லாமேக்னடிக்: கனடாவின் கிழக்கே குயிக்பெக் மாகாணத்தின் லாமேக்னடிக் நகர் அருகே ஏற்பட்ட பெரும் ரயில் விபத்தில் 60-க்கும் மேற்பட்டோர் உடல் கருகி உயிரிழந்திருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் வடக்கு டோக்டா நகரில் இருந்து எண்ணெய் ஏற்றிக் கொண்டு 77 டாங்கர்களுடன் சென்ற ரயில், கனடாவின் கிழக்கே குயிக்பெக் மாகாணத்தின் லாமேக்னடிக் நகர் வந்த போது, திடீரென தடம் புரண்டு கட்டிட பகுதிக்குள் புகுந்து விபத்திற்குள்ளானது. இதில் 60-க்கும் மேற்பட்டோர் தீயில் கருகி உயிரிழந்திருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
காணொளி
சம்பவ இடத்தில் 200-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர். அமெரிக்காவிலிருந்தும் வரவழைக்கப்பட்ட தீயணைப்பு துறையினரும் இவர்களுடன் இணைந்து தீயை கட்டுக்குள் கொண்டுவர முயன்று கொண்டிருக்கின்றனர். பாதுகாப்பு கருதி ஆயிரக்கணக்கான மக்கள் அப்பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்..
Post a Comment