உலகின் வாழும் மிகவும் வயதான மனிதராக அங்கீகரிக்கப்பட்ட, சரித்திரம்
படைத்த 116 வயது ஜப்பானிய மனிதர் காலமானார்.
ஜிரோயிமொண் கிமறு அவர்கள் கியூதாங்கோ க்யோட்டா நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் இயற்கை மரணம் எய்தினார்.
உலக சரித்திரத்தில் மிகவும் அதிகமான வயதான மனிதராக கடந்த டிசம்பரில் கின்னஸ் உலக சாதனைப் பட்டியலில் இவர் இடம்பிடித்தார்.
இவருக்கு 7 பிள்ளைகளும், 14 பேரப்பிள்ளைகளும், 25 பூட்டப் பிள்ளைகளும் இருந்ததாகக் கூறப்படுகின்றது. அவரது பூட்டப்பிள்ளைகளுக்கும் 13 குழந்தைகள் இருக்கின்றனவாம்.
1897ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் திகதி பிறந்தார்.
ஓய்வுபெறும் வரை ஒரு உள்ளூர் தபால் அலுவலககத்தில் அவர் பணியாற்றினார். பின்னர் 90வயதுவரை விவசாயத்தில் அவர் ஈடுபட்டுள்ளார்.
Post a Comment