கிரிக்கெட் உலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் ஐபிஎல் சூதாட்ட விசாரணை தொடர்பாக, இந்திய கிரிக்கெட் வாரிய தலைவரின் மருமகனை விசாரணைக்கு ஆஜராகுமாறு மும்பை போலிஸ் சம்மன் அனுப்பியுள்ளது.
இந்நேரம்
ஐபிஎல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை நிர்வாகியும், பிசிசிஐ தலைவர் சீனிவாசனின் மருமகனுமான குருநாத் மெய்யப்பனை, இன்று காலை மும்பை நகர காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு மும்பை போலிஸ் சம்மன் அனுப்பியுள்ளது. எனினும் குருநாத், முன்பே ஒப்புகொண்ட பணிகள் காரணமாக தன்னால் இன்று ஆஜராக முடியாது என்றும், திங்கழ்கிழை காலை ஆஜராக அனுமதிக்க வேண்டுமென்றும் கோரியுள்ளார். ஐபிஎல் சூதாட்ட விசாரணையில் கைது செய்யப்பட்ட நடிகர் வினுசிங்கின் நெருங்கிய நண்பரான குருநாத், பிரபல பட தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம் குடும்பத்தை சேர்ந்தவர். பிசிசிஐ-யின் தலைவர் சீனிவாசனின் மகளை காதலித்து திருமணம் செய்து கொண்ட குருநாத், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ஆரம்பம் முதலே நிர்வகித்து வருகிறார். மேலும் சென்னையில் நடக்கும் அனைத்து போட்டிகளுக்கும் பிரபலங்கலை பிரத்யோகமாக அழைத்து வருவதில் தன்னிச்சையான ஆர்வம் கொண்ட குருநாத் மீதான விசாரணை, அரசியல் மற்று கிரிக்கெட் உலகில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, தார்மீக அடிப்படையில் பிசிசிஐ தலைவர் சீனிவாசன் பதவி விலகவேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. ஏற்கனவே ஐபிஎல் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுவிட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இன்று மும்பை, ராஜஸ்தான் அணிகளுக்கிடையேயான ஆட்டத்தில் வெற்றி பெறுபவருடன் ஞாயிறன்று மோத இருக்கிறது. மேலும் விசாரணையின் ஒரு பகுதியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முந்தைய ஆட்டங்கள் அனைத்தும் மறு ஆய்வு செய்யப்பட இருப்பதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஐபிஎல் விளையாட்டு இறுதி போட்டியில் 5 வது முறையாக தகுதி பெற்றுள்ள ஒரே அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி என்பதும், இதுவரை இருமுறை சாம்பியன்ஸ் பட்டம் வென்ற ஒரே அணியும் சென்னை அணிதான் என்பதும் குறிபிடதக்கது.
இந்நேரம்
Post a Comment