அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, வேலை இன்மை போன்ற காரணங்களால், உணவுத் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ள, தங்களின் சேமிப்பையே பிரிட்டன் மக்கள் நம்பியுள்ளதாக, சமீபத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக, தன்னார்வ அமைப்பு ஒன்று, 2,000 பேரிடம் நடத்திய ஆய்வில் தெரிவித்து உள்ளதாவது:பிரிட்டனில், 50 லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்கள், தங்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக, கடன் அட்டை, வங்கிகடன் மற்றும் தங்களது சேமிப்பைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
வார இறுதி நாட்களில், கடன் அட்டைகளை பயன்படுத்தி, பொருட்களை வாங்கும், 55 சதவீதத்தினர், இனி அவ்வாறு செயல்படமுடியாத நிலையில் தங்களின் உணவுத் தேவைக்கென, நண்பர்கள், குடும்ப உறுப்பினர்களிடம், கடன் வாங்கி, நிலைமையைச் சமாளிக்கின்றனர்.இதில், 25 சதவீத மக்களே, வசதியுடன் வாழ்வதாகவும், 36 சதவீதம் பேர், தங்களுக்குக் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டு உள்ளதாகவும் தெரிவித்து உள்ளனர்.
இதில், 31 சதவீதத்தினர், தங்களது அத்தியாவசியத் தேவையைக் கூட குறைத்துக் கொண்டு உள்ளனர். கடந்த, 5 ஆண்டுகளில், எப்போதும் இல்லாத அளவிற்கு ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, சாதாரண மக்களை கசக்கிப் பிழிந்து உள்ளது.இங்கிலாந்தில், உணவிற்காக, மக்கள், தங்களின் சேமிப்பை பெருமளவில் பயன்படுத்துவது, கவலை அளிப்பதாக உள்ளது என, இந்த ஆய்வை நடத்திய, ரிச்சர்டு லாய்டு தெரிவித்து உள்ளார்.
நன்றி - இலங்கை முஸ்லிம்
Post a Comment