
தமிழகத்தில் +2 தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியாகின. இத்தேர்வு முடிவில், அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்களின் தேர்ச்சி நிலை குறித்து அறிய ஆய்வு ஒன்றை பள்ளிக் கல்வித்துறை நடத்தியது. இந்த ஆய்வின் முடிவில், கடந்த ஆண்டைவிட அதிகமாக இந்த ஆண்டு 100 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி காட்டியது தெரிய வந்துள்ளது.
மேலும், கடந்த மூன்று ஆண்டுகளைவிட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதமும் அதிகமாகியுள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டில் மொத்தம் 35 அரசு பள்ளிகள் மட்டுமே 100 சதவிகிதத் தேர்ச்சியினைக் காட்டியது. அது இந்த ஆண்டில் 3 மடங்கு உயர்ந்துள்ளதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இதன்மூலம் அரசு பள்ளிகளின் கல்வித் தரம் உயர்ந்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. அரசு பள்ளிகளின் இந்த முன்னேற்றம், சென்னையைத் தவிர பிற பகுதிகளிலுள்ள அரசு பள்ளிகளில் மட்டுமே நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நேரம்
Post a Comment