அன்னிய நாட்டின் உதவியின்றி நவீன தொழிற்நுட்பத்தில் அதிசிறந்ததொரு போர் விமானத்தை வடிவமைத்துள்ளதாக ஈரான் பெருமிதம் கொண்டுள்ளது.
வெற்றியாளன் என்று பொருள்படும்வகையில் இந்த எஃப் - 31 வகை விமானம் பெயர் சூட்டப்பட்டுள்ளது என்று ஈரான் அதிபர் அஹமதிநிஜத் ஈரானின் 34 ஆவது புரட்சி நாள் கொண்டாட்ட நிகழ்ச்சியில் தெரிவித்தார்.
உலகின் அதிநவீன போர் விமானங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும் என கூறிய ஈரான் அதிபர் ஒரு குறுவாள் என்று இப்போர் விமானத்தை வர்ணித்துள்ளார். இந்த விமானத்தை பல ஆயிரம் மணி நேரம் விமானிகள் பரிசோதித்ததாகவும் அதன் செயல்பாடுகள் திருப்தி அளிக்கும் வகையில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

Post a Comment