சென்னை: தமிழ்நாட்டில் மருத்துவ படிப்பில் சேருவதற்கான விண்ணப்பிக்க இன்றே கடைசிநாள் என்பதால் மாணவர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்தனர். இதுவரை 32000 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ள நிலையில் ஜூன் முதல்வாரத்தில் ரேங்க் பட்டியல் வெளியிடப்படும் என்று உயர்கல்வித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தமிழ்நாட்டில் உள்ள 18 அரசு மருத்துவ கல்லூரிகள், 11 தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 3200 உள்ளன.
ஒரே ஒரு அரசு பல் மருத்துவ கல்லூரி உள்ளது. மருத்துவ படிப்பில் சேருவதற்கு 32052 பேர் விண்ணப்பம் பெற்றுள்ளனர். சனிக்கிழமையுடன் விண்ணப்ப விற்பனை முடிவுக்கு வந்தது. விண்ணப்பங்களை அளிக்க இன்றே கடைசி நாள் என்பதால் தபால் மூலமும் நேரிலும் ஏராளமான மாணவர்கள் விண்ணப்பித்தனர்.
அரசு கல்லூரிகளில் கட்டணம்
அரசு மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் படித்தால் மட்டுமே கட்டணம் மிக மிக குறைவு. தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்து படித்தால் வருடத்திற்கு ரூ. 5 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டும். அதனால் அரசு கல்லூரிகளில் சேர மாணவ, மாணவிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
போட்டி அதிகம்
அதிக கட்-ஆப் மார்க் பெற்றுள்ள மாணவர்களே சிறந்த கல்லூரிகளை முதலில் தேர்வு செய்து விடுவர். இந்த ஆண்டும் ஒரே கட்-ஆப் மார்க்கில் நிறைய மாணவர்கள் இருப்பதால் போட்டி பலமாக இருக்கும் என்று தெரிகிறது.
மாணவர்கள் ஆர்வம்
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவ கல்லூரி வளாகத்தில் ஏராளமானோர் விண்ணப்பங்களை இன்று அளித்தனர். தஞ்சாவூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் இதுவரை 1627 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 3200 எம்.பி.பி.எஸ் இடங்களுக்கு இதுவரை 32 ஆயிரம் பேர் விண்ணப்பம் பெற்ற நிலையில் எத்தனை பேர் விண்ணப்பித்துள்ளனர் என்ற முழுவிவரம் நாளை தான் முழுமையாக தெரியும்.
ஜூன் முதல் வாரம்
ஜூன் முதல் வாரத்தில் எம்.பி.பி.எஸ் ரேங்க் பட்டியல் வெளியாகும் என்றும், அன்றுதான் கவுன்சிலிங் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் மருத்துவ கல்வி சேர்க்கை செயலாளர் டாக்டர் சுகுமார் தெரிவித்தார்.
oneindia

Post a Comment