நாமக்கல்: +2 தேர்வு முடிவுகள் வெளியிடப் பட்டுள்ளது. மாநில அளவில் நாமக்கல் மாணவர்கள் ஜெயசூர்யா
மற்றும் அபினேஷ் ஆகியோர் 1189 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற +2 தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப் பட்டது.
சுமார் 8 லட்சத்து 53 ஆயிரத்து 355 பேர். தேர்வு எழுதினார்கள். இவர்களில் 88.1 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் மாணவர்கள் 84.7 சதவீதம். மாணவிகள் 91 சதவீதம்.
சுமார் 8 லட்சத்து 53 ஆயிரத்து 355 பேர். தேர்வு எழுதினார்கள். இவர்களில் 88.1 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் மாணவர்கள் 84.7 சதவீதம். மாணவிகள் 91 சதவீதம்.
இதில் நாமக்கல்லைச் சேர்ந்த மாணவர்கள் இருவர் முதலிடம் பிடித்துள்ளனர்.
நாமக்கல் வித்யா விகாஸ் பள்ளி மாணவர் ஜெயசூர்யா மற்றும் நாமக்கல் கிரீன் பார்க் மெட்ரிக் பள்ளி மாணவர் அபினேஷ் ஆகியோர் 1189 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தனர்.
நன்றி - இந்நேரம்
Post a Comment