்லி, திமிர்வாதக்காரனை நோக்கி, "நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக் கொண்டு, உன் வீட்டுக்குப் போ'' என்றார். - 
(மத்தேயு 9:6)
"ஜனங்கள் அதைக் கண்டு ஆச்சரியப்பட்டு மனுஷருக்கு இப்படிப்பட்ட அதிகாரத்தைக் கொடுத்தவராகிய தேவைன மகிமைப்படுத்தினார்கள்." - 
(மத்தேயு 9:8)
"பின்பு இயேசு பிலிப்புச் செசரியாவின் திசைகளில் வந்த போது, தம்முடைய சீஷரை நோக்கி மனுஷ குமாரனாகிய என்னை ஜனங்கள் யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார்." - 
(மத்தேயு 16:13)
"மனுஷ குமாரன் தம்முடைய பிதாவின் மகிமை பொருந்தினவராய்த் தம்முடைய தூதரோடுங் கூட வருவார்; அப்பொழுது அவனவன் கிரியைக்குத் தக்கதாக அவனவனுக்குப் பலனளிப்பார்." - 
(மத்தேயு 16:27)
"அவர்கள் கலிலேயாவிலே சஞ்சரிக்கும் போது, இயேசு அவர்களை நோக்கி மனுஷ குமாரன், மனுஷர் கைகளில் ஒப்புக் கொடுக்கப்படுவார் எனக் கூறினார்." - 
(மத்தேயு 17:22)
"ஆனாலும் எலியா வந்தாயிற்று என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். அவனை அறியாமல் தங்கள் இஷ்டப்படி அவனுக்குச் செய்தார்கள்; இவ்விதமாய் மனுஷ குமாரனும் அவர்களால் பாடுபடுவார் என்றார்." - 
(மத்தேயு 17:12)
"அவர்கள் மலையிலிருந்து இறங்குகிற போது, இயேசு அவர்களை நோக்கி, "மனுஷ குமாரன் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கும் வரைக்கும் இந்தத் தரிசனத்தை ஒருவருக்கும் சொல்ல வேண்டாம்'' என்று கட்டளையிட்டார்."
-(மத்தேயு 17:9)
அதற்கு இயேசு, "மறுஜென்ம காலத்திலே மனுஷ குமாரன் தம்முடைய மகிமையுள்ள சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கும் போது, என்னைப் பின்பற்றின நீங்களும் இஸ்ரவேலின் பன்னிரெண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்க்கிறவர்களாகப் பன்னிரெண்டு சிங்காசனங்களின் மேல் வீற்றிருப்பீர்கள்'' என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். - 
(மத்தேயு 19:28)
"இதோ, எருசலேமுக்குப் போகிறோம்; மனுஷ குமாரன் பிரதான ஆசாரியரிடத்திலும், வேதபாரகரிடத்திலும் ஒப்புக் கொடுக்கப்படுவார்; அவர்கள் அவரை மரண ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்து... " - 
(மத்தேயு 20:18)
"அப்படியே மனுஷ குமாரனும் ஊழியங்கொள்ளும் படி வராமல், ஊழியஞ்செய்யவும், அநேகரை மீட்கும் பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார் என்றார்." - 
(மத்தேயு 20:28)
"மின்னல் கிழக்கிலிருந்து தோன்றி மேற்கு வரைக்கும் பிரகாசிக்கிறது போல, மனுஷ குமாரனுடைய வருகையும் இருக்கும்." - 
(மத்தேயு 24:27)
"மனுஷ குமாரன் தம்மைக் குறித்து எழுதியிருக்கிறபடியே போகிறார். ஆகிலும் எந்த மனுஷனால் மனுஷ குமாரன் காட்டிக் கொடுக்கப்படுகிறாரோ அந்த மனுஷனுக்கு ஐயோ; அந்த மனுஷன் பிறவாதிருந்தானானால் அவனுக்கு நலமாயிருக்கும் என்றார்." - 
(மத்தேயு 26:24)
"அதற்கு இயேசு, நீர் சொன்னபடி தான். அன்றியும், மனுஷ குமாரன் சர்வ வல்லவருடைய வலது பாரிசத்தில் வீற்றிருப்பதையும் வானத்தின் மேகங்கள் மேல் வருவதையும் இது முதல் காண்பீர்களென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்." - 
(மத்தேயு 26:64)
"பின்பு அவர் தம்முடைய சீஷர்களிடத்தில் வந்து இனி நித்திரை பண்ணி இளைப்பாறுங்கள்; இதோ, மனுஷ குமாரன் பாவிகளுடைய கைகளில் ஒப்புக் கொடுக்கப்படுகிற வேளை வந்தது என்றார்." - 
(மத்தேயு 26:45)
பைபிளின் மேற்கண்ட வசனங்கள் அனைத்திலும் இயேசு தன்னைப் பற்றிக் கூறும் போது மனுஷ குமாரன் என்று குறிப்பிட்டுள்ளார். பொதுவாக எந்த மனிதரும் தன்னைப் பற்றி பேசும் போது மனுஷ குமாரன் என்று குறிப்பிட மாட்டார். இவ்வாறு பேசுவது வழக்கத்தில் இல்லாமல் இருந்தும் இயேசு தன்னைப் பற்றிக் கூறும் போது மனுஷ குமாரன் என்று அறிமுகம் செய்கிறார். தந்தை இல்லாமல் பிறந்ததால் அறிவற்றவர்கள் தன்னை கடவுளின் மகன் என்று எண்ணி விடக் கூடாது என்பதற்காகவே தன்னை மனுஷ குமரன் என்று இயேசு கூறுகிறார் என்று நாம் ஊகிக்கலாம்.

மற்ற சுவிஷேசங்களிலும் பல இடங்களில் இயேசு மனுஷ குமாரன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இயேசுவை இறை மகன் எனக் கூறும் வசனங்களை விட இவை அதிக எண்ணிக்கையிலானவை. இயேசு கடவுள் தன்மை பெற்றவராக அல்லது கடவுளின் மகனாக ஆகி விட்டார் என்றால் அவர் தம்மை மனுஷ குமாரன் என ஏராளமான சந்தர்ப்பங்களில் குறிப்பிட்டது ஏன்?

நாம் எடுத்துக் காட்டிய இந்த வசனங்கள் யாவும் இயேசு கடவுளாகவோ, கடவுளுக்குப் பிறந்தவராகவோ, கடவுள் தன்மை பெற்றவராகவோ இருக்கவில்லை என ஐயத்திற்கிடமின்றி அறிவிக்கின்றன. இவற்றுக்கு முரண்படாத வகையில் தான் இறை மகன் என்பதை விளங்க வேண்டும். இல்லையென்றால் மேற்கண்ட பைபிள் வசனங்களை நிராகரிப்பதாக ஆகும்.

"இறைவனுக்குக் கட்டுப்பட்டு நடந்தவர்; இறைவனுக்கு விருப்பமான செயல்களைச் செய்து வந்த நல்ல மனிதர்'' என்று இறை மகன் என்பதைப் புரிந்து கொண்டால் மேலே எடுத்துக் காட்டிய பைபிளின் அனைத்து வசனங்களையும் ஏற்றுக் கொண்டதாக ஆகும்.

கிறித்தவர்கள் இரண்டில் எதைச் செய்யப் போகிறார்கள்? இவ்வளவு தெளிவான சான்றுகளுக்குப் பின்னரும் இறை மகன் என்பதை இறைவனின் புதல்வன் என்றோ இறைவன் என்றோ பொருள் கொள்வதில் கிறித்தவர்கள் பிடிவாதம் காட்டினால் பைபிளில் இறை மகன் எனக் கூறப்பட்ட அனைவரையும் அவர்கள் அவ்வாறு ஏற்றுக் கொள்ள வேண்டும். அது தான் நேர்மையான பார்வையாகும்.

இன்னும் சொல்லப் போனால் இயேசுவை வழிபடும் இவர்களே  இயேசுவைப் போல் இறை குமாரர்கள் தாம்! அப்படித் தான் பைபிள் கூறுகிறது.
தாங்களே இறை மக்களாக - அதாவது இறைவனாக - இருக்கையில் இன்னொருவரை வழிபடலாமா?
இரண்டு அர்த்தங்களில் அவர்கள் எதை ஏற்றாலும் இயேசுவை அழைக்கவோ, வழிபடவோ எந்த நியாயமும் கிடையாது.

                                                                         இன்ஷா அல்லாஹ்  தொடரும்....

Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger