குவைத் வாழ் தமிழர்கள் கவனத்திற்கு...

குவைத்தில் நிலவி வரும் கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாகவும், சட்டத்திற்கு புறம்பான வகையில் குவைத்தில் வசித்து வரும் பிற நாட்டவர்களை வெளியேற்றும் நோக்குடனும் குவைத் அரசும் காவல்துறையும் கடந்த 2 மாத காலமாக சோதனையில் ஈடுபட்டுள்ளன. அண்மைய காலத்தில் இச்சோதனை மிகவும் கடுமையாக்கப்பட்டுள்ளது.

குவைத்தில் வெளிநாட்டவர்கள் தங்கியிருக்கும் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக ஷர்ஃக், பினைத் அல் கர், தஸ்மா, அப்பாஸியா போன்ற பகுதிகளில் முழூவிழ்ச்சில் சோதனைகள் நடக்கவிருப்தாக செய்திகள் தெரிவிக்கின்றன. 

ஆகவே, தமிழர்கள் அனைவரும் முன் எச்சரிக்கையோடு இருக்கும்படியும் தங்களுடைய அடையாள அட்டை (Civil ID), கடவுச்சீட்டு (Passport) உள்ளிட்ட ஆவணங்களை தங்கள் வசம் பாதுகாப்பாக வைக்கும்படியும், குடும்பத்துடன் வசிப்பவர்கள் திருமண சான்றிதழ் (Marriage Certificate) போன்ற ஆவணங்களை காவல்துறையினர் சோதனையின் போது சரிபார்க்க கேட்கும் சமயத்தில் கொடுக்க கூடிய வகையில் தயாராகவும் வைத்திருக்கவும்.

 வாகனங்கள் வைத்திருப்பவர்கள் அரபி சரியான முறையில் பேச தெரியாவிட்டால் தங்கள் குடும்பத்தினர் மற்றும் நிறுவனத்தினர் தவிர நண்பர்கள் உள்ளிட்ட வெளி நபர்கள் யாரையும் வாகனத்தில் ஏற்றிச் செல்ல வேண்டாம். குறிப்பாக விமான நிலையத்திற்கு அவர்களை விட்டு வர, அழைத்துச் செல்ல வேண்டாம். தங்களது வாகன பதிவு அட்டை (Registration Book) வாகனத்தில் இருக்கிறதா? என்பதை உறுதி செய்து கொண்டு வாகனத்தில் அமரவும்

 குவைத்தில் நடைபெற்ற சமீபத்திய சோதனைகள்:

https://www.facebook.com/photo.php?v=418570114907857&set=vb.198076380290566&type=3&theater


https://www.facebook.com/photo.php?v=418921554872713&set=vb.198076380290566&type=3&theater


https://www.facebook.com/photo.php?v=607849862566535&set=vb.100000245815241&type=2&theater

​​https://www.facebook.com/photo.php?v=438337122928841


இது குறித்த குவைத்தில் வெளிவரும் நாளிதழ் ஒன்றில் வெளிவந்துள்ள செய்தியின் தமிழாக்கம் கீழே தரப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக குவைத்தில் வெளிநாட்டவர்கள் வெளியேற்றம்  நடைபெறுகிறது. வெளியேற்றம் குறித்த சரியான காரணங்கள் இல்லாததால், வெளியேற்ற செயல்முறை பற்றி தெளிவின்மையால் வெளிநாட்டவர்கள் மத்தியில் அச்சமும்  குழப்பமும், பீதியும் ஏற்பட்டுள்ளதுடன் சிறு சிறு போக்குவரத்து தவறுகளுக்கு கூட வெளிநாட்டவர்கள் நாடு கடத்தப்பட்டு வருகின்றனர் என்ற பயம் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. இது குறித்து அரப் டைம்ஸ் நாளிதழ் உள்துறை அமைச்சகம் மற்றும் வெளிநாட்டு தூதரகங்கள் அமைச்சகத்தின் வழக்கறிஞர்கள் மற்றும் அதிகாரிகளை அணுகி பெற்ற விபரங்களாவன:

கடுமையான போக்குவரத்து மீறல்களுக்கு இதுவரை 2,000 வெளி நாட்டினர் வெளியேற்றபட்டு விட்டனர் என உள்துறை அமைச்சக கர்னல் ஆதில் அல் ஹஷாஷ் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். மேலும், ஒருவர் மூன்றுக்கும் மேற்பட்ட கடுமையான போக்குவரத்து மீறல்களைச் செய்தால் அவர் நாடு கடத்துபடுவது சட்டத்தின் படி உள்ளது எனவும், சிவப்பு விளக்கு சமிக்ஞையை தாண்டுவது, அதிவேகம், உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுவது போன்றவை தீவிர போக்குவரத்து மீறல்களாக கருதப்படுகின்றன எனவும் அவர் தெரிவித்தார்.

ஒவ்வொருவரும் தான் வசிக்கும் நாட்டின் சட்டங்களுக்கு உட்பட்டு நடக்கத்தான் வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள கர்னல், நாட்டின் குடியேற்ற சட்டங்களை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படத்தான் வேண்டும். ஆகவே, இந்நாட்டு சட்டங்களை மதித்து நடக்க முடியாது எனில் அவர்கள் சொந்த நாட்டிற்கு அனுப்பப்படுவதில் தவறேதும் இல்லை என்று தொண்டு நிறுவனங்கள் மற்றும் சிவில் சமூக உறுப்பினர்களின் ஆட்சேபனைகளுக்கு அவர் பதில் கூறினார்.  

சில கவனக்குறைவு ஓட்டுநர்கள் காரணமாக பல குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதை குறிப்பிட்ட கர்னல், சோதனையின் போது கைது செய்யப்படுபவர்கள் அன்றைய தினமே அவரவர் சொந்த நாட்டிற்கு அனுப்பபடுகிறார்கள் என்பதையும், வீடு வீடாக சோதனை நடக்கிறது என்பதையும் உறுதியாக மறுத்தார்.

எனினும், ஜ்லீப் அல் ஷ்யூக், சால்மியா மற்றும் சில பகுதிகளில் தனியார் அடுக்கு மாடி குடியிருப்புகளில் நடத்தப்பட்ட காவல்துறை சோதனைகள் பற்றி புகார்களை அரபு டைம்ஸ் நாளிதழ் பெற்றுள்ளது. 

தொழிலாளர் துறை வழக்கறிஞரான அல் ரியாஹி முசாஇத் வெளியேற்ற நடைமுறைகள் குறித்து கூறியதாவது:

குடியுரிமை இல்லாதவர்கள், நாள் ஒன்றுக்கு குவைத் தினார் 2 வீதம் அபராதம் செலுத்தி அதனை புதுபித்து கொள்ளலாம். அவ்வாறு புதுப்பித்துக் கொள்ளாதவர்கள் தான் நாடு கடத்தபடுவர். அவர்கள் மீது எவ்வித குற்றவியல் வழக்கும் நிலுவையில்  இல்லாத நிலையில் வெளியேற்றத்துறை அவர்களுடைய ஸ்பான்ஸரை அழைத்து அவரது பாஸ்போர்ட் மற்றும் அவரது இதர உடமைகள் குறித்து அறியும். அவர் பணிபுரியும் நிறுவனத்திடமிருந்து அவருக்கு சேர வேண்டிய சம்பளம் மற்றும் இதர வரவுத் தொகை எதுவும் இருக்குமானால் அவற்றைப் பெற்றுக் கொடுக்கப்படும். அல்லது அவர் தன்னுடைய நாட்டிலிருந்து சர்வதேச வழக்குரைஞரை நியமித்து தன்னுடைய பொருள்கள் மற்று இதர வரவுகளை பெற வழிவகை உண்டு.

ஆனால் போதிய பண வசதி இல்லாத காரணத்தால் வெளிநாட்டவர்கள் சர்வதேச வழக்குரைஞரை நியமிக்காமல், தங்களுக்கு சேர வேண்டியவைகளை பெறாமலேயே செல்ல கூடிய நிகழ்வுகள் நடக்கின்றன.

எதையும் பெறாமல் ஒருவர் நாடு கடத்தப்பட்டால், அவர் தனக்கென்று ஒருவரை நியமித்து விட்டுச் செல்லலாம், இதன் மூலம் அவருடைய வங்கி பாக்கி மற்றும் உடைமைகளை பெற்றுக் கொள்ளலாம்.  நாடு கடத்தப்படுபவருடைய அடையாள அட்டையை தனக்கு நம்பிக்கையான நபர்களிடம் கொடுத்துவிட்டு சென்றால் அதுவே இதற்கு போதுமானதாகும்.

நாடு கடத்தல் இரண்டு வகைப்படுகின்றன. ஒன்று வழக்கு சம்மந்தப்பட்டது; இதில் வழக்கறிஞர் வைத்து வாதாட கூடிய வாய்ப்பு உள்ளது. மற்றது, நடைமுறை நிர்வாகம் சார்ந்த அட்மினிஸ்ட்ரேடிவ் நாடு கடத்தல், இதை ஒன்றும் செய்ய முடியாது.

நாடு கடத்தப்படுபவர்கள் 5 வருடங்களுக்கு குவைத் உள்ளிட்ட எந்த வளைகுடா நாட்டிற்கும் செல்ல முடியாது. கணவர் நாடு கடத்தப்பட்டு, மனைவி அவருடைய ஸ்பான்ஸர்ஷிப்பில் இருக்கும் பட்சத்தில் அவர்களுடைய குடியுரிமையும் செல்லாததாக ஆகிவிடுகின்ற காரணத்தால் அவர்களும் உடனடியாக குவைத்தை விட்டு வெளியேற வேண்டும். மனைவி பணியிலிருந்து அவரது குடியுரிமையை அவர் சார்ந்துள்ள நிறுவனம் ஸ்பான்ஸர் செய்தால், அவர் உள்துறை அமைச்சகத்தை அணுகி தங்களுடைய குழந்தைகளை தன்னுடைய ஸ்பான்ஸர்ஷிப்பின் கீழ் கொண்டு வரலாம். இருப்பினும், சட்ட விதிகளின்படி பெண் ஸ்பான்சர் செய்ய முடியாது என்பதால் இதுவும் கடினமே. 

தொகுப்பு: எச்.உமர் ஃபாரூக், குவைத்
இந்நேரம் 

Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger