டவுன் சின்ட்ரோம் (மன நலிவு நோய்) நோயினை கருவிலேயே கண்டறிவதற்கான நவீன முறையொன்றை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
பிறக்கவுள்ள குழந்தையிடம் டவுன் சின்ட்ரோம் நோய்க்கான அறிகுறி காணப்படுகிறதா என்பதைக் கண்டறிவதற்கு தற்போது கடைப்பிடிக்கப்படும் நடைமுறைகள் சற்று பாரதூரமானவை என்று கருதப்படுகின்றது.
இப்போது கண்டறியப்பட்டுள்ள புதிய நடைமுறையில், தாயின் இரத்தத்தை பரிசோதிப்பதன் மூலம் அதனைக் கண்டுபிடித்துவிட முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.குறிப்பாக, கர்ப்பப்பையில் கரு கலைந்துபோகக்கூடிய அபாயம் இருப்பதாக நம்பப்படுகின்றது.
தாயின் இரத்தத்தில் காணப்படும் முற்றாக வளர்ந்த கருவின் டிஎன்ஏ தகவல்கள் அடங்கிய அணுக்களை இந்த முறைமூலம் பரிசோதிக்க முடியும்.
லண்டன் கிங்ஸ் காலேஸ் மருத்துவமனையில் 1000 பெண்களிடத்தில் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் மூலம், இந்த முறை 99 வீதத்துக்கும் அதிகப்படியாக சரியான முடிவைக் காட்டும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்த இரத்தப் பரிசோதனை முறை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு பரீட்சார்த்தமாக 20 ஆயிரம் பெண்களிடத்தில் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை முஸ்லிம்
Post a Comment