சென்னை: சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் பேசிய தமிழக முதல்வர் ஜெயலலிதா, தமிழகம் முழுவதும் புகையிலைப் பொருட்களுக்கு தடை விதிக்கப்படுவதாக அறிவித்திருந்தார். அது தொடர்பான அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் புகையிலை பொருட்களுக்கான தடை குறித்து உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தின் கீழ் தமிழக அரசு முறைப்படி அரசாணை வெளியிட்டுள்ளது.
அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது;
நிகோடின் மற்றும் புகையிலை, பொதுமக்களின் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் நச்சு பொருட்கள் எனவும் அதனால் நிகோடின் மற்றும் புகையிலை பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் பான் மசாலா, குட்கா ஆகியவற்றின் உற்பத்தி, சேமிப்பு மற்றும் விற்பனைக்கு மாநிலம் முழுவதும் தடை விதிக்கப்படுவதாக அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிகோடின் மற்றும் புகையிலையை மூலப்பொருட்களாகக் கொண்டு எந்த பெயரில் பொருட்கள் தயாரிக்கப்பட்டாலும் அதற்கும் இந்த தடை பொருந்தும் என தமிழக அரசின் அரசாணை தெரிவிக்கின்றது. இது சிகரெட் பீடி போன்றவற்றுக்கு பொருந்துமா என இனிமேல் தெரிய வரும்.
Post a Comment