மோடியின் காசுக்கு விலை போகும் பத்திரிக்கைகள்!​

பத்திரிக்கைகள் உண்மை செய்திகளை தருகிறதா?இதோ காசுகளை வாங்கிக்கொண்டு பின்பாட்டு பாடும் பத்திரிக்கைகளின் உண்மை செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்....
இன்றைய மாலை மலர் இணையதளத்தில்"உத்தரகாண்டில் தவித்த 15,000 குஜராத் பக்தர்கள் மீட்பு" என்ற தலைப்பில் ஒரு செய்தி.
உத்தரகாண்ட் இயற்கை சீற்றத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதில் இராணுவமும் தன்னார்வலர்களும் படாதபாடு பட்டுக்கொண்டிருப்பதாக செய்திகள் நேரடிக் காட்சிகளாகவே வந்துகொண்டிருக்கும் நிலையில், ஒரேயடியாக குஜராத்தைச் சேர்ந்த 15,000 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு சொந்த இடம் அழைத்து வரப்பட்டதான அச்செய்தி மனதிற்கு மகிழ்ச்சியைத் தந்தது.
ஆனால், செய்தியின் உள்ளே வாசித்தபோது இப்படியும் பத்திரிக்கைகள் மக்களின் காதில் பூச்சுற்றுமா என்ற ஆச்சரியமே மேலோங்கியது.
மீட்கப்பட்ட பக்தர்களைக் குஜராத் அழைத்து வந்தது தொடர்பாக செய்தியினுள் மாலை மலர் குறிப்பிட்டுள்ள வாக்கியம் கீழே:
"சுமார் 80 டொயோட்டா இன்னோவா கார்கள் வரவழைக்கப்பட்டன. அதில் ஏற்றப்பட்ட பக்தர்கள் டேராடூன் வந்தனர். அங்கிருந்து அவர்கள் 4 சிறப்பு விமானம் மூலம் குஜராத் போய் சேர்ந்து விட்டனர். மேலும் 25 ஏ.சி. பஸ்கள் மூலம் குஜராத் பக்தர்களில் மற்றொரு குழுவினர் டெல்லி அழைத்து செல்லப்பட்டனர்."
ஒரு இன்னோவா காரில் 15 பக்தர்களை அடித்துத் திணித்து கொண்டு வந்ததாக கணக்கிட்டாலும் 80 x 15 = 1200 பேர்.
ஒரு ஏ சி பஸ்ஸில் 50 பேர் எனக் கணக்கிட்டாலும் 25 x 50 = 1250 பேர்
மொத்தம் 2450 பேர் தான் வருகிறது. சரி இன்னோவா காரில் 25 பேர் என்றும் ஏ சி பஸ்ஸில் 100 பேர் என்றும் கணக்கிடுவோம். அப்படிப்பார்த்தாலும் 4750 பேர் தான் வருகிறது. எப்படியோ, 5000 பேர் போனார்கள் என்றே வைத்துக் கொள்வோம். இன்னும் 10000 பேர் எப்படி போய் இருப்பார்கள் என்று புரியவில்லை. கணக்கு எங்கோ இடிக்குது.
என்னமா கலர் கலர் ரீல் விடுறீங்க. காசு வாங்கிட்டு எழுதுங்க. அதுக்காக இப்படியா. முடியல!
இதையே தினமலர், "இந்த வேகம் யாருக்கப்பா வரும்.... 15000 பேரை மீட்ட 'ரேம்போ மோடி'" என்ற தலைப்பில் கீழ்கண்டவாறு எழுதியுள்ளது.

"இதற்கென 80 டோயோட்டா இன்னோவோ கார்கள் வரவழைக்கப்பட்டன. இதில் பக்தர்கள் ஏற்றி டேரோடூனுக்கு கொண்டு வரப்பட்டனர். பின்னர் இவர்கள் 4 விமானம் மூலம் டில்லிக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களை அழைத்து வர 25 சொகுசு பஸ்கள் தயார் நிலையில் இருந்தன . மொத்தம் 15 ஆயிரம் குஜராத்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். மோடி தானே களத்தில் இறங்கி தமது மாநில மக்களை மீட்டு வந்த சம்பவம் இம்மாநில மக்களின் பெரும் பாராட்டை பெற்றுள்ளது."

மீட்பு இடத்திலிருந்து 80 இன்னோவா கார்களில் டேராடூன் வரை. டேராடூனிலிருந்து 4 விமானங்களில் டெல்லி வரை. டெல்லியிலிருந்து 25 சொகுசு பேருந்துகளில் குஜராத்திற்கு!
அப்படி எடுத்துக்கொண்டாலும், 4 விமானம் 15,000 பேரை டெல்லி கொண்டு வர எத்தனை முறை வந்து திரும்பியிருக்கும். 25 பேருந்துகள் டெல்லியிலிருந்து குஜராத்திற்கு 15000 பேரை ஏற்றி செல்ல எத்தனை முறை வந்து திரும்பியிருக்கும். 80 இன்னோவாக்கள் உத்தர்காண்டிலிருந்து டேராடூனுக்கு 15000 பேரைக் கொண்டு செல்ல எத்தனை முறை வந்து திரும்பியிருக்கும்?
மோடி ரேம்போவோ, சில்வஸ்டர்ஸ்டாலனோ, ஹிட்லரோ - யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும். மோடியின் விளம்பர காசுக்கு, கொஞ்சம் கூட மானம் சூடு சுரணையின்றி சுய அறிவை மொத்தமாக இழந்து துதிபாடும் இப்பத்திரிக்கைகளின் மாமா வேலைக்கு என்ன பட்டம் கொடுக்கலாம் என்பதுதான் தற்போதைய கேள்வி!
- அருள், கத்தார்

Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger