டெல்லி : கோவாவில் நடைபெற்ற பாஜக செயற்குழுக் கூட்டத்தில் பாஜகவின் தேர்தல் பிரசாரக் குழுத் தலைவராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டார். இக்கூட்டத்தில் பாஜகவின் மூத்தத் தலைவர் எல்.கே அத்வானி கலந்து கொள்ளவில்லை.
உடல்நலக் குறைவு காரணமாக அத்வானி கலந்து கொள்ளவில்லை என்று காரணம் கூறப்பட்டது. நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரக் குழுத் தலைவராக நரேந்திர மோடி தேர்வு செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே எல்.கே அத்வானி இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள மறுப்பு தெரிவித்ததாக செய்திகள் வெளியாயின..
இந்நிலையில் தேர்தல் பிரசாரக்குழுத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட நரேந்திர மோடி, ''அத்வானியை தொலைபேசியில் அழைத்து பேசி அத்வானியின் ஆசியைப் பெற்றதாக" டுவிட்டரில் கருத்து தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் எல்.கே அத்வானி பாஜகவில் தாம் வகித்து வந்த அனைத்துப் பொறுப்புகளில் இருந்து ராஜினாமா செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் எல்.கே அத்வானி பாஜகவில் தாம் வகித்து வந்த அனைத்துப் பொறுப்புகளில் இருந்து ராஜினாமா செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
Post a Comment