ஏசு சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டாரா?-பகுதி-6


ஏசு கழுமரத்தில் ஏற்றப்படல்...


ஏசு மரணிக்கவில்லை                           ஆதாரம்: 4
இறக்கும் முன்பே சிலுவையிறக்கம்
                    அரசியல் எதிரிகள், கொலைகாரர்கள், புரட்சியாளர்களைக் களைந்தெடுப்பதற்குப் பல்வேறுவிதத்தில் மரண தண்டனைகள் வழங்கப்பட்டு வந்தன. கல்லால் எறிந்து கொல்தல், கூர்மையான பொருட்கள் மூலம் கொல்தல், நீரில் மூழ்கடித்தல் போன்ற முறைகளில் சமூகவிரோதிகள் கொல்லப்பட்டு வந்தனர். ஆனால் இந்த முறைகளில் சமூக விரோதிகள் வெகு சீக்கிரமேமரணத்தைத் தழுவி விடுகின்றனர். சாவை, சன்னம் சன்னமாகஅனுபவிப்பதில்லை. அணு அணுவாக வேதனையை அனுபவிப்பதில்லை. சாவை, அணு அணுவாக அனுபவிக்க வேண்டும் என்பதற்காகஉதயமானது தான் சிலுவையில் அறைதல்.
  சிலுவையில்அறைதலிலும் இரு வித வகைகள் உள்ளன. ஒன்று மெதுவாகச் சாகடித்தல்; மற்றொன்று வேகமாகச் சாகடித்தல்.
நீண்ட நேரம் சிலுவையிலேயே தொங்க விட்டுச் சாகடிப்பது மெதுவாகக்கொல்லும் முறையாகும்.
 கடப்பாறைபோன்ற ஆயுதத்தை வைத்துக் கால் எலும்புகளை உடைத்துக் கொல்வது! கால் எலும்புகள் தாக்கப்பட்டுமுறிந்தவுடன் தொங்குபவர் மூச்சுத் திணறி உயிர் இழந்து விடுவார். இது வேகமாகச் சாகடிக்கும்முறை!
            ஏசு இந்தஅவசர மரணத்தை அனுபவிக்கவில்லை. அவரது கால்களும் முறிக்கப்படவில்லை. காரணம் ஏசு கழுமரத்தில்ஏற்றப்பட்ட கொஞ்ச நேரத்தில் அவர் இறந்து விட்டார் என்று ரோமானியப் படைத் தளபதி அறிவித்துவிட்டார். அதனால் இதற்கு அவசியமில்லாமல் ஆனது. 
             இது மட்டுமில்லாமல் குற்றவாளியின் கை, கால்களை தோல் துண்டுகளால் சிலுவையில் கட்டித்தொங்க விடுதல், அல்லது அவர்களதுகை, கால்களை ஆணிகளால்அறைந்து விடுதல் என்ற இரண்டு முறைகள் உள்ளன.
இதில் ஏசு கழுமரத்தில் அறையப்பட்டாரா? அல்லது கட்டப்பட்டாரா? என்று பார்க்கும் போது, கிடைக்கக்கூடிய விபரங்களை வைத்துப் பார்க்கையில்ஏசு கட்டத் தான் படுகிறார்.
             மற்றச் சீடர்கள்அவரிடம், "ஆண்டவரைக்கண்டோம்'' என்றார்கள்.தோமா அவர்களிடம், "அவருடையகைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பைப் பார்த்துஅதில் என் விரலை விட்டுஅவர் விலாவில் என் கையை இட்டாலன்றிநான் நம்பமாட்டேன்'' என்றார்.
எட்டு நாள்களுக்குப்பின் அவருடைய சீடர்கள் மீண்டும் உள்ளேகூடியிருந்தார்கள். அன்று தோமாவும் அவர்களோடு இருந்தார். கதவுகள் பூட்டப்பட்டிருந்தும்இயேசு உள்ளே வந்து அவர்கள் நடுவில் நின்று, "உங்களுக்கு அமைதிஉரித்தாகுக!'' என்று வாழ்த்தினார்.
பின்னர் அவர் தோமாவிடம், "இதோ! என் கைகள்.இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கைகொள்'' என்றார்.தோமா அவரைப் பார்த்து,"நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!'' என்றார்.
                                                                                 யோவான் 20:25-28
            இந்தச் சம்பவத்தில், ஏசு மீண்டும் வந்த போது அவரது கைகளில் ஆணிஇருந்ததாகக் கூறப்படுகிறது. அப்படியானால் ஏசு சிலுவையில் கட்டப்படவில்லை; ஆணியால் அறையப்பட்டிருக்கிறார் என்று தானேஅர்த்தம் என்று கிறித்தவர்கள் கேள்வி எழுப்புவர். ஆனால் உர்ன்க்ஷற்ண்ய்ஞ் பட்ர்ம்ர்ள்என்றழைக்கப்படும் சந்தேகப் பேர்வழி தோமாவின் இந்தச் சம்பவம் பொய்யான சம்பவமாகும். ஏசுமீண்டும் வந்ததாக இடம் பெறும் அனைத்துச் செய்திகளும் பைபிளில் இட்டுக்கட்டப்பட்டவையே!
        யோவான் 8வது அதிகாரத்தில் 1 முதல் 11 வரையிலான வசனங்கள் 1952ஆம் ஆண்டு திருத்தப்பட்ட பைபிள் பதிப்பில்நீக்கப்பட்டன. "இந்த வசனங்கள் மூலப் பிரதியில் இல்லைஅதனால் இது ஒரு போலிச் சம்பவம்என்று கூறி 52 சபையினர் கூடி அதை நீக்கி விட்டனர் என்பதையும்,பிறகு வெளியிடப்பட்ட பைபிளில் சேர்க்கப்பட்டதையும்கடந்த இதழில் பார்த்தோம்.
ஏசு திரும்ப வந்ததாகவும் அவரது கைகளில் ஆணியின் தழும்பைப் பார்த்ததாகவும்சந்தேகப் பேர்வழி தோமா கூறுவது இது போன்ற போலிச் சம்பவம் தான்.
        எனவே ஏசுசிலுவையில் தோல் துண்டுகளால் தான் கட்டப்பட்டிருந்தார்.
சிலுவையில் கட்டப்பட்ட நேரம்
           பைபிள் எழுத்தாளர்களின்கருத்துப்படி யூதர்களும் ரோமானியர்களும் ஏசுவை ஆறாம் நேரத்தில் அதாவது வெள்ளிக்கிழமைபகல் 12 மணிக்கு சிலுவையில்ஏற்றப்பட்டார். 9வது நேரம் அதாவது3 மணிக்கு ஆவியை விட்டார். (உண்மையில்இறக்கவில்லை)
            யூதர்கள்வித்தியாசமானவர்கள். கழுமரத்தில் ஏற்ற வேண்டும் என்று எந்த அளவுக்கு அவசரப்பட்டார்களோஅதே அளவுக்கு இறக்க வேண்டும் என்றும் அவசரப்பட்டார்கள். ஏன்? மறுநாள் அவர்களது புனித நாளான சனிக்கிழமை!
            சாவுக்குஏதுவான பாவம் செய்த மனிதன் சாகடிக்கப்பட்டபின் அவனது பிணத்தை ஒரு மரத்திலே தொங்கவிடுஆனால் அவன் பிணம் இரவில் மரத்தில்தொங்கக்கூடாது. அவனை நீ அன்றே அடக்கம் செய்ய வேண்டும். ஏனெனில் தொங்கவிடப்பட்டவன் கடவுளால்சபிக்கப்பட்டவன். நீயோ உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு உரிமைச் சொத்தாகக் கொடுக்கும்நாட்டைத் தீட்டுப் படுத்தாதே.
                                                                                        உபாகமம் 21:22, 23
             யூதர்களின்வேத நூல் இப்படிக் கூறுவதால் அவர்கள் ஏசுவைக் கழுமரத்திலிருந்து இரவுக்குள் இறக்க வேண்டும்என்று அவசரப்பட்டார்கள். இப்படியொரு நெருக்கடியை யூதர்களுக்கு இறைவன் கொடுத்து ஏசுவைப்பாதுகாக்கின்றான். இந்த இறைப் பாதுகாப்பும் ஏசு இறக்கவில்லை என்பதையே காட்டுகிறது.
                                   இன்ஷா அல்லாஹ் தொடரும்.....
நன்றி - jesusinvites 

Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger