சவூதியில் மகளைக் கொன்ற தந்தைக்கு 4 மாதமே தண்டனையா?

கேள்வி - மகளைக் கொன்ற தந்தைக்கு மரண தண்டனை கிடையாது என்று சவூதியில்தீர்ப்பளிக்கப்பட்டதை வைத்து, தமிழகத்தில் உள்ள அறிவுஜீவிகளும், தொலைக்காட்சிகளும், பத்திரிகைகளும்கடுமையான விமர்சனத்தை வைக்கின்றனர். சவூதி அரசைக் குறை சொல்லும் சாக்கில் இஸ்லாமிய சட்டங்களையும்போகிற போக்கில் விமர்சித்து வருகின்றனர்.


பெற்ற பிள்ளையைக் கொன்ற தந்தைக்கு மரண தண்டனை இல்லை என்பது இஸ்லாமியச்சட்டமா? அல்லது சவூதியில் உள்ள சட்டமா? சம்பந்தப்பட்டவர் மதகுரு என்பதால் மரண தண்டனைகொடுக்கப்படாமல் காப்பாற்றப்பட்டாரா?

அந்தத் தந்தை தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தாரா?

மேற்கண்ட சந்தேகங்களை விளக்கவும்.

முகம்மதுஅன்சாரி, மந்தைவெளி, சென்னை

மற்றும் பல சகோதரர்கள்


பதில் – நமது மிருகபுத்திரன், மகஇக, போன்ற அறிவீனர்கள் மற்றும் நடுநிலை வேடம்போடும்சிறந்த நடிகர்களான அறிவுஜீவிகள் ஆகிய அனைவரின் அயோக்கியத்தனங்களும் இந்த விஷயத்தில் அம்பலத்துக்குவந்துவிட்டன. இவர்கள் முஸ்லிம்கள் சம்பந்தப்பட்ட எந்தச் செய்தியையும் ஆய்வு செய்யாமல் கற்பனைகளையும்கட்டுக்கதைகளையும் எழுதி எழுத்து விபச்சாரம் செய்பவர்கள் என்பதும், எழுத்து பயங்கரவாதிகள் என்பதும் மீண்டும்ஒரு முறை நிரூபணமாகிவிட்டது.

மகளைச் சீரழித்துக் கொன்ற மதகுருவிற்கு மரண தண்டனையிலிருந்து விடுதலை என்ற செய்தி முற்றிலும்பொய்யானதாகும்.

நமது நாட்டில் குற்றம் சாட்டப்பட்டவரை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தும்போது பதினைந்து நாட்கள் நீதிமன்றக்காவலில் வைக்குமாறு நீதிபதிகள் உத்தரவிடுவார்கள். இது அவர் செய்த குற்றத்திற்கான தண்டனை அல்ல.மாறாக விசாரணைக்கு இடைஞ்சல் ஏற்படக்கூடாது என்பதற்காக விசாரணைக் கைதிகளுக்கு அளிக்கப்படும்ஆரம்பகட்ட தண்டனையாகும். இதன்பின்னர் விசாரணை நடந்து பல ஆண்டுகளுக்குப்பின் குற்றம் நிரூபிக்கப்பட்டுஅவருக்கு உரிய தண்டனை வழங்கப்படும்.

அதுபோல்தான் மகளைக் கொன்ற தந்தை குற்றவாளியா இல்லையா என்பதை விசாரித்து முடிக்கும்வரைநான்கு மாத சிறை தண்டனை அளித்து சவூதி நீதி மன்றம் உத்தரவிட்டது. இதன்பின்னர் தேவை ஏற்பட்டால்விசாரணைக் கைதியான அவரது சிறைவாசம் நீடிக்கப்படும். இது குற்றத்திற்கான தண்டனை அல்ல. குற்றம்சாட்டப்பட்டவரை தடுத்து வைப்பதற்கான ஆரம்ப கட்ட ஏற்பாடுதான்.

இம்மாதம் 13ஆம் தேதிதான் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. அதன்பின்னர் பலகட்டவிசாரணைக்குப்பின்னர் அவர் குற்றாவளி என்று நிரூபிக்கப்பட்டால்தான் அவருக்கு உரிய தண்டனை வழங்கப்படும்.

பத்து கொலைகள் செய்த ஒருவனை நீதி மன்றத்தில் நிறுத்தியவுடன், 15 நாட்கள் காவலில் வைக்க நீதி மன்றம்உத்தரவிடும்போது இவனுக்கான தண்டனையே 15 நாட்கள்தான் என்று கடுகளவு மூளையுள்ள எவனாவதுசொல்வானா? இதுபோன்ற ஆரம்ப கட்ட உத்தரவைத்தான் இந்த அறிவு கெட்ட மூடர்கள் அறிவாளிகள் போர்வையில்மனசாட்சியை அடகு வைத்துவிட்டு உளறிக் கொட்டி வருகின்றனர். நான்கு மாத சிறை தண்டனை என்பதைதவறாகப் புரிந்து கொண்ட கல்ஃப் நியூஸ் என்ற பத்திரிகை பின்னர் அச்செய்திக்கு வருத்தம் தெரிவித்துக் கொண்டது.

இதை அப்படியே வாந்தி எடுத்த அயோக்கிய சிகாமணிகள் இன்னமும் வருத்தம் தெரிவிக்காமல் பொய்யைஉண்மையாக்கும் கோயபல்ஸ் வேலையில் இறங்கியுள்ளனர். இவர்களுக்கு நிகரான கழிசடைகள் உலகில் யாருமேஇருக்கமுடியாது என்றுதான் நாம் கருத வேண்டியதிருக்கிறது.

அடுத்து மதகுரு என்பதற்காக சலுகை என்பதும் அயோக்கியத்தனத்தின் வெளிப்பாடாகும். சவூதிநீதிமன்றங்களில் ஒருவர் மதகுருவா இல்லையா என்பது கவனத்தில் கொள்ளப்படுவது இல்லை. சட்டத்தின் முன்அனைவரும் சமம் என்பதை சரியாகக் கடைப்பிடிக்கும் சில நாடுகளில் சவூதியும் ஒன்றாகும்.

பெரும்பான்மைக்கு ஒரு நீதி, சிறுபான்மைக்கு ஒரு நீதி; அத்வானிக்கு ஒரு நீதி, அப்துல்காதருக்கு வேறு ஒருநீதி என்று நமது நாட்டில் இருப்பது போல் அதிகமான நாடுகளில் பாரபட்சம் காட்டப்படுவதில்லை. சவூதியில்மதகுருவாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் சவூதியின் சட்டப்படிதான் தண்டிக்கப்படுவார்.

சில முஸ்லிம் இணையதளங்கள் அவர் மதகுரு அல்ல என்று நீண்ட விளக்கம் அளித்து கோமாளித்தனம்செய்துள்ளனர். அவர் தொலைக்காட்சியில் பிரச்சாரம் செய்பவரே தவிர மதகுரு அல்ல என்று விளக்க வேண்டியஅவசியம் ஏதுமில்லை.

ஒருவன் குற்றவாளியா இல்லையா என்ற பிரச்சனை பற்றி பேசும்போதுகூட மதகுருக்களைப் பாதுகாக்கும்வகையில் முட்டுக்கொடுப்பது ஈனச்செயலாகும். அவர் மதகுருவாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவருக்காகசட்டம் வளைந்ததா என்பதுதான் முக்கியம். சட்டம் வளையவில்லை எனும்போது அவர் மதகுருவா அல்லவா என்றசர்ச்சை தேவையற்றது. 

தனது மகளைக் கற்பழித்துக் கொன்றார் என்பது அறிவுஜீவி மூடர்களின் கற்பனையாகும். இவர்களுக்கு நாணயம்நேர்மை இருந்தால் அதற்கான ஆதாரத்தை வெளியிடவேண்டும்.

மருத்துவப் பரிசோதனையில் இவ்வாறு சொல்லப்பட்டதா அல்லது வழக்குத் தொடர்ந்த தாய் இவ்வாறு புகார்தெரிவித்து இருந்தாரா என்பதை வைத்தே இவ்வாறு கூற இயலும்.

குழந்தையின் தாய் தனது கணவருக்கு மரண தண்டனை கொடுக்கவேண்டும் என்று வழக்கு தொடர்ந்துஇருக்கிறார். கொலை செய்ததற்குத்தான் இந்த தண்டனையை கோரி இருக்கிறார். கற்பழிப்பு பற்றி கூறவில்லை.

மேலும் இந்தியாவில் உள்ள மூடர்களும், மேற்கத்திய மூடர்களும் இப்படி விஷமப் பிரச்சாரம் செய்தபின்னர்,அந்தத்தாய் இதைக் கண்டித்துள்ளார். இது அப்பட்டமான பொய் என்றும் மறுத்துள்ளார்.

அந்தக்குழ்ந்தையின் மருத்துவ ஆய்விலும் கற்பழித்ததற்கான சான்றுகள் இல்லாத நிலையில் இவர்கள்இஸ்லாத்தின் மீது உள்ள வெறுப்பின் காரணமாகவே இட்டுக்கட்டி அவதூறு பரப்புகின்றனர்.

முன்பு ரிசானா விவகாரத்தில் 4மாதக் குழந்தை கழுத்து நெறித்துக் கொல்லப்பட்டதாக மெடிக்கல் ரிப்போர்ட் இருந்தநிலையில் மெடிக்கல் ரிப்போர்டில் இருந்த உண்மையை மறுத்து குழந்தை மூச்சுத்திணறிதான் இறந்தது என்றுஇவர்களாக கதை எழுதினார்கள்.

தற்போது இந்த விவகாரத்தில் 5வயது குழந்தையை கற்பழித்ததற்கான எந்த சான்றுகளும் இல்லாத நிலையில்இல்லாத ஒரு விஷயத்தை இருப்பதாகக் கூறி கதையளக்கின்றனர் என்பதிலிருந்தே இவர்களது மூளை இஸ்லாத்தைஎதிர்க்கும் விஷயத்தில் மட்டும் சிந்திக்க மறுக்கின்றது என்பது உறுதியாகின்றது. 

பெற்ற பிள்ளையைக் கொன்ற தந்தைக்கு மரணதண்டனை கிடையாது என்ற சட்டம் இருப்பதாகவும், அதுகாட்டுமிராண்டித்தனமானது என்றும் அறிவு ஜீவி மூடர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

பிள்ளையை தந்தை கொன்றாலும் அவருக்கும் மரணதண்டனை என்பதே சவூதியின் சட்டமாகும். ஏற்கனவேஇதுபோன்ற வழக்குகளில் மரணதண்டனை அளித்து தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது.

அரப் நியூஸ் என்ற பத்திரிகை கீழ்க்கண்ட செய்தியை வெளியிட்டுள்ளது.

சவூதியின் வடமேற்கு பகுதியான தபூக் பகுதியைச் சேர்ந்த முஸ்லெஹ் பின் ஸலீம் அல் அதாவி என்ற சவூதி நாட்டுக்காரர் தனது 5 வயது மகளை கொன்றதற்காக, நவம்பர் 2010 -இல் மரண தண்டனை விதிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.

பார்க்க : இந்த செய்திக்கான ஸ்கிரீன் ஷாட் 



இந்தக் கூறு கெட்டவர்கள் சொல்வதுபோல் மகளைக் கொன்ற தந்தைக்கு மரணதண்டனை இல்லை என்று சவூதியில் சட்டமே இல்லை என்னும்போது இல்லாத சட்டம் குறித்து வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கிறார்கள்.இதிலிருந்து இவர்கள் உடல் முழுவதும் இஸ்லாத்திற்கு எதிரான நஞ்சுக்கருத்து பரவியுள்ளது என அறிய முடிகிறது.

நடந்த உண்மைகளை நாம் எழுதும்போது நம்மை சவூதியின் ஏஜெண்டுகள் என்று இவர்கள் எழுதி தங்களைசொரிந்து கொள்கின்றனர்.

நாம் சவூதியின் பல நிலைப்பாடுகளை கடுமையாக எதிர்த்து வருகிறோம். சவூதியில் இருந்தோ அல்லது எந்தஒரு வெளிநாட்டிடம் இருந்தோ எந்தவித நிதி ஆதாரங்களையும் பெறுவது இல்லை என்பதை கொள்கை முடிவாகஎடுத்து அதை எங்களது அமைப்பின் சட்டவிதிகளிலும் (பைலா) தெளிவாக குறிப்பிட்டு, அதன்படி செயல்பட்டு வரும்இயக்கம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்று இந்நேரத்தில் இங்கு பதிவு செய்கிறோம்.

