இலங்கையின் வடக்கே வவுனியா பாவற்குளத்தில் 510 உயரமான புத்தா் சிலை ஒன்றை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. பிரதமா் ஜயரட்ன நேற்று விசேட ஹெலிகொப்ரரில் சென்று அடிக்கல்லை நாட்டியதாக பிரதேசவாசி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடா்பாக தகவல்கள் எதுவும் வெளியில் தெரியாமல் இரகசியமாக அடிக்கல் நாட்டப்பட்டதாக அந்தப் பிரதேசவாசி கூறினார்.
படையினா் இரகசியமாக இதற்கான வேலைத் திட்டங்களை கடந்த சில மாதங்களுக்கு முன்னா் மேற்கொண்டிருந்தனா்.
ஆனால் பொதுமக்களின் எதிர்ப்பை அடுத்து கைவிடப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் 510 அடி உயரத்தில் புத்தா் சிலை அமைக்கும் வேலைத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பிரதமா் ஜயரட்ன அடிக்கல்லை நாட்டியதாக அறியமுடிகின்றது என்றும் ஆனால் அதனை தன்னால் உறுதிப்படுத்த முயடியாது உள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினா் சிவசக்தி ஆனந்தன் கூறினார்.
ஆசியாவில் மிகவும் உயரமான புத்தா் சிலையாக இது இரு இருக்கும் என கூறப்படுகின்றது.
Post a Comment