ஈமானிய உறவுகளே!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ…
அல்லாஹ்வின் ஜோதியை அகிலமெங்கும்
பரவச் செய்ய அள்ளி வழங்கிடுவீர்!
தேசங்கள் கடந்து எல்லைகள் தாண்டி ஜீவிக்கும் இலங்கை வாழ் அன்பர்களே! எம் கொள்கைத் தோழர்களே!
கடல் கடந்து சென்று திரவியம் தேடும் பணியி்ல் மூழ்கியிருக்கும் உங்களுடன் ஒரு சில கணப்பொழுதுகள் மனம் விட்டு பேச விளைகிறோம். உரிமையோடு கொஞ்சம் உறவாட ஆசிக்கிறோம்.
‘தீன்’ என்பது ஏகன் அல்லாஹ்வுக்கு மட்டும் உரித்தான சொத்து. அது இன்று பலரது அப்பன் வீட்டு சொத்தாய் கூறுபோட்டு சொந்தம் பாராட்டப்படும் அவலம் தலைவிரித்து ஆடுவதை எம்மால் காண முடியும். அவரவர் விருப்பு வெறுப்புகளை ஒட்டியும் வெட்டியும் மார்க்கத்தில் இணைக்கும் கொடூரம் இன்று சர்வசாதாரணமாய் மாறிவிட்டது. அல்லாஹ்வும் அவன் தூதரும் சொன்னவைகள் மாத்திரம் தான் இஸ்லாம் என்ற நிலை மாற்றப்பட்டு மார்க்கப் பேரர்வை பேரர்த்திக் கொண்டு யார் சொன்னாலும்﹐ எதைச் சொன்னாலும் அதுவும் மார்க்கம் தான் என்ற நிலை இன்று உருவாக்கப்பட்டிருக்கிறது.
கொள்கை வாதிகள் என்று தங்களை அடையாளப்படுத்துபவர்கள் கூட அசத்தியவாதிகளுடன் சமரசம் செய்து கொண்டு கை கேரர்த்து நடைபயிலும் அவலம் பரவலாய் அரங்கேறி வருகிறது. இந்நிலையை மாற்றி﹐ இஸ்லாத்தை அதன் உண்மையான வடிவத்தில் அல்லாஹ்வுக்கு மாத்திரம் அஞ்சி எடுத்துச் சொல்ல வேண்டும் என்ற உணர்வுகளுடன் உருவாக்கப்பட்டதே ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்.
முஸ்லிம்களுக்கும் மாற்றுமத அன்பர்களுக்கும் இஸ்லாத்தை எடுத்துச் சொல்வதோடு﹐ இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு எதிராய் கட்டவிழ்த்து விடப்படும் அராஜகங்களையும்﹐ உரிமைப்பறிப்புகளையும் தட்டிக்கேட்கும் முதுகெலும்புள்ள அமைப்பாய் அல்லாஹ்வின் அருளால் இது வரை இயங்கி வருகின்றோம். எமது அழைப்புப் பணியின் முக்கியமான மைற்கல்லில் தற்போது நாம் வீற்றிருக்கின்றோம்.
அண்மைக்காலமாய் இலங்கை முஸ்லிம்களை குறிவைத்து பல இனவாத சக்திகள் செயற்பட்டு வருவது உலகம் அறிந்ததே. முஸ்லிம்களை இலங்கை மண்ணிலிருந்து முழுவதுமாய் இனச்சுத்திகரிப்பு செய்வதற்குண்டான அனைத்து நடவடிக்கைகளிலும் இவ்வினவாத அமைப்புகள் களம் இறங்கியுள்ளன. இஸ்லாத்தை குறித்த அவதூறுச் செய்திகளை பெரும் பான்மை மக்களிடம் விதைக்கும் பேராபத்து இன்று பரவி வருகிறது.
பெரும்பான்மை மக்களிடம் இஸ்லாம் குறித்து நிலவும் தப்பான புரிதல்களை களைவதும்﹐ முஸ்லிம்களுக்கு இலங்கையில் நிலவும் இனவாதச் சுூழலை தெளிவு படுத்துவதும் எமது அடிப்படை பணியாக இன்று பரிணமித்துள்ளது. நாடு தழுவிய ரீதியில் முஸ்லிம்களை விழிப்புணர்வுூட்டும் நிகழ்ச்சிகளை செய்வதோடு﹐ சிங்கள மற்றும் தமிழ் மொழியிலான இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் கேள்வி பதில் நிகழ்ச்சியினையும் தற்போது தொடராக செய்து வருகின்றோம்.
நாம் மேற்கொள்ளும் தஃவாப் பணிகளின் முழுமையான வெற்றிக்கு பெரிதும் உறுதுணையாக இருப்பது எமது வெளியீடுகளான CD மற்றும் DVD க்களாகும். இந்த DVD க்கள் தெளிவான ஒளி – ஒலி அமைப்புகளுடன் வெளியிடப்பட வேண்டுமாயின் எமக்கு என்று சொந்தமாய் இரு வீடியோ கெமராக்கள் மற்றும் இலக்ட்ரோனிக் சாதனங்கள் அவசியப்படுகின்றன. இச்சாதனங்கள் சொந்தமாய் இருக்கும் படசத்தில் உடனுக்குடன் நிகழ்ச்சிகளை மக்கள் கரங்களில் சேர்க்க முடியுமாய் இருக்கும்﹐ இன்ஷா அல்லாஹ்.
மேற்படி கெமராக்களை கொள்வனவு செய்வதற்கு இலங்கை நாணயப்படி 10 இலட்சம் ரூபாய்கள் தேவைப்படுகிறது. அல்லாஹ்வின் தீனை அகிலமெங்கும் எடுத்துச் சொல்லும் இந்நற்பணிக்கு உங்களால் முடிந்த பண உதவிகளை கூடிய விறைவில் கீழ் காணும் கணக்கிலக்கத்திற்கு வைப்பிலிடுமாறு வினயமாய் கேட்டுக் கொள்கின்றோம்.
Sri Lanka Thawheed Jamaath.
Hatton National Bank
Maradana Branch
A/C No : 108010104971
தொடர்புக்கு : பொருளாளர் M.R.M ரிழ்வான் – 0094-773951616


Post a Comment