நான் யு.ஏ.இ, சென்றிருந்தபோது, எனது பிரச்சார நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்து என்னை அந்தநாடுகள் திருப்பி அனுப்பின. இதற்குக் காரணம், நாம் அரபு நாடுகளுக்கு எதிராகப் பேசியதை மொழிபெயர்த்து சிலமுஸ்லிம் பெயர்தாங்கிகள் போட்டுக் கொடுத்ததுதான் என்பதையும் பதிவு செய்கிறோம்.

அடுத்து இஸ்லாம் இதுகுறித்து என்ன சொல்கிறது என்பதைப் பார்க்கலாம். பிள்ளையை தந்தை கொன்றால்,மனைவியை கணவன் கொன்றால் அண்ணனை தம்பி கொன்றால், மரண தண்டனையில்லை என்று இஸ்லாம்சொல்கிறதா என்றால் நிச்சயமாக இல்லை.

மரண தண்டனை பற்றிய விதிகளை குர்ஆன் பல்வேறு இடங்களில் சொல்லிக்காட்டுகிறது.

முதல் மனிதரான ஆதமின் இரு புதல்வர்களில் ஒருவர் மற்றவரை கொலை செய்துவிட்டார். அதாவது ஒருவர்தனது உடன் பிறந்த சகோதரரைக் கொன்றுவிட்டார் என்பதை திருக்குர் ஆன் 05 : 27 முதல் 30 வரை உள்ளவசனங்கள் சொல்லிக்காட்டுகின்றன.

இந்த அத்தியாயத்தின் 32 ஆம் வசனத்தில் இஸ்ரவேல் சமுதாயத்தினருக்கு கொலை குறித்த கடும் எச்சரிக்கை விடப்பட்டதாக கூறிக்காட்டப்படுகின்றது. இஸ்ரவேல் சமுதாயத்திற்கு கொலைக்கு கொலை அதாவது உயிருக்குஉயிர் என்ற சட்டம் வழங்கப்பட்டதாக இதே அத்தியாயத்தின் 45வது வசனத்தில் அல்லாஹ் கூறுகின்றான் :

உயிருக்கு உயிர், கண்ணுக்குக் கண், மூக்குக்கு மூக்கு, காதுக்குக் காது, பல்லுக்குப் பல் மற்றும் காயங்களுக்குப் பதிலாக அதே அளவு காயப்படுத்துதல் ஆகியவற்றை அதில் (தவ்ராத்தில்) அவர்களுக்கு விதியாக்கினோம். (பாதிக்கப்பட்ட) யாராவது அதை மன்னித்தால் அது அவருக்குப் (பாவங்களுக்குப்) பரிகாரமாக ஆகும். அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோர் அநீதி இழைத்தவர்கள்.

அல்குர் ஆன் 5 : 45

மேற்கண்ட வசனம் கொலை குறித்த கீழ்க்கண்ட வசனத்தின் விளக்கமாக அமைந்துள்ளது.

தன் சகோதரரைக் கொல்லுமாறு அவனது மனம் தூண்டியது. அவரைக் கொன்றான். எனவே இழப்பை அடைந்தவனாக ஆகி விட்டான்.

தனது சகோதரரின் உடலை எவ்வாறு மறைப்பது என்று அவனுக்குக் காட்ட அல்லாஹ் ஒரு காகத்தை அனுப்பினான். அது பூமியைத் தோண்டியது. "அந்தோ! இந்தக் காகத்தைப் போல் இருப்பதற்குக் கூட என்னால் இயலவில்லையே! அவ்வாறு இருந்திருந்தால் என் சகோதரரின் உடலை மறைத்திருப்பேனே'' எனக் கூறினான். கவலைப்பட்டவனாக ஆனான். "கொலைக்குப் பதிலாகவோ, பூமியில் செய்யும் குழப்பத்திற்குப் பதிலாகவோ இல்லாமல் ஒருவர்,மற்றொருவரைக் கொலை செய்தால் அவர் எல்லா மனிதர்களையும் கொலை செய்தவர் போலாவார்' என்றும், "ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்' என்றும் இஸ்ராயீலின் மக்களுக்கு இதன் காரணமாகவே விதியாக்கினோம். அவர்களிடம் நம்முடைய தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தனர். இதன் பின்னர் அவர்களில் அதிகமானோர் பூமியில் வரம்பு மீறுவோராகவே உள்ளனர்.

அல்குர்-ஆன் 5 : 30 - 32

இவ்வசனங்கள் கூறுவது என்ன?

கூடப்பிறந்த சகோதரனைக் கொன்றாலும் அது கொடிய குற்றம்தான். மனித குலத்தையே கொன்ற குற்றமாக அது கருதப்படும் என்று இஸ்லாம் கூறுகிறது. கூடப்பிறந்த சகோதரானக இருப்பது மரணதண்டனையில் இருந்துகாப்பாற்றாது என்பதும், உறவுகளுக்குள் நடக்கும் கொலையும் கொலைதான் என்றும் இந்த வசனங்கள் தெள்ளத்தெளிவாக கூறுகின்றன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைத்தூதராக அனுப்பப்பட்ட காலத்தில் பெற்றவர்கள் தமது பெண்குழந்தைகளைக் கொன்று புதைத்து வந்தனர். அதைக் கண்டித்து திருத்துவதும் நபிகள் நாயகத்தின் முக்கிய பணியாகஇருந்தது. பின் வரும் வசனங்களைப் பாருங்கள் :

இவ்வாறே இணை கற்பிப்போரில் அதிகமானோர் தமது குழந்தைகளைக் கொல்வதை அவர்களின் தெய்வங்கள் அழகாக்கிக் காட்டி, அவர்களை அழித்து, அவர்களது மார்க்கத்தையும் அவர்களுக்குக் குழப்பி விட்டன. அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் இதைச் செய்திருக்க மாட்டார்கள். அவர்கள் இட்டுக் கட்டுவதோடு அவர்களை விட்டு விடுவீராக!

அல்குர் ஆன் : 06 – 137


அறிவில்லாமல் மடமையின் காரணமாகத் தமது குழந்தைகளைக் கொன்றவர்களும், அல்லாஹ்வின் பெயரால் இட்டுக் கட்டி, அல்லாஹ் தமக்கு வழங்கியதைத் தடுக்கப்பட்டதாக ஆக்கிக் கொண்டோரும் இழப்பு அடைந்தனர்; வழி கெட்டனர்; நேர் வழி பெறவில்லை.

அல்குர் ஆன் : 06 – 140,

என்ன பாவத்துக்காக கொல்லப்பட்டாள் என்று உயிருடன் புதைக்கப்பட்டவள் விசாரிக்கப்படும் போது

அல்குர் ஆன் : 81 – 08, 09

பெற்ற பிள்ளையைக் கொன்ற கயவர்களைத் திருத்த வந்த இஸ்லாம் அதை ஊக்குவிக்கும் வகையில்பிள்ளையைக் கொல்ல எப்படித் தூண்டும்?

"வாருங்கள்! உங்கள் இறைவன் உங்களுக்குத் தடை செய்ததைக் கூறுகிறேன்'' என்று (முஹம்மதே!) கூறுவீராக! அது, "நீங்கள் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்கக் கூடாது'' என்பதே. பெற்றோருக்கு உதவுங்கள்! வறுமையின் காரணமாக உங்கள் குழந் தைகளைக் கொல்லாதீர்கள்! உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கிறோம். வெட்கக்கேடான காரியங்களில் வெளிப் படையானதையும், இரகசியமானதையும் நெருங்காதீர்கள்! அல்லாஹ் தடை செய்துள்ளதால் எவரையும் (அதற்கான) உரிமை இருந்தால் தவிர கொல்லாதீர்கள்! நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக இதையே அவன் உங்களுக்கு வலியுறுத்துகிறான்.

அல்குர் ஆன் : 06 – 151,

அவர்களில் ஒருவனுக்குப் பெண் குழந்தை பற்றி நற்செய்தி கூறப்பட்டால் அவனது முகம் கருத்து,கவலைப்பட்டவனாக ஆகி விடுகிறான்.

அவனுக்குக் கூறப்பட்ட கெட்ட(தெ னக் கருதிய) செய்தியினால் சமுதாயத்திலிருந்து மறைந்து கொள்கிறான். இழிவுடன் இதை வைத்துக் கொள்வதா? அல்லது மண்ணில் இதை (உயிருடன்) புதைப்பதா? (என்று எண்ணுகிறான்) கவனத்தில் கொள்க! அவர்கள் தீர்ப்பளிப்பது மிகவும் கெட்டது.

அல்குர் ஆன்

அல்குர் ஆன் : 16 – 58,59,

வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள்! அவர்களுக்கும், உங்களுக்கும் நாமே உணவளிக்கிறோம். அவர்களைக் கொல்வது பெரிய குற்றமாகும்.

அல்குர் ஆன் : 17- 31

நபியே! (முஹம்மதே!) நம்பிக்கை கொண்ட பெண்கள் உம்மிடம் வந்து "அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்க மாட்டோம்; திருட மாட்டோம்; விபச்சாரம் செய்ய மாட்டோம்; எங்கள் குழந்தைகளைக் கொல்ல மாட்டோம்;நாங்களாக இட்டுக் கட்டி எந்த அவதூறையும் கூற மாட்டோம்; நல்ல விஷயத்தில் உமக்கு மாறு செய்ய மாட்டோம்''என்று உம்மிடம் உறுதி மொழி கொடுத்தால் அவர்களிடம் உறுதி மொழி எடுப்பீராக! அவர்களுக்காக அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடுவீராக! அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

அல்குர் ஆன் : 60 –12

குழந்தையைக் கொல்வது கொடிய குற்றம் எனக்கூறும் இஸ்லாத்தில், தந்தையானவர் மகளைக் கொன்றால்மரண தண்டைனை கிடையாது என்ற சட்டம் இருக்க இயலுமா?

பொதுவாக ஒரு உயிரைக் கொல்வது இஸ்லாத்தில் எவ்வாறு கடுமையாகப் பார்க்கப்படுகிறது என்பதையும்கீழ்க்காணும் வசனத்திலிருந்து அறிந்து கொள்ளலாம்.

நம்பிக்கை கொண்டவரை வேண்டுமென்று கொலை செய்பவனது கூலி நரகமே! அதில் அவன் நிரந்தரமாக இருப்பான். அவன் மீது அல்லாஹ் கோபம் கொண்டான். அவனைச் சபித்தான். அவனுக்குக் கடுமையான வேதனையைத் தயாரித்துள்ளான்.

அல்குர் ஆன் : 04 – 93

கொலைக்குற்றங்கள் அதிகரிக்கக்கூடாது என்பதுதான் இஸ்லாமியக் குற்றவியல் சட்டத்தின் நோக்கம் என்பதைபின்வரும் 02- 178, 179 ஆகிய வசனங்கள் தெளிவுடன் கூறுகின்றன.

நம்பிக்கை கொண்டோரே! சுதந்திரமானவனுக்காக (கொலை செய்த) சுதந்திரமானவன், அடிமைக்காக (கொலை செய்த) அடிமை, பெண்ணுக்காக (கொலை செய்த) பெண், என்ற வகையில் கொல்லப்பட்டோருக்காகப் பழி வாங்குவது உங்களுக்குக் கடமையாக்கப்பட்டுள்ளது. கொலையாளிக்கு (கொல்லப்பட்டவனின் வாரிசாகிய) அவனது (கொள்கைச்) சகோதரன் மூலம் ஏதேனும் மன்னிக்கப்படுமானால் நல்ல விதமாக நடந்து அழகிய முறையில் (இழப்பீடு) அவனிடம் வழங்க வேண்டும். இது உங்கள் இறைவன் எளிதாக்கியதும், அருளுமாகும். இதன் பிறகு யாரேனும் வரம்பு மீறினால் அவருக்குத் துன்புறுத்தும் வேதனை உள்ளது.

அறிவுடையோரே! பழிக்குப் பழி வாங்கும் சட்டத்தில் உங்களுக்கு வாழ்வு உள்ளது. (இச்சட்டத்தினால் கொலை செய்வதிலிருந்து) விலகிக் கொள்வீர்கள்.

அல்குர் ஆன் : 02- 178,179

தந்தை மகளை கொலை செய்தால் அவரை பழிக்குப் பழி வாங்கக்கூடாது என்று ஆதாரமில்லாத சிலஹதீஸ்கள் உள்ளன. அந்த செய்திகளின் அறிவிப்பாளர்கள் நம்பகமற்றவர்கள் என்பதாலும், குர்ஆனுக்கு இவைமாற்றமாக இருப்பதாலும் அவற்றின் அடிப்படையில் மிகப்பெரிய இந்தப் பிரச்சினையில் தீர்ப்பளிக்க முடியாது.

நன்றி - onlinepj.com 
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger