ஏசு சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டாரா?-பகுதி-8


ஏசு மரணிக்கவில்லை                        ஆதாரம்:6
 உறுதிப்படுத்தப்படாத மரணம்
 கழுமரத்தில் ஏற்றப்பட்ட ஏசுவின் கால் எலும்புகள் உடைக்கப்படவில்லை.
அவர்களின் எலும்புகளை எல்லாம் அவர் பாதுகாக்கின்றார்அவற்றுள் ஒன்றும் முறிபடாது.
                                                                                                         சங்கீதம் 34:20
செத்த பிணத்தின் கால் எலும்புகள் உடைக்கப்பட்டால் என்ன? உடைக்கப்படாவிட்டால் என்ன?
கால் எலும்புகள் உடைக்கப்படவில்லை என்றால் அதனால் ஏற்படும் பயன்உயிருள்ளவருக்குத் தானே! இறந்தவருக்கு அல்லது ஆவியாக மாறியவருக்கு எந்தப் பயனும் கிடையாது.
இந்த அழுத்தமான வாதத்தின்படி ஏசு உயிருடன் தான் இருக்கிறார்என்பதையே இது உறுதிப்படுத்துகின்றது.
ஏசுவின் கால் எலும்புகளை ரோமப் படையினர் ஏன் உடைக்காமல் விட்டனர்?
படைவீரர் வந்து இயேசுவோடு சிலுவையில் அறையப் பட்டிருந்தவருள்ஒருவனுடைய கால்களை முதலில் முறித்தார்கள்பின்னர் மற்றவனுடைய கால்களையும் முறித்தார்கள்.பின்பு அவர்கள் இயேசுவிடம் வந்தார்கள். அவர் ஏற்கெனவே இறந்து போயிருந்ததைக் கண்டு அவருடையகால்களை முறிக்கவில்லை.
                                                                                          யோவான் 19:32, 33
 ஏசுவின் இரு பக்கங்களில் கழுமரத்தில் தொங்க விடப்பட்டிருந்தஇருவரின் கால்களை முறிக்கின்ற படை வீரர்கள்,ஏசுவிடம் வருகின்றனர். அவர் ஏற்கனவே இறந்து போய் விட்டார் என்று எண்ணி அவரது கால்களைமுறிக்கவில்லை.
 ஏசு இறந்து விட்டார் என்பதை நவீன கால ஸ்டெதாஸ்கோப் மூலம் படைவீரர்கள்உறுதிப்படுத்தவில்லை. காலைத் தொட்டுக் கூடப் பார்க்கவில்லை. நாடி பிடித்தும் பார்க்கவில்லை.அப்படி ஒரு சிந்தனையை அவர்களின் உள்ளங்களில் கடவுள் போட்டு ஏசுவைக் காப்பாற்றினான்.
இந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்துமே ஏசுவை மரணத்திலிருந்துபாதுகாப்பதற்காகத் தான்.
 ஏசு மரணிக்கவில்லை                        ஆதாரம்:7
 யூதர்களை விரட்டிய இறைவன்
 இறைவன் ஏற்படுத்திய இன்னொரு ஏற்பாடு, அணு அணுவாக மரணத்தை ஏசு சுவைக்கும் காட்சியைப்பார்த்து ரசிக்க வேண்டும் என்று யூதர்கள் காத்திருந்தனர். அதற்கான அவகாசத்தையும் அரியதொருவாய்ப்பையும் எதிர்பார்த்திருந்தார்கள்.
 ஆனால் கடவுள் அவர்களது எதிர்பார்ப்பில் மண் அள்ளிப் போட்டு விட்டார்.அந்த யூதக் கூட்டத்தை விரட்டியடிப்பதற்காகப் பலத்த ஒரு பாதுகாப்பு ஏற்பாட்டைக் கடவுள்செய்திருந்தார்.
 நண்பகல் பன்னிரண்டு மணிமுதல் பிற்பகல் மூன்று மணிவரை நாடுமுழுவதும் இருள் உண்டாயிற்று.
                                                                                                      மத்தேயு 27:45
 அதே நேரத்தில் திருக்கோவிலின் திரை மேலிருந்து கீழ்வரைஇரண்டாகக் கிழிந்ததுநிலம் நடுங்கியதுபாறைகள் பிளந்தன.
                                                                                                     மத்தேயு 27:51
ஏறக்குறைய நண்பகல் பன்னிரண்டு மணி முதல் பிற்பகல் மூன்றுமணிவரை நாடெங்கும் இருள் உண்டாயிற்று.
கதிரவன் ஒளி கொடுக்கவில்லை.   திருக்கோவிலின் திரை நடுவில் கிழிந்தது.
                                                                                                       லூக்கா 23:44, 45
 ஏசு சிலுவையில் தொங்க விடப்பட்ட அந்த நேரத்தில் கிரகணம் ஏற்பட்டுஇருள் சூழ்ந்தது; நிலநடுக்கமும் ஏற்பட்டது.
 யூதர்கள் அந்த இடத்தில் இருந்திருந்தால் ஏசுவின் சாவை உறுதிசெய்யாமல் நகர மாட்டார்கள். அதற்காக அவர்களை விரட்டியடிப்பதற்காகவும், ஏசுவின் ஆதரவாளர்கள் அவருக்கு உதவுவதற்காகவும்இப்படி ஒரு ஏற்பாட்டைக் கடவுள் செய்கின்றார்.
ஏசு மரணிக்கவில்லை    ஆதாரம்:8
 வியப்புக்குள்ளாகும் பிலாத்து
 கடவுள் அந்தரங்கமான,மறைமுகமான வழியில் செயலாற்றுபவர். இதற்கு ஓர் எடுத்துக்காட்டு தான் படைவீரர்களின்உள்ளங்களில் ஏசு இறந்து விட்டார் என்ற எண்ணத்தைப் போட்டது!
 படை வீரர்கள் சிலருக்கு இப்படி ஓர் எண்ணத்தைப் போட்ட அதே கடவுள், இன்னொரு படைவீரரை ஏசுவின் விலாப்புறத்தில்ஈட்டியால் குத்தும்படி தூண்டுகிறார். அவ்வாறு குத்தியவுடனே தண்ணீரும் ரத்தமும் வடிந்தன.இது ஏசுவின் உயிரைக் காப்பாற்றும் வகையில் அமைந்தது. இவ்வாறு இரத்தம் வெளியேறுவதன்மூலம் உடலில் இரத்த ஓட்டம் மறுபடியும் சீராவதற்கு உதவுகின்றது.
 சிலுவை என்ற தலைப்பில் கலைக் களஞ்சிய பைபிளில் 960ஆம் பக்கத்தில் வெளியான கட்டுரை, ஏசுவின்உடலில் ஈட்டி ஊடுறுவுகையில் அவர் உயிருடன் இருந்தார் என்று உறுதிப்படுத்துகின்றது.அந்தக் கட்டுரை, தண்ணீரும் இரத்தமும்சேர்ந்து உடனடியாக வெளியானதையும் உறுதிப்படுத்துகின்றது.
 ஈட்டியின் தாக்குதல் உடலில் அதிகமான ஒரு தூண்டுதலை ஏற்படுத்துகின்றது.இதன் காரணமாக இரத்தக் குழாய்களின் நரம்பு மண்டலங்கள் நிலை குலைந்து தண்ணீர் வெளியாகின்றதுஎன்று 1949ஆம் ஆண்டு வெளியானதிங்கர்ஸ் டைஜஸ்ட் என்ற இதழில் மூத்த மயக்க மருந்து மருத்துவர் பிரிமோஸ் என்பவர் தெரிவிக்கின்றார்.
 ஏசு எத்தனை மணிக்கு சிலுவையில் ஏற்றப்பட்டார் என்பதில் ஒருமித்தகருத்து எந்த பைபிள் எழுத்தாளருக்கும் இல்லை. ஆனால் யோவான் 19:14 வசனத்தின்படி பகல் 12 மணி வரை பிலாத்து முன்னிலையில்ஏசு இருந்திருக்கிறார்.
 அதுபோல் எத்தனை மணிக்கு அவரது ஆவி பிரிந்தது என்பதையும் பைபிள்எழுத்தாளர்கள் தெரிவிக்கவில்லை. ஆனால் பகல் 3 மணிக்குஅவர் உயிர் துறந்தார் என்பதில் எழுத்தாளர்களுக்கு மத்தியில் கருத்தொற்றுமை நிலவுவதாகத்தெரிகின்றது.
 கிறிஸ்துவின் வாழ்க்கை என்ற நூலில் 421ஆம் பக்கத்தில் டீன் ஃபர்ரார் என்பவர், ஏசு சிலுவையில் மூன்று மணி நேரம் கிடந்தார்என்று தெரிவிக்கின்றார். சிலுவையில் கட்டப்பட்டவர்கள் சாதாரணமாக கால் எலும்பு உடைக்கப்பட்டாலேதவிர 3 மணி நேரத்திற்குள்ளாகஇறப்பதில்லை.
 அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு என்பவர் ஏசுவின் உடலைத் தரும்படிபிலாத்திடம் கேட்கின்றார். பிலாத்து உடனே நூற்றுவர் தலைவரிடம், ஏசு இறந்ததைக் கேட்டு வியக்கின்றார்.
 ஏற்கெனவே இயேசு இறந்துவிட்டதைக் குறித்துப் பிலாத்து வியப்படைந்துநூற்றுவர் தலைவரை அழைத்து, "அவன் இதற்குள் இறந்துவிட்டானா?'' என்று கேட்டான்.
                                                                                                            மாற்கு 15:44
துப்பாக்கி ஏந்திய படையை நோக்கி நிற்கும் ஒருவன் சுடப்பட்டுசாகின்றான் என்றால் அதில் வியப்பதற்கு ஒன்றும் இல்லை. தூக்குத் தண்டனை வழங்கப்பட்டுதூக்கு மேடையில் தொங்கும் ஒருவன் சாகின்றான் என்றால் அதிலும் வியப்பதற்கு ஒன்றுமில்லை.ஆனால் அதே சமயம் நம்முடைய எதிர்பார்ப்புக்கு நேர் மாற்றமாக அவர்கள் பிழைத்துக் கொண்டால்தான் நமக்கு அது வியப்பளிக்கும்.
 ஏசு உயிருடன் இருக்கிறார்; இறக்கவில்லை என்று பிலாத்து எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.அதனால் தான் அவர் இறந்து விட்டார் என்று தகவல் வந்ததும் அவர் வியப்பிற்குள்ளாகிறார்.
 இப்போது அரிமேத்தியா ஊரைச் சார்ந்த யோசேப்புக்கு ஏசுவின் உடலைஎடுத்துச் செல்ல அனுமதியளிக்கின்றார். இறுதிச் சடங்கில் அரிமேத்திய ஊரைச் சார்ந்த யோசேப், நிக்தேகம், மகதலா மரியா, யாகோபின்தாய் மரியா, சலோமி ஆகியோர் வந்திருந்தனர்.
 குளிப்பாட்டுதல், நறுமணம்பூசுதல் போன்ற காரியங்கள் இரண்டு மணி நேரத்திற்கு நடக்கின்றன. இவையும் அங்குள்ள யூதர்களைஏமாற்றுவதற்காக, ஏசு இறந்து விட்டார்என்று நம்ப வைப்பதற்காகத் தான் நடந்திருக்க வேண்டும்.
இந்த நேரத்தில் ஏசுவின் உடலில் உயிர்த் துடிப்பைக் காண்கின்றபோது அதை வெளிப்படுத்தி, மாட்டிக்கொடுக்கின்ற அளவுக்கு அவர்கள் அறிவிலிகள் அல்லர். ஏனெனில் அப்போது ஏசு உயிருடன் இருக்கிறார்என்று சொன்னால் அது மீண்டும் அவரைத் தொலைத்துக் கட்டுவதற்கு ஏதுவாகி விடும்.
எனவே கடவுள் இவ்வாறு ஒரு பாதுகாப்பை வழங்கி, ஈட்டியின் மூலம் அவரது ரத்த ஓட்டத்தைச் சரிப்படுத்தி, அவரது சீடர்களிடம் ஏசுவை ஒப்படைத்து அவரைப்பாதுகாத்திருக்கின்றார். இந்த நிகழ்வும் ஏசு இறக்கவில்லை என்பதை உறுதிப்படுத்துகின்றது.
                                               இன்ஷா அல்லாஹ் தொடரும்.....
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger