கடலில் மீன் பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் 49 மீனவர்களை எல்லையை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
இந்நேரம்
இதே காரணங்களுக்காக, கடந்த ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி மீன் பிடிக்க சென்றிருந்த காரைக்காலைச் சேர்ந்த மீனவர்கள் 26 மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்து சென்றனர். கடந்த மே மாதம் 21-ஆம் தேதி இவர்கள் மீது எந்தவித குற்றமும் இல்லை என இலங்கை, மன்னார் நீதிமன்றம் இவர்களை விடுவித்தது நினைவிருக்கலாம்.
கடந்த ஏப்ரல் 15-ம் தேதி முதல் மீன்பிடி தடைகாலம் துவங்கியது. அதன்போது மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
மீன் பிடி தடைகாலம் முடிந்து ராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த 1-ஆம் தேதி முதல் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். முதல் இரு நாட்களாக மீன்பிடித்து பிரச்சனை ஏதுமின்றி கரை திரும்பிய மீனவர்கள், மூன்றாவது நாள் காலை 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன் பிடிக்க சென்றனர். இவர்கள் வழக்கமாக மீன்பிடித்து விட்டு மறுநாள் கரை திரும்ப வேண்டும்.
ஆனால், கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களது 10 விசைப்படகுகளையும், அதில் சென்றிருந்த 49 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் பிடித்து சிறையிலடைத்தனர்.
இந்நிலையில், தமிழக மீனவர்கள் இலங்கை கடல் பகுதிக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என மாநில மீன்வளத்துறை உயரதிகாரிகளிடம் இருந்து மீன்துறை உதவி இயக்குநர்களுக்கு தகவல் வந்தது. இத்தகவலை மீனவர்களிடம் தெரிவிப்பதற்கு முன் அவர்கள் கடலுக்குச் புறப்பட்டுச் சென்று விட்டனர். எச்சரிக்கை தகவல் தாமதமாக வந்ததால் மீனவர்கள் இலங்கை கடற்படையினரிடம் சிக்கி கொண்டனர்.
இச்சம்பவம் ராமேஸ்வரம் மீனவர்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியது. இதையடுத்து, ராமேஸ்வரத்தில் நடந்த மீனவர்கள் சங்க அவசர கூட்டத்தில் பிடிபட்ட படகுகளுடன் 49 மீனவர்களையும் ஜூன் 20-ஆம் தேதிக்குள் விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கை சிறையில் உள்ள 49 மீனவர்களை விடுதலை செய்ய கோரி, ஜூன் 22-ல், ராமேஸ்வரம் மீனவர்கள் படகில் வெள்ளை கொடி ஏற்றி, இலங்கை அரசிடம் தஞ்சம் கேட்டு மீனவர்கள் இலங்கை நோக்கி செல்வது, மேலும் இருநாட்டு மீனவர்கள் பிரச்சனைக்கு சுமூகமான தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினர்.
இதுபற்றி இந்திய அரசு சார்பில், இலங்கையிலுள்ள இணைத் தூதரக அதிகாரி தெட்சிணாமூர்த்தி கூறுகையில்,
"தற்போது சிறைபிடிக்கப்பட்ட 49 மீனவர்களையும், 10 படுகுகளையும் மீட்க இந்திய அரசு சார்பில் முயற்சி மேற்கொண்டுள்ளோம். முதல் கட்டமாக இந்த மீனவர்கள் இருக்கும் யாழ்பாணம் மற்றும் அனுராதபுரம் சிறைகளுக்கு சென்று அவர்களுக்கு ஆறுதல் கூறியதோடு, அவர்களுக்கு உணவு, உடை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை விநியோகம் செய்து வந்தோம். இந்த மீனவர்கள் வரும் ஜூன் 20-ஆம் தேதி வரை பிணையில் உள்ளனர், இந்திய அரசாங்கம் இவர்களை மீட்க துரித ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது" என்றார்.

Post a Comment