புது டெல்லி: - நடப்புக் கல்வி ஆண்டில் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பொது நுழைவுத் தேர்வு முறையில் நடைபெறக் கூடாது என உச்சநீதிமன்றம் இடைக்காலத் தீர்ப்பு அளித்துள்ளது.
நடப்புக் கல்வி ஆண்டில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகள் அனைத்திற்கும் ஒரே நுழைவுத் தேர்வு நடத்தி மாணவர்களைச் சேர்ப்பதற்கு அகில இந்திய மருத்துவக் கவுன்சில் முடிவெடுத்திருந்தது. ஆனால் இந்த முடிவிற்குத் தமிழகம் உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.
இந்த முடிவினை எதிர்த்து மாநிலங்கள் உச்சநீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்தன. தனியார் மருத்துவக் கல்லூரிகளும் வழக்குத் தொடர்ந்திருந்தன. இந்த வழக்குகள் அனைத்தும் ஒரே வழக்காக விசாரிக்கப்பட்டது. இன்று இந்த வழக்கில் இடைக்காலத் தீர்ப்பு வழங்கப்பட்டது.

”பொது நுழைவுத் தேர்வு முறையில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை இருக்கக் கூடாது" என்றும், "ஏற்கனவே பின்பற்றி வரும் முறைப்படியே மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும்" என்றும் உச்சநீதிமன்றம் தம் தீர்ப்பில் கூறியுள்ளது.
"வழக்கின் இறுதித் தீர்ப்பு ஜூலை முதல் வாரத்தில் அறிவிக்கப்படும்" எனவும் உச்சநீதிமன்றம் தம் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
"வழக்கின் இறுதித் தீர்ப்பு ஜூலை முதல் வாரத்தில் அறிவிக்கப்படும்" எனவும் உச்சநீதிமன்றம் தம் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
நன்றி - இந்நேரம்
Post a Comment