இராமேஸ்வரம்: வங்கடலில் கச்சத்தீவுப் பகுதியில் இலங்கை போர்க் கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலால் ராமேஸ்வரம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சுமார் பத்துக்கும் மேற்பட்ட போர்க்கப்பல்கள் மற்றும் மிதவைகள் கச்சத்தீவுப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது இதனால் ராமேஸ்வரம் மீனவர்கள் பெரிதும் அச்சம் அடைந்துள்ளனர்.
கடந்த ஏபரல் 15 முதல் மே 29 வரை நீடித்த மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று வழக்கம் போல் மீன் பிடிக்க கடலுக்குசென்றபோது, கச்சத்தீவு பகுதியில் இலங்கை போர்க் கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
மேலும் தமிழக மீனவர்கள் இந்திய கடல் எல்லையை தாண்டி இலங்கை கடல் எல்லைபகுதிக்குள் வந்து மீன்பிடித்தால் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் எனவும் இலங்கை கடற்படையினர் எச்சரித்துள்ளனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராமேஸ்வரம் மீன்துறை உதவி இயக்குநர், மீனவ சங்க பிரதிநிதிகளிடமிருந்து இந்த தகவல் தங்களுக்கு வந்துள்ளதாகவும், இதன் உண்மை நிலை கண்டு விசாரித்தப்பின் மீனவர்களிடம் நாளை முறைப்படி அறிவிக்கப்படும் என்றும் கூறினார்.
inneram
Post a Comment