நைஜீரியாவில் ஒரு-பால் திருமணம் புரிவோருக்கு 14 ஆண்டு சிறை

நைஜீரியாவில் ஒருபால் திருமணத்தை ஒரு குற்றச்செயலாக அறிவிக்கும்  சட்ட மூலத்துக்கு அந்நாட்டு நாடாளுமன்றம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அங்கு இனிமேல் ஒரு பால் திருமணம் புரிபவர்களுக்கு 14-ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்கும்.

இப்போது பிரதிநிதிகள் சபையும் அதனை நிறைவேற்றிவிட்டது.நாடாளுமன்றத்தின் செனட் சபை 18 மாதங்களுக்கு முன்னரே இந்த சட்டமூலத்தை அங்கீகரித்துவிட்டது.
அதிபர் குட்லக் ஜொனதன் கைச்சாத்திட்டதும் சட்டம் நடைமுறைக்கு வந்துவிடும்.
நைஜீரியாவில் ஒருபால் உறவுக் காரர்களுக்கான சங்கங்களையும் கேளிக்கை விடுதிகளையும் நடத்துவதும் இனிமேல் சட்டவிரோதமாகிவிடும்.
அதுபோல, ஒருபால் உறவுக்காரர்களின் படங்களை பொது இடங்களில் காட்சிப்படுத்துவதையும் இந்த சட்டம் தடை செய்கிறது.
இதேவேளை, இவ்வாறான சட்டங்கள் நைஜீரியாவில் எச்ஐவி- எயிட்ஸ் தொடர்பான வேலைத்திட்டங்களுக்கு கிடைக்கும் வெளிநாட்டு நிதியுதவிகளை கடுமையாகப் பாதிக்கும் என்று விமர்சகர்கள் ஏற்கனவே கண்டித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேற்கண்ட இந்த ஓரினச் சேர்க்கை சம்மந்தமாக .... ஆதிமனிதனை படைத்த கடவுள் அந்த மனிதன் மகிழ்வுற இன்னொரு ஆன் மகனை படைக்கவில்லை. மாறாக அங்கே ஒரு பெண்ணைப் படைத்து அந்த பெண்ணை ஆதிமனிதனுக்கு ஜோடியாக்கி, அவர்களை இன்புற்று வாழச் செய்து அவ்விருவர் மூலமாக மனித சமுதயத்தை பல்கிப் பெருகச் செய்தான். ஒரு ஆனும் பெண்ணும் இணைவதுதான் இயற்கை. ஆனும் பெண்ணும் இணையும் வகையில் தான் அவர்களின் உடலமைப்பும் வடிவமைக்கப் பட்டுள்ளது. மனிதர்கள் மட்டுமன்றி கால்நடைகள், பறவைகள், தாவரங்கள் இவைகள் கூட ஜோடி ஜோடியாகவே படைக்கப்பட்டு, அவைகள் கூட எதிர்பாலினத்தில் தான் இன்புற்று மகிழ்கின்றன. ஒரு ஆன் சிங்கம் இன்னொரு ஆன் சிங்கத்தை உறவுக்கு பயன்படுத்தியதாக காண முடியாது. காரணம் அவைகள் இயற்கையை மீறவில்லை. ஆனால் மனிதன் எங்கும் எதிலும் புதுமையாக செய்வேன் என்று கிளம்பி இன்று நாகரீகம் என்ற பெயரில் ஒருபால் உறவு எனும் ஓரினச்சேர்க்கையில் வந்து நிற்கிறான். இந்த ஓரினச் சேர்க்கை இயற்கைக்கு எதிரானது மட்டுமன்றி, மனிதனை அழித்தொழிக்கும் கொடிய எயிட்ஸ் நோய் போன்றவற்றை பரப்பும் காரணியாக உள்ளது. 

ஒரு சாமான்ய மனிதன் தவறு செய்தால் அவனை அந்த தவறிலிருந்து தடுத்து நிறுத்தும் கடிவாளம் போடவேண்டிய இடத்தில் உள்ள நீதிமன்றம், கடந்த 2009ம் ஆண்டு, ''அந்தரங்கமான ஒரு இடத்தில், இரண்டு நபர்கள் சம்மதித்து, ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டால் அது குற்றம் அல்ல என்ற ஒரு தீர்ப்பை டெல்லி ஐகோர்ட்டு வழங்கியது. அந்த தீர்ப்பில், ஓரினச்சேர்க்கை குற்றம் என்று கூறி, அதற்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்க வகை செய்யப்பட்டுள்ள இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 377 திருத்தப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறி இருந்தனர்.

நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய இந்த தீர்ப்பினை எதிர்த்து பாரதீய ஜனதா தலைவர் பி.பி.சிங்கால், ஓரினச்சேர்க்கை எதிர்ப்பாளர்கள் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் வழக்குகளை தாக்கல் செய்தனர். இந்த அப்பீல் வழக்குகளை நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, எஸ்.ஜே.முகோபாத்யாய் ஆகியோர் விசாரித்து வருகின்றனர். இந்த ஓரினச் சேர்க்கை விசயத்தில் நீதிமன்றத்தில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் ஓரினச் சேர்க்கை குற்றம்தான்' என்றும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் சார்பில் '(இருவர் சம்மதத்துடனான) ஓரினச்சேர்க்கை குற்றமல்ல என்ற ஐகோர்ட்டு தீர்ப்பில் எந்த சட்டத்தவறும் இல்லை என்று மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது' என்றும் முன்னுக்குப் பின் முரணாக வாதங்கள் வயப்பட்டு நீதிபதிகளின் கண்டனத்திற்கு இலக்கான மத்திய அரசு, இறுதியில் ஒரு வழியாக,


ஓரினச்சேர்க்கை சட்டப்படி குற்றம் அல்ல என்பதுதான் மத்திய அரசின் நிலை ஆகும். ஐகோர்ட்டு தீர்ப்பில் இருந்து, ஓரினச்சேர்க்கை குற்றம் என்பது ஓரினச் சேர்க்கையாளர்களின் அடிப்படை உரிமையைப் பறிப்பதாகும் என்பதை தெரிந்துகொண்டோம். தெளிவு பெற்றோம். ஐகோர்ட்டின் தீர்ப்பை ஏற்றுக்கொண்டோம். அதற்கு எதிராக அரசு அப்பீல் செய்யவில்லை'' என்று முடித்துக் கொண்டது. இனி உச்சநீதிமன்றம் இந்த விசயத்தில் முடிவெடுக்க வேண்டிய நிலையில் உள்ளது. ஆனால் உச்சநீதிமன்ற நீதிபதிகளோ மாறிவரும் கால சூழ்நிலைக்கு ஏற்ப, ஓரினச்சேர்க்கை மீதான பார்வையிலும் மாற்றம் வேண்டும் என்ற கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்கள். ஏற்கனவே ஓரினச்சேர்க்கை குற்றம் என்று கூறி, அதற்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்க வகை செய்யப்பட்டுள்ள இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 377 திருத்தப்பட வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்ற  நீதிபதிகள் கூறியுள்ள நிலையில், மத்திய அரசும் ஓரினச்சேர்க்கைக்கு ஒத்து ஊதிவிட்ட நிலையில், இனி ஓரினச் சேர்க்கைக்கு பச்சைக்கொடி காட்டுவதற்கு எந்த தடையும் உச்சநீதிமன்றத்திற்கு இல்லை. ஆனால் எதார்த்தம் என்ன? 

இந்த விசயத்தில் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் 2009 ல் வழங்கிய தீர்ப்பில் கூறியுள்ள, ''அந்தரங்கமான ஒரு இடத்தில், இரண்டு நபர்கள் சம்மதித்து, ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டால் அது குற்றம் அல்ல என்ற கருத்துப் பிரகாரம், இதே உரிமையை விபச்சாரம் மற்றும் கள்ளக்காதல், முறைகேடான உறவில் ஈடுபடுபவர்களும் கையிலெடுத்தால், ஒரு ஆனும் பெண்ணும் அந்தரங்கமான ஒரு இடத்தில் இருவரும் சம்மதித்து திருமணத்திற்கு செய்யாமலேயே கூடினாலும் யாரும் தடுக்க முடியாதே! விடுதிகளில் விபச்சாரம் செய்யும் ஆனும் பெண்ணும், விரும்பித்தானே செய்கிறார்கள். அவர்களை காவல்துறை கைது செய்வதும் நீதிபதிகளின் இந்த தீர்ப்பின் அடிப்படையில் தவறுதானே! எந்த ஆனும் எந்த பெண்ணும் பரஸ்பரம் சம்மதித்து உறவு கொண்டால் அதை தடுக்கும் உரிமை இல்லாமல் போகுமே? அதைத்தான் நீதிமன்றம் விரும்புகிறதா? இதைத்தான் மத்திய அரசும் விரும்புகிறதா? இதுதான் மக்கள் நலன் நாடும் தீர்வுகளா? சிந்திக்க வேண்டும். ஒரு பாலினச் சேர்க்கை என்பது உரிமை சம்மந்தப்பட்டதல்ல. அது ஒழுக்ககேட்டின் உச்சம். அது தடைசெய்யப் பட்டே தீரவேண்டிய ஒரு மிகப்பெரிய தீமையாகும். இதைப்பற்றி திருமறைக் குர்ஆன் ஒரு தீர்க்கமான தீர்வை சொல்கிறது. இதுபோன்ற ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட மாபாவிகள் நிலை என்னவானது என்று விளக்குகிறது.

ஓரினச் சேர்க்கையை சர்வசாதரணமாக செய்துவந்த ஒரு பகுதி மக்களிடம் கடவுளின் தூதராக லூத் [அலை] அவர்கள் வருகிறார்கள். பல்வேறு உபதேசங்களை அந்த மக்களுக்கு வழங்குகிறார்கள். பெண்களை விட்டுவிட்டு வேறு வழியில் நீங்கள் முறையற்ற தீய செயலை செய்கிறீர்களா? இதோ என்னுடைய புதல்விகள்; உங்களுக்கு திருமணம் செய்து வாழ பரிசுத்தமானவர்கள் என்றெல்லாம் கடவுளின் தூதர் லூத் [அலை] அவர்கள் சொன்ன அறிவுரைக்கு அந்த மக்கள் செவியை சென்றடையவில்லை. இறுதியாக, ''அந்த மக்கள் வசித்த அவ்வூரின் பூமியின் மேல் பரப்பை கீழ்ப் பரப்பாக மாறினோம். இன்னும் அதன் மீது சுடப்பட்ட செங்கற்களை மழைபோல் பொழிவித்தோம் என்று குர்'ஆன் விவரிக்கிறது. ஆக இந்த ஓரினச் சேர்க்கை என்பது இறைவனின் கோபத்திற்கு இலக்காக்கும் செயல் என்பதும், இயற்கைக்கும் முரணான ஒன்று என்பதும், இவ்வாறான தீய செயல்களில் ஈடுபடுபவர்கள் அழிக்கப்பட வேண்டியவர்கள் என்பதும் நீதிமன்றங்கள் அறியவேண்டிய ஒன்றாக உள்ளது. 

மேலை நாடுகளில் ஓரினச் சேர்க்கைக்கு எதிராக தீர்ப்புகள் வருகின்றன,,ஆனால் ஒழுக்கத்திற்கு பெயர்போன  இந்தியாவில் இது கேள்விக்குறியாகவே உள்ளது...பொருத்துதிருந்து பார்ப்போம் ,,காலங்கள் கனியும்,தீர்ப்புகள் மாறும் இன்ஷா அல்லாஹ் .......

Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger