கடந்த 16.05.2013 பி.ப 2.00 மணியளவில் பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகளுக்கும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளுக்கும் மத்தியில் ஒரு கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதில் நாட்டில் ஏற்பட்டுள்ள இனவாத சூழல் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் பற்றிய தெளிவான அறிமுகம் வழங்கப்பட்டதுடன். நாட்டில் நிழவும் அசாதாரண நிலை மற்றும் பொது பல சேனா போன்ற இனவாத அமைப்புக்களின் செயல்பாடுகள் தொடர்பிலும் பேசப்பட்டது.
ஒரு மாத காலத்திற்கு பின்னர் மீண்டும் பொது பல சேனா இயக்கத்தினர் தவ்ஹீத் இயக்கங்கள் தீவிரவாதத்திற்கு துணை போவதாக பொய்யான பிரச்சாரத்தை மேற்கொண்டு, தவ்ஹீத் இயக்கங்கள் தடை செய்யப்பட வேண்டும் என்று பேசி வருவது தொடர்பில் அது தொடர்பான விஷயங்கள் பாதுகாப்பு அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதுடன், இது பொது பல சேனாவினால் ஜோடிக்கப்பட்ட விஷயம் என்றும் ஆதாரத்துடன் எடுத்துக் காட்டப்பட்டது.
கடந்த காலங்களில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் பிரச்சார நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டமை தொடர்பில் பேசப்பட்ட வேலையில் இனிவரும் காலங்களில் தவ்ஹீத் ஜமாஅத்தின் ஜனநாயக ரீதியிலான பிரச்சாரங்களுக்கு தடைகள் வராத வகையில் தாம் அது தொடர்பில் கவனமெடுப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தார்கள்.
சுமார் இரண்டு மணி நேரங்களுக்கு மேல் நீடித்த இந்த பேச்சுவார்த்தையில், நாட்டில் ஐக்கியத்தையும், ஜனாநாயகத்தையும் பாதுகாக்கும் வகையில் பாதுகாப்பு தரப்புக்கு தமது ஒத்துழைப்பை வழங்குவதுடன் ஜனாநாயக ரீதியில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் பிரச்சார மற்றும் சமுதாய செயல்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்பதையும் பாதுகாப்பு செயலக அதிகாரிகளிடம் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகத்தினர் எடுத்துரைத்தார்கள்
sltj
Post a Comment