எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள்: கலக்கிய மாணவிகள்... 498 மதிப்பெண்களுடன் 9 மாணவிகள் முதலிடம்!

சென்னை: தமிழகம் முழுவதும் 10.50 லட்சம் மாணவ மாணவிகள் எழுதிய எஸ்எஸ்எல்சி (10-ம் வகுப்பு) தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. 

ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்த கொங்கு வேளாளர் பள்ளி மாணவி அனுஷா 498 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். 
இதேபோல மேலும் 8 மாணவிகள் 498 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். முதலிடம் பெற்ற 9 பேருமே மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது. 

மாணவி 500-க்கு 497 மதிப்பெண்கள் பெற்று மொத்தம் 52 மாணவ மாணவிகள் மாநிலத்தில் இரண்டாம் இடம் பெற்றுள்ளனர். 

496 மதிப்பெண்கள் பெற்று 137 மாணவர்கள் மூன்றாம் இடம் பிடித்துள்ளனர். 

இணைய தளங்கள்... 

தேர்வு முடிவுகளை கீழ்க்காணும் இணையதள முகவரிகளில் மாணவ-மாணவிகள் தெரிந்துகொள்ளலாம். www.tnresults.nic.in www.dge1.tn.nic.in www.dge2.tn.nic.in www.dge3.tn.nic.in 

இலவசமாக... 

பிளஸ்-2 தேர்வு முடிவை ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேசிய தகவலியல் மையத்திலும் (நிக் சென்டர்), அனைத்து மாவட்ட மைய நூலகங்களிலும், கிளை நூலகங்களிலும் மாணவ-மாணவிகள் இலவசமாக தெரிந்துகொள்ள தேர்வுத்துறை ஏற்பாடு செய்யப்பட்டது. அதேபோல, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவையும் எவ்வித கட்டணமும் இல்லாமல் இலவசமாக தெரிந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

மதிப்பெண் பட்டியல் 

மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் ஜூன் 20ம் தேதி வழங்கப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. பள்ளி மாணவர்கள் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களிடமும், தனி ‌தேர்வர்கள் தேர்வெழுதிய மையங்கள் மூலமாகவும் மதிப்பெண் பட்டியலை பெற்றுக் கொள்ளலாம்.

oneindia 

Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger