புதுடெல்லி: பெண்களின் மார்பகப் புற்றுநோயை கண்டறியும் நவீன சோதனைக் கருவி இந்தியாவில் முதன்முறையாக அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது.
இந்தியாவில் சராசரியாக ஒரு லட்சம் பெண்களில் 30 பெண்கள் மார்பக புற்றுநோய் தாக்கத்தால் பாதிக்கப்படுகின்றனர். அந்த வகையில் மார்பக புற்று நோயை துல்லியமாக கண்டுபிடிக்கும் அதிநவீன "அமுலெட்" கருவி இந்தியாவிலேயே முதன் முதலாக டெல்லியில் நேற்று செயல்பாட்டுக்கு வந்தது.
கதிரியக்கத்தின் வாயிலாக கண்டுபிடிக்க முடியாத உள்ளார்ந்த புற்றின் வளர்ச்சியை கூட இந்த அமுலெட் கருவி வெகு துல்லியமாக கண்டுபிடித்து விடும். 50 மைக்ரான் அளவு கொண்ட துல்லியமான காட்சி தெளிவுடன் இந்த கருவி மார்பக புற்றுநோயை பரிசோதித்து தகவல் அளிக்கும்.
'இந்த நவீன கருவியில் ஒருமுறை சோதனை செய்து கொள்ள ரூ.3 ஆயிரம் வரை செலவாகும் என்று கூறப் படுகிறது. இது ஒரு வகை சோதனை முறையே அன்றி சிகிச்சை முறையல்ல என்பது குறிப்பிடத் தக்கது.

நன்றி - இந்நேரம்
Post a Comment