RSS இயக்கத்தின் அரசியல் முகமூடிதான் பாரதிய ஜனதா கட்சி என்பது யாவரும் அறிந்ததே.
RSS இயக்கத்தின் செய்தி தொடர்பாளர் ராம் மாதவ் RSS இயக்கத்தின் ஆன்லைன் மாத இதழான ஸம்வாதம் ஆர்க்கில் எழுதியுள்ள கட்டுரையில் சிங்கள பயங்கரவாத இயக்கமான பொது பல சேனாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உணவுப்பொருட்களின் பொதிகளில் ஹலால் முத்திரை பதிப்பதற்கு எதிராகவும், முஸ்லிம்களின் வழிபட்டு உரிமைகளுக்கு எதிராகவும், கிறிஸ்தவர்களுக்கு எதிராகவும் செயல்படும் பல சேனாவின் செயல்பாடுகளை அவர் பகிரங்கமாக ஆதரித்த எழுதியுள்ளார்.
மேலும், தமிழீழ விடுதலை போராட்ட வரலாற்று நாயகர்களான தமிழ் ஈழ விடுதலை புலிகளின் கட்டுப்பாடு கிறிஸ்தவ சபைகளின் கரங்களில் இருந்தது என்று கீழ்த்தரமான ஒரு குற்றச்சாட்டையும் அதில் வைக்கிறார். ஹிந்துதுவாவின் நம்பிக்கை சிங்களர்கள் ஆர்ய வம்சாவளியைச் சார்ந்த வட இந்தியர்கள் என்பதே. இதை மையமாக வைத்தே RSS இயக்கத்தின் செய்தி தொடர்பாளர் இக்கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துகிறார்.
இலங்கையில் இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டதில் பெரும்பகுதி மக்கள் இலங்கை தமிழ் இந்துக்களே! ஈழத்திலே சிங்கள பேரினவாதிகளால் உடைத்தெரியப்பட்ட கோவில்கள் பலநூறு. இலங்கையில் கொல்லப்படுபவர்கள் இந்துக்கள் என்கிற உணர்வு ஆரம்பம் முதல் பாரதிய ஜனதாவுக்கு இருந்ததில்லை. சிலதினங்களுக்கு முன்னர்தான் ஈழத்து படுகொலையை “இனப்படுகொலை” என்று தீர்மனம் இயற்ற முடியாது என ஆளும் காங்கிரஸ் கட்சி மட்டுமல்லாது, முக்கிய எதிர்கட்சியாக இருக்கும் பாரதிய ஜனதா கட்சியும் (BJP) கூறி இருந்தது.
பிற நாடுகளின் மீது ஆதிக்கம் செலுத்தும் வகையில் இதுபோன்ற தீர்மானங்களை இந்தியா கொண்டு வருவதை அனுமதிக்க மாட்டோம் என்று கூறி இருந்தது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. ஈழத்து விடுதலை போராட்டத்திற்கு எதிராகவே பாரதிய ஜனதா, ஜெயலலிதா, சோ, சுப்பிரமணிய சுவாமி, தினமலர், தினமணி, இந்தியா டுடே போன்றோர் குரல் எழுப்பி வந்தனர் என்பதை தமிழர்கள் மறந்து விடவில்லை.
அரசியலுக்காக ஓட்டு வாங்க அம்மாவும், பாரதிய ஜனதாவும் பகல் வேஷம் போடுவதை தமிழர்கள் நன்கறிவார்கள். அதனால் கருணாநிதியை யோக்கியர் என்று எண்ணிவிட வேண்டாம்! இவர்கள் நெஞ்சில் குத்தினால் கருணாநிதி முதுகில் குத்துவார்!
நன்றி- சிந்திக்கவும்
Post a Comment