* எஸ்.எஸ்.எல்.சி முடித்தவர்களில் முற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் 30 வயதுவரை, பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் 32வயது வரை, எஸ்.சி மற்றும் எஸ்.டி வகுப்பைச் சேர்ந்தவர்கள் 35 வயது வரையில்வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, வேலை வாய்ப்பினை பெற முடியும்.இதற்கு மேல் படித்தவர்கள், 57 வயது வரையிலும் பதிவு செய்து வேலை வாய்ப்பினைபெறலாம்.
* பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள், அதற்குக் குறைவாக படித்தவர்கள் பள்ளிமாற்றுச் சான்றிதழ் மற்றும் குடும்ப அட்டையை வைத்து பதிவு செய்துகொள்ளலாம்.ஓட்டுநர் பணி போன்ற பணிவாய்ப்புகளை இதன் மூலம் பெற முடியும்.
* பள்ளிப் படிப்பு படிக்காதவர்கள்... பிறப்பு சான்றிதழ் மற்றும் குடும்ப அட்டை ஆகியஇரண்டையும் வைத்து பதிவு செய்யலாம். இவர்களுக்கு துப்புரவு பணி போன்றவாய்ப்புகள் கிடைக்கும்.
* மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை பதிவைப் புதுப்பிக்க வேண்டும். அதன்படிஜனவரி மாதம் ஒருவர் புதுப்பிக்க வேண்டும் என்றால், அவர் ஜனவரி, பிப்ரவரி, மார்ச்ஆகிய மூன்று மாதங்கள் வரை புதுப்பித்துக் கொள்ளலாம். அடுத்த 18 மாதங்கள்வரையில்கூட இவர்களுக்கு சலுகை வழங்கப்படுகிறது. அப்படியும்தவறுபவர்களுக்கு... அரசாங்க அறிவிப்பு மூலம் சலுகைகள் தரப்படுகின்றன.
* ஒரு மாவட்டத்தில் பதிவு செய்தவர், வேறு மாவட்டத்துக்கு மாற்றிக் கொள்வதற்கும்வாய்ப்பு வழங்கப்படுகிறது. உதாரணமாக, திருவண்ணாமலை மாவட்டத்தைச்சேர்ந்தவர், சென்னை மாவட்டத்துக்கு மாற நினைத்தால்... அவர் சென்னைக்குகுடிபெயர்ந்ததற்கு அத்தாட்சியாக சென்னை வட்டாட்சியரிடமிருந்து பெற்ற குடும்பகுடிபெயர்ச்சி சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் மற்றும் குடும்ப அட்டை ஆகியவற்றின்நகலை, திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரிலோஅல்லது தபாலிலோ விண்ணப்பிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட வட்டாட்சியர்அலுவலரிடம் உறுதிபெற்று பின்னர், சென்னை வேலைவாய்ப்பு அலுவலகத்துக்குமாற்றிக் கொடுப்பார்கள். இப்படி ஓர் ஆண்டுக்கு ஒருமுறைதான் மாற்றமுடியும்.
* புதிதாக பதிவு செய்பவர்கள், புதுப்பிக்க நினைப்பவர்கள், கூடுதல் தகுதிகளைஇணைக்க நினைப்பவர்கள் என அனைவருமே வேலைவாய்ப்பு அலுவலகத்தின்www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதள முகவரி மூலமாகவேகூட பதிவுசெய்யலாம். நேரில் செல்லத் தேவையில்லை. உங்களுக்கான அனைத்துவழிகாட்டல்களும் இதிலேயே கிடைக்கும். தவறான தகவல்கள் கொடுத்தால்,சான்றிதழ் சரிபார்த்தலின்போது பிடிபட்டு, அதற்கான நடவடிக்கையை எதிர்கொள்ளவேண்டியிருக்கும். பதிவு செய்தபின் அந்தப் பக்கத்தை அப்படியே நகல் எடுத்துவைத்துக் கொள்ளலாம்.
TNTJSW
|
வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்பவர்கள் கவனத்துக்கு..
Labels:
வேலைவாய்ப்புகள்
பிரபலமானவை
-
ஆக்கம் -அப்துல் கரீம், மேலப்பாளையம் உலகில் உள்ள படைப்புகளில் மிகச்சிறந்த படைப்பு மனிதன் என்பதை சொல்லித் தெரிய வேண்டிய தில்லை. இப்போது கா...
-
இறைவனின் திருப்பெயரால்... எதிர் பார்க்காத அளவிற்கு ஒரே நேரத்தில் நமது இணையதளங்கள் ஆயிரக்கணக்கானோரால் இரண்டு நாட்களாக பார்வையிடப்பட்டதால்...
-
வெளிநாட்டில் இருக்கும் ஒருவருடன் நாம் இலவசமாக எளிதில் பேச இன்று பலரும் பயன்படுத்துவது ஸ்கைப்பில் இருக்கும் ஆபத்துகள் உண்மையில் பலருக்கு த...
-
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்மத்துல்லாஹ்) இந்த பதிவை எல்லா சகோதரர்களும் முழுவதுமாக நிச்சயம் படிப்பீர்கள் என்று நம்புகிறேன். மேலும...
-
''யாருடைய சுயபுத்தியும் சொல்லாத எந்த விஷயத்தையும் இந்தச் சாமியார்கள் சொல்லிவிடுவது இல்லை. ஆனால், அவர்களின் தோற்றம் தரும் மாயை, அவர்...
-
சென்னை: தமிழகத்தில் இன்று நடைபெற்ற ராஜ்யசபா தேர்தலில் மாலை 4 மணியுடன் முடிவடைந்த வாக்குப் பதிவு முடிவில் மொத்தம் 231 வாக்குகள் பதிவாகி இர...
-
தமிழகத்தின் சட்டப்பேரவையிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவைக்கு நடந்த தேர்தல்களில், எதிர்பார்த்தபடியே, ஆளும் அதிமுகவின் நான்கு ...
-
துப்பாக்கி என்ற படம் வெளிவந்து சிலர் போராட்டம் நடத்திய பிறகுதான் இது குறித்து நமக்கு தகவல் வந்தது. அந்தப் படத்தில் முஸ்லிம்களை எவ்வாறு சி...
-
எவ்வாறு பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று அல்லாஹ்வும் அவனது தூதரும் கற்றுத் தந்தார்களோ அந்த முறையில் செய்யப்படும் எல்லா பிரார்த்தனைகளும் இ...
-
இந்த உலகம் டிசம்பர் 21ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று அழியப்போகின்றது என்ற மூட நம்பிக்கைக்கு எதிராக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வெளியிட்ட பிரசுரத...

Post a Comment