பிளஸ் டூ – வுக்குப் பின்: காமர்ஸ் (வணிகவியல்) படிப்புகள்

பிளஸ் டூ வகுப்பில் காமர்ஸ் (வணிகவியல்), அக்கவுண்டன்சி பிரிவு எடுத்துப் படித்தமாணவர்களா நீங்கள்காமர்ஸ் படித்த மாணவர்கள் குறைந்த செலவில்குறுகியகாலத்தில் காமர்ஸ் சார்ந்த தொழில் படிப்புகளைப் படித்துகை நிறையச் சம்பாதிக்கவாய்ப்புள்ளது. பிளஸ் டூ வகுப்பில் வணிகவியல் பாடப்பிரிவுகளை எடுத்துப் படித்தமாணவர்கள் என்ன படிக்கலாம்தகவல்கள் இதோ...

பிளஸ் டூ வகுப்பில் காமர்ஸ் குரூப் எடுத்துப் படித்த மாணவர்களில்பெரும்பாலானோரின் சாய்ஸ், பி.காம். பட்டப் படிப்புதான்தமிழகத்திலுள்ள கலைஅறிவியல் கல்லூரிகளில் கடந்த 25 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் பி.காம்.படிப்புக்குத்தான் அதிக டிமாண்ட்.  எனவே, பிளஸ் டூ தேர்வில் சிறந்த மதிப்பெண்கள்பெற்றால்தான் சிறந்த கல்லூரிகளில் பி.காம். படிப்பில் சேர இடம் கிடைக்கிறது.தற்போது பி.காம். படிப்பில் பல்வேறு பிரிவுகள் வந்து விட்டன. பி.காம். படித்துவிட்டுகம்ப்யூட்டர் தொடர்பான படிப்புகளைப் படிப்பவர்களுக்குதனியார் நிறுவனங்களில்நிறைய வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன.
வணிகவியல் தொடர்பான பாடங்களை எடுத்துப் படித்த மாணவர்களுக்கு நல்லஊதியத்தில் வேலை வாப்பைத் தரக்கூடிய தொழில் படிப்புகள் சில...

சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் (சி.ஏ.)

பிளஸ் டூ வகுப்பில் வணிகவியல் படித்த மாணவர்கள் சிஏ படித்து ஆடிட்டர் ஆகலாம்.இப்படிப்பைப் படிக்க ரூ.30 ஆயிரம் மட்டுமே செலவாகும்.  பிளஸ் டூ முடித்தவர்கள், CPT எனப்படும்  Common Proficiency Test  எழுத வேண்டும்இந்தத் தேர்வுக்கு ஆறுமாதங்களில் தயாராகிவிடலாம். 4 பாடங்களில் 2 தாள்கள் எழுத வேண்டும்.அனைத்துப் பாடங்களிலும் தனித்தனியே 50 சதவீத மதிப்பெண்களை எடுக்கவேண்டும்மொத்தமாக 200 மதிப்பெண்கள் பெற்றிருக்கவேண்டும். சி.ஏ. படித்துக்கொண்டே கல்லூரிகளில் சேர்ந்து வேறு எந்தப் படிப்பிலும் படிக்க முடியாது.அதேசமயம்தொலைநிலைக் கல்வி மூலம் பி.காம். போன்ற படிப்புகளில் சேரலாம்.

பட்டப் படிப்பு படித்தவர்கள், CPT  தேர்வை எழுதாமல் நேரடியாக IPC எனப்படும்Integrated Professional Competency  தேர்வை எழுதவேண்டும்ஓராண்டு படிப்பு இது.மொத்தம் இரண்டு பிரிவுகள்முதல் பிரிவில் 4, இரண்டாம் பிரிவில் 3 என மொத்தம் 7தாள்கள்இந்தத் தேர்வில் மொத்தம்  700 மதிப்பெண்கள் பெற்றால் தேர்ச்சிபெற்றுவிடலாம்அதாவதுஒவ்வொரு பாடத்திலும் 50 சதவீதத்துக்கு குறையாமல்மதிப்பெண்கள் பெற வேண்டும்.

அடுத்து Final எனப்படும் இறுதித் தேர்வுஇதில் 2 பிரிவுகளில் மொத்தம் 8 தாள்கள்.ஒவ்வொரு பாடத்திலும் 50 சதவீத மதிப்பெண்களுக்குக் குறையாமல்மொத்தத்தில் 800மதிப்பெண்களும் பெற்றால்இறுதித் தேர்வில் வெற்றி பெற முடியும்.  IPC  தேர்வில்தேர்ச்சி பெற்றவுடன்பணியில் சேர்ந்த மூன்று ஆண்டுகள்ஒருவரிடம் சார்ட்டர்ட்அக்கவுண்டன்ட் பயிற்சி பெறவேண்டும்பயிற்சி எடுத்துக்கொண்டே Final-க்குதயாராகிவிடலாம்.

சி.ஏ. படிப்பை ஒரு சுய முயற்சிப் படிப்பு எனலாம்நாள்தோறும் 4 மணி நேரத்துக்குகுறையாமல் படித்து வந்தால், சி.ஏ. தேர்வில் எளிதில் வெற்றி பெற்றுவிடலாம்.அஞ்சல் வழியில் பட்டப் படிப்பைப் படித்துக்கொண்டே சி.ஏ. தேர்வுக்குத் தயாராகிவருவது நல்லது. சி.ஏ. படித்து முடிக்கும்போதுபட்டப் படிப்பையும் முடித்துவிடலாம். சி.ஏ. படிப்புக்கென இன்ஸ்டிட்யூட் ஆஃப் சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட்ஸ் ஆஃப்இந்தியா அமைப்பு செயல்படுகிறதுஇதன் தலைமை அலுவலகம் தில்லியில் உள்ளது.தில்லிசென்னை உள்பட 5 இடங்களில் மண்டல அலுவலகங்களும், 126 கிளைஅலுவலகங்களும் உள்ளனசென்னை மண்டலத்தில் சி.ஏ. தேர்வுக்கான நேரடிப்பயிற்சி வகுப்புகள் வாரத்துக்கு 5 நாட்கள் நடைபெறுகின்றனதபால் மூலமும்படிக்கலாம். சி.ஏ. படித்து முடித்தவர்கள் தனிப்பட்ட முறையில் பணி செய்யலாம்அல்லது கம்பெனிகளில் தணிக்கையாளராகப் பணியாற்றலாம்அடிப்படை நிலையில்மாதத்துக்கு ரூ.50 ஆயிரத்திலிருந்து ரூ.75 ஆயிரம் வரை சம்பளம் கிடைக்கும்பிறகுவானமே எல்லைஎன்கிறார்தென் மண்டல கவுன்சில் உறுப்பினர்சி.ஆர்.கோபாலகிருஷ்ண ராஜு.

விவரங்களுக்கு: www.icai.org

சி.எம்.ஏ.

காமர்ஸ் பிரிவு மாணவர்களின் மனங்கவர்ந்த படிப்புகளுள் ஒன்று, சி.எம்.ஏ.எனப்படும் காஸ்ட் அண்ட் மேனேஜ்மெண்ட் அக்கவுண்டன்சி படிப்புசுருங்கச்சொன்னால்காஸ்ட் அக்கவுண்டிங் படிப்பு. பிளஸ் டூ படித்துக் கொண்டிருக்கும்போதேஇந்தப் படிப்பில் சேரலாம்இந்தப் படிப்பைப் படித்துக்கொண்டே கல்லூரியிலோ,தொலைநிலைக் கல்வி நிலையத்திலோ சேர்ந்து பட்டப் படிப்பும் படிக்கலாம்வேலைபார்த்துக்கொண்டே பகுதி நேரமாக இந்தப் படிப்பையும் படிக்கலாம் என்று ஏகப்பட்டஅனுகூலங்கள் இந்தப் படிப்பில் உண்டு. சி.எம்.ஏ. படிப்பை இன்ஸ்டிட்யூட் ஆஃப்காஸ்ட் அக்கவுண்டன்ட்ஸ் ஆஃப் இந்தியா (ஐ.சி.ஏ.ஐ.) அமைப்பு நடத்துகிறது.

சி.எம்.ஏ. படிப்பைப் பொருத்தவரைமூன்று பிரிவுகள் உள்ளனஃபவுண்டேஷன்கோர்ஸ் எனப்படும் அடிப்படை நிலைஇன்டர்மீடியட் நிலைஃபைனல் எனப்படும்இறுதி நிலைஇந்தப் படிப்பைத் தேர்ந்தெடுத்துப் படிக்க விரும்புபவர்கள் முதலில்ஐ.சி.ஏ.ஐ. நிறுவனத்தில் பதிவு செய்து கொள்ளவேண்டும்

அடிப்படை நிலைப்படிப்புக்கு, பிளஸ் டூ முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கமுடியும்இப்படிப்பில் நான்கு பேப்பர்கள் உள்ளனஒவ்வொரு பேப்பரிலும்குறைந்தபட்சம் 40 மதிப்பெண்களும்அனைத்து தாள்களிலும் மொத்தமாக 200மதிப்பெண்களும் பெற்றால் மட்டுமே தேர்ச்சி பெற முடியும்.

அடிப்படை நிலைப்படிப்பை முடித்தவர்கள் இன்டர்மீடியட் படிப்பில் சேர முடியும்பட்டதாரிகள் நேரடியாகவே இன்டர்மீடியட் படிப்பில் சேரலாம்இன்டர்மீடியட்டில் 2கட்டங்கள் உள்ளனஒவ்வொரு கட்டத்திற்கும் தலா 4 பேப்பர்கள் வீதம், 8 பேப்பர்கள்உள்ளனஇதிலும் ஒவ்வொரு பேப்பரிலும் குறைந்தபட்சம் 40 மதிப்பெண்களும் நான்குபேப்பரிலும் சேர்த்து மொத்தம் 200 மதிப்பெண்களும் பெற்றால் மட்டுமே அடுத்தகட்டத்திற்குப் போக முடியும்இன்டர்மீடியட்டில் தேர்ச்சி பெற்றவர்கள்ஃபைனல்எனப்படும் இறுதிக் கட்டப் படிப்பில் நுழையலாம்இதிலும் இரண்டு கட்டங்கள்உள்ளன.  ஒவ்வொரு கட்டத்திற்கும் தலா 4 பேப்பர்கள் வீதம் 8 பேப்பர்களை முடிக்கவேண்டும்.

பொருளாதாரம் மற்றும் நிர்வாகத்தின் அடிப்படைக் கூறுகள்சட்டங்கள்வர்த்தகக்கணிதம்புள்ளியியல்இன்ஃபர்மேஷன் சி்டம்ஸ், காஸ்ட் அண்ட்மேனேஜ்மெண்ட் அக்கவுன்டண்சிநேரடி வரி விதிப்புகம்பெனி அக்கவுண்ட்ஸ்,ஆடிட்கார்ப்பரேட் லாகாஸ்ட் அண்ட் மேனேஜ்மெண்ட் ஆடிட் என்று பல்வேறுபாடங்கள் இந்தப் படிப்பில் கற்றுத் தரப்படுகின்றன.

இப்படிப்பில் சேர ஆண்டு முழுவதும் விண்ணப்பிக்கலாம்ஆண்டிற்கு இரண்டு முறைஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் தேர்வு நடைபெறும்ஜூன் மாதத் தேர்வை எழுதவிரும்புபவர்கள்அதற்கு முதல் ஆண்டின் நவம்பர் மாதத்தில் இந்தப் படிப்பில்சேர்ந்திருக்கவேண்டும்டிசம்பரில் தேர்வு எழுத விரும்புபவர்கள், அதே ஆண்டில் மேமாதம் இந்தப் படிப்பில் சேரலாம்இரண்டரை ஆண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்குள்ஐ.சி.ஏ.ஐ. படிப்பை முடித்துவிடலாம்காஸ்ட் அக்கவுண்டன்ட்ஸ் ஆஃப் இந்தியாமையத்தில் நேரடியாகச் சேர்ந்து பயிற்சி பெற விரும்புபவர்களுக்கான கல்விக்கட்டணம் ரூ.45 ஆயிரம்தபால் மூலம் படிக்க ஆகும் செலவு ரூ.35 ஆயிரம்இந்தமையத்தில் நேரடியாகவும்தபால் மூலமாகவும் சி.எம்.ஏ. படிப்புக்குபயிற்சியளிக்கப்படுகிறதுமாணவர்களின் வசதிக்கேற்ப காலை 7 முதல் 9மணிவரையும்,  9 முதல் 11 மணி வரையும்மாலை    4.15 முதல் 6.15 மணி வரையும்,மாலை 6.15 முதல் 8.15 மணி வரையும் வகுப்புகள் நடைபெறுகின்றன.

குறைந்த செலவில்குறுகிய காலத்தில் கை நிறையச் சம்பளத்தை அள்ளித் தரும்படிப்பு இது.  ஐ.சி.ஏ.ஐ. படித்து முடித்தவர்கள்இந்தியன் காஸ்ட் அக்கவுண்டன்ட்சர்வீஸ் நடத்தும் கிளாஸ் 1 சர்வீஸ் தேர்வை எழுதி தேர்ச்சி பெறலாம்காஸ்ட்ஆடிட்டிங் படித்தவர்கள்காஸ்ட் ஆடிட்டர்கமர்சியல் ஆடிட்டர்தயாரிப்புநிறுவனங்களில் தணிக்கையாளர்அக்கவுண்டன்ட், அசிஸ்டெண்ட் மேனேஜர்,மேனேஜர்சீனியர் மற்றும் ஜெனரல் மேனேஜர்நிர்வாக இயக்குநர், இணை நிர்வாகஇயக்குநர்தலைவர் என்று பல பதவிகளைப் பெற முடியும். ஒரு தயாரிப்புநிறுவனத்தில் மொத்தப் பரிமாற்ற கைமுதல் ஓராண்டுக்கு ரூ.20 கோடியாகஇருந்தால்அந்த நிறுவனம் அவசியம் காஸ்ட் அக்கவுண்டன்ட்டுகளை பணியில்அமர்த்தியிருக்கவேண்டும் என்பது விதிஇன்றைய கால கட்டத்தில்பெரும்பாலானதயாரிப்பு நிறுவனங்களில் காஸ்ட் அக்கவுண்டன்ட்டுகளின் பணி முக்கியமானதாகஇருக்கிறதுகாஸ்ட் அக்கவுண்ட்டிங் படித்தவர்கள் தனிப்பட்ட முறையிலும்பிராக்டீஸ் செய்யலாம்வங்கிகளின் புராஜெக்ட்டுகள்பொருட்களின் விலைநிர்ணயம்நிதி நிர்வாகம் போன்ற பல பணிகளை செய்கிறார்கள்காஸ்ட்அக்கவுண்டன்ட் பணியில் சேரும்போதே குறைந்தபட்சம் ஆண்டுக்கு ரூ.6 லட்சம்வரை ஊதியம் பெற முடியும்அரசுத் துறை நிறுவனங்களில் வேலை கிடைத்தால்ஆண்டிற்கு ரூ.14 லட்சம் வரைகூட ஊதியம் பெற வாய்ப்புள்ளதுஎன்கிறார், இன்ஸ்டிட்யூட் ஆஃப் காஸ்ட் அக்கவுண்டன்ட்ஸ் ஆஃப் இந்தியா அமைப்பின்சென்னை எழும்பூர் மையத்தின் துணை இயக்குநர் கேசண்முகம்.

விவரங்களுக்கு: www.icmai.in

ஏ.சி.எஸ்.

சி.ஏ., சி.எம்.ஏ. படிப்புகளைப்போலவணிகவியல் மாணவர்களின் மற்றொரு சாஸ், ஏ.சி.எஸ். எனப்படும் அசோசியேட் ஆஃப் கம்பெனி செக்ரட்டரிஷிப் படிப்பு.இப்படிப்பைதி இன்ஸ்டிட்யூட் ஆஃப் கம்பெனி செக்ரட்டரிஸ் ஆஃப் இந்தியா(ஐ.சி.எஸ்.ஐ.) கல்வி நிலையம் நடத்துகிறதுரூ. 5 கோடியும் அதற்கு மேலும்மூலதனம் செய்யப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட ஒரு நிறுவனம்கட்டாயம் ஒரு கம்பெனிசெக்ரட்டரியை நியமிக்கவேண்டும் என்பது இந்திய கம்பெனிகள் சட்ட விதிபங்குச்சந்தையில் தங்கள் நிறுவனங்களைப் பதிவு செய்துள்ள அனைத்து நிறுவனங்களும்கண்டிப்பாக கம்பெனி செக்ரட்டரியை நியமிக்க வேண்டும்கம்பெனிசெக்ரட்டரிகளாக, ஏ.சி.எஸ். படித்தவர்கள் மட்டுமே நியமிக்கப்படுவர்அதனால்ஏ.சி.எஸ். படிப்புக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல டிமாண்ட்.

பிளஸ் டூ படித்த மாணவர்கள் இந்தப் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம். பிளஸ்டூவில் எந்த குரூப் எடுத்துப் படித்திருந்தாலும் சரி. கம்பெனி செக்ரட்டரி படிப்பைப்பொருத்தவரைஆரம்ப நிலை (ஃபவுண்டேஷன் புரோகிராம்), நிர்வாக நிலை(எக்ஸிகியூட்டிவ் புரோகிராம்), தொழில்முறை நிலை (புரபஷனல் புரோகிராம்என்றுமூன்று நிலைகள் உள்ளன. பிளஸ் டூ முடித்த மாணவர்கள் ஆரம்ப நிலையில்சேரலாம்பட்டப் படிப்பு முடித்தவர்கள் நேரடியாக நிர்வாக நிலையில் சேரலாம்.ஆரம்ப நிலைப் படிப்புக்கான காலம், 8 மாதங்கள்இப்படிப்பில் சேர பயிற்சிக்கட்டணம் ரூ.4,500. நிர்வாக நிலையில் தேர்ச்சி பெற்றால்தான்தொழில்முறைநிலையில் சேர முடியும்நிர்வாக நிலைப் பிரிவில் 7 தாள்கள் உள்ளன.   இதில்தேர்ச்சி பெற்றவர்கள், ரூ.5 கோடிக்கு குறையாமல் முதலீடு செய்து நடத்தப்படும்நிறுவனத்தில் செக்ரட்டரியாகப் பயிற்சிப் பணியில் சேர முடியும்பயிற்சிக் காலத்தில்கம்பெனியின் தன்மைக்கேற்ப மாதத்துக்கு ரூ.5 ஆயிரம் வரை உதவித்தொகையும்பெற முடியும்நிர்வாக நிலை படிப்புக்கான கட்டணம் (வணிகவியல்பட்டதாரிகளுக்கு) ரூ.9 ஆயிரம், பிற பட்டதாரிகளுக்கு ரூ.10 ஆயிரம்நிறுவனத்தில்பணியாற்றிக் கொண்டே தொழில்முறை நிலைப்படிப்பையும் தொடர முடியும்நிர்வாகநிலைப்படிப்பு மற்றும் தொழில்முறை நிலைப்படிப்புகளுக்கான காலம் தலா 9மாதங்கள்தொழில்முறை நிலைப்படிப்புக்கான கட்டணம் ரூ.12 ஆயிரம்.தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு கல்விக்கட்டணத்தில் 50 சதவீத சலுகை உண்டு.

அடிப்படை நிலையில் 4 தாள்களும்நிர்வாக நிலையில் 2 பிரிவுகளில் 7 தாள்களும்,தொழில்முறை நிலையில் 3 பிரிவுகளில் 9 தாள்களும் உள்ளனஇதில் ஒவ்வொருதாளிலும் 40 சதவீதத்துக்குக் குறையாமல் மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே தேர்ச்சிபெற முடியும்அத்துடன் ஒரு நிலையில் எழுதும் அனைத்து தாள்களிலும் சேர்த்து 50சதவீதத்துக்குக் குறையாமல் மதிப்பெண்களைப் பெற வேண்டும். ஒரு தாளில்தோல்வியடைந்தாலும்கூட அனைத்து தாள்களையும் மீண்டும் எழுதவேண்டியதிருக்கும்.

ஏ.சி.எஸ். படிப்பில் ஆண்டு முழுவதும் எந்த நாளிலும் சேரலாம்தபால் மூலமும்கல்வி கற்பிக்கப்படுகிறதுமண்டல அலுவலகம் மற்றும் கிளை அலுவலகங்களில்நடக்கும் நேர்முக வகுப்பிலும் சேர்ந்து படிக்கலாம். ஓர் ஆண்டில் ஜூன் மற்றும்டிசம்பர் மாதம் என இரண்டு முறை தேர்வுகள் நடைபெறும்மார்ச் 31-ஆம் தேதிக்குள்சேருபவர்கள் அந்த ஆண்டு டிசம்பர் மாதம் தேர்வு எழுதலாம்செப்டம்பர் 30-ஆம்தேதிக்குள் சேருபவர்கள் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெறும் அடிப்படைத்தேர்வை எழுதலாம்.

பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் நிர்வாக நிலை படிப்பில் சேருபவர்கள், அதே ஆண்டுடிசம்பரில் 2 குரூப்களும்மே 31-ஆம் தேதிக்குள் சேருபவர்கள், அதே ஆண்டுடிசம்பரில் ஒரு குரூப் மட்டும் தேர்வு எழுதலாம்ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் நிர்வாகநிலைப் படிப்பில் சேருபவர்கள்அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் 2 குரூப்களும்,நவம்பர் 30-ஆம் தேதி சேருபவர்கள் அடுத்த ஆண்டு ஜூனில் ஒரு குரூப்பும் தேர்வுஎழுதலாம்இப்படிப்புகளில் சேர வயது வரம்பு இல்லை.

ஒரு நிறுவனத்தின் முதன்மையான அதிகாரிகளில் (Principal Officer) ஒருவராககம்பெனி செக்ரட்டரி திகழ்கிறார். ஏ.சி.எஸ். படித்து முடித்து கம்பெனிசெக்ரட்டரியாகப் பணியில் சேருபவர்கள்,  கம்பெனி சார்பில் பல்வேறு பணிகளில்ஈடுபடுவர்கம்பெனிகள் சார்பில் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களைச்சமர்ப்பித்தல்நீதிமன்றங்களில் ஆஜராகுதல்கம்பெனியின் தலைவருக்குஆலோசனை கூறுதல்நிறுவனத்தின் சட்டம்நிதி நிர்வாகம்பணியாளர் நிர்வாகம்போன்றவற்றையும் கவனித்துக் கொள்கிறார்அத்துடன்கம்பெனியின் நிர்வாகஇயக்குநர்கம்பெனித் தலைவர் போன்ற பதவிகளிலும் படிப்படியாகமுன்னேற்றமடைய முடியும். ரூ.25 ஆயிரம் செலவில் மூன்றே ஆண்டுகளில்இப்படிப்பை முடித்து வேலைவாய்ப்பையும் பெற்றுவிடலாம்என்கிறார், ஐ.சி.எஸ்.ஐ. அமைப்பின் தென் மண்டல அலுவலக இணை இயக்குநர் சாரா ஆரோக்கியசாமி.

நன்றி புதிய தலைமுறைக்கல்வி
 thanks to -tntjsw

Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger