வெளிநாட்டினர் வெளியேற்றப்படுவது கேவலமானது - குவைத் உயரதிகாரி

வெளிநாட்டினர் வெளியேற்றப்படுவது கேவலமானது -  குவைத் உயரதிகாரிகுவைத்குவைத்தில் வசித்து வரும் பிற நாட்டவர்களை குறி வைத்து அவர்களை வெளியேற்றும் நோக்குடன் கடுமையான சோதனை நடைபெறுவது குறித்து ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம்.

தற்போதைய நிகழ்வுகள் குறித்து குவைத் வெளிநாட்டு தொழிலாளர்கள் அமைப்பு (Kuwait Expatriate Labour Forces - KTUF) கடுமையாக கேலி செய்துள்ளது.

இதன் தலைமை இயக்குனர் அப்துல் ரஹ்மான் அல்கானிம் குறிப்பிடுகையில், வெளிநாட்டினர் கைது செய்யப்படும் போது அவர்களுக்கு தகுந்த கால அவகாசம் கொடுக்காமல் வெளியேற்றம் செய்யப்படுவதை கடுமையாக சாடியுள்ளார். வெளி நாட்டிலிருந்து பணி புரிய குவைத் வந்திருக்கும் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அரசு, அவர்களுக்கு விசா வழங்கும் ஸ்பான்சர்கள் மீதும், விசா வர்த்தகர்கள் (Visa Traders) மீதும், தங்களுடைய செல்வாக்கை பயன்படுத்தி போலி நிறுவனங்களை நடத்துபவர்கள் மீதும் ஏன் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

இத்தகைய வெளியேற்ற நடவடிக்கை, ஒழுங்கற்ற தொழிலாளர் சந்தை மீதும் அதற்கு காரணமானவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்காதவரை எத்தகைய பயனையும் தாரது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மாறாக பிற நாட்டினர் மத்தியில் குவைத்தின் மதிப்பை இது குறைக்கவே செய்யும் என்று கூறினார். 

மேலும், கைது செய்யப்படும் நபர்கள் சார்ந்த நாட்டின் தூதரகதிற்கு தகவல் கொடுக்காமலும், அவர்களது உடைமை மற்றும் பொருட்களை எடுப்பதற்கு போதுமான அவகாசம் கொடுக்காமலும் அவர்களை குவைத்தை விட்டு வெளியேற்றியமை குவைத்தை வரலாற்றில் இருண்ட நிலைக்கு கொண்டு சென்று விடும் என்று குறிப்பிட்டார். இது போன்ற நடவடிக்கைகளால் பிற நாடுகளுடனான இராஜிய உறவுகள் பாதிக்கபடுவது மட்டுமின்றி இவை முற்றிலும் கேவலமானது என்றும் குறிப்பிட்டார்.

இச் செய்தியுடன் தொடர்புடையவை..

குவைத் சட்டங்கள் பற்றிய சில தகவல்கள்



தகவல்: எச்.உமர் ஃபாரூக், குவைத்

இந்நேரம் 
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger