ஒரு காலத்தில் மது அருந்துபவர்களும் மதுக்கடை வைத்திருப்பவர்களும் வெட்கப்பட்டு ஊரின் கடைக்கோடியில் கடை வைத்து மது அருந்தி வந்தார்கள். ஆனால் இன்று, கல்விக் கூடங்களை நடத்தி மக்களுக்கு நல்வழிகாட்ட வேண்டிய அரசு நாடு முழுவதும் மதுக்கடைகளை அதுவும் ஊரின் மையப் பகுதியில் திறந்து குடி(?)மக்களின் வருகையை அதிகரித்துள்ளது.
பணம் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் அரசு மக்களின் நலன்களை கண்டுகொள்வதில்லை. மதுவின் தீமைகளை அரசு தெரியாமலி -ல்லை. குடி குடியை கெடுக்கும் குடி பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும் என்ற அழகிய அறிவுரைகள் மதுக்கடைகளிலும் மதுபாட்டி-லி லும் அச்சிடப்பட்டுள்ளன. இவ்வளவு தெளிவாக தெரிந்திருந்தும் மதுக்கடைகளை அனைத்து
ஊர்களிலும் திறந்து வைத்து கண்களை விற்று சித்திரம் வாங்குவது போல் அரசு நடந்து கொள்கிறது.
மதுவினால் எத்தனையோ குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கின்றன. மதுவின் கேடால் பா-லி யல் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன.உடல் ரீதியாக ஏராளமான நோய்கள் ஏற்படுகின்றன. ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் கேடாக இருக்கும் இந்த மதுவை ஒழிக்க அரசு முன்வராத காரணம் என்ன?
அரசுக்கு வருடத்திற்கு இருபத்தைந்தாயிரம் கோடி ரூபாய் இந்த மதுவால் வருமானம் கிடைக்கிறது. மேலும் அரசியல் வாதிகள்,அதிகாரிகளுக்கு பத்தாயிரம் கோடி ரூபாய் வரை முறைகேடாக கிடைக்கிறது. இதனால்தான் இந்த மதுக்கடைகளை மூட அரசும், லாபம் அடையும் அதிகாரிகளும் மறுக்கின்றனர்.
ஊரின் மையப்பகுதியில் மதுக்கடைகளை திறப்பதனால் பல பிரச்சினைகளை மக்கள் சந்திக்கின்றனர். அவற்றை மூட வேண்டுமென மக்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வரும் நிலையில் அதிர்ச்சி தரும் செய்தி பத்திரிக்கையில் வந்துள்ளது.
"டாஸ்மாக்கில், மதுபான விற்பனை இலக்கை பூர்த்தி செய்யாத, 18 அதிகாரிகள் பணிமாற்றம், "சஸ்பெண்ட்' உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், முதல் கட்டமாக, 322 சூப்பர்வைசர்கள், சஸ்பெண்ட் செய்யப் பட்டனர்.
மது விற்பனை 25 சதவிகிதம் குறைந்துள்ளதால் இந்த அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது அரசு. மக்கள் குறைவாக குடிக்கி றார்களே என்று மகிழ்ச்சியடையாமல் மக்களை அதிகம் குடிக்கச் செய் இல்லையெனில் பணியிடைநீக்கம் செய்யப்படுவீர்கள் என்று அரசு எச்சரிக்கை செய்கிறது.
மது விற்பனை ஒவ்வொரு ஆண்டு அதிகரிக்க வேண்டும் என்ற எண்ணம் அரசிடம் இருந்தால் மக்களை மது அடிமைத்தனத் திலி -ருந்து காப்பாற்ற முடியுமா? மதுக்கு மக்கள் அடிமையானால்
அது நாட்டுக்கும் கேடு என்பதை பட்டபின்னர்தான் புரிந்து கொள்வார்களா! இதனால் தான் சத்திய இஸ்லாம் இந்த மதுவை ஹராமாக்கி(விலக்கப்பட்டதாக)ஆக்கி வைத்து மனித சமுதாயத்திற்கு நன்மையை பயக்குகிறது,,,,,இதற்க்கு தீர்வு... இதோ இஸ்லாம் கூருவதைப் பாருங்கள் ....
நம்பிக்கை கொண்டோரே! மது, சூதாட்டம், ப-லி பீடங்கள், (குறி கேட்பதற்கான) அம்புகள்,ஆகியவை அருவருப்பானதும், ஷைத்தானின் நடவடிக்கையுமாகும். எனவே இதிலி -ருந்து விலகிக் கொள்ளுங்கள்! வெற்றி பெறுவீர்கள்!
மது, மற்றும் சூதாட்டம் மூலம் உங்களுக்கிடையே பகைமையையும், வெறுப்பையும் ஏற்படுத்தவும்,அல்லாஹ்வின் நினைவை விட்டும், தொழுகையை விட்டும் உங்களைத் தடுக்கவுமே ஷைத்தான் விரும்புகிறான். எனவே விலகிக் கொள்ள மாட்டீர்களா?
(அல்குர்ஆன் 5:90,91)
நன்றி - தீன்குலப்பெண்மணி பிப்ரவரி 2013
Post a Comment