வருடந்தோறும் முஸ்லிம்கள் புனித மக்கா நகரில் ஹஜ் கடமையை நிறைவேற்றுவது வழக்கம்.
சுமார் 30 இலட்சத்திற்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் மக்கள் கூடும் இந்த ஆன்மிக மாநாட்டில் கலந்து கொள்ளும் வெளிநாட்டு யாத்ரீகர்களின் எண்ணிக்கையை இந்த ஆண்டு 20 விழுக்காடு குறைப்பதற்கு சவூதி அரசு திட்டமிட்டுள்ளது. அடுத்தடுத்த ஓரிரு ஆண்டுகளிலும் இந்த நடவடிக்கையே தொடரலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
மக்காவிலுள்ள புனிதப் பள்ளியில் விரிவாக்கப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதையடுத்து, சவூதி அரசு இந்த முடிவுக்கு வந்துள்ளதாகத் தெரிகிறது. விரிவாக்கப் பணிகள் முடிவடைந்ததும், மிகவும் அதிகக் கொள்ளளவில் யாத்ரிகர்கள் தங்கள் கடமைகளை நிறைவேற்றும் விதமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. எடுத்துக்காட்டாக, தற்போது புனித ஆலயத்தை சுற்றிவரும் பாதையில் சுமார் 30, 000 யாத்ரிகர்கள் ஒரு மணி நேரத்தில் கடமையாற்றலாம் என்றால், விரிவாக்கப் பணிகளுக்குப் பின்னர் இத்தொகை 1,30,000 பேர்களாக அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புனிதப் பள்ளியில் எட்டு கட்டுமானத் திட்டங்களின் கீழ் சுமார் 10,000 பணியாளர்கள் விரிவாக்கப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதும் குறிக்கத்தக்கது.

Post a Comment