புது டெல்லி: அரபு நாடுகளில் ஒன்றான கத்தர் நாட்டின் முதல் வியாபார தேசிய வங்கியான கத்தர் தேசிய வங்கிக்கு இந்தியாவில் கிளை துவங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவ்வங்கி அறிவித்துள்ளது.
வளர்ந்து வரும் அரபு நாடுகளில் ஒன்றான கத்தர் நாட்டின் முதல் வியாபார தேசிய வங்கி, கத்தர் தேசிய வங்கி(QNB). இவ்வங்கி குழு 1964 ஆம் ஆண்டு கத்தரில் ஆரம்பிக்கப்பட்டது.
50 சதவீத உரிமை கத்தர் முதலீட்டு கழகத்திற்கும் 50 சதவீதம் தனியாருக்கும் சொந்தமான இவ்வங்கி குழு, சர்வதேச அளவில் முன்னணியில் உள்ள தொழில் சந்தைகளில் நுழைவதில் மும்முரமாக செயல்படுகிறது.
அதன் ஒரு பாகமாக, சர்வதேச சந்தையில் வாங்கும் திறனில் மூன்றாவது இடத்திலும் விற்கும் திறனில் பத்தாவது இடத்திலும் இருக்கும் இந்தியாவில் கிளை துவங்க தொடர் முயற்சிகளில் ஈடுபட்டு, தற்போது இந்திய அரசு அனுமதியினைப் பெற்றுள்ளது.
க்யூஎன்பி(இந்தியா) பிரைவேட் லிமிடெட்(QNB India Pvt ltd) என்ற பெயரில் இந்தியாவில் துணை வங்கி அமைப்பதற்கு தேவையான அனைத்து ஒழுங்குமுறை அனுமதிகளும் கிடைத்துவிட்டதாக அவ்வங்கி அறிவித்துள்ளது. அதன்படி, இவ்வாண்டு(2013) செப்டம்பர் மாதத்தில் வங்கிப் பணிகள் துவங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இந்நேரம்
Post a Comment